டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகின்றது. இந்த தேர்தல் முடிவுகள் அறிவிப்பில் தற்போது வரை ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. 70 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி முதல்வராவாரா அரவிந்த் கெஜ்ரிவால். இது தொடர்பான முழுமையான செய்திகளை அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
மகிந்த ராஜபக்ஷே திருப்பதி வருகை
நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே. இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி வந்தார். திருப்பதி விமான நிலையத்தில் அவருக்கு பரதநாட்டிய கலை மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விஜய் வீடுகளில் ஐ.டி. ரெய்டு
பிகில் படத்தின் வசூல் தொடர்பாக வெளியான தகவல்களை தொடர்ந்து விஜய்யின் வீடுகளை சோதனையிட்டது வருமானத்துறை. அது தொடர்பான முழுமையான வீடியோ இங்கே!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Live Blog
Tamil Nadu news today updates breaking news : இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆலோசனைப்படி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் ஏழுமலையான் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஜம்மு காட்ரா நெடுஞ்சாலையில் 100 ஏக்கம் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக், காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஒரு குட்டி கதை என்ற இந்த பாடல் வரும் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
Behold our first single! #OruKuttiKathai #MasterSingle #Master pic.twitter.com/qxJUQ8y9oM
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 11, 2020
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: 7 பேர் விடுதலை தீர்மானம் குறித்த உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு வரவேற்கத்தக்கது. தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரை முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
சிபிசிஐடி போலீசார் நீட் நுழைவு தேர்வில் தமிழக தேர்வர்களுக்கு பதிலாக மோசடியாக தேர்வு எழுதியவர்களின் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர். மேலும், அவர்களுடைய பெயர், முகவரி தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு, சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: பாஜகவை வீழ்த்த முடியும் என்ற எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை டெல்லி தேர்தல் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. டெல்லி ஒரு மினி இந்தியா என்பதால் அம்மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு ஒப்பானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 24ஆம் தேதி இந்தியா வருகிறார். இந்த வருகையின் போது ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களைச் சுற்றிப்பார்க்க உள்ளனர்.
நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்ற டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு. மனு தொடர்பாக பதில் அளிக்க நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு.
வழக்கு விசாரணை வரும் 13-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு. விசாரணை நீதிமன்றத்தை அணுகி, நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை பெற்றுக் கொள்ளவும் உச்சநீதிமன்றம் அனுமதி .
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அறிவிப்புகள் வெளியானது. இன்னிலையில் டி.என்.பி.எஸ்.சி தளத்தில் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினியுடன் கூட்டணி வைக்குமா பாமக என்ற கேள்விக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார். ரஜினிகாந்த் கட்சி துவங்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், பாமகவுடனான கூட்டணி குறித்து இதுவரை பேசவில்லை என்றும் அறிவித்துள்ளார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியரின் ஜீவனபடியை முழுமையாக மறுப்பது அரசியல் சாசன உரிமையை மீறும் செயல் என உயர்நீதிமன்றம் அறிவிப்பு. பணம் கையாடல் குற்றச்சாட்டு காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு சங்க செயலாளருக்கு ஜீவனபடி வழங்குவது குறித்து 6 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.
கட்சி வளர்ச்சி மறும் தேர்தல் பணிகள் தொடர்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அதிமுக அலுவலகத்தில் நேற்று முதல் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல்கள் வர உள்ள நிலையில் இந்த ஆலோசனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிப்ரவரி 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரெம்ப். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது வெள்ளை மாளிகை. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
ஜப்பானின் ஒகாமா துறைமுகத்தில் உள்ள சுற்றுலா கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற தடை. 3500க்கும் மேற்பட்டோர் பயணித்த இந்த கப்பலில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கப்பலில் பயணித்தவர்களில் 100 பேர் இந்தியர்கள். அதில் 6 பேர் தமிழர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights