/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1284.jpg)
Tamil Nadu news today updates
Tamil Nadu news today updates: மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை துரிதமாக எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களை, தமிழக தலைமைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். அத்திவரதரை தரிசிக்க வந்த வாலிபருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு உதவிய பெண் காவலர் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். சென்னை மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் நேற்றிரவு நல்ல மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
விதிகளை மீறி தகவல்களை பகிர்ந்ததற்காக முன்னணி சமூக ஊடகமான ஃபேஸ்புக்கிற்கு ரூ. 3 லட்சம் கோடி அபராதத்தை, அமெரிக்க வர்த்தக ஆணையம் விதித்துள்ளது.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of Politics, Sports, Cinema, weather, traffic, train services and airlines
இன்றைய முக்கியச் செய்திகள் அனைத்தையும் ஐ.இ தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள்!
விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸை 6-2, 6-2 நேர் செட்களில் தோற்கடித்தார். ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் விம்பிள்டன் பட்டம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தபால் துறை தேர்வுகளை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருப்பது இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். அஞ்சல்துறை தேர்வை மாநில மொழிகளான தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அமீர், ஜனநாதன் ஆகியோரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல என்றும் அதிகாரியை குறை சொல்வது தவறு என்றும் இயக்குனர் பேரரசு தெரிவித்தார். இயக்குனர் சங்க தேர்தலில் பொருளாளராக போட்டியின்றி தேர்வான இயக்குனர் பேரரசுவுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பேரரசு, தலைவர் பதவியை பொறுத்தவரை ஆர்.கே. செல்வமணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறினார். மேலும் அமீர் அணி விலகியதற்க்கு தேர்தல் அதிகாரியை குறை சொல்வது தவறு என்றும் தெரிவித்தார்.
வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட புதுவசூரில் ஏழுமலை என்பவரது வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மக்களவை தொகுதியில் ஆக.5ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் வருமானவரித்துறையினர் திடீரென்று சோதனையில் ஈடுப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மண்ணடியில் என்ஐஏ சோதனையை தொடர்ந்து தாஜூதீன், இஸ்மாயில் ஆகியோருக்கு கிண்டியில் உள்ள அலுவலகத்தில் இன்று மாலை ஆஜராக அதிகாரிகள் சம்மன் கொடுத்துள்ளனர். மண்ணடியில் வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக வரும் 25ம் தேதி வரை கருத்துகளை அனுப்பலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு கருத்துகளை அனுப்பலாம் http://www.tnscert.org.in என்ற இணையதளத்தில் கருத்துகளை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவர் ஸ்டாலின், தனது சொந்த தொகுதி கொளத்தூரில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இதை அடுத்து, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி உபகரணங்கள், உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மடிக்கணினி உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்ற சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) 13 July 2019
தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அஞ்சல் துறை வேலை வாய்ப்பிற்காக முயற்சிப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக இது அமைந்து விடும். எனவே இந்திய அஞ்சல் துறை ஏற்கனவே அறிவித்திருந்தபடி 23 மாநில மொழிகளிலும் பணியாளர் தேர்வுக்கான தேர்வுகளை நடத்த வேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) 13 July 2019
அஞ்சல் துறையில் வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் இனிமேல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் இருப்பவர்கள் அஞ்சல் துறை வேலை வாய்ப்புகளைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) 13 July 2019
தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் நடத்தப்படும் என நேற்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசின் இந்த சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11 மற்றும் 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக மடிக் கணினி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு கல்வி இயக்குநர், இணை இயக்குநர், இயக்க அலுவலர்கள், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். சென்னை மண்ணடியில் வஹாதத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பின் அலுவலகம், புரசைவாக்கத்தில் உள்ள இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் தலைவரான சையது முகமது புகாரியின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
கர்நாடகாவில் ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி தமிழகத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. பரமக்குடியில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்
அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழில் தேர்வு எழுதும் வசதியை மாற்றி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என்று அறிவித்திருப்பது மாபெரும் அநீதி என ரவிக்குமார் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனை முழுமையாக தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ஓராண்டு தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு!
ஜூலை 15ல் விண்ணில் ஏவப்படும் சந்திராயன் -2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும் எனவும், விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2022க்குள் நிறைவேற்றப்பட உள்ளது எனவும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த பின் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்தார்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மிதமான இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும், என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights