Tamil Nadu news updates : ப. சிதம்பரம் ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.91க்கு விற்பனையாகி வருகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.69.53க்கு விற்பனையாகி வருகிறது.

By: Dec 4, 2019, 7:24:08 AM

Tamil Nadu news today updates : விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த மதுரை இளைஞருக்கு நன்றி கூறியுள்ளது நாசா. ஜூலை மாதம் இஸ்ரோவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான் 2-ன் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது. நாசாவின் செயற்கைக்கோள்கள் எடுத்து அனுப்பிய தொடர் புகைப்படங்களை ஆராய்ச்சி செய்திருக்கிறார் மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன். சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பணியாற்றும் இவர் அனுப்பிய மின்னஞ்சல் தகவல்கள் உதவியுடன் நாசா லேண்டர் விக்ரமின் பாகங்களை கண்டறிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாசா தன்னுடைய அதிகாரப்பூர்வ பதிர்வில் அந்த நபருக்கு நன்றி கூறியுள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆனால் வட இந்தியாவில் குளிர் காலம்  துவங்கிவிட்டது. இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மைனஸ் டிகிரியில் வெப்பம் நிலவி வருகிறது. லடாக் பகுதியில் -14 டிகிரியில் வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

Live Blog
Tamil Nadu news today updates, Chennai rains, TN politics, local body elections : தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:44 (IST)03 Dec 2019
வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் வைகை ஆறு செல்லும் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை. தேனியில் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 68.5 அடியாக உயர்ந்துள்ளதால் எச்சரிக்கை.

22:43 (IST)03 Dec 2019
வனத்துறையினர் அறிவுரை

தென்காசி: குற்றாலத்தில் பொதுப்பணித்துறை கேரள பேலஸ் வளாகத்தில் சிறுத்தை புகுந்ததாக காவலாளி புகார்

காவலாளி அளித்த புகாரை அடுத்து வனத்துறையினர் நேரில் சோதனை; கேரள பேலஸ் வளாகத்தை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுரை

20:53 (IST)03 Dec 2019
காவலர் உடற்தகுதித் தேர்வில் 4 திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

2ஆம் நிலை காவலர் உடற்தகுதித் தேர்வில் திருநங்கைகளை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், 2ஆம் நிலை காவலர் உடற்தகுதித் தேர்வில் 4 திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் உத்தரவை நிறைவேற்றாவிடில் ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைக்கும் தடைவிதிக்க நேரிடும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

20:24 (IST)03 Dec 2019
விக்ரம் லேண்டரை கண்டறிய உதவிய சண்முக சுப்பிரமணியனுக்கு மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு

விக்ரம்லேண்டரின் பாகங்களை கண்டறிய உதவிய தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியனுக்கு முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு தெரிவித்துள்ளார்.

20:22 (IST)03 Dec 2019
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரி மருத்துவக் கல்லூரி மாணவர் தந்தைக்கு ஜாமீன்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரி மருத்துவக் கல்லூரி மாணவரின் தந்தை முகமது சபிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

20:21 (IST)03 Dec 2019
தாம்பரத்திலிருந்து கோவை, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம்-கோவை இடையே ஜனவரி 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

தாம்பரம்-நெல்லை இடையே டிசம்பர் 23ஆம் தேதி மாலை 6.45க்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும்.

தாம்பரம்-நெல்லை இடையே ஜனவரி 10ஆம் தேதி இரவு 7.15க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

20:18 (IST)03 Dec 2019
செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் வீடு, அலுவலகத்தில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனை

செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் வீடு, அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரலட்சுமி நடத்தி வரும் நிறுவனத்திற்கு முறையாக ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

19:40 (IST)03 Dec 2019
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளதில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.

19:36 (IST)03 Dec 2019
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளதில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.

19:34 (IST)03 Dec 2019
பீமா கோரேகான் வழக்கில் செயற்பாட்டாளர்கள் மீதான வழக்கை திரும்ப பெறக் கோரி என்.சி.பி தலைவர் கடிதம்

மகாராஷ்டிரா பீமா கோரேகான் வன்முறை வழக்கில் சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்களை திரும்பப் பெறக் கோரி மூத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் தனஞ்சய் முண்டே (கோப்பு படம்) முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

19:26 (IST)03 Dec 2019
சுவர் இடிந்து விழுந்த விபத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணை கோரி மார்க்சிஸ்ட் கட்சி எம்பி மனு

கோவை மேட்டுப்பாளையம் அருகே நடூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சுவர் இடிந்து விழுந்ததில் 4 வீடுகள் இடிந்தது. இதில் தலித்துகள் 17 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கு காரணமான தனியார் சுவர் தீண்டாமை சுவர் என்று கூறப்படுவதால், மதுரை மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன், மேட்டுப்பாளையத்தில், சுவர் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணையை கோரி மனு அளித்துள்ளார்.

19:12 (IST)03 Dec 2019
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற்றது தமிழக அரசு

தேமுதிக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசு மற்றும் அமைச்சர்களை விமர்சித்து 2013 - 2014 ஆண்டுகளில் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்குகள் தொடரப்பட்டன. 2012 -2016 வரை தமிழக அரசு சார்பில் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றுடன் பிற வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

விஜயகாந்த் மீதான இந்த வழக்குகளை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் மற்ற 3 வழக்குகளை டிசம்பர் 16 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

18:12 (IST)03 Dec 2019
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி? - திமுக தங்கம் தென்னரசு கண்டனம்

திமுகவைச் சேர்ந்த முன்னாள அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம்.ஃபில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான இந்தி மொழி பயிற்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜான் நேற்று துவங்கி வைத்து அதற்காக ரூ.6 லட்சம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்துள்ளார். அதோடு, தமிழில் உயர்கல்வி பயிலும் மாணவர்கல் இந்தி மொழியைக் கற்றுக்கொண்டால் வேலை வாய்ப்பு உருவாகும் என்ற பழைய புளித்துப்போன கதையை மீண்டும் திருவாய் மலர்ந்தருளி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார் என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

17:35 (IST)03 Dec 2019
மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு; ஒருவருக்கு அரசு வேலை - முதல்வர்

மோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தைப் பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். அந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும். சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார்.

16:53 (IST)03 Dec 2019
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்ட முதல்வர்

கோவை மேட்டுப்பாளையம் அருகே நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களும் உடன் உள்ளனர்.

16:30 (IST)03 Dec 2019
ஐஐடி மாணவி பாத்திமா வழக்கை ஏன் சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்க கூடாது? - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை ஐஐடி-யில் நடந்த 14 மாணவர்களின் தற்கொலை தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

இது தொடர்பான பொதுநல வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாத்திமாவின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், முழுமையான விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மாணவர்களின் தற்கொலைகள் ஐ.ஐ.டி வளாகங்களில் மட்டும் தான் நடைபெறுகிறதா என சந்தேகம் எழுப்பிய நீதிபதிகள், பாத்திமா மரணம் தொடர்பான வழக்கை ஏன் சிபிசிஐடி-க்கு மாற்ற கூடாது என அரசிடம் கேள்வி எழுப்பினர்.

பாத்திமா மரணம் தொடர்பான வழக்கை தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவினர் முழுமையாக விசாரித்து முடிக்காத நிலையில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோர முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். யூகங்களின் அடிப்படையில், வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே சிபிஐ-க்கு மாற்ற முடியாது எனவும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

16:22 (IST)03 Dec 2019
தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக ரூ.137.16 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு

தமிழகத்தில் அமையவுள்ள 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.137.16 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகரில் அமைக்கப்படுகிறது.

15:52 (IST)03 Dec 2019
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் புதிய ஐ.ஜி.யாக டி.எஸ்.அன்பு நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் பணிக்காலம் முடிந்த நிலையில் காவல்துறையின் நிர்வாக ஐ.ஜி.யாக இருந்த அன்பு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்துள்ளது தமிழக அரசு.

15:32 (IST)03 Dec 2019
சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேர் குடும்பத்திற்காக போராடிய 24 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

கோவை மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடுகோரி போராடிய 24 பேரை மதுக்கரை நீதிமன்ற நீதிபதி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

15:22 (IST)03 Dec 2019
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்ததற்கு கமல்ஹாசன் வருத்தம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். இது ஒரு விபத்தென்றாலும், இதில் ஏதேனும் தவறு நடந்திருக்குமாயின், அரசும், காவல்துறையும் நேர்மையுடன் அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஆவண செய்ய வேண்டும். எத்தனை நிவாரணம் கிடைத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்ய இயலாது. வரும் காலங்களில் மக்கள் கவனத்துடனும், அரசு முன்னெச்சரிக்கையுடனும் இருந்து, பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

15:18 (IST)03 Dec 2019
கார்த்திகை தீபத்துக்கு திருவண்ணாமலையில் டிசம்பர் 10 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் டிசம்பர் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.

15:04 (IST)03 Dec 2019
ஃபாத்திமா லத்தீஃபின் கடிதம் உண்மையானது

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை தொடர்பாக அவரது மொபைல் போனில் பதிவிட்ட கடிதம் உண்மையானது என்று தடவியல் துறை அறிவித்துள்ளது. தடயவியல் துறை சார்பில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

14:25 (IST)03 Dec 2019
வேலை இழப்பு குறித்து வெள்ளை நோட்டீஸ்

அரசு ஐடி ஊழியர்கள் வேலை இழப்பு விவகாரம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

13:59 (IST)03 Dec 2019
மேட்டுப்பாளையம் 17 பேர் மரணம் - சுவர் கட்டிய உரிமையாளர் கைது

மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் 17 நபர்கள் பலியாகினர். இந்த சுவரை கட்டி எழுப்பிய உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில் நடூர் பங்களா உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.

12:48 (IST)03 Dec 2019
மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு - 17ம் தேதி ஒத்தி வைத்த உயர் நீதிமன்றம்

மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து வழக்கு பதவு செய்யப்பட்டது. சட்டப்பூர்வமான காரணங்களைக் கூறி கூடுதல் மனுதாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

12:33 (IST)03 Dec 2019
அமைச்சரவை கூட்டம்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சாம்ப்பரில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ரவி சங்கர் ப்ரசாத், வி. முரளிதரன், பாஜக ராஜ்யசபை உறுப்பினர் தாவர் சந்த் கெலோட் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர்.

12:02 (IST)03 Dec 2019
ஃபாத்திமா தற்கொலை வழக்கு : சி.பி.சி.ஐ.டி ஏன் விசாரிக்க கூடாது ? நீதிமன்றம் கேள்வி

சென்னை ஐஐடியில் படித்து வந்த மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அந்த வழக்கை விசாரிக்க சி.பி.ஐ தரப்பு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் இந்த வழக்கை ஏன் சி.பி.சி.ஐ.டி விசாரிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

11:52 (IST)03 Dec 2019
சாலை பணிகள் விரைவாக தொடங்க வேண்டும் - ராமதாஸ்

தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 6 வழிச்சாலை, செங்கல்பட்டு - திண்டிவனம் இடையேயான 8 வழிச்சாலை பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் ராமதாஸ்

11:23 (IST)03 Dec 2019
மதுரை சண்முக சுப்பிரமணியனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்துகள்

நிலவின் தரையில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய மதுரையை சேர்ந்த பொறியாளருக்கு வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார் டிடிவி தினகரன் 

சந்திராயன் 2 விண்கலத்துடன் அனுப்பப்பட்டு, கடைசி நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரைக் கண்டறிவதில் முக்கிய பங்காற்றிய தமிழகப் பொறியாளரான மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் அவர்களை மனமார வாழ்த்துகிறேன்.

11:14 (IST)03 Dec 2019
மேட்டுப்பாளையத்தில் முக ஸ்டாலின்

17 பேரின் உயிரிழப்பு கூட ஆட்சியாளர்களின் கல் மனதை கரைக்கவில்லை. போராடியவர்கள் மீது தடியடி நடத்தி அராஜகம் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார். மேட்டுப்பாளையத்தில் ஏற்பட்ட இந்நிகழ்வு சம்பவம் என்றோ, விபத்து என்றோ கடந்து போய்விட இயலாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

11:04 (IST)03 Dec 2019
2020ம் ஆண்டு பட்ஜெட்டுக்குள் நிலைமை சரியாகும் - நிர்மலா சீதாராமன்

2020ம் ஆண்டு பட்ஜெட்டுக்குள் இந்திய நிறுவனங்கள் சந்தித்து வரும் பொருளாதார மந்த நிலை சரி செய்யப்பட்டுவிடும் என்று இந்தியா - ஸ்வீடன் தொழில் மாநாட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

10:53 (IST)03 Dec 2019
இந்திய கடற்படை தினம்

நாளை இந்திய கடற்படை தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறை முகத்தில் இந்திய கடற்படை வீரர்கள் சாகச நிகழ்ச்சிகள் நடத்தினர். ஹெலிகாப்ட்டரில் இருந்து கயிறு கட்டி வீரர்களை இறக்குவது, மீட்புப் பணியில் எப்படி ஈடுபடுவார்கள் என்பது குறித்தும் தங்களின் சாகச நிகழ்ச்சியில் சாதனைகள் செய்தனர்.

10:47 (IST)03 Dec 2019
பாஜக ஆட்சியில் செல்போன் கட்டணங்கள் குறைவு

பாஜக ஆட்சியில் தான் செல்போன் கட்டணங்கள் குறைவு என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் 1ஜிபி டேட்டாவை பெர ரூ. 269 செலவிட்டதாகவும், தற்போதைய ஆட்சியில் ஒரு ஜிபி டேட்டா 11 ரூபாய்க்கு வழங்கப்படுவதாகவும் அறிவித்தார். 

10:39 (IST)03 Dec 2019
யானைகளால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து

கோவையின் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் மற்றும் அதனை சுற்றியிருக்கும் மலைப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இன்று காலையில் இருந்து கோவை நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னை, நாகை, கடலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நெல்லை, தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் இந்த மழையால் கடும் பாதிப்பை அடைந்துள்ளது. கனமழை காரணமாக அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை  இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

1ம் தேதி அன்று திமுக பிரமுகர் ஒருவர் இல்ல திருமணத்திற்கு சென்ற பாஜக மாநில துணைத் தலைவர் அரசகுமார், திமுக தலைவர் முக ஸ்டாலினின் செயல்பாடுகளை போற்றும் விதமாக பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர்  நரேந்திரன் கட்சி மேலிடத்திற்கு பரிந்துரை செய்தார். இது பாஜக அரசியல் வட்டாரத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Web Title:Tamil nadu news today live updates chennai rains chennai weather tn politics local body elections

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X