Tamil Nadu news updates : தமிழகத்தில் இன்று எதிர்கட்சி தலைவர்கள் மத்திய அரசின் என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ப.சிதம்பரம், கி.வீரமணி, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க இந்த இணைப்பை காணுங்கள்
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் பட்டியல் வெளியீடு!
ஜார்கண்ட் மாநில தேர்தல்
ஐந்து கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றும் 20ம் தேதியோடு நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. வெளியாகும் தேர்தல் முடிவுகளில் இதுவரை காங்கிரஸ் கூட்டணியினர் முன்னிலை வகித்து வருகின்றனர். மகாராஷ்ட்ராவை தொடர்ந்து ஜார்கண்ட்டிலும் ஆட்சியை இழக்கும் அபாயத்தை எட்டியுள்ளது பாஜக. இது தொடர்பான முழுமையான செய்திகளை படிக்க
Live Blog
Tamil Nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் இந்த இணைப்பில் காணுங்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது என்று ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. நியாயமான இந்த கோரிக்கையைக் கூட சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்திருப்பது துரதிருஷ்டவசமானதாகும்.
- ராமதாஸ் அறிக்கை
டிசம்பர் 27,30ஆம் தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை டிச. 25,28ல் ஓய்கிறது
தேர்தல்பரப்புரை முடிவுக்கு வந்தபின் உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத நபர்கள் வெளியேற வேண்டும்
விதியைமீறி வெளியேறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
-மாநில தேர்தல் ஆணையம்
'எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்'
ஜனநாயகத்தை காக்க போராட்டங்களை முன்னெடுப்பது பற்றி ஆலோசிக்க வர வேண்டும். குடிமக்கள் பதிவேடு,குடியுரிமை சட்டம் மூலம் நாட்டின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த கடுமையான ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. இந்தியாவின் ஜனநாயக ஆன்மாவை காப்பாற்ற அமைதியான, ஆழமான போராட்டங்கள் அவசியம்.
- மம்தா பானர்ஜி
கிருஷ்ணகிரி : விடுதி மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்காத காரணத்தால் தளி பகுதியில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மகாதேவம்மா பணியிடை நீக்கம்.
மதகொண்ட பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கனிகா ஜெசி கிறிஸ்டி சரியாக பள்ளிக்கு வராத காரணத்தால் பணியிடை நீக்கம் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
தளி வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வந்த வெங்கடேசன் புகாரின் பேரில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவியிறக்கம்.
ஜார்கண்ட் சட்டமன்ற வாக்கெடுப்பு நிலவரங்கள் ,, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற உணர்ச்சி பிரச்சினைகளின் அடிப்படையில் அடிப்படையில் அரசியல் செய்யும் அமித் ஷா தலைமையிலான கட்சியின் அரசியலை மக்கள் விரும்பவில்லை என்று சிவசேன கருத்து தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணிக்கு சாதகமாகி வரும் நிலையில், ஜார்கண்ட் மக்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆணவத்தை தூக்கி எரிந்து விட்டதாக தேசிய வாத காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது
புதுவை கவிஞர்கள், தேச பக்தர்கள் மற்றும் தெய்வ பக்தர்கள் அதிகம் நிறைந்தவர்களின் நிலம் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதுவை பல்கலைக்கழகத்தில் பேச்சு. தமிழ் மற்றும் பிரெஞ்ச் கலாச்சாரத்தின் சிறந்த சேர்க்கையாக புதுவை விளங்குகிறது எனவும் புகழாரம்.
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், காற்றின் வேகம் காரணமாக குமரி கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கும் திரைத்துறையினருக்கு டெல்லியில் இன்று அவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. வெங்கையா நாயுடு அவ்விருதுகளை தற்போது வழங்கி வருகிறார். மகாநடி திரைப்படத்தில் நடித்ததிற்காக நடிகை கீர்த்தி சுரோஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
உத்திர பிரதேச மாநிலத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 நபர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் 15 நபர்களின் உடல், பிரேதபரிசோதனைக்கு பிறகு அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வினாத்தாள் கசிவு தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வுகளில் மாற்று வினாத்தாள்கள் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. வினாத்தாள்கள் வெளியானதாக வந்த தகவல்களை அடுத்து தேர்வு மையங்களுக்கு மாற்று விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது
Tamil Nadu news today updates : உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
27ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு 25ம் தேதி மாலை 5 மணி முதல் 27ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 28ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்கி 30ம் தேதி மாலை 5 மணி வரை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள்ளது.. வாக்கு எண்ணிக்கைகள் நடைபெறும் 2ம் தேதி முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights