Tamil Nadu news today updates : சென்னையில் இரண்டாவது நாளாக நேற்று நள்ளிரவு துவங்கி மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மிக சமீபமாகவே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை நேற்றைய முன்தினம் (15/07/2019) மாலை துவங்கி நள்ளிரவு வரை நீடித்தது. நேற்று நள்ளிரவு துவங்கிய மழை இன்று காலை வரை பெய்து சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டது. பின்பு காலை 6 மணியில் இருந்து மழை மீண்டும் மெதுவாக பெய்து வருகிறது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையை முழுமையாக படிக்க
Tamil Nadu news today updates : Dongiri Building Collapse
மும்பையில் பருவமழை காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வருகிறது. இந்நிலையில் நேற்று 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 மாடி கட்டடம் ஒன்று டோங்கிரியில் இடிந்து விழுந்தது. 60 பேர்கள் இடர்பாடுகளில் சிக்கியிருந்த நிலையில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு.
India Post Exams
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறி அதை மீண்டும் மக்களவையில் விவாத பொருளாக்க, மத்திய அரசு ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வுகளை ரத்து செய்தது. தமிழகர்களின் உணர்வை மதித்து அஞ்சல் தேர்வை ரத்து செய்ததிற்கு நன்றி கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். தமிழக அரசியல் தலைவர்களும் தங்களின் கருத்துகளை இது தொடர்பாக வெளியிட்டுள்ளனர். மேலும் படிக்க : தமிழிலேயே இனி தபால்துறை தேர்வு : அரசியல் கட்சிகள் வரவேற்பு
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, rainfall, political events, athi varadhar, Petrol Diesel Price : சென்னை மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளில் நடைபெறும் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? அந்த நிதியை கொண்டு எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன? என்று 29ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய நகராட்சி நிர்வாகத்துறை & பொதுப்பணித்துறை செயலாளர்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், ப.சிதம்பரம் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பாகிஸ்தான் தனது தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
புதிய கல்விக் கொள்கை குறித்த தனது கருத்துக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "கல்விக் கொள்கை தொடர்பான என கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் மக்கள் நீதி மய்யம் அமைப்பிற்கும் எனது நன்றிகள். திரையுலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன் உதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு, கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது.
தங்களது தார்மீக ஆதரவிற்கு மீண்டும் எனது நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பெயிண்ட் அடிக்கும் பணிகளில் கடந்த 2 நாட்களாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் குடை வடிவிலான நிழற்குடையில் பெயிண்ட் அடித்தபோது 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் கீழே விழும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.
கடந்த மே 26 ஆம் தேதி சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் இருக்கும் புகழ்பெற்ற எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் 10 ஆவது மாடியிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனுப்பிரியா தற்கொலை செய்துக் கொண்டார். இந்த தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர். அனுப்பிரியாவை தொடர்ந்து கடந்த மாதத்தில் 3 மாணவர்கள் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் ‘ராபிடோ ஆப்’ மூலமாக வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. ராபிடோ ஆப் மூலம் பயணம் செய்த 37 வாகனங்களை இதுவரை போக்குவரத்து துறை பறிமுதல் செய்துள்ளது. தனி நபர் செல்லும் இருசக்கர வாகனத்தில், வாடிக்கையாளரை ஏற்றுவது சட்டத்திற்கும், போக்குவரத்து விதிமுறைக்கும் புறம்பானது. இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கண்காணித்து வருகின்றன.
ஆடை’படத்திலுள்ள ஆடையில்லாத காட்சிகளை நீக்கச்சொல்லி டிஜிபியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரீலீசாக உள்ள ஆடை படத்தில் அமலா பால் நடித்துள்ள சர்ச்சைக்குரிய காட்சியின் போஸ்டரை ஓட்டுவதை தவிர்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம். மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று வரை 33 பேர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதிக்கு இதுவரையில் 33 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக கூட்டணி கட்சியின் சார்பாக புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி மற்றும் திமுக சார்பில் கதிர்ஆனந்த் அவரது மனைவி சங்கீதா உட்பட 33 பேர் இதுவரையில் மனு தாக்கல் செய்துள்ளனர்
சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவது அடுத்தடுத்து 4 தடவை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை சந்திரயான்-2 விண்ணில் ஏவ அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஜி.எஸ்.எல்.வி-ராக்கெட்டில் எரி பொருள் நிரப்பும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுவது கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் ஜூலை 22 அல்லது 23 ஆம் தேதி சந்திராயான் 2 விண்ணில் மீண்டும் ஏவ திட்டமிட்டிருப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை அக்டோபரில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அக்டோபருக்குள் வார்டு மறுசீரமைப்புகளை முடித்துவிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தை ஏற்று தேர்தல் அறிவிப்பை அக்டோபரில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் (86), மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று (17ம் தேதி) காலமானார். அன்னாரின் இறுதிச்சடங்கு, அவரின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பெருங்காட்டூ ரில் நாளை (18ம் தேதி) நடைபெற உள்ளது. விவேக்கின் தாயார் மரணத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வேலூர் மக்களவை தேர்தல் பிரசாரத்தை இன்றுமுதலே துவக்க இருப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
எதிர் போட்டியாளர் பற்றி நான் பேசவில்லை. எங்களை பொறுத்தவரை வெற்றி பிரகாசமாக உள்ளது. மத்திய பா.ஜ.க ஆட்சியின் மீது முன்பு கொண்டுள்ள எண்ணம் மாறவில்லை. மாநில சர்க்கார் அகற்றப்பட வேண்டும் என்ற கொள்கையிலும் எங்களுக்கு மாறுபாடு இல்லை.
ஹைட்ரோகார்பனுக்கு மத்திய அரசு அனுமதி கொடுப்பதை நாங்கள் பலமாக எதிர்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு விடாப்பிடியாக செய்தால் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை பெற வேண்டி இருக்கும் என்று துரைமுருகன் கூறினார்.
மதுரை முதல் போடிநாயக்கனூர் வரையிலான ரயில்பாதை பணி எப்போது நிறைவுபெறும்? என அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார், மக்களவையில் கேள்வி எழுப்பினார். மீட்டர் கேஜ்-ஆக இருந்த வழித்தடத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட பணி என்ன ஆனது, எப்போது ரயில்வரும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு தமிழிசை உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கமல், அன்புமணி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனிடையே, மாணவர்களின் எதிர்காலத்திற்காக கருத்து தெரிவிக்கும் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக நாம் துணைநிற்க வேண்டும் என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (18ம் தேதி) முடிவடைய உள்ள நிலையில், இன்று (17ம் தேதி) திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். கதிர் ஆனந்த், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவை தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் அதிகளவில் பணம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்கள் எல்லாம் மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் என்று தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மக்கள் நலனிற்கு எதிரான திட்டங்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம் என்று பதிலளித்தார்.
வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 11ம் தேதி நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த மக்களவை தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் அதிகளவில் பணம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை (18ம் தேதி) கடைசி நாள் ஆகும்.
பேச்சிலர் டிகிரிக்கு 9 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.இ., எம்.டெக். கட்டணங்கள் ரூ. 9,000 முதல் ரூ. 20,000 வரையாக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.பி.ஏ, எம்.சி.ஏ பாடப்பிரிவுகளுக்கு ரூ. 9,000 முதல் ரூ. 17,500 ஆக உயர்த்தி அறிவிப்பு.
சென்னை நீலாங்கரையில் கழிவு நீர் தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டிய போது மண் சரிவு ஏற்பட்டது. அதில் மூவர் மண்ணுக்குள் புதைந்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து மண்சரிவில் சிக்கிய மூவரையும் மீட்க முயன்றனர். ஆனால் ஏழுமழை, அண்ணாமலை என்ற இருவரை மட்டுமே மீட்க முடிந்தது. ரமேஷ் என்பவரை மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாகவே மீட்க முடிந்தது.
வார்டு வரையறை செய்யும் பணிகள் நிலுவையில் இருப்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை கால அவகாசம் கேட்டிருந்தது. அதனை ஏற்றுக் கொண்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தேதி அக்டோபர் இறுதியில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கரூர் எம்.பி. ஜோதிமணி, சூர்யாவின் புதிய கல்வி கொள்கைக்கு எதிரான கருத்திற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக கஸ்தூரி ரங்கன் குழுவினருடன் விவாதிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கல்வி தொடர்பாக நாம் கவலைப்படக்கூடிய நிறைய விசயங்கள் அதில் உள்ளன. மிக நிச்சயமாக விரிவாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று.@Suriya_offl சமூக அக்கறையைப் பாராட்டுகிறேன்.
— Jothimani (@jothims) 17 July 2019
சென்னை அயனாவரத்தில் அமைந்திருக்கும் ஏ.டி.எம். ஒன்றில் கேமரா மூலமாக எ.டி.எம். கார்ட்களின் தகவல்களை திருடியது கண்டறியப்பட்டுள்ளது. பணம் எடுக்க சென்றவர், எ.டி.எம்.மில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டறிந்து அதிர்ச்சிக்குள்ளானார். அதனை தொடர்ந்து ஸ்கிம்மர், கேமரா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் திருடியவரை போலீஸ் கைது செய்துள்ளது.
காங்கிரஸ் - மஜத கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சையை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்தனர். ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் ராஜினாமா கடிதத்தை ஏற்க உத்தரவிட இயலாது என்று கூறி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். மேலும் குறிப்பிட்ட காலத்தில் முடிவுகள் எடுக்க வேண்டும் என்றும் அவரை நிர்பந்திக்க முடியாது என்றும் கூறியுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் 5 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் வேகமாக நீர் நிரம்பி வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் விநாடிக்கு 855 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 500 கன அடி நீரும், கேஆர்எஸ் அணையிலிருந்து 355 கன அடி நீரும் திறப்பு.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ப்ரியங்கா காந்தி வர வேண்டும் என்று தொண்டர்கள் முதல் எம்.பிக்கள் வரை விரும்புவதாக பலரும் கூறி வருகின்றனர். அது குறித்த முழுமையான செய்திகளைப் படிக்க
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அத்திரவரதிற்கான உற்சவம் இன்று. இதில் அர்ச்சகர்களை உள்ளே விட அனுமதி மறுக்கப்பட்டதால் அனைத்து அர்ச்சகர்களும் அத்திவரதர் தரிசனத்தை புறக்கணித்துவிட்டு காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவது அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் தீர்மானிக்கும் என்று கூறினார். , ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி என்பது மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
அகரம் ஃபவுண்டேசன் விழாவில் ஞாயிற்றுக் கிழமை பேசிய நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தன்னுடைய கருத்துகளை முன்வைத்தார். பாஜகவினர் அவருடைய கருத்திற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.
அன்புத் தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு. pic.twitter.com/8chbBdQ3hM
— Kamal Haasan (@ikamalhaasan) 16 July 2019
கேரளாவில் கடந்த வருடம் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பெய்த கனமழையால் மாநிலமே வெள்ளக்காடானது. ஓணம் போன்ற முக்கியமான நாட்களை அவர்களால் சிறப்பிக்க இயலாமலும் போனது. நாளை துவங்கி கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலில் அமைந்திருக்கும் பகுதிகளில் கனமழை பெய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu news today updates : கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு
கர்நாடகாவின் காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர் எம்.எல்.ஏக்கள் மேலும் தங்களின் ராஜினாமாக்கள் குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் சபாநாயகர் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். நேற்று இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதிகள் அமர்வு, சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட எங்களுக்கு உரிமையில்லை என்று கூறியது. இதனால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது. நாளை குமாரசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்ற நேரத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10:30 மணி அளவில் அறிவிக்கப்பட உள்ளது.
நேற்று தமிழகம் மற்றும் இதர பகுதிகளில் நடைபெற்ற முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள : 16/07/2019 -க்கான முக்கிய செய்திகள் ஒரு பார்வை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights