Advertisment

Tamil Nadu news today updates : ரயில் நேரங்கள் மாற்றம்; உங்கள் ஊர் ரயிலின் புதிய நேரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Tamil Nadu Breaking News : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கியமான நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today updates : வாரத்தின் ஆரம்பம் அல்லது இறுதி என்று எப்படி வேண்டுமானாலும் இந்நாளை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பேசப்பட்டது 197 நாட்கள் கழித்து சென்னையை தொட்ட பருவமழை தான். ஜூலையிலும் தங்கு தடையின்றி சென்னையில் மழை பெய்யும் என்பது தான். நீர்நிலைகளை தூர்வாறுதல், சென்னையில் உள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அம்சங்கள் முறைப்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ள இருப்பதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்தார். சென்னையில் இன்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

Advertisment

புதிய தலைமைச் செயலாளர் நியமனம்

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று டிஜிபி டி. ராஜேந்திரனுக்கு பிரிவு உபச்சார விழா எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் அணிவகுப்பு மரியாதையுடன் நடத்தப்பட்டது.  காங்கிரஸில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய சர்ச்சை மிகுந்த பேச்சு காரணமாக கட்சிக்குள் பல்வேறு குழப்பான சூழல் நிலவி வருகிறது.

மேலும் படிக்க : சம்பளம் வராத காரணத்தால் போராட்டத்தில் குதித்த சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 

 

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, rainfall, political events, fuel price : இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கியமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள



























Highlights

    21:30 (IST)30 Jun 2019

    ஒரு வாரம் விடுமுறை

    கடும் வெயில் காரணமாக டெல்லி மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், ஜூலை 8-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.

    21:26 (IST)30 Jun 2019

    சென்னை - புதுச்சேரி கப்பலில்

    சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    19:38 (IST)30 Jun 2019

    ரயில் நேரம் மாற்றம்

    செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை விரைவு ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 06.15 மணிக்கு பதிலாக மாலை 06.10க்கு புறப்படும். திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் திருச்செந்தூரிலிருந்து முற்பகல் 11.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும்

    சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் திருநெல்வேலிக்கு காலை 07.05 மணிக்கு பதிலாக 06.45 மணிக்கு வந்து சேரும். கொல்லம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் கொல்லத்திலிருந்து முற்பகல் 11.45 மணிக்கு பதிலாக 11.55க்கு புறப்படும்

    ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில், ராமேஸ்வரத்திலிருந்து இரவு 08.50 மணிக்கு பதிலாக 08.55க்கு புறப்படும். திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி விரைவு ரயில் இரவு 10.30 மணிக்கு பதிலாக 10.45க்கு புறப்படும்.

    மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் மதுரையிலிருந்து மதியம் 03.15 மணிக்கு பதில் 03.20க்கு புறப்படும், மறுமார்க்கத்தில் நண்பகல் 12.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.50 மணிக்கு வந்து சேரும். மதுரை - சென்னை எழும்பூர் பாண்டியன் விரைவு ரயில் இரவு 8.40 மணிக்கு பதில் 8.45க்கு புறப்படும், மறுமார்க்கத்தில் அதிகாலை 5.45க்கு பதில் 5.30க்கு மதுரை வந்து சேரும்.

    18:55 (IST)30 Jun 2019

    10,500 பேரில் 560 பேர் மட்டுமே தமிழர்கள்

    "கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி நியமனத்திற்கு மத்திய அரசு தேர்வு என்பது கண்டிக்கத்தக்கது, இது மாநில அரசின் உரிமையில் தலையிடும் செயல். கடந்த ஓராண்டில் மத்திய அரசு பணிக்கு தேர்வான 10,500 பேரில் 560 பேர் மட்டுமே தமிழர்கள்" என தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    18:07 (IST)30 Jun 2019

    மனசாட்சிப்படி பணியாற்றினேன் - டி.கே.ராஜேந்திரன்

    "எனது பணி காலத்தில் சட்டப்படியும், மனசாட்சிப்படியும் செயலாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளில் தமிழக காவல்துறை பல சவால்களை சந்தித்துள்ளது. ஜெயலலிதா மறைவு, ஜல்லிக்கட்டு போராட்டம், ஒகி, கஜா புயல், தேர்தல் என பல சவால்களை சந்தித்துள்ளோம்" என பிரிவு உபச்சார நிகழ்வில் டி.கே.ராஜேந்திரன் பேசியுள்ளார்.

    17:23 (IST)30 Jun 2019

    வானவில் பேரணி!

    சென்னையில் LGBTQன் வானவில் சுயமரியாதை பேரணி ஆதித்தனார் சாலை முதல் லாங்ஸ் கார்டன் சாலை வரை நடைபெற்று வருகிறது. சென்னையில் முதன்முதலாக இதுப்போன்ற பேரணி நடைப்பதை இளைஞர்கள பலரும் வரவேற்றுள்ளனர். மேலும், இந்த பேரணியில் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர். 

    17:08 (IST)30 Jun 2019

    வேட்புமனு தாக்கல்!

    மாநிலங்களவையில் காலியாகும் தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பி. இடங்களுக்கான தேர்தலையொட்டி நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது.தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பி. இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26 ந்தேதி வெளியிடப்பட்டது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஜூலை 8 ந்தேதி கடைசி நாள். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 9 ம்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 11ந்தேதி கடைசி நாள். வாக்குப்பதிவு தேவைப்படும் பட்சத்தில் ஜூலை 18 ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

    16:28 (IST)30 Jun 2019

    திருநாவுக்கரசர் பேட்டி!

    புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி எம்பியும், தமிழம காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர். “திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.” காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து பதில் கூற மறுத்தார்.

    16:05 (IST)30 Jun 2019

    மு.க ஸ்டாலின் அறிக்கை!

    ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு குறித்து திமுக தலைவர் மு. க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

    15:36 (IST)30 Jun 2019

    today news:டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி!

    தமிழகத்தின் 29-வது டி.ஜி.பி. ஆக ஜே.கே.திரிபாதி இன்று பொறுப்பேற்புக் கொண்டார்.  1985-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தவர் திரிபாதி தமிழகத்தின் டி.ஜி.பி. ஆக 2 நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக் கொண்டார் திரிபாதி. ஓய்வு பெற்ற டிஜிபி டி.கே.ராஜேந்திரன், புதிய டிஜிபியை வரவேற்றார்

    15:16 (IST)30 Jun 2019

    news in tamil : புதிய தலைமை செயலாளர்!

    தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.  கிரிஜா வைத்தியநாதன் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் முறைப்படி பொறுப்பேற்றார். தமிழகத்தின் 46 ஆவது தலைமை செயலாளராக பதவியேற்றுள்ளார். 

    14:51 (IST)30 Jun 2019

    today tamil news : முதல்வர் அறிவிப்பு!

    பாலக்காடு விபத்தில் உயிரிழந்த கோவையை சேர்ந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ2 லட்சம் நிதியுதவி  அறிவித்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு  பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ25 ஆயிரம் நிதியுதவி -  வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

    14:13 (IST)30 Jun 2019

    பா.ஜ. எம்.பி.க்கள் கூட்டம் ஜூலை 2ம் தேதிக்கு கூடுகிறது

    ஜூலை 5ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் ஜூலை 2ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    13:55 (IST)30 Jun 2019

    தமிழகத்தில் பொதுவிநியோக திட்டம் சீர்குலையும் அபாயம் - தினகரன்

    ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தால், தமிழகத்தில் பொதுவிநியோக திட்டம் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

    13:36 (IST)30 Jun 2019

    கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து நீக்க பரிந்துரை செய்தது நான்தான் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

    கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து நீக்க பரிந்துரை செய்தது நான்தான் என்று  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

    கடலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி கூறியதாவது, உட்கட்சி ஜனநாயகம் வேறு, உட்கட்சி குழுவாக செயல்படுவது வேறு. உட்கட்சி குழுவாக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி தலைவர் என்ற முறையில் வேட்பாளர்களை பரிந்துரை செய்ய எனக்கு உரிமை உள்ளது என்று அவர் கூறினார்.

    13:23 (IST)30 Jun 2019

    ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது – ஸ்டாலின்

    ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு போன்ற திட்டஙகள், கூட்டாட்சிக்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமானது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே எதிர்த்து, அடியோடு கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    12:52 (IST)30 Jun 2019

    காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவ ஏற்பாடுகள் - 2000 போலீசார் பாதுகாப்பு

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், அத்திவரதர் வைபவ உற்சவம் நாளை ( ஜூலை 1) துவங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள் உற்சாகமாக நடக்க இருக்கின்றன. இதற்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு பணியில் பயன்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    12:23 (IST)30 Jun 2019

    மக்கள் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் : பிரதமர் மோடி

    மக்கள், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். சில காலங்களுக்கு முன் இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த் எழுதிய புத்தகங்கள் எனக்கு ஒருவர் பரிசாக வழங்கியிருந்தார். அவருடைய சிறுகதைகளை படிக்க துவங்கியதிலிருந்தே நான், வாசிக்கும் பழக்கத்திற்கு அடிமை ஆனேன்.  மனித குலத்தின் சிறப்புகள் குறித்து அவரது புத்தகங்களில் அருமையான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

    12:01 (IST)30 Jun 2019

    ஒவ்வொரு நீர்த்துளியும், நமது வாழ்க்கையின் உயிர்த்துளி ; வீணாக்காமல் இருப்போம் - பிரதமர் மோடி

    நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள், குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இவற்றிலிருந்து விரைவில் மீளும் பொருட்டு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

    மன் கீ பாத் நிகழ்ச்சியில், மோடி நீர் மேலாண்மை பற்றி கூறியதாவது, நீர் மேலாண்மையில் மக்களாகிய நமக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டு மக்களாகிய உங்களிடத்தில் 3 கோரிக்கைகளை வைக்கிறேன். ஒரு துளி நீரையும் வீணாக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள், அதையே மற்றவர்களுக்கும் அறிவுறுத்துங்கள்.  பாரம்பரிய முறையிலான நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முறையை கடைப்பிடியுங்கள். என்.ஜி.ஓக்கள், அமைப்புகள் உள்ளிட்டவைகளுடன் பாரம்பரிய முறைகளை விளக்கிச்சொல்வதோடு அவர்களுடன் இணைந்து நீர் மேலாண்மை திட்டத்தை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

    11:52 (IST)30 Jun 2019

    2019 மக்களவை தேர்தல், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் - பிரதமர் மோடி

    நாட்டு மக்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையினால் மட்டுமே, 2019 மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியால் வெற்றி பெற முடிந்ததாக பிரதமர் மோடி கூறினார்.  இந்த தேர்தலில் 61 கோடி வாக்காளர்கள், தங்களது வாக்குரிமையை செலுத்தியுள்ளனர். 2019 மக்களவை தேர்தல், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் ஆக கருதப்படுவதாக மோடி கூறினார்.

    11:48 (IST)30 Jun 2019

    எமர்ஜென்சி நிலையை அனைவரும் எதிர்த்தார்கள் : பிரதமர் மோடி

    எமர்ஜென்சி நிலையை, அரசியல்வாதிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்த்ததாக பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கூறியதாவது, எமர்ஜென்சி காலத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  அவர்களிடம் இந்த நிலையை உடைத்தெறிய வேண்டும் என்ற உத்வேகம் இருந்ததாக கூறினார்.

    11:35 (IST)30 Jun 2019

    கேதார்நாத் பயணத்தை அரசியலாக்கினர் : மன் கீ பாத்தில் பிரதமர் மோடி

    நான் என்னையே அறிந்துகொள்வதற்காக தான் கேதார்நாத் பயணம் மேற்கொண்டேன். ஆனால், சிலர் இதனையும் அரசியல் ஆக்கிவிட்டதாக பிரதமர் மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியில் கவலை தெரிவித்தார்.

    நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே, ரேடிேயா உள்ளிட்ட ஊடகங்களின் மூலம் உரையாற்றினார்.

    11:05 (IST)30 Jun 2019

    Mann Ki Baat Live

    10:52 (IST)30 Jun 2019

    1922க்கு மிஸ்டு கால் கொடுங்க... மன் கீ பாத் நிகழ்வை உங்கள் போனிலேயே கேளுங்க

    இன்று காலை 11 மணிக்கு மன் கீ பாத் நிகழ்வில் உரையாடும் மோடியின் உரையை கேட்க விரும்புபவர்கள் 1922க்கு மிஸ்டுகால் கொங்கள். 

    10:16 (IST)30 Jun 2019

    மேட்டுப்பாளையம் ஆணவக் கொலை

    மேட்டுப்பாளையத்தில் காதலர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக கோவையில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் முஸ்லீம் பெண்களை காக்க மோடி சட்டம் கொண்டு வந்துள்ளார். ஆனால் இந்து பெண்களை பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி. நீட் தேர்வில் மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீட்டை கைவிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    10:14 (IST)30 Jun 2019

    மேட்டூர் அணையின் நீர்மட்டம்

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43.44 அடியாக உள்ளது. நீர் இருப்பு 13.93 டி.எம்.சி ஆகும். 261 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. நீர் திறப்பு 1000 கனஅடியாக உள்ளது.

    09:45 (IST)30 Jun 2019

    Mettupalayam Honor Killing

    கோவை மேட்டுப்பாளையத்தில் கனகராஜ் - வர்ஷினிப்ரியா என்ற காதலர்களை தாக்கிய வழக்கில் தொடர்புடைய சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனகராஜ் சம்பவ தினத்தன்றே உயிரிழக்க, வர்ஷினிப்ரியா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    09:32 (IST)30 Jun 2019

    மாவட்ட தலைநகரங்களில் 7ம் தேதி ஆர்பாட்டம் - தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம்

    வருவாய் துறையில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்றும், பி.எம்.கிஸான் திட்டத்தை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என்றும் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளது அச்சங்கம்.

    09:14 (IST)30 Jun 2019

    Chennai Water Crisis : சென்னையில் ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதற்கு திமுக தான் காரணம் - எச்.ராஜா

    பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாமில் பங்கேற்றார். அதில் சென்னையில் பல்வேறு ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதற்கு திமுக தான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் புதிய கல்வி கொள்கையில் உள்ள 400 பக்கங்களில் ஒன்றைக் கூட படிக்காமல் முழுவதுமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

    09:09 (IST)30 Jun 2019

    தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த மீனவர்கள் கார்த்திக், மனோகர், ஆனந்த், மற்றும் ராசு ஆகியோரை மணமேல்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

    08:50 (IST)30 Jun 2019

    Ind Vs Eng : உலக கோப்பை கிரிக்கெட்

    இன்று மதியம் 3 மணிக்கு, இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் பகுதியில் இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் மேட்ச் நடைபெற உள்ளது. இதுவரை யாராலுமே வீழ்த்த முடியாத அணியாக இந்தியா அபாரமாக விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது. 

    இன்று நடைபெறும் ஆட்டத்தினை நேரலையில் எப்படி காண்பது ?

    08:46 (IST)30 Jun 2019

    அரசு அலுவலகங்களில் ஏன் மழை நீர் சேகரிப்பு முறை செயல்படவில்லை? - எம்.சி.சம்பத்

    தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் பருவமழையை சேமிக்கும் பொருட்டு மழைநீர் சேகரிப்பு முறையை சீராக செயல்படுத்தும் முனைப்பில் இறங்கியுள்ளது தமிழக அரசு. கடலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அம்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், புதிதாக கட்டப்படுகின்ற வீடுகளில் கட்டாயமாக மழை நீர் சேகரிப்பை அமைக்க வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களில் ஏன் மழை நீர் சேகரிப்பு முறை செயல்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

    08:37 (IST)30 Jun 2019

    LPG Tanker Lorry Strike

    சமீபமாக தென்மண்டலத்தில் நடத்தப்பட்ட எல்.பி.ஜி. டெண்டர்களில் தேர்வான அனைத்து லாரிகளுக்கும் வேலை வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் இல்லை என்றால் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி நாமக்கலில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Tamil Nadu news today live updates : Mann Ki Baat : இரண்டாம் முறையாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் பிரதமர் மோடி, இன்று மான் கீ பாத் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மார்ச் மாதம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்பு மான் கீ பாத் நிகழ்வின் ஒலிபரப்பு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று மான் கீ பாத் நிகழ்வில் பேசுகிறார் மோடி.

    Petrol Diesel Price :  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 73.10க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 9 காசுகள் அதிகரித்து ரூ. 67.90க்கு விற்பனையாகிறது.

     

    Tamil Nadu India
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment