scorecardresearch

Tamil Nadu News today updates : வெங்காய ஏற்றுமதிக்கு முழு தடை – மத்திய அரசு முடிவு

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல் 77.28 ரூபாய்க்கும், டீசல் 71.09 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live
Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

Tamil Nadu news today updates : ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என தமிழில் மேற்கோள் காட்டி ஐ.நா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அதோடு பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறார்.

இன்று மழை வாய்ப்பு இந்த மாவட்டங்களுக்கு மட்டுமே!

தமிழக இடைத்தேர்தலில் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். சுபஸ்ரீ உயிரிழந்த பேனர் விவகாரத்தில், அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாதத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வழக்கத்தை விட 53 சதவீதம் மழைபொழிவு அதிகரிப்பு. வட கிழக்கு பருவமழை இயல்பாக பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இணைக்காதவர்களில் பான் கார்டு செல்லாது என அறிவிப்பு.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, political events : சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன்  அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
Highlights

  22:33 (IST)28 Sep 2019
  திமுகவிற்கும், திராவிடத்திற்கும் கிடைத்த வெற்றி

  திமுக அறிவித்த போராட்டத்திற்கு பயந்து அமித்ஷா தனது கருத்தை திரும்ப பெற்றது திமுகவிற்கும், திராவிடத்திற்கும் கிடைத்த வெற்றி – திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

  22:08 (IST)28 Sep 2019
  பிரதமர் மோடி தமிழர் மீதும், தமிழகத்தின் மீதும் தனி அன்பு வைத்துள்ளார்

  பிரதமர் மோடி தமிழர் மீதும், தமிழகத்தின் மீதும் தனி அன்பு வைத்துள்ளார்

  தமிழர்கள் தான் மூத்தகுடி என்பதை ஐ.நாவில் பிரதமர் மோடி நிரூபித்துக் காட்டியுள்ளார்

  மக்களுக்கு புரிதல், விழிப்புணர்வு இல்லாததால் 8 வழிச்சாலை அமைப்பதில் தாமதம்

  தமிழகத்தில் கூகுள் இல்லாமல் வாழமுடியும், அமெரிக்காவில் கூகுள் இல்லை எனில் தாய், தந்தையை மறந்துவிடுவார்கள்

  -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

  22:06 (IST)28 Sep 2019
  சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

  சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

  காஞ்சிபுரத்தில் தலைமறைவாக இருந்த ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை கைது செய்தது தனிப்படை

  சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் ஜெயகோபால் கைதான நிலையில் அவரது மைத்துனர் மேகநாதன் கைது.

  21:21 (IST)28 Sep 2019
  அதிமுகவிக்கு ராசியான 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் – செல்லூர் ராஜூ

  அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் அமைந்துள்ளது

  முதல்வரும், துணை முதல்வரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சியை நடத்தி வருகின்றனர்

  தமிழக அரசின் திட்டங்களை எந்த எதிர்க்கட்சிகளாலும் குறை சொல்ல முடியாது

  – அமைச்சர் செல்லூர் ராஜூ

  21:19 (IST)28 Sep 2019
  130 கோடி இந்தியர்களே அதற்கு காரணம் – பிரதமர் மோடி

  கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது

  ஐ.நா.வில் இந்தியா மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதற்கு 130 கோடி இந்தியர்களே காரணம்

  அமெரிக்காவில் அரசுமுறை பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

  – பிரதமர் மோடி

  21:17 (IST)28 Sep 2019
  நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் யார்? – சிபிசிஐடி கடிதம்

  தமிழகத்தில் உள்ள அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களும், தங்கள் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும்.

  தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் ஒரே பெயர் மற்றும் முகவரியில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என நீட் தேர்வை நடத்தும் என்டிஏ-வுக்கு சிபிசிஐடி கடிதம்

  20:41 (IST)28 Sep 2019
  இந்தியா திரும்பிய மோடி

  அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்தியா திரும்பினார்

  20:16 (IST)28 Sep 2019
  ஞானவேல்ராஜா கூறியது பொய் – கமல்ஹாசன்

  கமல்ஹாசனுக்கு ரூ.10 கோடி தந்ததாக ஞானவேல்ராஜா கூறியது பொய். கமலுக்கு ரூ.10 கோடி கொடுத்ததற்கான ஆவணங்களை உடனே சமர்ப்பிக்க வேண்டும்; இல்லையென்றால் புகாரை திரும்பப்பெற வேண்டும். ஆதாரத்தை தர தவறும்பட்சத்தில் ஞானவேல்ராஜா மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

  20:04 (IST)28 Sep 2019
  ஞானவேல் ராஜா மீது சட்ட ரீதியான நடவடிக்கை?

  கமல்ஹாசனுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரத்தை ஞானவேல் ராஜா வெளியிட வேண்டும் இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரித்துள்ளது.

  19:46 (IST)28 Sep 2019
  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்

  நீதிமன்ற உத்தரவுப்படி ஆளுநர் கிரண்பேடி செயல்படவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்

  மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு ஆளுநர் இடையூறு செய்யக்கூடாது என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது

  – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

  19:44 (IST)28 Sep 2019
  அக்.9, 10 மற்றும் 15,16 தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் – ஸ்டாலின்

  அக்.9, 10 மற்றும் 15,16 தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வேன். காங்கிரஸ் சார்பாக நாளை அல்லது நாளை மறுநாள் அமைக்கப்படும் தேர்தல் பணிக்குழுவுடன் திமுக இணைந்து செயல்படும் – ஸ்டாலின்

  19:14 (IST)28 Sep 2019
  குரூப் – 2 தேர்வில் மொழிப்பாடம் நீக்கம் – திருமாவளவன் கண்டனம்

  குரூப் – 2 தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மொழிப்பாடம் நீக்கப்பட்டது தமிழ் வழி மாணவர்களை வடிகட்டுவதற்கான முயற்சியே என்றும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

  19:13 (IST)28 Sep 2019
  ஸ்டாலினை சந்தித்த ரூபி மனோகரன்

  திமுக தலைவர் ஸ்டாலினை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இன்று சந்தித்து பேசினார்.

  19:11 (IST)28 Sep 2019
  100 ஏரிகளை நிரப்ப ரூ .565 கோடி நிதி

  மேட்டூர் உபரி திட்டம் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளை நிரப்ப ரூ .565 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

  19:10 (IST)28 Sep 2019
  அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு

  நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தேமுதிக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும் என  விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

  இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு விஜயகாந்தை அமைச்சர்கள் சந்தித்த நிலையில் தேமுதிக ஆதரவு

  19:07 (IST)28 Sep 2019
  சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்

  மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  மாவட்ட முதன்மை நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றங்கள் சிறப்பு நீதிமன்றங்களாக செயல்படும்

  இதர மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிபதி சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக செயல்படுவார்

  – அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை

  18:24 (IST)28 Sep 2019
  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பிரதமர் மோடி கூறியதில் மகிழ்ச்சி – கே.எஸ்.அழகிரி

  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகத்தை பிரதமர் மோடி கூறியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன், தமிழும் தமிழ் சார்ந்த தத்துவங்களும் உலகத்தில் என்றும் நிலை நிற்கக்கூடியவை, திமுக – காங்கிரஸ் கூட்டணி கொள்கை மகத்தானது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

  18:22 (IST)28 Sep 2019
  தமிழகத்தில் எது நடந்ததாலும் மாநில அரசுக்கு சம்பந்தம் உண்டு

  நீட் தேர்வுக்கு மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும், நீட் தேர்விற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று மாநில அரசு கூறுவது தவறு.

  தமிழகத்தில் எது நடந்ததாலும் மாநில அரசுக்கு சம்பந்தம் உண்டு – கே.எஸ்.அழகிரி

  17:50 (IST)28 Sep 2019
  ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை துவக்கிய முதல்வர் பழனிசாமி

  எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம், வணிக வளாகம் உள்ளிட்டவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

  17:49 (IST)28 Sep 2019
  கராத்தே தியாகராஜன் நிரந்தர நீக்கம்?

  காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜனை நிரந்தரமாக நீக்குவது பற்றி தலைமை தான் முடிவு செய்யும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

  17:48 (IST)28 Sep 2019
  தமிழகம், கர்நாடகாவிடம் பலமுறை பேசியும் வெற்றியடையவில்லை

  நீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழகம், கர்நாடகாவிடம் பலமுறை பேசியும் வெற்றியடையவில்லை

  தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண தெளிவான அரசியல் கண்ணோட்டம் மட்டுமின்றி தொழில்நுட்பமும் வேண்டும்

  தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளேன்

  – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

  17:46 (IST)28 Sep 2019
  ஜெயகோபால் புழல் சிறையில்….

  பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

  17:21 (IST)28 Sep 2019
  3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

  ஜம்மு-காஷ்மீரின் காந்தேர்பால் பகுதியில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை. சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்.

  17:19 (IST)28 Sep 2019
  புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம்

  பிரதமர் மோடி – சீன அதிபர் வருகைக்காக புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம்.

  17:17 (IST)28 Sep 2019
  5-ம் வகுப்பு மாணவிக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு

  அரசுப்பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த 5-ம் வகுப்பு மாணவிக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு. அக்.1-ம் தேதிக்குள் பதிலளிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

  17:16 (IST)28 Sep 2019
  தமிழகத்தில் தமிழ் அழிந்து வருகிறது

  தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து, மத்திய தலைமை தான் முடிவு செய்யும். தமிழகத்தில் தமிழ் அழிந்து வருகிறது – முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

  16:57 (IST)28 Sep 2019
  திமுக போராட்டம் நடத்தும் –

  தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை அறிவித்தது . அதன்படி,  குரூப் 2 தேர்வின் முதல்நிலை தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு, பல அரசியல் தலைவர்கள் கண்டனமும் , வாழ்த்துமும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் தலைவரான ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், தமிழ்மொழிக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அறிவிப்பைத் திரும்ப பெறாவிட்டால் திமுக சார்பில் இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.  

  16:32 (IST)28 Sep 2019
  கிருஷ்ணா நதிநீர் வருகை

  சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக  தமிழகத்திற்கு எட்டு டிஎம்சி தண்ணீரைத் திறந்து விடவேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் கோரிக்கை ஒன்ரை வைத்திருந்தார் . இந்த கோரிக்கையை ஏற்று சில நாட்களுக்கு முன், கண்டலேறு அணையில் இருந்து  கிருஷ்ணா நதி நீர் திறந்து வைக்கப்பட்டது.   திறந்து விடப்பட்ட நீர் தற்போது தமிழக எல்லையான ஜீரோ பாய்ண்டை சேர்ந்திருக்கிறது. 

  16:01 (IST)28 Sep 2019
  விமானம் பழுது அடைந்தது:

  சவுதி மன்னர் கொடுத்த பிரைவேட்  ஜெட் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நியூ யார்க் வந்தார். அங்கு நியூ யார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று உரையாடினார். இன்று, அந்த சவுதி ஜெட்டின் மூலம் பாகிஸ்தான் செல்லும் போது பழுது எற்பட்டதால் மீண்டும் நியூ யார்க் நகரத்திற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறார்.  

  15:55 (IST)28 Sep 2019
  ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் –

  நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், அக்டோபர் 1, செவ்வாய்க்கிழமை முதல், 370 வது பிரிவின் திருத்தத்தை சவால் செய்யும் அனைத்து மனுக்களையும்  விசாரிக்க உள்ளது.  மத்திய அரசாங்கம் ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது என்பது குறிப்பிடத் தக்கது. 

  15:46 (IST)28 Sep 2019
  மேலும் ஒரு மாணவரா?

  நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் சில நாட்களுக்கு முன்பு உதித் சூர்யா என்ற மாணவரை கைது செய்ததது சிபிசிஐடி போலீஸ் . இந்நிலையில்,  தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வந்த இர்பான் என்ற மாணவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை தற்போது நடத்தி வருகின்றனர். இந்த இர்பான்  சில நாட்களாகவே கல்லூரிக்கு வர வில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. 

  15:03 (IST)28 Sep 2019
  ஆராய்ச்சி படிப்புகளில் அதிக மாணவர்கள் படிக்கும் மாநிலம் தமிழகம் – அமைச்சர் அன்பழகன்</div>

  ஆராய்ச்சி படிப்புகளில் அதிக மாணவர்கள் படிக்கும் மாநிலம் தமிழகம் – அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

  மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, உயர்கல்வித்துறையில் தமிழகம் 49% பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.

  14:30 (IST)28 Sep 2019
  புதுச்சேரி இடைத்தேர்தல் : காமராஜர் நகர் காங்., வேட்பாளர் ஜான்குமார்

  புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்., சார்பாக ஜான் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  முன்னாள் எல்எல்ஏவு.,ம், டில்லி காங்., சிறப்பு பிரதிநிதியாகவும் இருப்பவர் ஜான்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. நாராயணசாமி புதுச்சேரி முதல்வர் ஆவதற்காக நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் தான் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  14:22 (IST)28 Sep 2019
  சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் ஏன்? – முதல்வர் பழனிசாமி பதில்

  மக்கள் பிரச்சினைகளை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்பதற்காகவே சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்டம் சங்ககிரியில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறினார்.

  13:58 (IST)28 Sep 2019
  மாணவர்கள் என்னை விட புத்திசாலிகள் – தமிழிசை

  மாணவர்கள் என்னைவிட புத்திசாலிகள் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

  திருச்செந்தூரில் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய தமிழிசை கூறியதாவது, இறைவன் அருள் இன்றி ஒரு நொடி, ஒரு அடி எடுத்து வைக்க முடியாதுஎன்று கூறினார்.

  13:12 (IST)28 Sep 2019
  நாளை 36 மின்சார ரயில்களின் சேவை ரத்து

  சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே நாளை (செப்; 29) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் மேற்கண்ட வழித்தடத்தில் நாளை 36 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

  13:07 (IST)28 Sep 2019
  அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் அடுத்தவாரம் துவங்கப்படும்

  அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் அடுத்தவாரம் துவங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

  கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, அரசுக்கு நடப்பாண்டில்  ஏற்பட்டுள்ள நிதிச்சுமை ரூ.14 ஆயிரம் கோடி. இதையெல்லாம் தாண்டிதான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார்.

  12:52 (IST)28 Sep 2019
  வானிலை நிலவரம்

  மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்,  வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  12:31 (IST)28 Sep 2019
  370 மீதான விசாரணை

  ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை அக்டோபர் 1-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது.

  12:17 (IST)28 Sep 2019
  நீலகிரி போர்க்கப்பல்

  மும்பையில் நடைபெற்ற விழாவில் போர்க்கப்பல் ‘நீலகிரி’யை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

  11:55 (IST)28 Sep 2019
  மஹாளய அமாவாசை

  மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், கடற்கரையில் திதி கொடுத்தனர். பக்தர்கள் நலன் கருதியும், கூட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்கவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

   

  11:35 (IST)28 Sep 2019
  ஜெயகோபாலுக்கு நீதிமன்ற காவல்

  பேனர் விவகாரத்தில் கைதான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் ஜெயகோபாலை அக்டோபர் 11ம் தேதி வரை சிறையிலடைக்க ஆலந்தூர் நீதிபதி ஸ்டார்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

  11:25 (IST)28 Sep 2019
  மோடிக்கு வைரமுத்து வாழ்த்து

  11:21 (IST)28 Sep 2019
  வாக்குறுதிகளை அரசு நிரைவேற்றி வருகிறது – முதல்வர்

  ”பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வுகண்டு வருகிறோம். பொதுமக்களின் நீண்ட நாள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி வருகிறது” என சேலத்தில் நடைபெற்று வரும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு. 

  11:09 (IST)28 Sep 2019
  இதை ஏன் எதிர்க்கிறார்கள்?

  எல்லோரும் என்ன பேசிக்கொண்டு இருக்கின்றார்களோ அதைதான் விஜய்யும் பேசினார். அதை ஏன் அமைச்சர்கள் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை என இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தூத்துக்குடியில்  பேட்டியளித்துள்ளார்.

  10:43 (IST)28 Sep 2019
  ஆசிரியர் தகுதித்தேர்வு

  ஆசிரியர் தகுதித்தேர்வில் வென்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்றும், முதுகலை ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தவித பிரச்னையும் இல்லை எனவும், அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் பேட்டியளித்தார். 

  10:25 (IST)28 Sep 2019
  யார் இந்த ரூபி மனோகர்?

  நாங்குநேரி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரூபி மனோகர் பற்றிய முழு விபரங்களையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு: யார் இந்த ரூபி மனோகரன்?

  10:06 (IST)28 Sep 2019
  என்.ஆர்.காங்கிரஸுக்கு பாஜக ஆதரவு

  புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது. நேற்று பாஜக சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளருக்கான நேர்காணல் நடைபெற்ற நிலையில் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

  10:00 (IST)28 Sep 2019
  எழுத்தாளர் மகரிஷி மறைவு

  பிரபல எழுத்தாளர் மகரிஷி சேலத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. மொத்தம் 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரை நூல்களை மகரிஷி எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது.

  09:53 (IST)28 Sep 2019
  சுபஸ்ரீ வழக்கில் மேலும் 4 பேர் கைது

  சுபஸ்ரீ வழக்கில் பழனி(50), சுப்பிரமணி(50) சங்கர்(35), லட்சுமிகாந்த்(38) என மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொடி கட்டுவது, பேனர் வைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெயகோபால் நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. 

  Tamil Nadu news today updates : விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் களம் காண்கின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்த தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ளன.

  நாங்குநேரி தொகுதி, காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க திணறிக்கொண்டிருந்தது. குமரி அனந்தன் உள்ளிட்டோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பாளர் தேர்வில் உள்ளூர் பிரமுகர்கள் போர்க்கொடி உயர்த்திக்கொண்டிருக்க, நேற்று ( 27ம் தேதி) காங்கிரஸ் தலைமை, ரூபி மனோகரனை, வேட்பாளராக அறிவித்தது.

  Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

  Web Title: Tamil nadu news today live updates chennai weather subha shree banner issue neet