Advertisment

Tamil Nadu news updates: நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று வேட்புமனு பரிசீலனை: வாபஸ் பெற 3-ம் தேதி கடைசி நாள்

முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Updates

Tamil Nadu News Updates

Tamil Nadu news today live updates : சென்னை  கிண்டி வளாகத்தில் உள்ள  ஐ.ஐ.டி.யின் 56வது பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்து சேர்ந்தார். மேலும், சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் மத்தியில் மோடி சிறு உரையை ஆற்றினார்.

Advertisment

தலித் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பட்டியல் சாதி (எஸ்சி) அந்தஸ்து வழங்குமாறு தேசிய தலித் கிறிஸ்தவர்களின் கவுன்சில் (என்சிடிசி) மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை ஐஐடி வருகை : லைவ் செய்திகள்

பீகார் மாநிலத்தின் 3 மாவட்டங்களில் கடந்த 48 மணி நேரமாக பெய்த கனமழையால்,  மாநிலத்தில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்கிரந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போன்ற முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லைவ் ப்ளாக்கை பின்தொடருங்கள்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய சமூக நிகழ்வுகள், முக்கியச் செய்திகள், தங்கம் மற்றும் வெளியின் விலை நிலவரங்கள் இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.   














Highlights

    07:31 (IST)01 Oct 2019

    இன்று வேட்புமனு பரிசீலனை

    தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர்கள் கடந்த 23-ம் தேதி தொடங்கி வேட்புமனு தாக்கல் செய்தார்கள். இன்று அதற்கான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 3. 

    22:30 (IST)30 Sep 2019

    தர்பார் படப்பிடிப்பு தளத்தில் லதா ரஜினிகாந்த்

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில், நடிகர் ரஜினிகாந்துடன் லதா ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.publive-image

    22:28 (IST)30 Sep 2019

    உதான் திட்டத்தின் கீழ் சென்னை – சேலம் இடையே விமான சேவை – முதல்வர் பழனிசாமி கோரிக்கை

    உதான் திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் இடையே மாலை நேர விமான சேவை தொடங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். ல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கும் ரூ.7,825 கோடியை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    20:48 (IST)30 Sep 2019

    பணபலத்தை நம்பி அதிமுக தேர்தலை சந்திக்கவில்லை – அமைச்சர் தங்கமணி

    பண பலத்தை நம்பி அதிமுக தேர்தலை சந்திகவில்லை; மக்களை நம்பியே சந்திக்கிறோம்.  நாங்குநேரி தொகுதியில் நடைபெறுவது புகுத்தப்பட்ட தேர்தல் . நாங்குநேரியில் காங். சார்பில் போட்டியிடுபவர் இறக்குமதி செய்யப்பட்ட பணக்கார வேட்பாளர் எனறு அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

    20:05 (IST)30 Sep 2019

    பழைய பாடத்திட்டத்திலும் தேர்வு எழுதலாம்: பள்ளிகல்வித்துறை

    10,11,12 ம் வகுப்பில் கடந்த கல்வி ஆண்டுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பழைய பாடத்திட்டத்திலும் தேர்வு எழுதலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச்-2020, ஜூன் 2020 பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தின் கீழ் எழுதலாம். பழைய பாடத்திட்டத்தின் படி, 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்கள் அதே பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுதலாம் எனவும் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

    19:57 (IST)30 Sep 2019

    பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

    உலகிலேயே அதிவேகத்தில் செல்லக் கூடிய பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
    இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான 'பிரமோஸ் சூப்பர்சோனிக்' ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டதாகும். வழக்கமாக இந்த ஏவுகணை அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படும். அந்த வகையில், தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு உபகரணத்துடன் பிரமோஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டது. ஒடிசாவில் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

    19:20 (IST)30 Sep 2019

    பாஜக – அதிமுக கூட்டணி உறவில் பிளவு இல்லை – துணை முதல்வர் பன்னீர்செல்வம்

    பாஜக – அதிமுக கூட்டணி உறவில் பிளவு இல்லை என  துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.  பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அரசியல் பேசப்படவே இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    18:52 (IST)30 Sep 2019

    டெங்கு காய்ச்சல் தொடர்பான அச்சம் வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

    டெங்கு காய்ச்சல் தொடர்பான அச்சம் வேண்டாம் அதேநேரத்தில் அலட்சியமும் வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 100 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    18:30 (IST)30 Sep 2019

    மோடி - சீன அதிபர் சந்திப்பு : மாமல்லபுரத்தில் தலைமைச்செயலாளர், டிஜிபி ஆய்வு

    மாமல்லபுரத்தி்  சீன அதிபர் - பிரதமர் மோடி சந்திப்பு நடைபெறுவதையொட்டி தலைமைச் செயலர் ஆய்வு மேற்கொண்டார். மத்திய குழுவுடன் தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    17:52 (IST)30 Sep 2019

    திருப்பதி பிரமோற்சவ விழா!

    திருப்பதி எழுமலையான் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தற்போது தொடங்கியது.   இதுக்குறித்து முழு விபரங்களை இங்கே படிக்கலாம். ஏழுமலையானை பக்தர்கள் விரைவாக தரிசிப்பது எப்படி?

    16:58 (IST)30 Sep 2019

    வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் முழு விபரம்!

    தமிழகத்தில் நடைபெறவுள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.  அதன்படி நாங்குநேரியில் 36 பேரும், , விக்கிரவாண்டியில் 23 பேரும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

    16:40 (IST)30 Sep 2019

    ஸ்டாலின் ட்வீட்!

    தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா? என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    16:16 (IST)30 Sep 2019

    அமைச்சர் ஜெயக்குமார்!

    பிரதமருக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி தமிழகம் மீதும், தமிழ் மொழியின் மீதும் பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார்; ஐ.நா.விலும் தமிழை மேற்கோள்காட்டி உரையாற்றி சிறப்பு சேர்த்திருக்கிறார் பிரதமர் மோடி.  அமைச்சர்  ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி. 

    16:15 (IST)30 Sep 2019

    அமைச்சர் வேலுமணி ட்வீட்!

    சென்னையில் மோடி வருகையொட்டி சமூகவலைத்தளங்களில் #gobackmodi ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இதற்கு எதிர்ப்பு கண்டனம் தெரிவித்து அதிமுக அமைச்சர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன. பிரதமர் வந்தாலே எதிர்க்க வேண்டும், டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்க வேண்டும் என்பது எந்த மாதிரியான பண்பாட்டு நிலைப்பாடு என்று அமைச்சர் வேலுமணி ட்வீட் செய்துள்ளார். 

    15:18 (IST)30 Sep 2019

    சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு!

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு  மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில்  இன்று மதியம்  தொடங்கியது.  இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த   நீதிபதி சிதம்பரத்திற்கு  ஜாமீன் மறுத்து உத்தரவிட்டார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

    15:12 (IST)30 Sep 2019

    ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு!

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு. 

    14:58 (IST)30 Sep 2019

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர்!

    புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளராக புவனா தேர்வு செய்யப்பட்டார். காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜான்குமார் போட்டியிடுகிறார். அதிமுக, பாஜக கூட்டணி ஆதரவோடு  என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில், கட்சி வேட்பாளரான புவனா இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

    14:56 (IST)30 Sep 2019

    அதிமுக வேட்பாளர் நாராயணன் மனு தாக்கல்!

    நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்காக, அதிமுக வேட்பாளர் நாராயணனும் மதியம் 12.15 மணி அளவில் மனுத்தாக்கல் தாக்கல் செய்தார். இந்நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் மனுத்தாக்கல் செய்யவில்லை. மதியம் 3 மணியுடன் மனுத்தாக்கல் செய்தவற்கான நேரம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    14:52 (IST)30 Sep 2019

    காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்!

    நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்,  நாங்குநேரியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவேன் என்றும் உறுதியளித்தார். 

    14:46 (IST)30 Sep 2019

    தமிழியின் பெருமையை பிரதமர் மோடி இன்று விளக்கியதை தொடர்ந்து தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் “நான் தமிழ் படித்திருக்க வேண்டும். ஊட்டியில் உள்ள பள்ளியில் தான் நான் படித்தேன் ஆனாலும் அப்போது தமிழை கற்கவில்லை. மோடி ஐநாவில் பேசிய போது உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் என்கிறார். இதுவே எனக்கு தெரியாது. இது தெரியாமல் இருந்ததற்கு நான் வெட்கப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    14:42 (IST)30 Sep 2019

    திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்!

    தமிழக சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு  இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றோடு முடிவடையும் நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். 

    13:34 (IST)30 Sep 2019

    உமா மகேஸ்வரி கொலை வழக்கு -

    2014-ல் ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி  சிறுசேரியில் உள்ள தனது டிசிஎஸ் அலுவலகத்திற்கு அருகில் பணத்திற்காக  கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வட இந்தியாவில் இருந்து வந்து தமிழகத்தில் வேலை செய்த மூன்று நபர்கள் குற்றவாளியாக சென்னை உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, ஆயுள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.  இந்நிலையில், தண்டனையை ரத்து செய்யக் கோரிய உச்ச நீதிமன்ற வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில்,  குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்வதாக  உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

    13:21 (IST)30 Sep 2019

    நீட் ஆள்மாறாட்டம் :

    தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவி உதித் சூர்யா (21) மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட சில நாட்களிலே  இர்ஃபான் என்கிற மாணவரும் இதே தவறை செய்திருப்பதாக போலிஸாருக்கு தவகல் கிடைத்தது. இர்ஃபான் மொரிசீயஸ் நாட்டிற்கு தப்பிசென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படை  அந்த நாட்டிற்கு தற்போது விரைந்துள்ளனர்.  மேலும்,  இர்ஃபான்  தந்தை சஃபியிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

    12:21 (IST)30 Sep 2019

    விமானத்தில் தீ :

    கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு , விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருக்கும்போது , தொழிநுட்பக் காரணமாக தீ பிடிக்க ஆரம்பித்தது. ஆனால், விமானி சாதூரியமாக செயல்பட்டு தீ பிடித்த என்ஜினை அணைத்துவிட்டு மற்ற என்ஜின் மூலமாக விமானத்தை தரை இறக்கினார். இதில் கோவா மாநிலத்தின் சுட்ட்றுச் சூழல் அமைச்சர் உட்பட  180 நபர்கள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

    11:42 (IST)30 Sep 2019

    வைகோவின் மனு தள்ளுபடி-

    ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததை தொடர்ந்து, பரூக் அப்துல்லாவை மத்திய அரசு வீட்டுக் காவலில் வைத்துவருகிறது . பரூக் அப்துல்லாவை நிதி மன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி  வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத்  தாக்கல் செய்திருந்தார். வைகோ மனுதாக்கல் செய்த சில நாட்களிலே பரூக் அப்துல்லாவை பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  வீட்டுக்காவல் வைக்கப் பட்டிருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டது. 

    இந்நிலையில், வைகோ வின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், " பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  செயல்பாடு  உரிய அமைப்பிடம் முறையிட வைகோவிற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை செய்து , மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.   

    11:08 (IST)30 Sep 2019

    ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும் :

    நடப்பாண்டில் தானாக முன் வந்து ரத்தம் தானம் செய்வதற்கான தமிழகம் 100 விழுக்காடு இலக்கை எட்ட வேண்டும். ரத்த தானம் செய்வதில் தமிழகம் இந்தியாவில் மற்ற மாநிலங்கை விட முன்னோடியாகத் திகழ்கிறது. ரத்தம் உயிரின் நாடி என்பதால், பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி
    கோரிக்கை விடுத்துள்ளார்.

    10:32 (IST)30 Sep 2019

    சென்னையில் கன மழை:

    இன்று காலை  சென்னை பாரிஸ் கார்னர் , அண்ணாசாலை, ஆயிரம்விளக்கு , நுங்கம்பாக்கம் போன்ற  இடங்களில்  மிதமான சாரல் மழை பெய்தது. சரியாக 9 மணி அளவில் மழை சற்று வேகம் பிடித்து , பின் மழையின் தன்மை குறைய ஆரம்பித்தது. இதனால், சென்னை மக்கள் இன்று வெளியில் செல்லும் போது தகுந்த ஏற்பாடுகளோடு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.    

    10:29 (IST)30 Sep 2019

    பெட்ரோல்/ டீசல் விலை:

    சென்னையில் இன்று பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு  ரூ.77.36 என்ற விலையில் விற்கப்பட்டுவருகிறது.   டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து, லிட்டர் ரூ.71.19- என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது .

    10:26 (IST)30 Sep 2019

    வேட்புமனுத் தாக்கல் இன்றோடு முடிவடைகிறது:

    தமிழக சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு  இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றோடு முடிவடைய விருக்கிறது. விக்கிரவாண்டியில திமுகவும், நாங்குநேரி தொகுதியை, திமுக, தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு விட்டுக்கொடுத்தது. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி  தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும்,  நாங்குநேரி தொகுதியில்  நாராயணசாமியும்  வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்த தேர்தலில் போட்டியில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 

    10:19 (IST)30 Sep 2019

    தமிழகத்தில் நாளை முதல் கனமழை:

    தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு குறிப்பாக தென்தமிழகம், வடதமிழகம் மற்றும் புதுச்சேரி நகரங்களில் லேசான முதல் கனமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று, காலையில் இருந்து சென்னையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்துவருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. 

    10:08 (IST)30 Sep 2019

    இஸ்ரோ சிவன் கருத்து:

    ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற மூன்று கட்டமைப்பையும் உள்ளடக்கியது சந்திரயான் 2 . லேண்டர் நிலவில் தரையிறங்கிய போது சிக்னல்கள் முற்றிலுமாக தடைபெற்று அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  அதனால், ரோவரும் பணி செய்யாமலே முடங்கி விட்டது. தற்போது, நிலவின் வட்டப் பாதையில் ஆர்பிட்டர் மற்றும் சுற்றி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, இஸ்ரோவின் தலைவர் சிவன், நிருபர்களிடம் பேசும்போது , லேண்டர் தோல்வியில் முடிந்தாலும் , சந்திரயான் 2  98 சதவீதம் வெற்றி அடைந்தது என்று கூறினார். இந்த கருத்துக்கு, நிறைய  கேள்விகளும் எழுந்தன. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன்,98 சதவீதம் வெற்றி என்கிற கருத்து தன்னுடைய சொந்த கருத்து இல்லை என்றும், இது குறித்து ஆய்வு செய்த குழுவின் கருத்து என்று தெரிவித்துள்ளார்.        

    Tamil Nadu news today live updates: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியலமைப்பில் 370-வது பிரிவில் மத்திய அரசு திருத்தம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க, சீனியர் நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. மேலும், இந்த அமர்வு வரும் அக்டோபர் முதல் தேதியில் இருந்து இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மன் கீ பாத்தில் நேற்று உரையாற்றிய  நரேந்திர மோடி,  வருகின்ற அக்டோபர் 2ம் தேதி முதல் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தப்படும் ப்ளாஸ்டிக்கை முற்றிலுமாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, நாட்டின் வளர்ச்சித் திறனைக் கருத்தில் கொண்டு பெட்ரோகெமிக்கல்ஸ், உள்கட்டமைப்பு மற்றும் சுரங்கத் துறைகளில் 100 பில்லியன் டாலர் இந்தியாவில்  முதலீடு செய்யவிருக்கிறது என்று இந்திய நாட்டிற்கான சவுதியின் தூதர் நேற்று தெரிவித்துள்ளார்.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment