Advertisment

Tamil News today: ஆப்கனில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் - ஐ.நா.பொதுச்செயலாளர்

இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News today: ஆப்கனில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் - ஐ.நா.பொதுச்செயலாளர்

Tamil Nadu news today updates : காபூலை கைப்பற்றியது தாலிபான். சில தினங்களுக்கு முன்பு அம்மெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானை விட்டு வெளியேற நேற்று மதியம், 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காபூலை கைப்பற்றியதாக அறிவித்துள்ளது தாலிபான் தீவிரவாத அமைப்பு. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளர்கள் களத்திற்கு சென்று நேரடியாக, மக்களுக்கு காபூலில் நடந்து வரும் உண்மைகளை உலகிற்கு அறியப்படுத்தி வருகின்றனர்.

Advertisment

ஆப்கான் தொடர்பான செய்திகளை படிக்க

ஆஃப்கான் விவகாரம் : அந்த மோசமான காலத்திற்கு மீண்டும் செல்ல விரும்பவில்லை – கதறும் ஆஃப்கான் பெண்கள்

காபூலை கைப்பற்றிய தாலிபான்கள்… நாட்டை விட்டு ஓடிய அதிபர்… தப்பித்துக் கொண்ட அமெரிக்கா

சபரிமலை கோவில் திறப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரி மலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வருகின்ற 23ம் தேதி வரை பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா சோதனை நெகட்டிவ் சான்று அல்லது 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதி நிலநடுக்கம்

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1297 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:31 (IST) 16 Aug 2021
    ஆப்கனில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் - ஐ.நா.பொதுச்செயலாளர்

    ஆப்கனில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கனில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிக்கிறது. தலிபான்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



  • 20:00 (IST) 16 Aug 2021
    பெட்ரோல், டீசல் எரிபொருட்கள் மீதான சுங்கவரி குறைக்கப்படாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்கவரி குறைக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களால் அரசுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.



  • 18:53 (IST) 16 Aug 2021
    காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது

    காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மக்கள் வெளியேறுவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியது. நாளை முதல் விமான சேவையை முழுவதுமாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள், குடும்பத்தினரை மீட்க சி-17 விமானம் காபூலில் தரையிறங்கி உள்ளது. 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காபூலில் சிக்கி உள்ளனர்.



  • 18:51 (IST) 16 Aug 2021
    ஆப்கானிஸ்தான் நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது - வெளியுறவு அமைச்சகம் தகவல்

    ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • 18:31 (IST) 16 Aug 2021
    ஆஃப்கன் அதிபர் அஷ்ரப் கனி ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் தப்பிச் சென்றார் - ரஷ்யா தகவல்

    ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி காரில் பறந்து சென்றார் இதையடுத்து, ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் தப்பிச் சென்றார் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



  • 17:20 (IST) 16 Aug 2021
    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வீடு வீடாக சோதனை நடத்தும் தலிபான்கள்

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வீடு வீடாக தலிபான்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், போர் வீரர்களின் குடும்பங்கள், பத்திரிகையாளர்களை தலிபான்கள் தேடி வருகின்றனர்.



  • 17:03 (IST) 16 Aug 2021
    ஸ்டாலின் மீதான வழக்கு - நீதிமன்றம் அறிவுறுத்தல்

    முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப்பெறுவது தொடர்பாக உயர்நீதிமன்ற ஒப்புதலை பெற சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



  • 16:33 (IST) 16 Aug 2021
    பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் ஆலோசனை

    தமிழகத்தில் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா மற்றும் கல்வி ஆணையர் நந்தக்குமார் பங்கேற்றுள்ளனர்.



  • 15:53 (IST) 16 Aug 2021
    வயதானவர்கள் கடிதம் மூலம் வேறு நபர்களை அனுப்பி ரேசன் பொருட்களை பெறலாம்

    ரேசன் கடைகளுக்கு செல்ல இயலாத வயதானவர்கள், கடிதத்தின் மூலம் வேறு நபர்களை அனுப்பி பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். மேலும் குடும்பத்தில் உள்ள 5 வயதிற்கு மேற்பட்டவர்கள் கைரேகை வைத்து ரேசன் பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



  • 15:39 (IST) 16 Aug 2021
    உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் பங்கேற்கும்

    உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் என ஆப்கன் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.



  • 15:38 (IST) 16 Aug 2021
    திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார் சுஷ்மிதா தேவ்

    மேற்கு வங்க காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுஷ்மிதா தேவ் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்



  • 14:48 (IST) 16 Aug 2021
    தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள ஆப்கன் அரசு - சீனா அறிவிப்பு

    தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள ஆப்கன் அரசுடன், நட்பு ரீதியிலான உறவை மேம்படுத்த தயார் என சீனா அறிவித்துள்ளது. தலிபான்களின் நடவடிக்கையை பொறுத்தே அரசை அங்கீகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என ரஷ்யா கூறியிருந்தது.



  • 13:48 (IST) 16 Aug 2021
    ஸ்டெர்லைட் ஆலை- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிப்காட் மற்றும் புதியம்புதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.



  • 13:48 (IST) 16 Aug 2021
    சார்பட்டா பரம்பரை - பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்

    சார்பட்டா பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பா. ரஞ்சித்துக்கு அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரலாற்று படம் என்று தெரிவித்துவிட்டு உண்மைக்கு புறம்பான செய்திகள் மக்களிடையே பரப்பப்பட்டுள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியிருக்கிறது.

    சார்பட்டா பரம்பரை படத்தில் இருக்கும் காட்சிகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது



  • 13:47 (IST) 16 Aug 2021
    காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் உயிரிழப்பு

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாகவும், துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



  • 13:17 (IST) 16 Aug 2021
    வெள்ளை அறிக்கை வெளியிட்டு திமுக அரசு பின்வாங்க முயற்சிக்கவில்லை

    "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்க மாட்டோம். அதிமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் பெரிய பட்டியலே உள்ளது. அதிமுக கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா?'' எனக் கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.



  • 12:46 (IST) 16 Aug 2021
    கொரோனவை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கிறது

    சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சவாலானதாக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



  • 12:33 (IST) 16 Aug 2021
    ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல்

    காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் இந்தியாவிலிருந்து விமானத்தை இயக்கும் சூழல் இல்லை என ஏர் இந்தியா அறிவித்திருந்தது. இதனால், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.



  • 12:13 (IST) 16 Aug 2021
    விமான போக்குவரத்து ரத்து

    மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஆப்கன் தலைநகர் காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.



  • 11:21 (IST) 16 Aug 2021
    வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்க மாட்டோம் - முக ஸ்டாலின் பேச்சு

    கொடுத்த வாக்குறுதியில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம் என்று பட்ஜெட் விவாதத்தில் முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 11:20 (IST) 16 Aug 2021
    ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு

    ஆந்திராவில் ஓராண்டுக்கு பின் மீண்டும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.



  • 11:07 (IST) 16 Aug 2021
    தினசரி கொரோனா தொற்று 2000-ஆகவே உள்ளது

    கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 2000 என்ற அளவிலேயே இருக்கிறது என்றும் அவர் கூறினார்.



  • 10:37 (IST) 16 Aug 2021
    இந்தியர்களை மீட்க காபூல் செல்கிறது ஏர் இந்தியா

    ஆஃப்கான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், காபூலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக இன்று இரவு 08:30 மணிக்கு காபூல் செல்ல இருப்பதாக ஏர் இந்தியா அறிவித்த நிலையில், அந்த விமானம் இன்று பிற்பகல் 12.30 மணிக்கே ஆஃப்கான் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:27 (IST) 16 Aug 2021
    கொரோனா பாதிப்பு

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 32, 937 ஆகும். மருத்துவமனைகளில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 35, 909 ஆகும். இது வரை இந்தியாவில் மொத்தம் 3 கோடியே 22 லட்சத்து 25 ஆயிரத்து 513 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



  • 09:31 (IST) 16 Aug 2021
    இந்திய வீரர்களுக்கு மோடி விருந்து

    டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் அவரது இல்லத்தில் உணவு விருந்து அளிக்கிறார்.



  • 09:29 (IST) 16 Aug 2021
    தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

    தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 09:27 (IST) 16 Aug 2021
    தமிழகத்திற்கு 8200 கனஅடி நீர் திறப்பு

    கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து தமிழகத்திற்கு 8200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.



  • 09:25 (IST) 16 Aug 2021
    வாஜ்பாய் நினைவு தினம்

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று. அவரின் நினைவு தினத்தை ஒட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



Tamil Nadu Live Updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment