Tamil Nadu news today updates : முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். நெல்லை சேரன்மகாதேவி அருகே இருக்கும் கோவிந்தபேரி பகுதியை சேர்ந்த பி.எச். பாண்டியன் நெல்லை தொகுதியின் எம்.பியாகவும், அதிமுக அமைப்பு செயலாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கிண்டி சிறுவர் பூங்கா
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில், பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ஏ.ஆர். ஷோ எனப்படும் ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி ஷோக்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. பெரியவர்களுக்கு இதற்கு ரூ.50-ம் குழந்தைகளுக்கு ரூ.15ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஈரான் தலைமை தளபதி உட்பட முக்கிய அதிகாரிகள் ஏவுகணை தாக்குதலில் கொலை
ஈரானின் தலைமை தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக்கில் செயல்படும் ஈரான் படைப்பிரிவின் துணை தலைவர் அபு மஹ்தி அல் முகாந்திஸ் மற்றும் முக்கிய அதிகாரிகள் நேற்று அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலால் கொல்லப்பட்டனர். ஈரானின் தலைமை தளபதி மீது அமெரிக்க அதிபரின் உத்தரவின் படி தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அறிவித்துள்ளது அமெரிக்க விமானப்படை. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
Live Blog
Tamil Nadu news today updates : chennai weather, tamil nadu politics, TN local body election results இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராக 48 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது குண்டுவீசுவோம் என பேசிய விவகாரத்தில், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது, நடவடிக்கை கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த புகாரில், ஹெச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருவதாகவும், இதுதொடர்பாக அவரை கைதுசெய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சி தலைவர்களை இழிவாக பேசிய ஹெச்.ராஜாவுக்கு கண்டம் தெரிவித்தனர்.
ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையின் பெயர் மற்றும் வணிக சின்னத்தை மற்றவர்கள் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆம்பூர் பிரியாணி எனவும் ஸ்டார் பிரியாணி எனவும் சென்னையில் பல கடைகள் இயக்கி வருகிறது. இதற்கு தடை விதிக்கக் கோரி ஒரிஜினல் கடையின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியவர் பி.எச். பாண்டியன் என்றும் கருத்து.
நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் குற்றச்செயல்களை தடுக்க முற்பட்ட காவலர்கள் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசினர். இதில் காயமடைந்த இரண்டு காவலர்களுக்கு 1 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார் முதல்வர். காயமடைந்த பொதுமக்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களின் இரங்கல்களை பதிவு செய்துள்ளனர். மேலும் ராமதாஸ், விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் தங்களின் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 6ம் தேதி காலை பதவி ஏற்பார்கள் என்றும் எப்போதும் இல்லாத அளவில் தேர்தல் மிகவும் அமைதியாவும், 100% நேர்மையாகவும் நடைபெற்றது என்றும் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மறைவுக்கு தேமுதிக கட்சியினர் தங்களின் இரங்கல்களை ட்விட்ட்ர் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் திரு.பி.ஹெச்.பாண்டியன் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சபாநாயகர் என்பவர் நடுநிலையாளர், அந்த பணியை சிறப்பாக செய்து, நன்மதிப்பை பெற்றவராகவும் இருந்தார்.
(1 - 2)— DMDK Party (@dmdkparty2005) January 4, 2020
நெல்லை கண்ணன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்ததை தொடர்ந்து அவர் பெரம்பலூரில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனை விமர்சனம் செய்யும் வகையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் சிதம்பரம். அதில் பேசினாலே குற்றம் என்ற புதிய சட்ட நெறிகள் புகுத்தப்படுகிறது. பேசுவதே குற்றம் என்றாலும், 14 நாள் விசாரணை கைதியாக ஏன் அடைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்?
— P. Chidambaram (@PChidambaram_IN) January 3, 2020
குடிமைப்பணி அலுவலர்களுக்கான கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மிகவும் முக்கியமானது என்றும், விளையாட வயது ஒரு தடையில்லை என்றும் அவர் அப்போது கூறினார்.
கேட் தேர்வு 2020 அட்மிட் கார்டுகள் வெளியீடு
கிராச்சுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் எனப்படும் ‘கேட்’ தேர்வு பிப்ரவரி 1, 2, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு பதிவு செய்திருக்கிற 8.6 லட்சம் பேருக்குமான ’அட்மிட் கார்டு’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அட்மிட் கார்டில் தேர்வு நடக்கும் இடம், நேரம், பாடக் குறியீடு போன்ற தேர்வு சார்ந்த விபரங்கள் இருக்கும். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights