scorecardresearch

News today updates : ‘அரசியல் களத்தில் இருந்து நான் வெளியேறவில்லை’ – தமிழிசை பளீர்

இன்று இந்தியா முழுவது விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது….

News today updates : ‘அரசியல் களத்தில் இருந்து நான் வெளியேறவில்லை’ – தமிழிசை பளீர்
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today updates: இன்று இந்தியா முழுவது விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள்  காலையிலே கோவில்களில் விநாயகரை தரிசிக்க செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில்,  உள்ளூர் அரசியல் தலைவர்கள் முதல் தேசிய அரசியல் தலைவர்கள் வரை பொது மக்களுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற சுவாரசிய தகவல்களை லைவ் அப்டேட்டுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines:  இன்று சென்னை மற்றும் தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், பெட்ரோல் விலைகள், தங்கத்தின் நிலைகள் போன்றவைகளை இங்கே காணலாம் 


20:52 (IST)02 Sep 2019

தளபதி ‘மீட்ஸ்’ தளபதி

ரிலீஸாக வேண்டிய அன்றைய நாளில், தமிழகம் முழுவதும் எந்த தியேட்டரிலும் காவலன் படம் திரையிடப்படவில்லை. விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் கலவரத்துடன் காத்திருக்க காலை 11 மணிக்கு மேல் தான் ரிலீஸ் ஆனது. மறைமுகமாக திமுக தரப்பினர் மீது அப்போது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அதற்கான காரணம் குறித்து விஜய் இதுவரை வாய்த் திறக்கவில்லை….

முழுவதும் படிக்க – தளபதி ‘மீட்ஸ்’ தளபதி! அரசியல் அரங்கில் யாருக்கு லாபம்?

20:27 (IST)02 Sep 2019

தமிழகத்திற்கும் தெலங்கானாவுக்கும் பாலமாக செயல்படுவேன்

“தமிழகத்திற்கும் தெலங்கானாவுக்கும் பாலமாக செயல்படுவேன். அரசியல் களத்தில் இருந்து வெளியேறவில்லை; அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவுள்ளேன். தெலங்கானா அதிகாரிகள் ஆலோசனை செய்த பிறகு பதவியேற்கும் நாள் முடிவு செய்யப்படும்” என தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

19:42 (IST)02 Sep 2019

முகமது ஷமி கைது?

மனைவி ஹசின் ஜகான் தொடர்ந்த வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகமது ஷமி, 15 நாட்களுக்குள் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

19:12 (IST)02 Sep 2019

காயத்தால் பாதியிலேயே வெளியேறிய ஜோகோவிச்

நியூயார்க்கில் நடந்த ஆடவர் பிரிவின், 4வது சுற்றில் நோவாக் ஜோகோவிச் , சுவிட்ஸர்லாந்து வீரர் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார். போட்டியில் வாவ்ரிங்கா 6க்கு 4, 7க்கு 5 , 2 க்கு 1 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்த போது , ஜோகோவிச் இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். இதனால் வாவ்ரிங்கா காலிறுதிக்கு முன்னேறினார்.

18:34 (IST)02 Sep 2019

இது எல்லா ஆட்சியிலும் நடப்பது தான் – திருநாவுக்கரசர்

கட்சியினருக்கு ஆளுநர் பதவி வழங்குவது எல்லா ஆட்சியிலும் நடப்பது தான், காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்துள்ளது என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

18:17 (IST)02 Sep 2019

விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

மும்பை லால்பாக்சா பகுதியில் உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று வழிபாடு செய்தார்.

17:45 (IST)02 Sep 2019

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நாளை வரை நீட்டிப்பு – சிறப்பு நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நாளை வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

17:22 (IST)02 Sep 2019

பழனியில் பஞ்சாமிர்த நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை; ரூ.93.56 கோடி வரி ஏய்ப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சித்தனாதன், கந்தவிலாஸ் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.93.56 கோடி வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது. சோதனையில் கணக்கில் வராத 56 கிலோ தங்கம் ரூ.2.2 கோடி பணம் பறிமுதல்

17:12 (IST)02 Sep 2019

விரைவில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ: விரைவில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது.  திரையரங்கில் உணவு பொருட்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

16:50 (IST)02 Sep 2019

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு மீது செப். 5-இல் தீர்ப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவரின் முன்ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், செப்டம்பர் 5 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

16:33 (IST)02 Sep 2019

விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக ஆளுநர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து சுயம்பு சித்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். விழாவில் ஆளுநருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

16:14 (IST)02 Sep 2019

ஜப்பான் பிரதமருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து வருகிறார். ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஆண்டு பேச்சுவார்த்தைக்காக ஜப்பானுக்கு சென்றுள்ளார்.

16:06 (IST)02 Sep 2019

சென்னையில் பேருந்து நடத்துனரை தாக்கிய தெலங்கானா விளையாட்டு வீரர்கள்

சென்னையில் அண்ணா சதுக்கத்தில் இருந்து கொளத்தூர் சென்ற பேருந்தில் பேருந்து நடத்துனருக்கும் தெலங்கானா மாநில விளையாட்டு வீரர்களுக்கும் இடையே தகராறு. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தெலுங்கானா விளையாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

15:55 (IST)02 Sep 2019

தூய்மை இந்தியா திட்டத்துக்காக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தியமைக்காக பில் கேட்சின் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

15:35 (IST)02 Sep 2019

சிபிஐ காவலுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனுவை நாளையே விசாரிக்க வேண்டும் – துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் முறையீடு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், சிபிஐ காவலுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனுவை நாளையே விசாரிக்க வேண்டும் என துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அவருடைய கோரிக்கையை ஏற்று, ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலுக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. மேலும், நாளை வரை சிபிஐ காவலை நீட்டிக்க விசாரணை நீதிமன்றத்தை நாட சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

15:23 (IST)02 Sep 2019

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது – சிபிஐ, அமலாக்கத்துறை வாதம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்து விசாரித்தால் மட்டுமே உண்மையை கொண்டு வர முடியும் என்று சிபிஐ தரப்பில் வாதிட்டனர்.

14:33 (IST)02 Sep 2019

INX Media Case : சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராக நள்ளிரவில் எப்படி நோட்டீஸ் ஒட்ட முடியும்? – கபில் சிபில் கேள்வி

சி.பி.ஐ. காவலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது வாதாடி வரும் கபில் சிவில் காரசாரமான கேள்விகளை முன்வைக்கின்றார். விசாரணை நோட்டீஸூக்கு பதில் அளித்தும் ஜாமீனில் வெளிவர இயலாத உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஒரு வேளை ஜாமீன் கொடுக்கவில்லை என்றால் அடுத்த 3 நாட்களுக்கு சி.பி.ஐ. காவலில் விசாரணை தொடரும்.

14:10 (IST)02 Sep 2019

சந்திரயான் 2-ல் இருந்து பிரிந்தது லேண்டர் விக்ரம்

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது லேண்டர் மற்றும் ரோவர். லேண்டர் தற்போது நிலவின் சுற்றுவட்டபாதையில் 100 கி.மீக்கு அப்பால் சுற்றி வருகிறடது. படிப்படியாக இதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

13:53 (IST)02 Sep 2019

வீட்டுக் காவலில் வேண்டுமானால் வைத்து விசாரணை செய்யுங்கள் – கபில் சிபில்

சி.பி.ஐ வழக்கில் நீதிமன்ற காவலுக்கு தடை விதிக்கக் கோரி வாதாடி வரும் ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை வீட்டுக்காவலில் வேண்டுமானால் வைத்து விசாரணை செய்யுங்கள் என்று வாதாடி வருகிறார்.

13:23 (IST)02 Sep 2019

குல்பூஷண் ஜாதவை சந்தித்தார் இந்திய தூதரக அதிகாரி

இந்திய தூதரக அதிகாரி கௌரவ் அலுவாலியா தற்போது பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியரான குல்புஷண் ஜாதவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். குருநானக் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு முக்கிய முடிவுகளை இருநாட்டு தலைவர்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

13:02 (IST)02 Sep 2019

Chandrayaan 2

ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் பிரியும் பணி ஆரம்பம். ஜூலை 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 வருகின்ற 6 அல்லது 7 தேதிகளில் விண்ணில் தடம் பதிக்க உள்ளது. சந்திரயான் 2-ல் இருந்து லேண்டரும் ரோவரும் தற்போது ஆர்பிட்டரில் இருந்து தங்களை டி-ட்டாச் செய்யும் பணியை துவங்கியுள்ளது.

12:55 (IST)02 Sep 2019

Actor Vijay meets DMK chief MK Stalin

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் சகோதரி செல்வியின் பேத்திக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் விஜய் இந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார் விஜய்.

11:05 (IST)02 Sep 2019

இந்திய ஏற்றது

இந்திய அதிகாரிகள் தனது காவலில் இருக்கும் குல்பூஷன் ஜாதவவை சந்திக்கலாம் என்று பாகிஸ்தான் விருப்பம்  தெரிவித்திருந்தது. இந்த விருப்பத்தை தற்போது இந்திய மத்திய அரசு ஏற்றுள்ளது. இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா, இன்று  குல்பூஷண் ஜாதவை சந்திக்க உள்ளார் .        

கடந்த ஆகஸ்ட் மாதம் இதே பாகிஸ்தான் தெரவித்த விருப்பத்தை நிரகரித்தது என்பது குறிப்பிடத் தக்கது 

09:49 (IST)02 Sep 2019

ஜிஎஸ்டி வசூல்

ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி யின் வசூல் 98,202 கோடி என்று அரசு தெரிவித்துள்ளது . இந்த வசூல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தை  விட அதிகம் என்றாலும், இந்த வருடம்  ஜூலை மாதத்தை  விடக்  குறைவு என்பது குறிப்பிடத் தக்கது.

     

09:09 (IST)02 Sep 2019

குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் அனுமதி

தனது காவலில் இருக்கும் குல்பூஷன் ஜாதவவை இந்திய அதிகாரிகள் சந்திக்கும் சலுகையை வழங்க முடிவு செய்துள்ளது பாகிஸ்தான். ஏற்கனவே பாகிஸ்தான் கொடுத்த சலுகையை இந்திய நிராகரித்தது என்பது குறிப்பிடத் தக்கது.

08:56 (IST)02 Sep 2019

தமிழக முதல்வர் வாழ்த்து மடல்

வெளிநாடு சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது விநாயகர் வாழ்த்து மடலை ட்விட்டரில் அனுப்பியுள்ளார். 

08:45 (IST)02 Sep 2019

நரேந்திர மோதி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி 

Tamil Nadu news today updates: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்  நேற்று வீடியோவில் தனது கருத்தை வெளியிட்டார். அதில்   பாஜக அரசின் தவறான கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதார மந்தநிலைக்கு  தள்ளப்பட்டுள்ளது வாதங்களை முன்வைத்திருந்தார்.

நேற்று சென்னை வந்திருந்த  நிர்மலா  சீதா ராமனிடம் இது பற்றி கருத்துக் கேட்டபோது – மன்மோகன் சிங்கின் கருத்துகளை ஆய்வு செய்ய அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனை நேற்று தெலங்கானாவின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது  .

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu news today live updates chennai weather crime politics ganesh chaturthi