/tamil-ie/media/media_files/uploads/2019/08/template-25.jpg)
news today live updates
Tamil Nadu news today updates : வீட்டுக்காவலில் இருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா, மற்றும் பீப்பிள்ஸ் கான்ஃபிரன்ஸ் பார்ட்டியின் தலைவர் சாஜத் லோன் உள்ளிட்டோர் காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பி.டி.ஐ. அறிவித்துள்ளது.
திமுக தலைமை நிலைய செயலாளர் மரணம்
திமுக தலைமை நிலைய செயலாளர் திரு. எஸ்.ஏ.எம்.உசேன் அவர்கள் இன்று காலை 6.30. மணியளவில் இயற்கை எய்தினார். ஆயிரம் விளக்கு உசேன் என்று மக்களால் நன்கு அறியப்பட்டவர் இவர். முன்னாள் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவரின் இறப்பிற்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய வானிலை
தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை கொட்டி வருவதால் 4 தாலுக்காவில் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services, Petrol Diesel Price : இன்று தமிழகம் மட்டும் இந்தியாவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் தாயார் ராஜலெட்சுமி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் தாயார் ராஜலெட்சுமி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி#Rajalakshmi | #MKStalin | #YGMahendran pic.twitter.com/LLRnpqnjHq
— Thanthi TV (@ThanthiTV) August 6, 2019
தென்காசியை மாவட்டமாக்குவது குறித்த கருத்துகேட்பு கூட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி மட்டுமே நடைபெறும் - நெல்லை ஆட்சியர்.
வரும் 10ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை நெல்லை ஆட்சியர் அலுவலகத்திலும், மாலை 3 மணிக்கு குற்றாலம் பராசக்தி கல்லூரியிலும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும்
தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு
வீட்டுவசதித்துறை செயலராக ராஜேஸ் லக்கானி நியமனம்
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலராக கார்த்திகேயன் நியமனம்
சுற்றுலாத்துறை இயக்குநராக அமுதவல்லி நியமனம்
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து கல்வித் தகவல் மேலாண்மை இணையதளமான இ.எம்.ஐ.எஸ்-இல் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களிலேயே புதிய எண்ணை உருவாக்கி பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 5 மற்றும் 15 வயது முடிவுற்ற மாணவர்களுக்கு புகைப்படம், கைரேகை, கண்கருவிழி ஆகியவற்றை புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆதார் எண்ணில் மாணவர்கள் ஏதும் திருத்தம் கூறினால், 50 ரூபாய் கட்டணமாக பெற்றுக் கொண்டு, அதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி அறிவுறுத்தியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, யோகி பாபு,காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் கோமாளி. இதில், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பை கிண்டல் செய்யும் விதமாக காட்சி அமைந்திருந்தது. கடும் எதிர்ப்புக்கு பிறகு இந்த காட்சியை மாற்றுவதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்தார். இந்த நிலையில், கோமாளி படத்தின் பாடல் ஒன்றில், ரஜினியின் வயதை விமர்சிக்கும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி ஆயிருச்சே, இப்போ பேத்தியெல்லாம் வளந்து வந்து ஜோடி சேர்ந்திருச்சே என்ற பாடல் வரிகள் மீண்டும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இது ரஜினியின் வயதை கேலி செய்யும் விதமாக இருப்பதாக ரஜினி ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். டிரைலரின் சர்ச்சை அடங்குவதற்குள் பாடல் வரிகள் அடுத்த பிரச்சனைக்கு அச்சாரம் போட்டுள்ளது.
எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான திரு.YG.மகேந்திரன் அவர்களின் தாயார் திருமதி.ராஜலக்ஷ்மி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
அன்னாரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்! அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) August 6, 2019
நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் தாயார் ராஜலெட்சுமி மறைவுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவிவித்துள்ளார்.
#ISRO
Fifth earth bound orbit raising maneuver for #Chandrayaan2 spacecraft has been performed today (August 6, 2019) at 1504 hrs (IST) as planned.For details, please visit https://t.co/gmamiVzyQ1 pic.twitter.com/DEQR1PPxwY
— ISRO (@isro) August 6, 2019
5-வது முறையாக சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இன்று பிற்பகல் 3.04 மணிக்கு உயர்த்தப்பட்டதுள்ளது. இந்த இஸ்ரோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது.# விடு தலைவா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் pic.twitter.com/HozoJOwUzw
— Raghava Lawrence (@offl_Lawrence) August 6, 2019
கோமாளி பட சர்ச்சை விவகாரம் குறித்து நடிகர் லாரன்ஸின் டிவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோமாளி படத்தின் முன்னோட்ட காட்சியில், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வரவு குறித்து வைக்கப்பட்டிருந்த காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த காட்சி நீக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் அறிவித்திருந்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுக் குறித்த சுற்றறிக்கையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து கல்வித் தகவல் மேலாண்மை இணையதளமான இ.எம்.ஐ.எஸ்-இல் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை வைகோ இன்று சந்தித்து பேசினார். அப்போது, பொன்னாடை போர்த்தி பிரதமருக்கு மரியாதை செய்த வைகோ, ஜி.பு.போப் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார். இதை தொடர்ந்து, தமிழக பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் வைகோ கொடுத்தார். அதில், நியூட்ரினோ , ஹைட்ரோ கார்பன் திட்டம், அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.
காஷ்மீர் பிரச்னையில் அரசின் நடவடிக்கைகளை காங்கிரஸ் எதிர்த்தபோதும், அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மவுனம் காத்தார். முதல்முறையாக இன்று ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்தார் அவர். அதில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கைது செய்து, ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிப்பது தேசிய ஒருங்கிணைப்பு அல்ல. மக்களால் உருவானது தான் நாடு, நிலத்தால் அல்ல. அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வது தேசிய பாதுகாப்புக்கு கேடு’ என கூறியிருக்கிறார் அவர்.
திமுக.வின் டி.ஆர். பாலு பேசுகையில், ‘உங்களுக்கு மெஜாரிட்டி இருப்பதால், இந்த மசோதாவை நிறைவேற்றி விடுவீர்கள். ஆனால் இங்கு சட்டம் பின்பற்றப் படவில்லை. அதிகாரம் வாய்ந்த ஒரு மாநிலத்தை இரண்டு முனிசிபாலிட்டி ஆக்கியிருக்கிறீர்கள்’ என்றார்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பாஜக எம்.பி. ஜுகல் கிஷோர் ஷர்மா மக்களவையில் பேசுகையில், ‘அரசியல் சட்டப்பிரிவு 370, இந்தியா மீதான ஒரு கரும்புள்ளி. இது ஜம்மு காஷ்மீரை , உலகத்தின் இதர பகுதிகளில் இருந்து பிரித்து வைத்தது. அந்தப் பிரிவு எங்களுக்கு என்ன செய்தது. முதலீடுகள் இல்லை. வேலை வாய்ப்பு இல்லை. மாநிலமே பின் தங்கிப் போயிருக்கிறது’ என்றார்.
திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசுகையில், தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி ஃபரூக் அப்துல்லா சபையில் இல்லாததை கேள்வி எழுப்பினார். ‘முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவாதத்தில், ஃபரூக் அப்துல்லா எங்கே?’ என கேட்டார் அவர்.
மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் மனிஷ் திவாரி பேசுகையில், ‘ஜம்மு அண்ட் காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்தின் படி , அரசியலமைப்பில் எந்த மாற்றம் செய்தாலும் அதற்கு அம்மாநில அரசாங்கத்தின் ஒருமித்த கருத்து வேண்டும். ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் இல்லாமல் எப்படி உங்களால் இதை மாற்ற முடியும். மேலும் அரசியலைப்பு பிரிவு 3-ல் ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றுவதற்கு அம்மாநில சட்டப்பேரவையிடம் ஆலோசனை செய்ய வேண்டும். நீங்கள் இந்த விஷயத்தில் அவ்வாறு செய்தீர்களா? எங்களை ஆந்திர /தெலுங்கானா பிரச்சனையில் குறை சொன்னீர்கள். நாங்கள் ஆந்திர சட்டப்பேரவையுடன் ஆலோசனை செய்தோம் . இது நாடாளுமன்றக் குறிப்பில் உள்ளது. இங்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?’ என கேள்வி எழுப்பினார்.
அமித் ஷா தற்போது, மக்களவையில் ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்து பேசி வருகிறார். அந்த மசோதா மீதான விவாதங்கள் இன்று நடைபெற உள்ள நிலையில் காஷ்மீரை இணைக்கும் விவாகரத்தில் உயிரையும் கொடுப்போம் என்றும் ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை என்றும் அவர் பேசி வருகிறார்.
இன்று அதிகாலை மரணமடைந்த திருவல்லிக்கேணியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹூசைனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/WhatsApp-Image-2019-08-06-at-11.22.29-AM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/WhatsApp-Image-2019-08-06-at-11.22.30-AM.jpeg)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரட்டை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற உள்ளது.
டெல்லி ஜாஹீர் நகரில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்தில் 8 கார் மற்றும் 7 இருசக்கர வாகனங்களும் முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்துள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங்க் செய்த ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டம் இழந்தது. பின்னர் தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 374 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் மற்றும் கம்மின்ஸ் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர். பின்பு விளையாடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 487 ரன்கள் எடுத்து டிக்ளெர் செய்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டி 14ம் தேதி நடைபெற உள்ளது.
அயோத்தி விவகாரம் தொடர்பாக 01ம் தேதி முழு அறிக்கையை சமர்பித்தது சமரசக் குழு. சம்பந்தப்பட்டவர்களிடம் உரையாடல் நடத்தி அந்த விவரங்களை அறிக்கையாக சமர்பித்தது. ஆனாலும் அயோத்தி விவகாரத்தில் சரியான தீர்வை எட்டமுடியவில்லை என மத்தியஸ்தர்கள் கூறியுள்ளனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து அயோத்தி வழக்கு நாள் தோறும் விசாரிக்கப்படும் என்றும், அந்த விசாரணை ஆகஸ்ட் 6ம் தேதியில் இருந்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் தொடர்ந்து அயோத்தி வழக்கு விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறாது. நேற்று திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி காஞ்சி வீரன்ஸ் அணியை எதிர்த்து களம் இறங்கியது. 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி தன்னுடைய 6வது வெற்றியை பதிவு செய்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.97 அடியாக உள்ளது. நீர் இருப்பு 19.73 டி.எம்.சி. ஆகும். நீர்வரத்து 4171 கன அடி, நீர் திறப்பு 1000 கன அடியாகும். பவானிசாகர் அணையின் நீர்மட்டம் - 64.83 அடியாக உள்ளது. நீர் இருப்பு 8.9 டி.எம்.சியாகும். நீர் வரத்து 8113 கன அடி மற்றும் வெளியேற்றம் 205 கன அடியாக உள்ளது.
அன்னாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை கண்ணீர்மல்க தெரிவித்துக் கொள்கிறேன். (2/2)
— தயாநிதி மாறன் Dayanidhi Maran (@Dayanidhi_Maran) August 6, 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights