/tamil-ie/media/media_files/uploads/2017/08/04THSENGOTTAIYAN1.jpg)
tamilnadu government schools spoken English training , tamilnadu schools water drinking break,tamilnadu school education department
Tamil Nadu news today updates : புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது சந்திரயான் 2. செப்டம்பர் 2ம் தேதி சந்திரயானில் இருந்து லேண்டரும், ரோவரும், ஆர்பிட்டரை விட்டு விலகும். செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்குகிறது லேண்டர் விக்ரம், மற்றும் ரோவர் ப்ரக்யான். மேலும் படிக்க : 48 நாட்கள் சாகச பயணத்தில் சந்திரயான்... இது வரை கடந்து வந்த பாதை குறித்து ஒரு பார்வை
Chennai weather
இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, கரூர் போன்ற இடங்களில் கனமழை பெய்துள்ளது. மேலும் படிக்க : மழையை குறை கூறாதீர்கள்… மழை நீரை சேகரிக்காமல் விட்டது உங்களின் தவறு!
Chennai Shutdown :
சென்னையில் நாளை மின்தடை ஏற்பட இருக்கும் ஏரியாக்கள் : சென்னையின் ஆவடி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 21ம் தேதி) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னேரி, ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம், மற்றும் சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services, and airlines : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இங்கே படிக்கலாம்.
தெற்கு ரயில்வே பொது மேலாளருடன் தயாநிதிமாறன் எம்.பி. இன்று சந்தித்து பேசியுள்ளார்.
தொகுதிக்கான ரயில் திட்ட பணிகள், ரயில் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தேன் என தயாநிதிமாறன் தெரிவித்தார். மேலும், யானைகவுனி - வில்லிவாக்கம் ரயில்வே மேம்பால பணி 3 மாதங்களில் தொடங்கும் எனவும் தயாநிதிமாறன் கூறியுள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரை ஐகோர்ட் நீதிபதி ஆதிகேசவலு அறிவுறுத்தியுள்ளார்.
நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இம்முடிவு எடுத்துள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான ராஜிவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான்சந்த் விருதுகள் அறிவிப்பு.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு.
மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபா மாலிக் ஆகியோருக்கு ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது.
விமல்குமார்(பேட்மிண்டன்) ,சந்தீப் குப்தா(டேபிள் டென்னிஸ்), மொகிந்தர் சிங் தில்லன்(தடகளம்) ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருது.
உடற்கட்டு போட்டி தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது.
சந்திரயான் -2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நிலவுக்கான மைல்கல் பயணத்தில் இது முக்கியமான நடவடிக்கை என்றும் பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், சந்திரயான்-2 பயண திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
முன்ஜாமீன் மனு நிராகரிப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
கட்சியை பதிவு செய்யும் வேலை முடிந்து நிலையான சின்னம் கிடைத்த பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறி உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார்.
ரிலையன்ஸ் ஜியோவின் ஆக்ரோஷ வளர்ச்சியால் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் சற்று அதிர்ச்சியை சந்தித்து வருகின்றனர். இந்த சவாலை சந்திப்பதற்காக வோடபோன்- ஐடியா நிறுவனங்கள் ஒன்றாக்கப்பட்டன . இருந்தாலும், வோடபோனால் சந்தாதாரை மீட்க முடியவில்லை . இந்நிலையில் அந்நிறுவத்தின் சிஇஒ பலேஸ் ஷர்மா பதவி விலகி உள்ளார்.
Congratulations to the newly inducted cabinet ministers. Together, let us work towards unveiling a new era of development, growth and prosperity in line with the aspirations of the people of Karnataka and the vision of PM @narendramodi pic.twitter.com/mWxBpNiAdN
— B.S. Yediyurappa (@BSYBJP) August 20, 2019
ஜூலை 26-ம் தேதி பதவியேற்ற எடியூரப்பா அமைச்சரவையில் யாரையும் நியமிக்கவில்லை. இந்நிலையில், 17 பேரை கவர்னருக்கு பரிந்துரைத்து, தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார் .
பெரும்படையுடன் வந்த ஆங்கிலேய தளபதி கர்னல் ஹெரானை எதிர்த்து போரிட்டு வென்ற விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களது 248வது நினைவு நாளில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்!#ஒண்டிவீரன் pic.twitter.com/RHW2ZsOOPc
— M.K.Stalin (@mkstalin) August 20, 2019
விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களது 248வது நினைவு நாளில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.
டெல்லி வந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். ஆப்கானில் அமைதி திரும்புவதற்க்கான சூழல் ,பாகிஸ்தான்,காஷ்மீர் 370 போன்றவைகள் பற்றி பேச வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறன.
#ISRO
Lunar Orbit Insertion (LOI) of #Chandrayaan2 maneuver was completed successfully today (August 20, 2019). The duration of maneuver was 1738 seconds beginning from 0902 hrs ISTFor more details visit https://t.co/FokCl5pDXg
— ISRO (@isro) August 20, 2019
லேண்டர் விக்ரம் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திரனில் மென்மையாக தரையிறங்கும் என்று எதிர்பாக்கப் படுகிறது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சேலம், கொங்கணாபுரத்தில் நடைபெற்ற 'முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்' துவக்க விழாவில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை வேண்டி வழங்கப்பட்ட கோரிக்கை மனுவினை உடனடியாக பரிசீலித்து உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை விழா மேடையிலேயே வழங்கினார். #TNGovt pic.twitter.com/SHdVPIVf7D
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 20, 2019
'முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்' சிறப்பு நிகழ்ச்சியில் சேலம், கொங்கணாபுரத்தில் முதல்வர் பழனிசாமி இன்று கலந்துகொண்டார். அப்பொழுது மாற்றுத்திறனாளி உதவித்தொகை வேண்டி வழங்கப்பட்ட கோரிக்கைக்கு விழா மேடையிலே அதற்கு தேவையான அரசு ஆணையை வழங்கினார்.
எந்த மாநிலத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும், திமுகவினர் அம்மக்களுக்கு துணை நிற்பார்கள். காஷ்மீர் விவகாரத்திலும் அப்படித்தான் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலி. நாங்குநேரி தொகுதியில் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் திமுக அந்த தொகுதியில் போட்டியிடுமா என்று அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒண்டி வீரன் நினைவு நாளான இன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மணி மண்டபத்த்ில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த தினம். இதனை நினைவு கூறும் வகையில் அவருடைய நினைவிடத்டதில் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி, மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
Former PM Dr. Manmohan Singh, Congress President Smt. Sonia Gandhi, Shri @RahulGandhi
& AICC Gen Sec Smt. @priyankagandhi
pay homage to Former PM Shri Rajiv Gandhi on his 75th birth anniversary. #SadbhavanaDiwas #Rajiv75 pic.twitter.com/BgjeX6zwhh— Congress (@INCIndia) August 20, 2019
கர்நாடக அமைச்சரவையில் 17 அமைச்சர்கள் பதவி ஏற்கு. 17 பேரும் ஆளுநர் வாஜூபாய் வாலா முன்னிலையில் பதவி பிரமாணம் ஏற்கின்றனர். குமாரசாமி ஆட்சி கவிழ்கப்பட்ட பின்பு பாஜக ஆட்சியின் முதல்வர் எடியூரப்பா தவிர வேற எந்த அமைச்சரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
C N Ashwath Narayan & Govind M Karjol take oath as Karnataka Cabinet Ministers, in Bengaluru. pic.twitter.com/8rTgPtGudV
— ANI (@ANI) August 20, 2019
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அமமுக உறுப்பினர்கள் பலர் அதிமுகவில் இணைந்துள்ளது. 5500க்கும் மேற்பட்டோர் இணைந்ததாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவிப்பு.
தாய்க்கழகத்தில் இணைந்த தொண்டர்கள்... #AIADMK pic.twitter.com/UVto5sVlBu
— O Panneerselvam (@OfficeOfOPS) August 20, 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights