News today updates : தமிழகத்தில் 40 லட்சம் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் ஆங்கில பேச்சுப் பயிற்சி: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

Petrol Diesel Rate in Chennai : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75.450 க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 69.50 ஆகும்.

Tamil Nadu news today updates :   ஹரியானா ஹர் சிங் பூரா என்ற கிராமத்தில் நேற்று 5 வயது சிறுமி 50 அடி ஆழமுள்ள போர்வெல்லில் விழுந்தார். மீட்பு நடவடிக்கைகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றன.

டெல்லி தலை நகரத்தில் காற்று கடுமையான அளவில் மாசு பட்டுள்ளது. இதனை சீர் செய்ய டெல்லி அரசாங்கம் பள்ளிகளுக்கு விடுமுறை, தொழிற்சாலைகளை மூடல் போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதன் தொடர்ச்சியாக டெல்லி முழுவதும் வாகனக் கட்டுப்பாடு முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இது போன்ற பல முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளோக்கை பின் தொடருங்கள்

Live Blog

Tamil Nadu news today updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்


22:33 (IST)04 Nov 2019

சேலம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.396 கோடியில் கால்நடைப் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டம்

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் 900 ஏக்கர் பரப்பளவில் ரூ.396 கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

21:12 (IST)04 Nov 2019

மரங்கள் வெட்டப்படுவது குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மையம்; பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

மரங்கள் வெட்டப்படுவது குறித்து ஆதாரங்களுடன், பொது மக்கள் புகார் கொடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் ஆன்லைன் புகார் மையம் அமைப்பது தொடர்பாக தலைமை செயலர் பரிசீலித்து பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

20:39 (IST)04 Nov 2019

முதல்வர் பழனிசாமி – பின்லாந்து அமைச்சர் சந்திப்பு

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் முதலவர் பழனிசாமியுடன் பின்லாந்து அமைச்சர் சந்திப்பு.
4 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள பின்லாந்து வெளியுறவு அமைச்சர் பெக்கா ஹேவிஸ்டோ முதல்வருடன் சந்தித்து பேச்சுவார்த்தை.

19:59 (IST)04 Nov 2019

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமை – மு.க.ஸ்டாலின் டுவிட்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமை என்று டுவிட் செய்துள்ளார். மேலும் அந்த டுவிட்டில், “அனைத்து காய்கறிகளையும் போல, வெங்காயமும் மிக மிக அத்தியாவசியமானது. அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது, சாமானிய மக்களுக்குப் பெரிதும் சிரமம் ஏற்படுத்தும். அத்தியாவசியப் பொருள்கள் சிரமமின்றிக் கிடைக்கச் செய்வதும் – அதன் விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதும் அரசின் கடமை!” என்று தெரிவித்துள்ளார்.

19:11 (IST)04 Nov 2019

டெல்லி தலைமைச் செயலாளருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் சம்மன்

காற்றுமாசு விவகாரம் : டெல்லி தலைமைச் செயலாளருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் சம்மன். 

டெல்லி தலைமை செயலாளர், டெல்லி மாசுக்கட்டுப்பாடு ஆணையத் தலைவர், மத்திய மாசுகட்டுப்பாடு வாரியத்தின் செயலர், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை செயலர் உள்ளிட்டோர் நாளை காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

18:57 (IST)04 Nov 2019

லேசான மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

18:29 (IST)04 Nov 2019

வாழை இலை பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் பிளாஸ்டிக்கை தவிர்க்கலாம் – ஐகோர்ட் மதுரை பென்ச்

வாழை இலை பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்கலாம்

சுய உதவிக்குழுக்கள் மூலம் துணிப்பைகளை தயார் செய்து விற்பதற்கான சூழலை உருவாக்கலாம்; இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுக்க குழுவை நியமிக்க மதுரை ஆணையருக்கு உத்தரவு

– உயர்நீதிமன்ற கிளை

17:59 (IST)04 Nov 2019

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மமோகிராம் என்று அழைக்கப்படும் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான கருவியின் இயக்கத்தை அவர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்தார்.

17:43 (IST)04 Nov 2019

அரைமணி நேர சந்திப்பு நிறைவு

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் – முதல்வர் பழனிசாமி சந்திப்பு நிறைவு

ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் – முதல்வர் பழனிசாமி இடையே சுமார் அரை மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது

17:41 (IST)04 Nov 2019

முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் ஆவின் தலைவராக செயல்பட தடை நீடிக்கும்

மதுரை ஆவின்-க்கு புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும், அதுவரை அதிமுக முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் ஆவின் தலைவராக செயல்பட தடை நீடிக்கும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

17:23 (IST)04 Nov 2019

ஆளுநரை சந்தித்த முதல்வர் பழனிசாமி – காரணம் என்ன?

சென்னையில் ஆளுநர் பன்வாரிலாலை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து பேசி வருகிறார். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆளுநருடன் முதல்வர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

17:14 (IST)04 Nov 2019

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முடிவு

மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை எதிர்கொள்ள அனைத்து எதிர்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முடிவு.

16:47 (IST)04 Nov 2019

ஆளுநரை சந்திக்கும் முதல்வர் பழனிசாமி

சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

16:44 (IST)04 Nov 2019

ஏன்? எதற்கு? எப்படி?

தெலங்கானாவில் லஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியர் விஜயா ரெட்டி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். நில பத்திர பதிவுக்கு லஞ்சம் கேட்ட வட்டாட்சியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தவர் விவசாயி சுரேஷ். நில பிரச்சினை தொடர்பாக எழுந்த விவாதத்தின் இறுதியில் பெட்ரோலை ஊற்றி எரித்தார்.

ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்பூரமெட் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.

16:42 (IST)04 Nov 2019

ககன்யான் திட்டத்தின் அடிப்படை பணிகள் நிறைவடைந்தன – சிவன்

“விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடிப்படை பணிகள் நிறைவடைந்தன; திட்டத்தின் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” – இஸ்ரோ தலைவர் சிவன்

16:32 (IST)04 Nov 2019

பெண் வட்டாட்சியர் எரித்துக் கொலை

தெலங்கானா மாநிலத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் லஞ்சம் கேட்டதாக பெண் வட்டாட்சியர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி ஒருவர் தான் வட்டாட்சியரை எரித்துக் கொன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

16:07 (IST)04 Nov 2019

4 இடங்களில் 6ம் கட்ட அகழாய்வு தொடங்கும் – அமைச்சர் பாண்டியராஜன்

“ஓராண்டிற்குள் கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்படும்; வரும் ஜனவரி 15ல் கீழடி, கொந்தகை, மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் 6ம் கட்ட அகழாய்வு தொடங்கும்” – அமைச்சர் பாண்டியராஜன்

16:05 (IST)04 Nov 2019

இனி ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது

பருவகாலங்களில் ஏற்படும் பேரிடரின் போது மக்களின் பாதுகாப்புக்கு தேவையான விழிப்புணர்வுகளை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது – அமைச்சர் உதயகுமார் பேட்டி

போதிய விழிப்புணர்வு இல்லாமலோ, கவனக்குறைவாலோ இனி ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் – உதயகுமார்

15:52 (IST)04 Nov 2019

எமர்ஜின்சியை விட டெல்லியில் காற்று மாசு மோசமாக உள்ளது – சுப்ரீம் கோர்ட்

எமர்ஜின்சியை விட டெல்லியில் காற்று மாசு மோசமாக உள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அதிகளவு பயிர்க்கழிவுகளை எரிப்பதாலேயே காற்று மாசு. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகளை தடுக்க ரோந்து பணியில் காவலர்களை ஈடுபடுத்தியுள்ளோம். பயிர்க்கழிவுகள் எரிப்பு குறித்து தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் – உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

15:27 (IST)04 Nov 2019

மாஞ்சா நூல் அறுத்த சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையில் 3 வயது சிறுவனை மாஞ்சா நூல் அறுத்த சிசிடிவி காட்சி வெளியீடு

சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேரை கைது செய்து விசாரணை

சென்னை வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மாஞ்சா நூல் விற்கப்படுகிறதா தீவிர என சோதனை

15:26 (IST)04 Nov 2019

ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

தனியார் பட்டா நிலங்களை மறித்து கொடைக்கானல் வானிலை ஆய்வு மையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

15:25 (IST)04 Nov 2019

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு – தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவு

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவு. டி.ஜி.பி. திரிபாதி உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்துகின்றனர், தஞ்சை போலீசார். தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் அதிரடி உத்தரவு.

15:22 (IST)04 Nov 2019

ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி : பொருளாதார மந்தநிலை தொடர்பாக காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

15:00 (IST)04 Nov 2019

மரம் வளர்ப்பது என்பது மகளும், மகனும் வளர்ப்பதற்கு சமம் – தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி

மரம் வளர்ப்பது என்பது ஒவ்வொரு வீட்டிலும் மகளும் மகனும் வளர்ப்பதற்கு சமமானது என்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி தெரிவித்துள்ளார். தமிழக பெண்கள் இயக்கம் சார்பாக சோலைகள் என்ற தலைப்பில் மரம் நடும் நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்றம் எதிரே நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி கலந்து கொண்டு மரம் நட்டு வைத்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மேற்கண்டவாறு தெரித்தார்.

14:58 (IST)04 Nov 2019

உள்ளாட்சி தேர்தலுக்காக களமிறங்கிய அ.தி.மு.க : சுகாதாரத்துறை அமைச்சர் திண்ணை பிரசாரம்

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதுக்கோட்டை நகரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக கட்சி நிர்வாகிகளுடன், உள்ளாட்சி தேர்தல் குறித்து அவர், ஆலோசனை நடத்தினர். பின்னர் 42-வது வார்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் நிறைகுறைகளை அமைச்சர் கேட்டறிந்தார். பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் அமைச்சரிடம் கொடுத்தனர். தேர்தல் தேதி இன்னும் வெளியாகாத நிலையில், முன்னேற்பாடாக அ.தி.மு.க அமைதியாக பிரசாரத்தில் களமிறங்கியுள்ளது.

14:57 (IST)04 Nov 2019

செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம்: சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேளுங்கள் – ராமதாஸ்

அரசியல் தலைவர்களின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்திற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வாட்ஸ்-ஆப் நிறுவனத்திடம் மட்டுமின்றி, இதற்கு காரணமான பெகாசஸ் மென்பொருள் தயாரித்த இஸ்ரேல் நிறுவனத்திடமும், மத்திய அரசு விளக்கக் கேட்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

14:33 (IST)04 Nov 2019

இனிமேலும் விதிமீறல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம் – உச்சநீதிமன்றம்

காற்று மாசுவால் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு இருப்பதாக தெரியவில்லை. இனிமேலும் விதிமீறல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம். டெல்லியில் நிலவும் கடுமையான மாசுபாட்டிற்கு பயிர்க்கழிவு எரிப்பு காரணம் என்றால் மாநில அரசு, கிராம பஞ்சாயத்துக்களே முழு பொறுப்பு. ஐ.ஐ.டி. நிபுணர், சுற்றுச்சூழல் நிபுணர்களை அரை மணி நேரத்தில் மத்திய அரசு அழைக்க வேண்டும். காற்று மாசு தடுப்பு நடவடிக்கை தொடர்பான பரிந்துரைகளை அளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

14:31 (IST)04 Nov 2019

பயிர்க்கழிவு எரிப்பில் ஈடுபடுவதை உடனடியாக தடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவு எரிப்பில் ஈடுபடுவதை உடனடியாக தடுக்க வேண்டும், இதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென மத்திய – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.

14:30 (IST)04 Nov 2019

மாஞ்சா நூல் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

மாஞ்சா நூல் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மாஞ்சா நூல் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் – கூடுதல் காவல் ஆணையர் தினகரன்

14:29 (IST)04 Nov 2019

வாரத்தில் ஒருநாள் ஆங்கில பேச்சு பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 40 லட்சம் மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் – பள்ளிக்கல்வித்துறை

13:49 (IST)04 Nov 2019

திருவள்ளுவர் நாத்திகர் இல்லை – மாஃபாய் பாண்டியராஜன்

வள்ளுவருக்கு முதல் வடிவம் தந்தவர் பிரிட்டிஷ் அரசு Mint தலைவரான எல்லிஸ் பிரபு 1800களில்! தங்க நாணயத்தில் வார்த்தெடுக்கப்பட்ட இந்த தியான உருவம் சமணத்துறவியாகவோ, சைவ/வைணவ ஞானியாகவோ இருக்கலாமே தவிர, கடவுள் வாழ்த்து படைத்த தெய்வப்புலவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை!#திருவள்ளுவர் https://t.co/vAO959VVTW— Pandiarajan K (@mafoikprajan) November 3, 2019தமிழக பாஜக கட்சியின் டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் தனது ட்விட்டரில் ,  ‘ வள்ளுவருக்கு முதல் வடிவம் தந்தவர் பிரிட்டிஷ் அரசு Mint தலைவரான எல்லிஸ் பிரபு 1800களில்! தங்க நாணயத்தில் வார்த்தெடுக்கப்பட்ட இந்த தியான உருவம் சமணத்துறவியாகவோ, சைவ/வைணவ ஞானியாகவோ இருக்கலாமே தவிர, கடவுள் வாழ்த்து படைத்த தெய்வப்புலவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை’ என்று பதிவு செய்துள்ளார்.    

13:08 (IST)04 Nov 2019

நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

நீட் முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, சரமாரியாக கேள்வி கேட்டுள்ளது. நேர்மை, வெளிப்படைதன்மை என்பதற்காக கொண்டு வந்த இந்த தேர்வு , அதன் இலக்கை அடைந்து விட்டதா? லட்ச ரூபாய்  பணம் செய்து பயிற்சி பெற்றால் தான் மருத்துவர் ஆக முடியுமா ? ஏழைகளுக்கு கதவு திறக்கப்படதா ?  நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக் கூடாது? என்ற கேள்விகளையும் முன்வைத்துள்ளது.   

12:20 (IST)04 Nov 2019

திருவள்ளுவர் சிலை சேதம் – கனிமொழி ட்விட்டரில் கண்டனம்

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலையின் மீது மர்ம நபர்கள் மை மற்றும்  சாணம் அடித்ததை கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டரில் , ” வள்ளுவர் சிலையை சேதப்படுத்தலாம். ஆனால் அதை செய்த மூடர்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் என்பவர் சிலை மட்டும் இல்லை. வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம். சிலையை சேதப்படுத்தியவர்கள் மறைந்து மண்ணோடு போனபின்பும் வள்ளுவம் வாழும் ” என்று பதிவு செய்துள்ளார்.  

12:16 (IST)04 Nov 2019

திருவள்ளுவர் சிலை சேதம் – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலையின் மீது மர்ம நபர்கள் மை மற்றும்  சாணம் வீசியதைக்  கண்டித்து ஸ்டாலின் , ‘ இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்  தக்கது  என்றும், தவறு செய்தவர்களின் மீது உடனடியாக  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.       

12:07 (IST)04 Nov 2019

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமார்(30) என்பவர்  ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு என்று போலியாக மிரட்டியதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.  

12:01 (IST)04 Nov 2019

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு நன்றி பொதுக் கூட்டம்

கடந்த அக்டோபர் 21ம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. அடுத்து வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் , உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றி அடையும் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக  வாக்களித்த நாங்குநேரி, விக்கிரவாண்டி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சிறப்பு  பொதுக் கூட்டங்கள் நடந்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தற்போது அறிவித்துள்ளார். 

வரும் 5ம் தேதியில் பன்னீர்செல்வம் தலைமயில் நாங்குநேரி தொகுதியிலும், 8ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமயில் விக்கிரவாண்டியிலும் இந்த  பொதுக் கூட்டம் நடைபெற விருக்கிறது. கூட்டணி கட்சத் தலைவர்கள் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.             

11:52 (IST)04 Nov 2019

ரோபோட் இயந்திரத்தை தொடங்கி வைத்தார் எஸ்.பி வேலுமணி

கோவை மாநகராட்சியில் முதன் முதலாக ரூ. 36 லட்சம் மதிப்பிலான சாக்கடை அடைப்புகள் மற்றும் மனித கழிவுகளை அகற்றும் ரோபோட் இயந்திரத்தை தொடங்கி வைத்து பயன்பாட்டுக்கு அர்ப்பணித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. pic.twitter.com/Z2qVjMQ7bf— SP Velumani (@SPVelumanicbe) November 4, 2019நகராட்சி நிர்வாகம் மற்றும்  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி கோவை மாவட்டத்தில் சாக்கடை அடைப்புகள் மற்றும் மனித கழிவுகளை அகற்றும் ரோபோட் இயந்திரத்தை தொடங்கி வைத்தார்.   

11:43 (IST)04 Nov 2019

5 வயது சிறுமியை மீட்கும் முயற்சி தோல்வி

ஹரியானா ஹர் சிங் பூரா என்ற கிராமத்தில், நேற்று  50 அடி ஆழமுள்ள போர்வெல்லில் விழுந்த  5 வயது சிறுமி இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.   

11:39 (IST)04 Nov 2019

வள்ளுவர் பற்றிய சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டியவை – டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலளார் இன்று தனது ட்விட்டர்  ,”தஞ்சாவூர், பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.உலகப்பொதுமறை என கொண்டாடப்படும் திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர், சாதி- மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவானவர். தமிழ், தமிழினம் என்ற எல்லைகளைத் தாண்டி அவர் போற்றப்படுகிறார். வள்ளுவரின் சொந்த மண்ணான தமிழகத்தில் அவரை வைத்து நடக்கும் சர்ச்சைகளும், இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்றவை; தவிர்க்கப்பட வேண்டியவை, ”  என்று பதிவி செய்துள்ளார். 

10:45 (IST)04 Nov 2019

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் வேண்டாம் – கேரளா

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு  ஒப்பந்தத்தில்  (ஆர்.சி.இ.பி.) கையெழுத்திட வேண்டாம் என்று மத்திய அரசை  வலியுறுத்தி கேரளா சட்டசபையில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி , காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒன்றாக இணைந்து தீரமானத்தை  நிறைவேற்றியுள்ளனர் . ஆசியான் உச்சிமாநாட்டிற்கு சென்ற பிரதமர்  ஆர்.சி.இ.பி யைப் பற்றி பிற நாட்டுத் தலைவர்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.  

10:26 (IST)04 Nov 2019

சரத் பவார் – சோனியா காந்தி சந்திப்பு

மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பதில் பாஜக சிவசேனா இருவருக்கும் மோதல்கள் அதிகமாகி வரும் சூழ்நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய கட்சியாக கருதப்படும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று டெல்லியில் அகில இந்தியா காங்கிரஸ் கட்சி இடைகாலத்  தலைவர  சோனியா காந்தியை சந்திக்கவிருக்கிறார்.   

10:17 (IST)04 Nov 2019

ஜப்பான் பிரதமருடன் நரேந்திர மோடி சந்திப்பு :

தாய்லாந்து தலைநகரமான பாங்காங்கில்  ஆசியான் உச்சி மாநாடு நடை பெற்று வருகிறது. இதன் தொடரச்சியாக, இன்று பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் அதிபரை ஷின்ஸோ அபேவை  சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவை பற்றி உரையாடினார்.  

10:09 (IST)04 Nov 2019

தமிழக பாஜக செயலுக்கு வைகோ கண்டனம் .

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன திருவள்ளுவரை இந்துத்தவா சித்தாந்தத்தில் முடக்க நினைத்தால் தமிழக மக்கள் கொத்தித்து எழுவார்கள் என்று மா.தி.மு.க கட்சி பொதுச் செயலளார் வைகோ தெரிவித்துள்ளார். திருவள்ளுவரும், திருக்குறளும் உலகப் பொதுமறை என்றும் தெரிவித்தார்.       

10:02 (IST)04 Nov 2019

கோவாவில் நிம்மதியாய் இருக்க விரும்புகிறேன்.

ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாவதற்கு முன்பு ஆளுநராய் இருந்தவர் சத்தய பால் மாலிக் . தற்போது கோவாவின் ஆளுநராய் நியமிக்கப் பட்டார்.  நான் பிரச்சனைக்குரிய இடத்தில் இருந்து வந்திருக்கிறேன்( ஜம்மு-காஷ்மீர் ). கோவா அமைதியான மாநிலம் . இங்கு நிதானமாக அரசு நிர்வாகத்தில் செயல்படுவேன் என்று  தெரிவித்துள்ளார்.       

09:51 (IST)04 Nov 2019

தமிழ்நாடு வெதர்மேன் கருத்துக்கு இந்தியா வானிலை மையம் மறுப்பு

நேற்று தமிழ்நாடு வெதர்மேன் டெல்லியின் காற்று மாசு இன்னும் ஒரு வாரத்திற்குள் சென்னையை நோக்கி வரும் என்று தகவல் தெரிவித்து இருந்தார்.  தற்போது சென்னையின் பி.எம் 2.5 ன் அளவு குறைந்த பட்சமாக 166 , அதிக பட்சமாக 215 என்ற அளவில் உள்ளது. அடுத்த வாரம் இந்த எண்ணிக்கை 300 தொடும் என்றும்  வெதர்மேன்  தெரிவித்திருந்தார். 

இந்த தகவலை தற்போது இந்தியா வானிலை மையம் மறுத்துள்ளது. தமிழகம்  தற்போது  கிழக்கு-வடகிழக்கு காற்று உள்வாங்குவதால்  டெல்லி மாசு காற்று தமிழகத்திற்கு வராது என்று தெரிவித்துள்ளது.    
 

09:37 (IST)04 Nov 2019

வாகனக் கட்டுப்பாடு விதிமுறையை மீறுவேன் – விஜய் கோயல்

கெஜ்ரிவாளின் வாகனக் கட்டுபாடு அமலை தான் மீறுவேன் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். இது,  அரசியல் நாடகம் , நான் இதற்கு பணிய விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். 2016ம் ஆண்டில் வாகனக் கட்டுபாடு அமல் படுத்திய போதும் கூட    விஜய் கோயல் நெறி முறையை மீறி அபராதம் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது 

09:31 (IST)04 Nov 2019

மாஞ்சா நூல் விவகாரம் – இருவரை கைது செய்து விசாரணை

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த கோபால், நேற்று  தனது 3 வயது மகன் அபினேஷ்வரனை அழைத்துக் கொண்டு  கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகர் பாலத்தில் திரும்பி வந்துக் கொண்டிருந்த போது மாஞ்சா நூல் அபினேஷ்வரனின் கழுத்தில் மாட்டியது. இதனால் சம்பவ இடத்திலேயே மூன்று வயது சிறுவன் உயிர் இழந்தான். இந்நிலையில், ஆர்கே நகர்  போலிசார் இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.        

09:20 (IST)04 Nov 2019

திருவள்ளுவர் சிலை மர்ம நபர்களால் சேதம்

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலையின் மீது மர்ம நபர்கள் மை மற்றும்  சாணம் அடித்துள்ள சம்பவம் மக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.   இது தொடர்பாக  மேற்படி விசாரணையை காவல் துறையினர் தொடங்கி உள்ளனர்.    

08:51 (IST)04 Nov 2019

டெல்லியில் வாகனக் கட்டுபாடு முறை அமல்

டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுவரை இல்லாத அளவு காற்று மாசு அடைந்துள்ளது . இதனால் , டெல்லி அரசாங்கம் இன்று முதல் வாகனக் கட்டுப்பாடு முறையை அமலுக்கு கொண்டு வருகிறது. இதன் மூலம், ஒற்றை இலக்கை கொண்ட எண்கள் ஒரு நாளிலும் , இரட்டை இலக்கை கொண்ட எண்கள் அதற்கு அடுத்த நாட்களிலும் டெல்லி சாலைகளில் பொது மக்கள் ஓட்ட வேண்டும். இதனால் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவதால், காற்றில் மாசின் அளவைக் குறைக்க வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. 

Tamil Nadu news today updates: பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா நேற்று தெரிவித்தார்.

அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, பாங்காங்கில், நடைபெற்ற 16ஆவது ஏசியன் – இந்தியா நாடுகளுக்கு இடையேயான உச்சிமாநாட்டில் பங்கேற்றார். தென்கிழக்காசிய நாடுகளின் ஒருங்கிணைந்த, பலம்பொருந்திய, பொருளாதார வளர்ச்சியே, இந்தியாவிற்கு சாதகமானது என்றும் தெரிவித்தார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news today live updates chennai weather crime politics sports

Next Story
தென்மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்Tamil Nadu weather, Chennai weather, chennai rain
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com