காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள பொது மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டியதில்லை என்ற முடிவை திரும்ப பெறுமாறு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை சிட்டிசன் ஃபோரம் மற்றும் நியூ இந்தியன் ஃபோரம் இணைந்து வழங்கும் நிகழ்வு ஒன்றில் நேற்று கலந்து கொண்டார் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது பேசிய அவர், மாநில அரசுகள் சி.ஏ.ஏவை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று கூறுவது தான் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் சி.ஏ.ஏவுக்கு எதிராக தங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
கடந்த ஆறு ஆண்டுகளில் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், மற்றும் வங்க தேசத்தில் இருந்து வந்த சுமார் 2838 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதில் இஸ்லாமியர்களும் அடங்குவார்கள் என்பதையும் மேற்கொள் காட்டினார். 566 முஸ்லீம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் அறிவித்தார். அரசியல் காரணங்களுக்காக விமர்சனங்கள் செய்வதற்கு பதிலாக அவர்கள் எங்களிடம் கேள்விகள் கேட்டால் நாங்கள் பதில் அளிக்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
தெறிக்கும் பட்டாஸ் படம் குறித்த வீடியோ
கோவையில் யானை தாக்கி பெண் பலி
கோவை பாலமலையில் இருந்து காட்டுக்குள் ட்ரெக்கிங் சென்ற குழு ஒன்று காட்டியானை துரத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் அனுமதியின்றி காட்டுக்குள் சென்ற அவர்களின் ஒரு பெண் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
Live Blog
Tamil Nadu news today updates : இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள பொது மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டியதில்லை என்ற முடிவை திரும்ப பெறுமாறு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்: தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து இறைநம்பிக்கை உள்ளவர்களின் கருத்து கேட்கப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழிபாட்டு முறையை மாற்ற வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். மக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது. மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் ஒரு திட்டத்தை நிறைவேற்ற இயலாது என்று கூறினார்.
கன்னியாகுமரியில், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள தவ்பீக்கை ஆஜர்படுத்தக் கோரி, அவரது தாயார் ஜீனத் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தாராபுரம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும்? - மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் சோலியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியாராக பணியாற்ரி ஓய்வு பெற்றவர் அல்லிமுத்து. பணி காலத்தில் தமிழக அரசு இவருக்கு சிறந்த நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை அளித்தது. இந்நிலையில், அவர் 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திதனது நல்லாசிரியர் விருதை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஆட்சியர் கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு தமிழக அரசிடம் இருந்து பதில் பெற்று தருவதாகக் கூறினார்.
தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 20, 2020
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்
மூன்று அல்லது நான்கு நாட்களில் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தனது அரசாங்கம் சட்டபேரவையில் நிறைவேற்றும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இதன் மூலம் கேரளா மற்றும் பஞ்சாபிற்குப் பிறகு, குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய மூன்றாவது மாநிலமாக மேற்கு வங்கம் விளங்கும் என்று நம்பப்படுகிறது
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று ( நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் தமிழறிஞர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு விருதுகள் வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கெளரவித்தார்.
வரும் பிப்ரவரி ஐந்தாம் நாள் நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோவில் திருகுடமுழுக்கு விழாவை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
2012 டெல்லி நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது.
பவன் குப்தா தனது மனுவில், குற்றம் நடந்த நேரத்தில் தான் ஒரு சிறார் என்று கூறியிருந்தார் . 2012 டிசம்பரில் டெல்லி உயர் நீதிமன்றம் தான் ஒரு சிறார் என்ற கூற்றை நிராகரித்த எதிர்த்து குப்தா வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தை நாடினார். நீதிபதிகள் ஆர் பானுமதி, அசோக் புஷான் மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பவன் குமார் குப்தாவின் மனுவை விசாரித்தது.
ஹரிஷு என்கிற ஒரு வயது குழந்தைக்கு போலியோ சொட்டு மருத்து போடப்பட்டுள்ளது. பின் குழந்தை திடீரென மயக்கமடைந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். போலியோ சொட்டு மருந்தால் தனது குழந்தயை இழந்ததாக பெற்றோர்கள் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளனர்
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராகஜே.பி நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் .
கடந்த ஆண்டு உள்துறை அமைச்சராக அமித் ஷா அமைச்சரவையில் உயர்த்தப்பட்ட பின்னர் நட்டா பாஜகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பாஜக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அமித் ஷாவின் கீழ் ஒரு புதிய தேர்தல் உச்சத்தை எட்டியது. நாடு முழுவதும் தனது கால்தடங்களை விரிவுபடுத்தியது. குடியுரிமை (திருத்தம்) சட்டம், குடிமக்கள் தேசிய பதிவு (என்.ஆர்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) ஆகியவற்றில் கட்சி எதிர்ப்புக்களை எதிர்கொள்ளும் நேரத்தில் கட்சியின் தேசியத் தலைவராகஜே.பி நட்டா நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று புதுடெல்லி தொகுதியில் இருந்து போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கலை செய்கிறார். தற்போது, தேசிய தலைநகரில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் ஒரு மெகா ரோட்ஷோவும் நடைபெற்று வருகிறது .
கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவர் 2013ல் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் ராணுவ பலம் அதிகரிக்க இலங்கை அரசுக்கு ரூ. 355 கோடி நிதி உதவி வழங்க உள்ளது மத்திய அரசு. இதனை எதிர்த்து பலரும் தங்களின் கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் தமிழக மக்களின் வரிப்பணத்தை வாரி இறைப்பதா என்று வைகோ தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை திருவள்ளுவர் திருநாள், புத்தாண்டையொட்டி அறிவிக்கப்பட்ட விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். உலகின் மூத்த மொழியாக தமிழ் விளங்குகிறது என்றும், 14 பண்புகள் அதற்கு இருப்பதாகவும் விழாவில் முதல்வர் பேச்சு.
பாஜக தேசிய தலைவர் பதவிக்கான போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டிகள் ஏதுமின்றி ஒரு மனதாக ஜே.பி. நட்டா தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில், அவர் தேர்வு ஆவார் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
அலகாபாத் ஏன் பிரக்யாராஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது? உ.பி. அரசின் செயலுக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை விரைவில் தர உச்ச நீதிமன்ரம் உத்திரப்பிரதேச அரசுக்கு உத்தரவு.
குரூப் 4 தேர்வில் முறைக்கேடு நடந்திருப்பதாக எழுந்த பிரச்சனையை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தேர்வு பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது டி.என்.பி.எஸ்.சி. மேலும் இந்த முறைக்கேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்லையில் உள்ள முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வருகின்ற 22ம் தேதி முதல் அங்கு வாழும் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 6 நாட்களுக்கு மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்து ஐய்யனார் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மேட்டூர் அணையில் தற்போது 108.98 அடி அளவில் 76.968 டி.எம்.சி நீர் உள்ளது. நீர்வரத்து 655 கன அடியாகும். நீர் வெளியேற்றம் 4000 கன அடியாக உள்ளது. ஈரோடு பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 103..33 அடியாக உள்ளது. நீர் இருப்பு 31.4 டி.எம்.சியாகவும் நீர் வரத்து 568 கன அடியாகவும், வெளியேற்றம் 2300 கன அடியாகவும் உள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த மக்களிடமோ, சுற்றுச்சூழல் துறையிடமோ நேரடியாக கருத்து/ அனுமதி பெறாமல் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் மக்கள் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டார்கள் என்று வைகோ கூறியுள்ளார்.
கர்நாடக நில சீர்திருத்த சட்டத்தின் படி கர்நாடக மாநிலத்தில் இருக்கும் விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்வது சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால் தற்போது புதிய நிறுவனங்கள் அமைப்பதற்கும், விவசாயிகள் பயனடைவதற்கும் வழிவகை செய்ய புது முயற்சியாக இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுக்க இருந்த தடை நீக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
ஆந்திராவில் மூன்று தலைநகரங்களை உருவாக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டங்களை தயாரித்து வருகிறார். அமராவதியில் இருக்கும் தற்காலிக உயர்நீதிமன்றத்தை கர்னூலுக்கும், நிர்வாக தலைநகரமாக விசாகப்பட்டினத்தையும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்ற நிலையில் இன்று சட்டமன்றம் கூடுகிறது. இன்று மூன்று தலைநகரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
வருகின்ற 26ம் தேதி இந்தியா முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாட இருப்பதை முன்னிட்டு, ஒத்திகை நடைபெற்று வருகிறது. சாந்தோம் சர்ச் முதல் போர் நினைவுச் சின்னம் வரை 20, 22. 23 மற்றும் குடியரசு தினம் அன்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights