சென்னை ஐகோர்ட் வளகத்தில் புணரமைக்கப்பட்ட பழமையான கலங்கரை விளக்கம் : தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திறந்து வைத்தார்.

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள சென்னையின் இரண்டாவது கலங்கரை விளக்கம் புணரமைக்கப்பட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று திறந்து வைத்தார்.

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள சென்னையின் இரண்டாவது கலங்கரை விளக்கம் புணரமைக்கப்பட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று திறந்து வைத்தார்.

சென்னை முதல் கலங்கரை விளக்கமானது 1796ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டு செயல்பட்டுவந்த்து. பின்னர் தற்போதைய உயர்நீதிமன்ற வளாகத்தின் 1844ம் ஆண்டு 161 அடி உயரத்தில் கட்டபட்டது. இந்த கலங்கரை விளக்கம் 1894 ஆண்டு வரை 50 ஆண்டுகளாக இரண்டாவது கலங்கரை விளக்கமாக செயல்பட்டது. அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்ற கட்டிடத்தின் மேல் 1894ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 175 அடி உயரத்திலான மூன்றாவது கலங்கரை விளக்கம் செயல்பட்டது. அதன்பின்னரே தற்போதயை செயல்பாட்டில் உள்ள கலங்கரை விளக்கம் 1977ஆம் ஆண்டு கட்டபட்டது. இது 148 அடி உயரத்திற்கு கட்டப்பட்டு செயபட்டு வருகிறது.

டோரிக் கட்டிடக்கலை முறையில் கருங்கல்லால் ஆன உயரமான கலங்கரை விளக்கம் 55 அடி அகல அஸ்திவாரத்தில் 161 அடி உயரம் கட்டப்பட்டது. இது கீழே 16 அடி விட்டத்திலும், மேலே 11 அடி விட்டத்திலும் அமைக்கபட்டுள்ளது. 20 கடல் மைல் தூரத்துக்கு ஒளிவீசும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அமைந்திருந்த சென்ன சேசவ பொருமாள் மற்றும் சென்ன மல்லேஸ்வரர் கோவில்கள் 1762ம் ஆண்டு தீ விபத்தில் தீக்கிரையானது. பின்னர் ஆங்கிலேயர்களால் தற்போதைய பூக்கடை பகுதிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

chennai high court lighthouse
பின்னர் காலியாக இருந்த இடத்தில் கலங்கரை விளக்கம் கட்டப்படுவது என முடிவெடுக்கப்பட்டு, புனித ஜார்ஜ் கோட்டைக்கும், பாரி நிறுவனத்துக்கும் இடைப்பட்ட நிலத்தில் அமைக்கப்பட்டது. ஸ்மித்தின் கட்டிட வடிவமைப்பில் 1838ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு தேவையான கருங்கற்கள் பல்லாவரம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு 1840ம் ஆண்டு 60000 ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால் கலங்கரை விளக்கத்துக்கான விளக்கு வருவதற்கு தாமதாமனதால், 1844ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியிலிருந்து அதிகாரப்பூர்வ கலங்கரை விளக்கமாக செயல்பட்டது. சென்னை துறைமுக பாரமரிப்பில் இயங்கி வந்த இந்த 161 அடி உயர கலங்கரை விளக்கமானது 1894ம் ஆண்டு தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது. தற்போது இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக இருந்து வருகிறது.

நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்ததால் பாழடைந்த கலங்கரை விளக்கத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் புணரமைக்கபட்டு வருகிறது.

சுமார் 1 கோடி ரூபாய் செலவில் புணரமைத்து இந்த கலங்கரை விளக்கத்தை சென்னை உயர் நீதிமன்ற கட்டிடத்தின் 125 வது ஆண்டு விழா கொண்டாடப்படும் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இன்று உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புணரமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே. அகர்வால், ஆர்.பானுமதி, எஸ்.கே.கவுல் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூத்த வழக்கறிஞர் பங்கேற்றனர்.

இதனை தெடர்ந்து புனரமைக்கப்பட் புதிய உயர்நீதிமன்ற அருங்காட்சியகத்தை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திறந்துவைத்தார். பின்னர் அங்கு இருந்த பார்வையாளர்கள் வருகை பதிவேட்டில் தன்னுடைய கருத்தை பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர், மத்திய, மாநில சட்டத்துறை அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர்.⁠⁠⁠⁠

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close