Advertisment

சீனர்களுக்கு இ-விசா நிறுத்தம்: கொரொனா அபாயம் எதிரொலி

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus, china

Coronavirus, china

Tamil nadu news today updates : 2020 - 2021ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், விவசாயம்,மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; கல்வி, முதலீடு துறைகளுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. வருமான வரி கட்டும் வகை, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆண்டு வருமானம், ஐந்து லட்சம் ரூபாயில் இருந்து, 15 லட்சம் ரூபாய் வரையுள்ளவர்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது. ஆனால், நிரந்தரக் கழிவுகள், வருமான வரிச் சலுகைகளை விட்டுக் கொடுத்தால் மட்டுமே, இந்த குறைக்கப்பட்ட வரி விகிதம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இனி 4 மணிநேரத்தில் சென்னை - பெங்களூரு விர்ர்ர்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்காக, இம்மாதம்தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இப்பதவிகளை பெற, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விலும், அவற்றின் கூட்டணி கட்சிகளிலும், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், யாருக்கு பதவி என்பது, இரு கட்சி வட்டாரத்திலும் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:06 (IST)02 Feb 2020

    நிர்பயா குற்றவாளிகளுக்கு தனித்தனியே தூக்கு தண்டனை நிறைவேற்ற கோரி திகார் சிறை மனு

    நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் தனித்தனியே தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி திகார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனுக்களின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    21:19 (IST)02 Feb 2020

    ஆளும் கட்சி தாக்கல் செய்த பட்ஜெட்டை எதிர்கட்சிகள் பாராட்டாது - அமைச்சர் உதயகுமார்

    மத்திய அரசின் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது குறித்து கருத்து தெரிவித்த தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: இந்தியாவின் மத்திய பட்ஜெட் குறித்து பாகிஸ்தான் எப்படி பாராட்டு தெரிவிக்கும், அதே போல ஆளும் கட்சி தாக்கல் செய்த பட்ஜெட்டை எதிர்கட்சிகள் பாராட்டாது என்று கூறினார்.

    19:57 (IST)02 Feb 2020

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் மருத்துவமனையில் அனுமதி

    காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சோனியா காந்தி வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    19:57 (IST)02 Feb 2020

    கமலஹாசன் முதலில் பட்ஜெட் உரையைப் படித்துப் பார்க்க வேண்டும் - அமைச்சர் செல்லு ராஜூ

    மதுரையில், 'நம்ம மதுரை' என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மத்திய பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனளிக்கக் கூடியது. பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து இனிமேல்தான் முழுமையாக தெரியவரும். அதற்கு முன்னரே திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறுகிறார். பட்ஜெட் குறித்து கருத்து சொல்லும் கமலஹாசன், முதலில் பட்ஜெட் உரையை படித்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.

    19:46 (IST)02 Feb 2020

    குரூப் 4 தேர்வு முறைகேடு: தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலக அதிகாரி கைது

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலக அதிகாரி, சுதா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    19:29 (IST)02 Feb 2020

    கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

    கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்திவரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா வைரஸ் பாதிப்பு நாடுகளில் இருந்து வந்த 799 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.” என்று தெரிவித்தார்.

    18:56 (IST)02 Feb 2020

    பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தது; எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் - ஓபிஎஸ்

    துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மத்திய பட்ஜெட் குறித்து கூறுகையில்: மத்திய பட்ஜெட் மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்வதோடு மட்டுமன்றி, எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    17:38 (IST)02 Feb 2020

    தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் அமைப்பு 2021-இல் திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் - ஸ்டாலின்

    தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் I-PAC அமைப்பு 2021 தேர்தலில் திமுகவுக்காக செயல்பட உள்ளது என்பதை மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    16:24 (IST)02 Feb 2020

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை; வதந்திகளை பரப்பாதீர் - அமைச்சர் விஜயபாஸ்கர்

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை. தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் சுகாதாரத்துறை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

    15:47 (IST)02 Feb 2020

    பாஜகவில் இணைந்தார் சசிகலா புஷ்பா

    டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவின் தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தார்.

    15:37 (IST)02 Feb 2020

    சிந்து சமவெளி நாகரிகத்தை நிர்மலா சீதாரமன் ‘சரஸ்வதி சிந்து’ என கூறியதில் தவறில்லை - மாஃபா பாண்டியராஜன்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி சிந்து சமவெளி நாகரிகம் என்று குறிப்பிட்டார். சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்றும் குறிப்பாக தமிழ்மொழியுடன் சிந்து சமவெளி அகழாய்வில் கிடைந்த எழுத்துகள் பொருந்திப் போவதாக ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். சரஸ்வதி நதி என்பது ஆரியர்களின் வேத காலத்தில் இருந்த நதி என்றும் கூறிவருகின்றனர். இதனால், நிர்மலா சீதாராமன் சரஸ்வதி சிந்து என்று குறிப்பிட்டது சர்ச்சையானது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பட்ஜெட் தாக்கலின்போது சரஸ்வதி சிந்து என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் தவறில்லை.

    15:25 (IST)02 Feb 2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: சீனர்களுக்கு இ-விசா நிறுத்தி வைப்பு- மத்திய அரசு நடவடிக்கை

    கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக மத்திய அரசு சீனர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு இ-விசா

    வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    14:21 (IST)02 Feb 2020

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட ரீதியான நடவடிக்கை தேவை- மு.க ஸ்டாலின்

    இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், " நெஞ்சில் நஞ்சும்,வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது, சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியான நடவடிக்கை தேவை!" என்று பதிவு செய்துள்ளார்.     

    14:21 (IST)02 Feb 2020

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட ரீதியான நடவடிக்கை தேவை- மு.க ஸ்டாலின்

    ’அக்னிப் பரீட்சை’இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி#AgniParitchai #RajendraBalaji #BJP #ADMK #Rajinikanth #DMK #MKStalin pic.twitter.com/Y1BIOH6xe5— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 1, 2020இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் தொலைக்காட்சி விவாத்தில் தெரிவித்திருந்தார்.   

    14:13 (IST)02 Feb 2020

    ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் தமிழர்களுக்கு கிடைத்த பெருமை - மாஃபா பாண்டியராஜன்

    மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்  என்று கூறியிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.  

    14:08 (IST)02 Feb 2020

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேடு: மேலும், இருவர் கைது.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேட்டில் ஈடுபட்டதாக   சுதாராணி மற்றும்  விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குரூப் 4 முறைகேடுகளைத் தொடர்ந்து, குரூப் 2ஏ முறைகேடுகளையும் விசாரித்து வரும்   சிபிசிஐடி ஏற்கனவே வேல்முருகன், ஜெயராணி ஆகியோரை கைது செய்தது என்பது குரிபிடத்தக்கது.  

    மேலும் விவரங்களுக்கு - இந்த இணைப்பை கிளிக் செய்யவும்  

    14:02 (IST)02 Feb 2020

    2020-21 ஆம் நிதியாண்டின் இரண்டாம் பகுதியில் எல்ஐசி பங்குகள் விற்பனைக்கு வரும் :

    2020-21 ஆம் நிதியாண்டின் இரண்டாம் பகுதியில் எல்ஐசி பங்குகள் பங்குச்சந்தையில் விற்பனைக்கு வரும் என்று நிதித்துறைச் செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தை பொது விற்பனைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பு எல்ஐசி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறிய ராஜீவ் குமார், மத்திய சட்டத்துறை அமைச்சகத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுவதாகவும் தெரிவித்தார்.  

    12:38 (IST)02 Feb 2020

    பிப்.4-ல் ஒரு மணிநேர வேலைநிறுத்தம்: இன்சூரன்ஸ் ஊழியர்கள் அறிவிப்பு

    எல்ஐசியின் சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடிகள். பல்வேறுதுறைகள் மற்றும் அரசின் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள தொகை ரூ.28 லட்சத்து 84 ஆயிரத்து 331 கோடிகள். 40 கோடி பாலிசிகளை இன்று எல்ஐசி வைத்துள்ளது. இவ்வளவு பாலிசிகளை வைத்துள்ள உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை எல்ஐசி பெற்றுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1000 கோடி மட்டுமே இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடாக வந்துள்ளது. ஆனால் எல்ஐசி ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடியை கொடுக்கிறது.

    எல்ஐசியை தனியார்மயமாக்குவது என மத்திய அரசு அறிவித்திருப்பதை கண்டித்து பிப்ரவரி 4-ம் தேதி அகில இந்திய அளவில் இன்சூரன்ஸ் ஊழியர்கள், ஒரு மணி நேர வெளிநடப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    12:09 (IST)02 Feb 2020

    மத்திய அம்ச பட்ஜெட் – விஜயகாந்த்

    மத்திய பட்ஜெட் நிறைகள் மற்றும் குறைகள் கொண்ட மத்திய அம்ச பட்ஜெட் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    11:32 (IST)02 Feb 2020

    திமுக மீது ஹெச்.ராஜா மீண்டும் தாக்கு

    இந்துக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு திமுக எதிரியாக விளங்குவதாக பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

    11:12 (IST)02 Feb 2020

    ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் – ஸ்டாலின்

    மத்திய அரசின் 2020-2021ம் ஆண்டின் பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை வளம்பெற எந்த திட்டங்களும் இல்லை. அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையிலேயே இந்த பட்ஜெட் உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    10:58 (IST)02 Feb 2020

    சீனாவிலிருந்து 2வது விமானம் இந்தியா வந்தது

    ஏர் இந்தியாவின் 2வது தனி விமானம் 323 இந்திய பயணிகளுடன் டெல்லி வந்தடைந்தது .மாலத்தீவைச் சேர்ந்த 7 பேரும் ஊகானிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    10:36 (IST)02 Feb 2020

    பெட்ரோல், டீசல் விலை குறைவு

    சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.75.95 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.69.89 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

    10:20 (IST)02 Feb 2020

    கேரளாவில் 2வது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

    கேரளாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த நபர், தற்போதுதான் சீனாவிலிருந்து வந்திருப்பதாகவும், அவரை தனியறையில் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    publive-image

    10:11 (IST)02 Feb 2020

    CAAக்கு எதிரான கையெழுத்து இயக்கம் – ஸ்டாலின் துவக்கிவைப்பு

    சிஏஏ உள்ளிட்ட மத்திய அரசின் ஜனநாயக முறைக்கு எதிரான திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக ஒரு கோடி மக்களிடம் கைெயழுத்து பெறும் இயக்கத்தை துவக்கியுள்ளது. திமுக தலைவரும் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான ஸ்டாலின், தனது தொகுதியில் உள்ள மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். 

    Tamil nadu news today updates : மத்திய அரசின் பட்ஜெட்டை, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன. எதிர்க்கட்சிகள் குறை கூறியுள்ளன.

    உட்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டை மையமாக வைத்து, பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள், மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்வதோடு, எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளன. மத்திய நிதி அமைச்சருக்கு வாழ்த்துகள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    அதிகாரிகளுக்கு அல்வா உடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வா உடன் முடிவடைந்துள்ளது. நீண்ட உரை; ஆனால், சரியான தீர்வுகள் இல்லை என்று மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    Tamil Nadu Kamal Haasan Rajinikanth Nirmala Sitharaman Income Tax
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment