பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா: சட்ட மசோதா நிறைவேற்றம்

பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tenkasi, Delta

Tamil Nadu news today live updates : கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  அதனைத் தொடர்ந்து 20-ம் தேதி சட்டப்பேரவையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று காலையில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ள கோர விபத்துகளை அறிந்து கொள்வதாகவே விடிந்திருக்கிறது இன்றைய பொழுது. சென்னையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒரு துணை இயக்குநர் உட்பட் 3 பேர் பலியாகினார்கள். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை சென்னை தண்டலம் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பான முழுமையான  தகவல்களைப் படிக்க 

கோவை அவிநாசி அருகே சாலை விபத்து

கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரளாவின் எர்ணாக்குளம் சென்று கொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 03:15 மணி அளவில் கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 17 நபர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டினை இழந்து பேருந்தில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் கோவை மற்றும் அவிநாசி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

நாளை துவங்குகிறது பெண்கள் டி-20 உலக கோப்பை தொடர்

ஆஸ்திரேலியாவில் நாளை (மார்ச் 8) துவங்குகிறது பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள். இந்த கோப்பைக்காக 10 அணிகள் மோதிக்கொள்கின்றன. க்ரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஸ்ரீலங்கா, நியூசிலாந்து, வங்கதேச அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, பாகிஸ்தான், மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க : சினிமா தயாரிக்கும் கலை; புதிய தயாரிப்பாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil Nadu news today updates : இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வழங்கும் இன்றைய லைவ் ப்ளாகிற்கு உங்களை வரவேற்கின்றோம்.


22:25 (IST)20 Feb 2020

நெஞ்சைப் பதற வைக்கிறது

அவிநாசி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

காயமடைந்தோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.க.ஸ்டாலின்

22:14 (IST)20 Feb 2020

அமுல்யாவுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு

பெங்களூரில் இன்று நடந்த சிஏஏ எதிர்ப்பு பேரணியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷத்தை எழுப்பிய பெண் அமுல்யாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் Sec124A (தேசத்துரோக குற்றம்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை விசாரித்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

21:58 (IST)20 Feb 2020

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட பெண் கைது

பெங்களூரில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் அமுல்யா எனும் பெண் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

21:55 (IST)20 Feb 2020

நடிகர் தனுஷ்க்கு கொலை மிரட்டல்?

நடிகர் தனுஷ்க்கு இளைஞர் ஒருவர் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மாரிசெல்வராஜ் இயக்கத்தில்  ‘கர்ணன்’ என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சீவலப்பேரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தங்கள் சமுதாயத்தை பற்றி அவதூறாக ஏதேனும் திரைப்படம் எடுத்தால் தலை இருக்காது என்று மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.

20:32 (IST)20 Feb 2020

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு – நீதிமன்றங்களில் சரணடைந்த 4 பேர்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த , சென்னை கொளத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சம்பத் , துறையூரை சேர்ந்த தமிழ் ஆசிரியர் செல்வேந்திரன் , கொளத்தூரை சேர்ந்த தேர்வர் பிரபாகரன் ஆகிய 4 பேர் பல நீதிமன்றங்களில் சரணடைந்தனர். அவர்களை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐடி போலீசாருக்கு சென்னை எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

20:30 (IST)20 Feb 2020

பத்து நாட்களில் 10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்

தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் வரும் மார்ச் 2-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13 -ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி வினாத்தாள்கள் தற்பொழுது பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அவற்றை பள்ளியில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.வினாத்தாள் சிப்பங்கள் வைக்க வேண்டிய அறை முழுவதும் மூடப்பட்ட நிலையில் உள்ளதா என்பதை காப்பாளர்கள் உறுதி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கட்டுக்காப்பு அறைக்கு ஒரு வழி மட்டுமே இருக்க வேண்டும் என்றும், இரு சாவிகள் கொண்ட பூட்டு கொண்டு அறை பூட்டப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பு அறைக்கு பேப்பர் மற்றும் அரக்கு சீல் வைக்கப்படவேண்டும் என்றும் , வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா செயல்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

19:51 (IST)20 Feb 2020

நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு மனநலம் பாதிப்பு – புதிய மனு

நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு மார்ச் 3 ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், குற்றவாளி வினய் சர்மாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது தாயை கூட அடையாளம் காண இயலாத நிலையில் வினய் உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங், தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வினயின் வலது கை எலும்பு முறிந்துள்ளதாகவும் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதி தர்மேந்தர் ராணா, வினய் சர்மா குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய திகார் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். மனு மீதான விசாரணை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

19:50 (IST)20 Feb 2020

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பிரியா பவானி சங்கர்

தமிழில் தனது துரு துரு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தெலுங்கு திரையுலகிலும் கால் பதிக்கிறார். ஸ்ரீகாந்த் ரெட்டி எனும் அறிமுக இயக்குனர் இயக்கும் “அகம் பிரம்மாஸ்மி’ எனும் படத்தில் ஹீரோயினாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு நாயகனாக நடிக்க உள்ளார்.

19:12 (IST)20 Feb 2020

ரூ.10 லட்சம் நிதியுதவி

அவிநாசி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு.

முதற்கட்டமாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும், 2ம் கட்டமாக ரூ.8 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு.

18:03 (IST)20 Feb 2020

கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யும் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது – அமைச்சர் அன்பழகன்

கௌரவ விரிவுரையாளர் பணி குறித்து திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு சட்டப் பேரவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய உயர்க்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், “கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யும் கோரிக்கை அரசின் பரிசீலனையில் ஊள்ளது. சென்னை, கோவை, சேலம், மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் ஏழை மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக நிரந்தர பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்” என்று கூறினார்.

17:26 (IST)20 Feb 2020

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

17:02 (IST)20 Feb 2020

கேஸ் சிலிண்டர் விலை வரும் மாதங்களில் குறையும் – பெட்ரோலியத்துறை மத்திய அமைச்சர்

பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சர்வதேச சந்தைகளின் விலை ஏற்றத்தால், கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. வரும் மாதங்களில் விலை குறையும் என்று தெரிவித்துள்ளார்.

16:30 (IST)20 Feb 2020

7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அரசின் தீர்மானம் ஜூரோ தான் – மத்திய அரசு

தமிழக சட்டப் பேரவையில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால் சட்டவிரோதா காவலில் இருக்கும் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அரசின் தீர்மானம் ஜூரோ தான் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், தீர்மானத்தின் மீது ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காதவரை சட்டவிரோத காவலில் உள்ளதாக கருத முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி இல்லாமல் விடுதலை செய்ய முடியாது தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டுள்ளது.

16:07 (IST)20 Feb 2020

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி – கமல்ஹாசன்

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு அந்தப் படத்தின் கதாநாயகனும் மக்கல் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தலா ரூ.1 கோடி நிதி செய்வதாக அறிவித்துள்ளார்.

15:48 (IST)20 Feb 2020

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

15:16 (IST)20 Feb 2020

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க சட்ட மசோதா நிறைவேற்றம்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

14:32 (IST)20 Feb 2020

நடைமுறையில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் – ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக மாற்றுவதற்கான சட்ட மசோதாவை முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நடைமுறையில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வேளாண் மண்டலங்களில் திருச்சி, கரூர், அரியலூர் விடுபட்டது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

14:29 (IST)20 Feb 2020

உ.பி. பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு, வெற்றி பெற டிப்ஸ் வழங்கிய பள்ளி முதல்வர் கைது

உத்திரப்பிரதேச மாநில பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு, எப்படியெல்லாம் வெற்றி பெறலாம் என மாணவர்களுக்கு டிப்ஸ் வழங்கிய பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

13:43 (IST)20 Feb 2020

விசாரணைக் கைதி காவல் நிலையத்தில் சுட்டுக் கொன்ற வழக்கு; எஸ்.ஐ-க்கு ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு

விசாரணைக் கைதியை காவல் நிலையத்தில் வைத்து சுட்டுக்கொன்ற வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் சப் இன்ஸ்பெக்டருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், சப் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

13:39 (IST)20 Feb 2020

திருப்பூர் பேருந்து விபத்து சம்பவத்துக்கு பிரதமர் மோடி வேதனை

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “திருப்பூர் பேருந்து விபத்து சம்பவம் வேதனையளிக்கிறது; விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

13:35 (IST)20 Feb 2020

பெண்கள் ரெஸ்ட் ரூமில் செல்போன் வைத்து படம்பிடித்த பேராசிரியர் கைது

சென்னை, ஐஐடியில் பெண்கள் ரெஸ்ட் ரூமில் செல்போனை வைத்து படம் பிடித்த உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். ஏரோ ஸ்பேஸ் துறைக்கு சொந்தமான ஆய்வு கூடத்தில் உள்ள பெண்கள் ரெஸ்ட் ரூம் பயன்படுத்த சென்ற மாணவி சுவர் இடுக்கில் செல்போன் இருப்பதை கண்டு கூச்சலிட்டார். அங்கிருந்த உதவி பேராசிரியர் சுபம் பானர்ஜி என்பரை சக அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். ரெஸ்ட் ரூம்-ஐ மாணவிகள் பயன்படுத்தும்போது அதனை செல்போன் மூலம் படம் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

13:28 (IST)20 Feb 2020

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் திருப்தி இல்லை எனக் கூறி சட்டப் பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

12:56 (IST)20 Feb 2020

சீருடை பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சீருடை பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த வழக்கில், 8,888 பேருக்கான சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எல்லா தேர்வுகளிலும் முறைகேடு நடப்பது கேலிக்கூத்தாக உள்ளது. முறைகேடுகளால் மக்கள் தேர்வுகள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்று அதிருப்தி தெரிவித்தார். மேலும், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க டிஜிபி, சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.

12:52 (IST)20 Feb 2020

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனுதாக்கல் செய்துள்ளது.

12:49 (IST)20 Feb 2020

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக  மாற்றக்கூடிய சட்ட மசோதா தாக்கல்

தமிழக சட்டப் பேரவையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

12:23 (IST)20 Feb 2020

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளை சென்னைக்கு மாற்றுவதற்கு டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளை சென்னைக்கு மாற்றுவது முறையல்ல; டிஎன்பிஎஸ்சியின் முடிவு ஏழை மாணவர்களை கடுமையாக பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

12:20 (IST)20 Feb 2020

சேலம் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் நபரும் சிறுமியின் தாயும் கைது

சேலம் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த நபரையும் அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயாரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

12:15 (IST)20 Feb 2020

108 ஆம்புலன்ஸ் வருவதை டிராக் செய்ய செயலி தொடங்கப்படும்- சி. விஜயபாஸ்கர்

சட்டபேரவயில் பேசிய சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: “தனியார் டாக்ஸி நிறுவனங்களான ஊபர்,ஓலா, போல, 108 ஆம்புலன்ஸ் வாகனம் எங்கே, எந்த இடத்தில் வருகிறது என்பதை டிராக் செய்து தெரிந்துகொள்ள 2 மாதங்களில் செயலி தொடங்கப்படும்” என்று கூறினார்.

12:10 (IST)20 Feb 2020

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு ராமதாஸ் கண்டனம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ரமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, ராமதாஸ் தனது டுவிட்டரில், “கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஜேசு என்ற மீனவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. சிங்களக் கடற்படை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார்.

12:04 (IST)20 Feb 2020

நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் உருவாகி உள்ளது – வைகோ பேட்டி

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: “நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் உருவாகி உள்ளது. ஹைட்ரோ கார்பனை எதிர்த்து மக்கள் திரண்டு போராடவில்லை என்றால் தஞ்சை பாலைவனம் ஆகும்” என்று கூறினார்.

12:02 (IST)20 Feb 2020

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை

ஊழல் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது.

12:00 (IST)20 Feb 2020

நம்மொழியை காக்க ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவோம் – முதல்வர் தாய்மொழி தின வாழ்த்து

உலக தாய்மொழி தினத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விழிபோல் எண்ணி நம் மொழியை காக்க உறுதியோடு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவோம்” என்று உலக தாய்மொழி தினத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

11:57 (IST)20 Feb 2020

செய்யூரில் 4000 மெகாவாட் திறனுள்ள அனல்மின் நிலையம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் தங்கமணி

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கமணி: செய்யூரில் 4 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள அனல்மின் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

11:55 (IST)20 Feb 2020

திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை மார்ச் 3-க்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்

திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மார்ச் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

11:51 (IST)20 Feb 2020

செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மீதான வேலை வாய்ப்பு மோசடி வழக்கு விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.

11:30 (IST)20 Feb 2020

தங்கம் விலை உயர்வு

தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 31,840 ஆகும்.

11:16 (IST)20 Feb 2020

இமாச்சல் பகுதியில் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ

இமாச்சல் பிரதேசம் லாபனா – சதானா பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ ஏரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்பு வனத்துறையினர் துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

10:45 (IST)20 Feb 2020

விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர் கேரள அமைச்சர்கள்

அவினாசியில்  விபத்து நிகழ்ந்த இடத்திற்கு கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் சசீந்திரன் மற்றும் அமைச்சர் சுனில்குமார் ஆகியோர் சென்றுள்ளனர் என கேரள முதல்வர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது 

10:33 (IST)20 Feb 2020

12 ஆயிரம் பேர் மீது வழக்கு

நெல்லையில் நேற்று சிஏஏவுக்கு எதிராக தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதாக 12 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

10:32 (IST)20 Feb 2020

இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு

இலங்கை நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரிய வந்துள்ளது. இதில் மீனவர் ஒருவர் காயம்.

10:19 (IST)20 Feb 2020

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 74.68க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை ரூ. 68.27 ஆகும். நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலை நீடிக்கிறது.

09:53 (IST)20 Feb 2020

தேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பொள்ளாச்சி காவல்துறை அதிகாரி

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் 41-வது தேசிய அளவிளான மூத்தோர் தடகள போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி கோவிந்தராஜ் 100 மீட்டர், 200 மீட்டர், 1600 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம் வென்றுள்ளார்.

09:44 (IST)20 Feb 2020

உதவி எண்களில் அழைக்கவும்

இன்று காலை விபத்தில் பலியானவர்கள் மற்றும் அந்த பேருந்தில் பயணத்தவர்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர விஜயகார்த்திகேயன். உதவிகள் தேவைப்படும் நபர்கள் 7708331194 என்ற எண்ணில் இருக்கும் அழகரசனிடம் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

09:44 (IST)20 Feb 2020

உடல்களை எடுத்து வர நடவடிக்கை

கோவை அவிநாசி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.

09:39 (IST)20 Feb 2020

தனக்கு தானே காயம் ஏற்படுத்திக் கொண்டார் நிர்பயா குற்றவாளி

மார்ச் மூன்றாம் தேதி தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான வினய் தனக்குத் தானே காயத்தை ஏற்படுத்திக் கொண்டார். பிப்ரவரி 16ம் தேதி சிறைச்சுவரில் தன்னுடைய தலையை தானே மோதிக் கொண்டு காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக திகார் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tamil Nadu news today updates : சி.ஏ.ஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நேற்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கிய போராட்டம், சட்டமன்ற முற்றுகை போராட்டமாக முற்றுபெறவில்லை. ஆனால் தங்களின் எதிர்ப்புகளை மிகவும் தெளிவாக மக்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் படிக்க : உயர பறந்த தேசிய கொடி; வியந்த போலீஸ் – சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்

சட்டப் பேரவை கூட்டம்

நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தார். மேலும் பெண் சிசுக் கொலைகளை முற்றிலுமாக ஒழித்து குழந்தை பாலின சமநிலையை உருவாக்கும் மாநிலங்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும் படிக்க : சென்னையில் ரூ.15 கோடியில் ஹஜ் இல்லம்; உலமாக்களுக்கு ரூ. 3000 ஓய்வூதியம்! – சட்டப்பேரவை ஹைலைட்ஸ்

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news today live updates coimbatore accident caa protests dmk admk

Next Story
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்தில் மூவர் பலி – லைக்கா நிறுவனம் மீது வழக்குப்பதிவு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com