Advertisment

இன்றைய செய்திகள்: பிப்ரவரி 29ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் - பொதுச் செயலாளர் அறிவிப்பு

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.73 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.27 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றைய செய்திகள்: பிப்ரவரி 29ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் - பொதுச் செயலாளர் அறிவிப்பு

Tamil nadu news today updates : மகா சிவராத்திரியையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு கோயில்களில் நடனக் கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் இடம்பெற்றன. சிறுபான்மையினரின் அரணாக அதிமுக இருக்கும் என முதல்வர், துணை முதல்வர் கூட்டறிக்கை. அதிமுக மக்களை ஏமாற்றி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

Advertisment

’விஜய்யை காங்கிரஸுக்கு அழைத்து அவரை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்’ – பொன்.ராதாகிருஷ்ணன்

இந்தியன் 2 படபிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்துத் தொடர்பாக, தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் வழக்கு விசாரணையாக மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவு. புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பதிலாக, பணம் தரும் துணை நிலை ஆளுநரின் உத்தரவு செல்லும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Rasi Palan 22th February 2020: இன்றைய ராசிபலன்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்க்ஸில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil Nadu News Today Updates : தமிழகம் மற்றும் இந்தியாவின் அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, வழக்கு, வணிகம் உள்ளிட்ட செய்திகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்














Highlights

    22:24 (IST)22 Feb 2020

    ஆசிய மல்யுத்த போட்டி - தங்கப்பதக்கம்

    ஆசிய மல்யுத்த போட்டியின்ஆடவர் 57கி எடை பிரிவில் இந்திய வீரர் ரவி குமார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

    21:44 (IST)22 Feb 2020

    உத்தரப் பிரதேசத்தில் ஒரு கே.ஜி.எஃப்....?

    3350 டன் தங்க சுரங்கம் என்ற செய்தி பொய்.

    உத்தர் பிரதேச மாநிலம் சோன்பத்ரா என்ற இடத்தில் 3350 டன் அளவுள்ள தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை.

    அந்த மொத்த பரப்பளவில் தோராயமாக 160 கிலோ தங்கம் மட்டுமே பிரித்தெடுக்க முடியும்.

    மத்திய புவியியல் ஆய்வுத் துறை விளக்கம்...

    21:20 (IST)22 Feb 2020

    6,715ல் இருந்து 5,262 ஆக குறைக்கப்பட்டுள்ளது

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6,715ல் இருந்து 5,262 ஆக குறைக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து மதுக்கடைகள் குறைக்கப்படும் - அமைச்சர் தங்கமணி

    திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி

    21:20 (IST)22 Feb 2020

    பெட்ரோலிய மண்டலம் திட்டம் ரத்து வரவேற்கத்தக்கது

    காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த பெட்ரோலிய மண்டலம் திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்

    20:45 (IST)22 Feb 2020

    வாங்கிய சிப்ஸுக்கு காசு கொடுக்காததால் தகராறு.. பஞ்சாயத்துக்கு சென்றவர் வெட்டிக்கொலை!

    சென்னை யானைக்கவுனி பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் என்பவரின் மாமனாரின் கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஒருவர் மளிகை கடை வைத்துள்ளார். அந்த மளிகை கடையில் சுமன் என்பவர் குடிபோதையில் சிப்ஸ் பாக்கெட்டை வாங்கிவிட்டு, பணம் கொடுக்காமல் சென்றுள்ளார்.

    அதனை கேட்ட கடைக்காரருக்கும், சுமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த தன்ராஜ், வாங்கிய சிப்ஸ்-க்கு பணம் கொடுக்குமாறு சுமனிடம் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சென்ற சுமன், தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு வந்து பயங்கர ஆயுதங்களை கொண்டு தன்ராஜை பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கொலை சம்பவம் அறிந்து வந்த போலீசார், சுமன் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரை கைது செய்தனர்.

    20:12 (IST)22 Feb 2020

    திமுக எம்பிக்கள் கூட்டம்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.29ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது

    ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்பிக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்

    - திமுக பொதுச்செயலாளர்

    20:01 (IST)22 Feb 2020

    கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு

    சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அனைவருக்குமான கல்வியை உறுதிப்படுத்த வேண்டும், கல்வியில் தனியார்மயத்தை அனுமதிக்கக்கூடாது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.என்.யூ, பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் ஆய்ஷி கோஷ் கலந்து கொண்டார்.

    அப்போது மாணவர்கள் தேவையற்ற போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அரசியலமைப்பையும் கல்வியையும் பகத்சிங், அம்பேத்கர் அவர்கள் வழி நின்று பாதுகாக்க வேண்டிய கடமை மாணவர்களாகிய தங்களுக்கு உண்டு என்பதை நடிகர் ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும்“ என்றார்.

    19:48 (IST)22 Feb 2020

    நிர்பயா குற்றவாளி வினய்க்கு மனநல சிகிச்சை கோரிய மனு - தள்ளுபடி செய்தது விசாரணை நீதிமன்றம்

    நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு, உரிய மனநல சிகிச்சை அளிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி விசாரணை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திகார் சிறையில் உள்ள வினய் சர்மா , கடந்த 16ம் தேதி சுவற்றில் மோதி காயம் ஏற்படுத்தி கொண்டார். மனநல பாதிப்பால் வினய் குமார் சுவற்றில் மோதி கொண்டதாகவும், அதனால் அவருக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தர்மேந்திர ராணா அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    19:39 (IST)22 Feb 2020

    தாஜ்மஹாலை பார்வையிடும் அமெரிக்க அதிபர் டிரம்ப்...

    இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிட உள்ளார். இதனையொட்டி தாஜ்மஹாலை புனரமைக்கும் பணிகள் மூழுவீச்சில் நடைபெற்ற வந்தன. அந்த பணிகள் நிறைவுபெற்றதால் தாஜ்மஹால் தற்போது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. மேலும் ஆக்ராவில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    19:16 (IST)22 Feb 2020

    நான் மகிழ்ச்சியாக இல்லை - இஷாந்த்

    “நான் மகிழ்ச்சியாக இல்லை. கடந்த இரண்டு நாட்களாக தூங்கவேயில்லை. இன்று கூட சிரமப்படுகிறேன். நான் விரும்பிய விதத்தில் என்னால் பந்துவீச முடியவில்லை" - இஷாந்த் சர்மா

    19:12 (IST)22 Feb 2020

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்

    புவனேஸ்வரில் பல்கலைக்கழக அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

    19:00 (IST)22 Feb 2020

    ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாள் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர்

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரம் புனித சூசை நிலையத்தில் உள்ள ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், அங்கு பிளஸ் ஒன் பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அறிவித்தார்.

    18:42 (IST)22 Feb 2020

    சுத்தம் செய்யும் நிலை இனி வராது

    பள்ளி கழிப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி வராது

    துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

    18:32 (IST)22 Feb 2020

    பல்லு படாம பாத்துக்க டீசர்

    தினேஷ். சஞ்சிதா ஷெட்டி நடித்திருக்கும் படம் பல்லு படாம பாத்துக்க. விஜய் வரதராஜ் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. 

    18:16 (IST)22 Feb 2020

    பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது

    பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது - சென்னை உயர்நீதிமன்றம்

    * பெண் பணியாளரின் பாலியல் புகாரை எதிர்த்து புவிசார் குறியீடு அலுவலகத்தில் துணை பதிவாளர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கருத்து

    17:56 (IST)22 Feb 2020

    ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி

    தேசவிரோத போராட்டங்களை கண்டித்து பிப்.28ம் தேதி மாவட்டந்தோறும் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி - தமிழக பாஜக அறிவிப்பு

    17:43 (IST)22 Feb 2020

    அரியலூரில் புனித அந்தோணியார் ஆலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு

    அரியலூர் மாவட்டம் சிங்கராயபுரத்தில் புனித அந்தோணியார் ஆலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.போட்டியில் 500 காளைகளும் 350 காளையர்களும் களமிறங்கினர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை காளையர்கள் திறம்பட அடக்கி காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.

    17:42 (IST)22 Feb 2020

    தமிழக அரசு அரசாணை

    பிப்ரவரி 24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

    17:06 (IST)22 Feb 2020

    மதச் சுதந்திரப் பிரச்சனை குறித்து அமெரிக்கா அதிபர் பேசுவார்

    இந்தியாவில் இரண்டு நாட்கள் அரசு முறை சுற்றுபயணம் மேற்கொள்கிறார் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்.  டிரம்ப் அமெரிக்கா அதிபரான பின்பு  இந்தியாவுக்கு முதல் முறையாக வருவதால் அவரை வரவேற்க குஜராத் அரசும், மத்திய அரசும் ஏராளமான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.  முன்னதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' மதத்தை அளவுகோலாய் வைத்து குடியுரிமையை முடிவு செய்வதை நினைத்து, ஆழ்ந்த கவலை  அடைந்திருப்பதாக தெரிவித்தது.  

    இந்நிலையில், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் , ' இந்தியாவில் இருக்கும் மதச் சுதந்திரப் பிரச்சினை குறித்தும் அமெரிக்கா அதிபர் மோடியிடம்  பேசுவார் " என்று தெரிவித்துள்ளார்.  

    16:51 (IST)22 Feb 2020

    வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜக வில் இணைந்தார்.

    சந்தனக் கடத்தல்  வீரப்பனின் மகள் வித்யா ராணி இன்று  தன்னை பாஜக வில் இணைத்துக் கொண்டார்.  தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் தலைமயில் நடைபெற்ற விழாவில் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார். வீரப்பன்- முத்துலட்சுமி தம்பதிக்கு  வித்யா ராணி, விஜயலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உண்டு. மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்பதால் பாஜகவில் நான் இணைந்திருக்கிறேன் என்று  வித்யா ராணி  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

    16:20 (IST)22 Feb 2020

    கொரோனா வைரஸ் : இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்

    கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவது பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள அறிக்கையில்  இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.  

    மேலும், நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம்  போன்றநாடுகளில் இருந்து  இந்தியாவிற்குள் வரும் பயணிகள் முறையான சிகிச்சைக்குப் பின் தான் அனுமதிக்கப் படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.  

    16:18 (IST)22 Feb 2020

    ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றம்

    ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டுள்ளது.   ஒரு சவரன் 32 ஆயிரத்து 500 ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகிறது .

    16:08 (IST)22 Feb 2020

    சிஏஏ இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று நிரூபியுங்கள், ஸ்டாலினுக்கு முரளிதரராவ் சவால்

    குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று பாஜக  தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் சவால் விடுத்துள்ளார்.  மேலும், பாஜக இருக்கும் வரை தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக விடமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார் .   

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாஜக சார்பாக மாற்று கட்சியிலிருந்து சுமார் 5000 பேர் பாஜகவில் இணையும் விழாவில் கலந்து கொண்டு பேசிய  முரளிதரராவ் இவ்வாறு கூறினார்.  

    15:22 (IST)22 Feb 2020

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி (4/4)
     

    15:22 (IST)22 Feb 2020

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி (3/4)

    15:21 (IST)22 Feb 2020

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி (2/4)

    15:21 (IST)22 Feb 2020

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி (1/4)

    15:20 (IST)22 Feb 2020

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  இன்று திருச்சியில் நடைபெற்ற தேசம் காப்போம் பேரணியின் இறுதியில் பின்வரும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 

    • குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெருக 
    • தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடவடிக்கையைக் கைவிடுக 
    • தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ரத்து செய்க 
    • இடஒதுக்கீடு உரிமையைப் பாத்காத்திடுக 

    15:12 (IST)22 Feb 2020

    சஷி தரூர் வெளிநாடு செல்ல அனுமது

    சுனந்த புஷ்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள காங்கிரஸ் தலைவர்  சஷி தரூர் வெளிநாடுகளுக்கு செல்ல டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.  பிப்ரவரி முதல் மே வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), பிரான்ஸ் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு செல்ல  அனுமதி கிடைத்துள்ளது. 

    13:47 (IST)22 Feb 2020

    பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

    கடலூர், நாகை மாவட்டங்களில்  பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது .  2017 ஆம் ஆண்டு ஜூலை 19இல் இந்த அரசாணை  பிறப்பிக்கப்பட்டது.  இரண்டு மாவட்டங்களில் 45 ஊராட்சிகளை உள்ளடக்கி 23 கெக்டரில் முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும் என்று  தெரிவிக்கப் பட்டிருந்தது.  

    13:13 (IST)22 Feb 2020

    ரஜினி மனு தாக்கல்

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என ரஜினி மனுத் தாக்கல் செய்துள்ளார்

    12:57 (IST)22 Feb 2020

    ஹாக்கி லீக் போட்டி

    புவனேஷ்வரில் நடைபெறும் ஹாக்கி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

    11:57 (IST)22 Feb 2020

    பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா

    பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை திறந்து வைத்த பின் விழா மேடைக்கு வந்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும்,  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

    11:49 (IST)22 Feb 2020

    காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்து அரசிதழில் வெளியீடு

    காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்து பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் வேளாண் மண்டல மசோதா சட்டமாகியுள்ளது. 

    11:34 (IST)22 Feb 2020

    சிவந்தி ஆதித்தனாரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் வருகை புரிந்தார். அவருக்கு தினத்தந்தி நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் பா.சிவந்தி ஆதித்தனார் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர். 

    11:10 (IST)22 Feb 2020

    அதிமுக-வுக்கும் அண்ணாவுக்கு தொடர்பில்லை - மு.க.ஸ்டாலின்

    "அதிமுகவின் அரசியல் என்பது அண்ணாவுக்கும், திராவிட இயக்கத்திற்கும் தொடர்பில்லாதது; சந்தர்ப்ப வாதத்தில் தோய்ந்தது" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

    10:59 (IST)22 Feb 2020

    ராமதாஸ் ட்வீட்

    "தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை - பாரதிதாசன் 1.பஞ்சாப் மாநிலத்தில் அரசுத்துறைகள், கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்கள் பஞ்சாபியில் எழுதப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் இடம் பெறுவது எந்நாளோ?" என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்

    10:50 (IST)22 Feb 2020

    திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் திறப்பு விழா

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவை முன்னிட்டு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. அதோடு மண்டபத்தைத் திறக்க தூத்துக்குடி வந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    10:25 (IST)22 Feb 2020

    இந்திய தங்கத்தின் மதிப்பு

    சோன்பகதி கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் மட்டுமே 2,943.26 டன் தங்கம் இருப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஹார்தி கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் 646.15 கிலோ தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. நமது நாட்டில் ஏற்கனவே உள்ள சுரங்கங்களில் தங்க இருப்பு 626 டன் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது. இதே போன்று 5 மடங்கு தங்க இருப்பு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்கங்களில் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

    10:19 (IST)22 Feb 2020

    உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

    உத்தரபிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சோன்பகதி, ஹார்தி கிராமங்களில் 3 ஆயிரம் டன் தங்கம் வெட்டி எடுக்கிற வாய்ப்புகளை கொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த சுரங்கங்களில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனமும், உத்தரபிரதேச மாநில புவியியல் மற்றும் சுரங்க இயக்குனரகமும் உறுதி செய்துள்ளன.

    10:11 (IST)22 Feb 2020

    நிர்பயா வழக்கு

    நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னால் குற்றவாளிகள் அவரவர் குடும்பத்தினரை சந்திக்க விருப்பம் உள்ளதா என தெரிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் கடிதம்

    10:02 (IST)22 Feb 2020

    2000 ரூபாய் நோட்டு குறித்த வதந்திக்கு முற்றுபுள்ளி

    2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகலாம் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது குறித்து பேசிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள், அதுபோன்ற எண்ணம் மத்திய அரசிடம் தற்போது வரவில்லை என்று கூறினர். இதுதொடர்பான அதிகாரபூர்வமான தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்த அதிகாரிகள், ஏ.டி.எம். மையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல் நிரப்பப்பட்டு வருவதாக கூறினர்.

    09:47 (IST)22 Feb 2020

    இந்தியா பதக்கங்கள் வெல்ல, தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது

    விளையாட்டு போட்டிகளில், இந்தியா பதக்கங்கள் வெல்ல, தமிழகம் முக்கிய பங்கு வகிப்பதாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு நிறுவனத்தில், தேர்ச்சி பெற்ற  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அவர், இதனை தெரிவித்தார். 

    09:27 (IST)22 Feb 2020

    மேட்டூர் அணை நீர் மட்டம்

    மேட்டூர் அணை நீர்மட்டம் - 105.62 அடி, நீர் இருப்பு - 72.31 டிஎம்சி, நீர்வரத்து - 102 கனஅடி, நீர் வெளியேற்றம் - 750 கனஅடியாக உள்ளது.

    09:14 (IST)22 Feb 2020

    பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

    காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம் என்று கூறி, அவரை தற்கொலை செய்யும் அளவிற்கு  கே.எஸ்.அழகிரி தூண்டுகிறார் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

    ”எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பாக சண்டைக் காட்சி நடிகர்களும் நூலிழையில் உயிர் தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளரையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப்படுகிறது.

    அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். 'இந்தியன் 2' படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனைக் கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்?. அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்கக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.

    இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன்” என இந்தியன் 2 விபத்து குறித்து நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    Tamil Nadu Chennai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment