Advertisment

Tamil news highlights: தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்தம்- நோயாளிகள் பாதிப்பு

Petrol Diesel Rate in Chennai : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.74க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 70.81 ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates by-election results

Tamil Nadu news today live updates by-election results

Tamil Nadu news today live updates :  அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில்,   அதிபர் டொனால்ட் ட்ரம்பும் , மனைவி மெலினாவும்   விளக்கேற்றி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். வெள்ளைமாளிகையில் இயல்பாகவே அனைத்து மதங்களின் விழாக்களும் கொண்டாடப்படும்.

Advertisment

ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சுர்ஜித் மீட்கப்படும் செய்திகளுக்கு -   Surjith Rescue Live Updates

 

அக்டோபர் 28 முதல் நவம்பர் 2 வரை ராசிபலன் விடியோ

இந்த ஆண்டு தீபாவளிக்கு பின் டெல்லியின்  காற்றின் தரம் "மிகவும் மோசமான" என்று நிலையில் உள்ளது. கடந்த  ஆண்டு, இதே மாதத்தில் கணக்கீடு செய்யும் போது டெல்லி காற்றின் தரம் தற்போது கணிசமாக மேம்பட்டுள்ளது.

இதுபோன்ற முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Live Blog

Tamil Nadu news today live updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























Highlights

    20:56 (IST)28 Oct 2019

    ப.சிதம்பரத்துக்கு உடல்நலக் குறைவு டெல்லி எய்ம்ஸில் அனுமதி; சிகிச்சைக்குப்பின் அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நிபந்தனை ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த 22 ஆம் தேதி உத்தரவிட்டது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அவர் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிறையில் உள்ளார். இநிலையில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால்,  அவர் இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சைக்குப் பின் மீண்டும் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து அமலாக்கத்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    17:19 (IST)28 Oct 2019

    ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் - மக்கள் படுகாயம்:

    ஜம்மு-காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட்  அருகே பயங்கரவாதிகளால் கையெறி குண்டுவெடிப்பு  தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதளால் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

    16:11 (IST)28 Oct 2019

    அரசும் மருத்துவர்களும் உட்கார்ந்து பேச வேண்டும் - ராமதாஸ்

    அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைக்க கூடாது, மத்திய அரசு மருத்துவர்களுக்கு நிகரான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி ராஜீவ் காந்தி மருத்துவமனியில் நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாமக கட்சித் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசும் - மருத்துவர்களும் தங்களுக்குள் பேசி , நெகிழ்வுத் தன்மையை கடைபிடித்தால், தங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்றி மக்கள் நலனைப் பாதுகாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

    15:20 (IST)28 Oct 2019

    டெல்லி மக்கள் தீபாவளி பட்டாசுகளை கம்மியாக வெடித்தனர்:

    முந்தைய ஆண்டுகளை விட இந்த தீபாவளியில் டெல்லி மக்கள் குறைந்த பட்டாசுகளை வெடித்துள்ளனர் . இதனால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் டெல்லி காற்றின் தரம் முன்னேறியுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.  மேலும், தில்லி மக்கள் “மாசுபாட்டைக் கையாள கடுமையாக உழைத்திருக்கிறார்கள்” என்றாலும்,  ஆனால் ..... குருகிராம், நொய்டா மற்றும் காஜியாபாத் போன்ற டெல்லியை சுற்றியுள்ள இடங்களில் அதிக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன  என்றும் தெரிவித்தார்.  

    14:25 (IST)28 Oct 2019

    தென்தமிழகத்துக்கு கனமழை வாய்ப்பு

    தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில்  இலங்கை அருகே காற்றழுத்தத்தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, வேலூர், காஞ்சிபுரம், போன்ற மாவட்டங்களில் கண மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தற்போது தெரிவித்துள்ளது.  மேலும், கடலோர மாவட்டங்களில் இருக்கும் மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    13:39 (IST)28 Oct 2019

    அரசு மருத்துவர்கள் நான்காவது நாளாக போராட்டம்

    அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளம், நோயாளிகளுக்கு தகுந்த மருத்தவர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.     

    சில புகைப்படங்கள்  இங்கே : 

    publive-image

    publive-image

    publive-image

    12:44 (IST)28 Oct 2019

    இந்தியாவில் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி - பிசிசிஐ ஒப்புதல்

    இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்யும் வங்கதேச அணி,  3 டி20  மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.  முதல் டெஸ்ட் இந்தூரிலும், இரண்டாம் டெஸ்ட் கொல்கத்தாவிலும் நடைபெரும் . இந்த  இரணடாவது டெஸ்டை,  பகல் இரவு ஆட்டமாக  நடத்த பிசிசிஐ தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில், இதுவரை பகல்  இரவு  டெஸ்ட் போட்டிகள் நடை பெற்றதில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.        

    12:08 (IST)28 Oct 2019

    பாரதீய ஜனதா, சிவசேனா ஆளுநருடன் தனித்தனியாக சந்திப்பு

    பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் திங்களன்று தனித்தனியாக மகாராஷ்டிராவின் ஆளுநரை சந்தித்தன. மாநிலத்தில்  ஆட்சி அதிகாரத்தில் இழுபறி நீடிக்கும் நிலையில் இந்த சந்திப்பு சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் வகையில் மட்டும் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், ஆட்சி குறித்து எதுவும் பேசப்படவில்லை  என்று இருக்கட்சிகளும் தெரிவிக்கின்றன. 

    10:59 (IST)28 Oct 2019

    சென்னையில் இன்று இறைச்சி விற்பனைக்கு தடை

    ஜெயினர்கள் முக்கிய தினங்களில் ஒன்றான மகாவீர் நிர்வாண் தினத்தை முன்னிட்டு  அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது. மகாவீர் நிர்வான் தினம்  ஜெயினர்களின் தீபாவளியாக கருதப்படுகிறது. ஜெயின் மதத்தின் 24 வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் இந்நாளில் தான் மோட்சம்  அடைந்தார்  

    10:42 (IST)28 Oct 2019

    மோடி சவூதி அரேபியா நாட்டிற்க்கு பயணம்:

    சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்தின் அழைப்பின் பேரில் மோடி சவூதி நாட்டிற்கு இன்று  பயணம்  செய்கிறார்  . இந்தியப் பிரதமர், சவுதி  இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.  இந்த இரண்டு நாள் பயணத்தின் போது அந்நாட்டில் ரூபே அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளார்.

    ரியாத்தில் நடைபெறும் எதிர்கால  மூன்றாவது  முதலீட்டு முயற்சி (எஃப்ஐஐ) மன்றத்திலும்  கலந்து கொண்டு, சிறப்புரையும் ஆற்றவுள்ளார்.

    Tamil Nadu news today live updates :

    ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இராணுவ படைப்பிரிவு தலைமையகத்தில்  எல்லைக் காவலருடன் இணைந்து  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.

    ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி நேற்று அமெரிக்கா மேற்கொண்ட ராணுவக் கூட்டு நடவடிக்கையால் கொல்லபட்டதகாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் .

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment