/tamil-ie/media/media_files/uploads/2019/09/Gotabaya-Rajapaksa.jpg)
Srilanka parlimanet Dissolved ,
கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷ வெற்றி பெற்றார். ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணி கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்த போதிலும், அதிபர் தேர்தலின் முடிவால் பிரதமர் பதவியை ராஜனாமா செய்தார் ரணில். நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடைக்கால அரசு நடைபெற்று வந்தது. இடைக்கால பிரதமாராக மஹிந்த ராஜபக்ஷே நியமிக்கப்பட்டார். 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூட்டப்பட்ட இலங்கை பாராளுமன்றம், வரும் ஆகஸ்ட் மாதம் வரை செயல்படலாம். இருப்பினும், முன் கூட்டியே தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவை கோத்தபய ராஜபக்ஷ அறிவித்தார். மேலும், இலங்கை பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது என்பது தொடர்பான விளக்க உரை வீடியோ வடிவில்...
ராஜ்யசபா வேட்பாளர்கள்
வருகின்ற மார்ச் 26ம் தேதி நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது திமுக. திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர் இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க
Live Blog
Tamil Nadu news today updates : இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வழங்கும் இன்றைய செய்திகள் பிரிவிற்கு உங்களை வரவேற்கின்றோம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் சந்தித்து பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முரளிதர ராவ் சந்தித்து பேசினார். மாநிலங்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடியை முரளிதர ராவ் சந்தித்து பேசுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைப்பு. குற்றவாளிகள் 4 பேரையும் நாளை காலை 6 மணிக்கு தூக்கிலிட ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
ஒரு போதும் பின்வாங்க போவதில்லை, தூக்கு தண்டனை பெற்று கொடுத்தே தீருவேன். குற்றவாளிகளுக்கே அரசியலமைப்பு ஆதரவு தருகிறது - நிர்பயாவின் தாய்.
இஸ்லாமிய குடியரசில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு 1,501 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 66 பேர் உயிரிழந்ததாகா ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலி ரெசா அஸிஸி கூறுகையில், தெஹ்ரானில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் இந்த புள்ளிவிவரத்தை கூறினார். சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸால் ஈரானில் அதிக எண்ணிக்கையில் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஈரானிய அதிகாரிகளும் உள்ளனர். இதில் ஈரானின் எக்ஸ்பெடென்சி கவுன்சில் உறுப்பினர் திங்கள்கிழமை இறந்தார்.
திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி சாமி, குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானதால் 2 சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்ட பிறகு 2 தொகுதிகளுக்கும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.
பிப்ரவரி மாதம் ஜி.எஸ்.டி. ரூ. 1.05 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது மாதமாக வரி வசூல் உயர்வு. பிப்ரவரி மாதத்தில் மத்திய ஜி.எஸ்.டியாக ரூ. 20,569 கோடியும், மாநில ஜி.எஸ்.டியாக ரூ. 27,348 கோடி கிடைத்துள்ளது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யாக ரூ. 48, 503 கோடியும், கூடுதல் வரி மூலம் ரூ. 8,947 கோடியும் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி நடைபெற்ற வன்முறை கலவரத்தை தொடர்ந்து, அமித் ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் அதிகமாக வலுத்து வருகிறது. ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டுமென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி நடைபெற்ற வன்முறை கலவரத்தை தொடர்ந்து, அமித் ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் அதிகமாக வலுத்து வருகிறது. ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டுமென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்நாட்டு விமானங்களில் வைஃபை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அதற்காக புதிய கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. விமானப் பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் லேப்டாப், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை Flight Mode or Airplane Mode-ல் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் அரசியல் சாசனப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள பவன்குமார் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிகளுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முக ஸ்டாலின். வாழ்வில் அடுத்த கட்ட உயர்வுக்கான தேர்வை நம்பிக்கையுடன் சந்தித்து வெல்ல வாழ்த்துகள்.
தமிழகம், புதுவையில் இன்று முதல் #12ThExam எழுதும் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
வாழ்வில் அடுத்த கட்ட உயர்வுக்கான தேர்வை நம்பிக்கையுடன் சந்தித்து வெல்லவும், உங்கள் எதிர்காலக் கனவுகள் நிறைவேறவும் அன்பும், அக்கறையும் கொண்ட வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) March 2, 2020
மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 105.17 அடி, நீர் இருப்பு - 71.70 டிஎம்சி, நீர்வரத்து - 1,607 கன அடி, நீர் வெளியேற்றம் - 750 கன அடியாக உள்ளது. அதே போன்று ஈரோடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.13 அடி, நீர் இருப்பு - 25.8 டிஎம்சி, நீர்வரத்து - 414 கன அடி, நீர் வெளியேற்றம் - 3,400 கன அடியாக உள்ளது.
தஞ்சவூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த 39 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தஞ்சை கோட்டத்தில் 13, கும்பகோணம் கோட்டத்தில் 11, பட்டுக்கோட்டை கோட்டத்தில் 15 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர், துரைமுருகன் ஆகியோர் பங்கேற்பு. மானிய கோரிக்கைகள் மீதான விவாததிற்காக தமிழக சட்டப்பேரவை வருகின்ற 9ம் தேதி மீண்டும் கூடுகிறது.
இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தன்னுடைய வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நாளைய உலகை கட்டமைக்க இருக்கும் மாணவர்கள், நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 2, 2020
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி 86 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 41 ஆயிரத்து 625 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஐரோப்பாவில் இத்தாலியில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 36 பேர் இந்த நோயால் பலியாகியுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றியை கைப்பற்றியது. டெஸ்ட் தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திப்பது இதுவே முதன்முறை. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து அணி என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights