Tamil Nadu news today live updates : முகிலன் நேற்று திருப்பதியில் இருந்து கைது செய்யப்பட்டு காட்பாடியில் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை சந்திப்பதற்காக சென்னை விரைந்த அவருடைய மனைவி வந்த வாகனம் விபத்தில் சிக்கியது. அவருடைய மனைவி பூங்கொடி லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்த போது அவர் பயணித்த காரின் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.
Tamil Nadu Rajya Sabha MP Elections ADMK Candidates
தமிழகத்தில் வருகின்ற 18ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி ஏற்கனவே திமுக சார்பில் வில்சன், சண்முகம், மதிமுக சார்பில் வைகோ ஆகியோர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது. நேற்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலாளர் என்.சந்திர சேகரன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெ.வைப் போன்று அதிரடி காட்டிய எடப்பாடி பழனிசாமி
Chennai Weather
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் சாரல் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது என்று அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆராய்ச்சி மையம். இன்று கோவை மற்றும் நீலகிரி பகுதியில் கனத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, petrol diesel price, Gold / Silver market, Political moments – தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளும் உங்களுக்காக
ICC World Cup 2019 : Ind Vs Sri Lanka
நேற்று இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. வருகின்ற 9ம் தேதி இந்திய அணி நியூசிலாந்து அணியை அரையிறுதியில் சந்திக்கிறது. அதே போன்று வருகின்ற 11ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற போட்டிகள் தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை மசோதாக்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதனால் பெரிய அளவில் எதிர்ப்புகளும் அதிருப்திகளும் உருவானது. இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்காக நான் தொடர்ந்து முயல்வேன் என்று எம்.பி. தயாநிதி மாறன் அறிவித்துள்ளார்.
ஓராண்டில் பெய்த கனமழை தண்ணீரை சேர்த்து வைத்ததால் புதுவையில் தண்ணீர் பிரச்சனையில்லை. நீர் நிலைகள் தூர்வாரப்பட்டதால் தமிழகத்திற்கு கொடுக்கும் அளவுக்கு புதுச்சேரியில் தண்ணீர் உள்ளது என்றும் ஆளுநர் கிரண்பேடி அறிவிப்பு.
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே சுகாதாரமற்ற குடிநீரை பருகியதால் 15 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை – பெங்களூரு இடையே இயக்கப்பட்ட ஒரே ஒரு அரசு விரைவு பேருந்தில் மட்டுமே இந்தி எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. இந்தி எழுத்துகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
ராஜஸ்தானின் தலைநகரம் அரண்மனைகளால் நிரம்பி வழியும் நகரமாகும். ஜெய்ப்பூர் முழுவதும் பிங் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருப்பதால் அதனை பிங்க் சிட்டி என்று வர்ணிப்பர். பாரம்பரிய அடையாளமாக பிங் சிட்டியை தேர்வு செய்துள்ளது யுனெஸ்கோ. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் நரேந்திர மோடி. அதில் கலாச்சாரம் மற்றும் வீரத்திர்கு பெறபெற்ற நகரம், தன்னுடைய விருந்தோம்பலால் அனைவரையும் ஈர்க்கின்றது என்று ட்வீட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நீட் தேர்வு எதிர்ப்பு தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்திருப்பது தமிழ்நாட்டிற்கு செய்த அநீதி என்று மதிமுக பொது செயலாளர் வைகோ திருச்சியில் பேட்டி.
நீட்டிற்கு விதிவிலக்கு வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட இரண்டு மசோதாக்களையும் நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. தமிழக அரசின் மசோதாவை குடியரசுத்தலைவர் நிராகரிப்பதற்கு இடம் இல்லை என்றும், இது அபாண்டம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது புதுவமை மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு அனுமதி அளித்தாக கூறினார். மேலும் மத்திய அரசு ராணுவத்தையே கொண்டு வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.
முகிலனை காண சென்னைக்கு வருகின்ற போது, கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கார் விபத்தில் சிறிய காயம் அடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு தன்னுடைய கணவனை காண வேறொரு காரில் சென்னை புறப்பட்டார் பூங்கொடி.
கீழ் மட்ட தொண்டர்களுக்கும் மதிப்பளிக்கும் கட்சி அதிமுக மட்டுமே என்று அமைச்சர் ஜெயகுமார் பேச்சு. கொடி கட்டிய தொண்டரும் காரில் பறப்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியமாகும் என்று கூறியுள்ளார் அவர். முகிலன் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் கடத்தப்பட்டாரா என்பது விசாரணைக்கு பிறகு தான் தெரிய வரும் என்று கூறியுள்ளார். நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது ஏன் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சட்டப்பேரவை நடைபெற்று வருவதால் என்னால் நீட் குறித்து கருத்து கூற இயலாது என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
எழும்பூர்-பல்லாவரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்சார ரயில் சேவைகளில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 வரை இயக்கக்கூடிய கணிசமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக 500 புதிய பேருந்துகள் சேர்க்கப்பட்டது. கொடியசைத்து இந்த போக்குவரத்து சேவையை துவங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த பேருந்துகளில் தமிழுக்கு பதிலாக இந்தியில் வழிநடத்தும் வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை கொட்டி வருகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கபினி, ஹாரங்கி, ஹேமாதி ஆகிய அணைகளுக்கு வரும் நீர்வரத்தானது 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர்மழை பெய்தால், கர்நாடக அணைகளில் இருணந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்புகள் உள்ளன.
சென்னையில் இருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டினை சரிசெய்யும் பொருட்டு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டங்கள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. வருகின்ற 10ம் தேதி முதல் ரயில் மூலம் நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சக்கர குப்பம் தரைமட்ட குடிநீர் நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து, பார்ச்சம்பேட்டை ரயில்வே கேட் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், ராட்சத குழாய் அமைக்கும் பணி இரவு – பகலாக நடைபெற்று வருகிறது
இந்திய தேசத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். உலகத்திற்கு தமிழனத்தை அடையாளம் காட்டும் விதமாக புறநானுற்றுப்பாடலை மேற்கோள் காட்டியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டன் இன்று டெல்லியில் கூடுகிறது, பாஜக தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சனம் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கில் பெருந்திரளாக கூடிய பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர்.
கடந்த வருடம் தேர்தல் நடைபெற்று, காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்பட்டது. சித்தராமையாவிற்கும், குமாரசாமிக்கும் இடையேயான அதிகார கைப்பற்றுதல் கூட்டணிக்குள் வெகுநாட்களாக மறைமுகமாக புகைந்து வந்தது. இந்நிலையில் இந்த கூட்டணி ஆட்சிக்கு எதிராக 13 காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர். இதனால் பாஜக ஆட்சியை கைப்பற்ற திட்டம் தீட்டியுள்ளது. ஆளுநரிடம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மாநில சபாநாயகர் விடுமுறையில் இருப்பதால் இந்த ராஜினாமா கடிதம் குறித்து செவ்வாய் கிழமை தான் முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள்ளது.