Tamil Nadu news today update : வேலூர் தொகுதிக்கு 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை மாலை முதல் தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொகுதி வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இன்று மாலை 6 மணி முதல் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை விதிக்கப்படுகிறது.
weather updates: இன்றைய வானிலை!
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic,entertainment: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள கோமாளி படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
வைகோவின் எதிர்மறை பேச்சு கண்டனத்திற்குரியது, சோமாலியா, நாகஷாகியுடன் தமிழகத்தை ஒப்பிடுவதை வைகோ நிறுத்தி கொள்ள வேண்டும். வைகோ நினைப்பது போல் தமிழகம் எந்த அழிவுப்பாதையிலும் செல்லவில்லை, பாமர மக்களுக்கான பிரதமர் மோடியின் திட்டங்களை வைகோ படித்து பார்க்க வேண்டும் என சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எங்கு கொலை நடந்தாலும் அதன் பின்பு திமுக தான் இருக்கும் என மதுரையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இது.
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டியின் பிரத்யேக லைவ் ஸ்கோர் கார்டு காண இங்கே க்ளிக் செய்யவும்
பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் குண்டு வீசுவதாக கூறுவது பொய்; ஆதாரமற்றது. இந்திய பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி செய்து வருகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறோம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் சில அரசியல் கட்சிகளால் தேவையற்ற வதந்திகள் தான் பரப்பப்படுகின்றன. நாளைய தினத்தை பற்றி எனக்கு தெரியாது, அது என் கைகளில் இல்லை; இன்றுவரை கவலைப்பட ஒன்றுமில்லை என ஆளுநர் சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. பரப்புரை நிறைவடைந்ததால் வெளியூரிலிருந்து வந்த கட்சி நிர்வாகிகள் வேலூரில் இருந்து வெளியேறி வருகின்றனர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பதட்டமான சூழல் காரணமாக சுற்றுப்பயணம் செல்வதை தவிர்க்கும்படி ஜெர்மன் அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரில் இருந்து வெளியேற மத்திய அரசு அறிவித்த நிலையில் ஜெர்மன் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெனா இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பிய நிலையில், ஜெய்சங்கர் இவ்வாறு பதில் அளித்திருக்கிறார்.
காஷ்மீரில் மத்திய அரசு அச்சத்தை விதைத்து வருகிறது, இதனால் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வெளியேறி வருகின்றனர். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள் ஆகியோர் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் விமான நிலையங்களில் காத்துக் கிடக்கின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையால் ஜம்மு - காஷ்மீரில் இருந்து வெளிமாநிலங்களைச் சேர்ந்த 2.50 லட்சம் மக்கள் வெளியேறுகின்றனர். இதில் மிக மோசமான விஷயம் என்னவெனில், ஸ்ரீநகரில் உள்ள NIT மாணவ, மாணவிகளும் உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேறுகின்றனர் - காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்
நீதித்துறைக்கு எதிராக பேசியதாக சென்னை அசோக் நகர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் பெர்சியல் பணியிடை நீக்கம் செய்து தெற்கு மண்டல இணை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.. சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதித்துறையை விமர்சித்து ஆடியோ வெளியிட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படலாம் என வதந்திகள் பரவின. ஆனால், மத்திய அரசு இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது. அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட்ட நிலையில் காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இன்று காலை முதல் தகவல்கள் பரவின. கலவர தடுப்பு பிரிவு போலீசாரும் ஸ்ரீநகரின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை முன்னாள் முதல் அமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா ராஜ்பவனில் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் நிலைமை குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக விளக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவிக்கு சென்னை இ.எஸ்.ஐ.சி மருத்துவ கல்லூரியில் சேர்க்கை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய குடியுரிமை சான்றை 12 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என மாணவிக்கு நிபந்தனை விதித்துள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால் ரூ10 லட்சம் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆடிப்பூரத்தையொட்டி இன்று (சனிக்கிழமை) கோவில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் சேவையில் பெருமாளும், ஆண்டாளும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் அங்கு இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஆண்டாளும் பெருமாளும் கோவில் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலை சென்றடைவர். இதனால் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலான 6 மணி நேரத்திற்கு அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 8 மணிக்கு பிறகு அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தின் போது தேரில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிவாரிச்சாரியார் முரளி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 3,676 கோடி ரூபாயை தமிழக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.நிதியாண்டில் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு சார்பில் 5 ஆயிரத்து 920 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தொகையில் 3 ஆயிரத்து 676 கோடி ரூபாயை பயன்படுத்தப்படாமல் தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்குவதற்கு தகுதி தேர்வு ஆகஸ்ட் 7-ம் தேதி தகுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி தேர்வுக்கான வினா மற்றும் விடை குறிப்புகள் மின்னஞ்சல் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த மாலுமி ஆதித்ய வாசுதேவன், ஈரான் அருகே கடந்த மாதம் 19ஆம் தேதி சிறைபிடிக்கப்பட்டனர். ஆதித்ய வாசுதேவன் உள்பட சிறைபிடிக்கப்பட்ட 18 இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, இன்று முதலமைச்சர் அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 214-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மக்கள் தொடர்புதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று காலை அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.
டிசம்பர் மாதம் மத்திய பிரதேசம் போபாலில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு நடிகர் அஜித்குமார் தகுதி பெற்றுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற வீடியோ வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். தரை, வான் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் மத்திய அரசு புதிய திட்டம் அவசர முடிவு எதையும் எடுக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
கே.கே.நகர் , அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் நீட்டிப்பு, நக்கீரன் தெரு, கிண்டி, ஜாபர்கான் பேட்டை, கே.கே.நகர் மேற்கு, நெசப்பாக்கம், வடபழனி போன்ற இடங்களில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் தடை
தமிழகத்தில் இசை அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசின் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். உலகின் பல இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியிருந்தாலும் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவது தனி உற்சாகத்தை தருகிறது என்றார்.