Advertisment

குடியுரிமை சட்டம்: தமிழகத்தில் இன்று திமுக போராட்டம்!

Petrol Diesel Price Chennai : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து ரூ.77.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி ரூ.69.81க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குடியுரிமை சட்டம்: தமிழகத்தில் இன்று திமுக போராட்டம்!

Tamil Nadu news today updates Jharkhand elections : ஜார்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே நவம்பர் 30, டிசம்பர் 07, டிசம்பர் 12 ஆகிய தேதிகளில் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவுற்றது. இன்று நான்காம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஐந்தாம் கட்ட தேர்தல் 20ம் தேதி நடைபெற உள்ளது.

Advertisment

ஜெயலலிதா தொடர்பான இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தள அறிவிப்பின் படி இது வரையில் மாவட்ட ஊராட்சி வார்ட் உறுப்பினர் பதவிக்கு 771 நபர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர் (கட்சி அடிப்படையில்). ஊராட்சி ஒன்றிய வார்ட் உறுப்பினர் பதவிகளுக்கு 8109 நபர்கள் (கட்சி அடிப்படையில்)இதுவரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி தலைவர்களுக்கான பதவிக்கு 25044 நபர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 73150 நபர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Blog

Tamil Nadu news today updates TN Local body elections, Chennai weather, TN politics : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

07:38 (IST)17 Dec 2019

திமுக இன்று ஆர்பாட்டம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களிலும் பலத்த போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கல்கத்தாவில் பெரிய பேரணி நடைபெற்றது. கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் போராட்டத்தில் இறங்கினர். இன்று திமுக சார்பில் மாவட்டம் தோறும் மாபெரும் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற உள்ளது.  காஞ்சிபுரத்தில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

21:44 (IST)16 Dec 2019

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமனம்

தற்போதைய இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத்தின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

20:54 (IST)16 Dec 2019

மாணவர்கள் போராட்டத்தால் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் ஜனவரி 20 வரை விடுமுறை அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் ஜனவரி 20 வரை விடுமுறை அறிவித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.

20:15 (IST)16 Dec 2019

மாணவர்கள் தேசத்தின் ஆன்மா; அவர்கள் தாக்கப்பட்டது குறித்து பிரதமர் பேச வெண்டும் - பிரியங்கா காந்தி

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக டெல்லியின் இந்தியா கேட்டில் தர்ணா நடத்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி: பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும். மாணவர்கள் தேசத்தின் ஆன்மா. இந்த சம்பவம் அரசியலமைப்பின் மீதான தாக்குதல். மாணவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எதேச்சதிகார நாடல்ல. அனைவரும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்க வேண்டும். மாணவர்கள் குரல் எழுப்ப உரிமை உண்டு. இந்த நாடு அவர்களுடையது என்றார் பிரியங்கா காந்தி. பெண்கள் மீதான தாக்குதல், பொருளாதாரம், வேலையின்மை மற்றும் மாணவர்களுக்கு எதிராக நேற்று நடந்தது பற்றி பிரதமர் மோடி ஏன் மௌனமாக இருக்கிறார். என்று அவர் கேட்டார்.

20:11 (IST)16 Dec 2019

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் புரிந்துகொள்ளுமாறு மாணவர்களிடம் வேண்டுகோள் - அமித்ஷா

உள்துறை அமைச்சர் அமித்ஷா: “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் புரிந்துகொள்ளுமாறு மாணவர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் எந்தவொரு ஏற்பாடும் குடியுரிமை திருத்தச் சட்டதில் இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி மற்றும் டி.எம்.சி ஆகியவை உங்களை தவறாக வழிநடத்தி நாடு முழுவதும் வன்முறைச் சூழலை உருவாக்குகின்றன” என்று கூறினார்.

17:34 (IST)16 Dec 2019

அரசு நாட்டை வன்முறை புயலுக்குள் தள்ளிவிட்டது; இளைஞர்களின் எதிர்காலத்தை சாம்பலாக்கிவிட்டது - சோனியாகாந்தி

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி வெளிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு நாட்டை வன்முறை புயலுக்குள் தள்ளிவிட்டது; இளைஞர்களின் எதிர்காலத்தை சாம்பலாக்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

17:32 (IST)16 Dec 2019

குடியுரிமை திருத்தச் சட்டம் தானாக எந்தவொரு புலம்பெயர்ந்த இந்திய குடிமக்களாக உருவாக்காது - உள்துறை அமைச்சகம்

குடியுரிமை திருத்தச் சட்டம் தானாக எந்தவொரு புலம்பெயர்ந்த இந்திய குடிமக்களாக உருவாக்காது. அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும், மேலும் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் விதிகளின்படி தகுதிகள் இருக்கும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

17:29 (IST)16 Dec 2019

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 தேதிகளில்  நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

16:38 (IST)16 Dec 2019

டெல்லியில் இந்தியா கேட் முன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய ஜாமியா பல்கலை. மாணவர்கள்  மீது போலீசார் நடத்திய தடியடிக்கு கண்டனம் தெரிவித்து  மாணவர்களுக்கு ஆதரவாக டெல்லி இந்தியா கேட் முன்பு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அடையாள தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

16:05 (IST)16 Dec 2019

மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக, திமுக அவமதிப்பு வழக்கு

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இடஒதுக்கீடு முறையாகக் கடைபிடிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

15:49 (IST)16 Dec 2019

மெரினாவில் ரூ.27 கோடி செலவில் 900 வண்டிக்கடைகள்; சென்னை மாநகராட்சி நீதிமன்றத்தில் அறிக்கை

சென்னை மெரினா கடற்கரையில், ரூ.27 கோடி செலவில், 900 வண்டிக்கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மெரினாவில் 900 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

15:31 (IST)16 Dec 2019

உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: எம்எல்ஏ குல்தீப் செங்காரை குற்றவாளி என அறிவித்தது டெல்லி நீதிமன்றம்

உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெல்லி நீதிமன்றம் குல்தீப் செக்காரை இந்த வழக்கில் குற்றவாளி என்று அறிவித்துள்ளது. இவருக்கான தண்டனையை நீதிமன்றம் டிசம்பர் 19 ஆம் தேதி தெரிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

15:00 (IST)16 Dec 2019

ஜாமியா வளாகத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் மீது வழக்கு

மாணவர்கள் போராட்டத்தின் போது கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய இருப்பதாக ஜாமியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அறிவித்துள்ளார்.

15:00 (IST)16 Dec 2019

டெல்லியில் உடனே அமைதியை மீட்டெடுக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் போராட்டங்கள் காரணமாக அமைதி சீர்குலைந்துள்ளது. இதனை சரி செய்ய உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அரவிந்த் கூறியுள்ளார். மேலும் டெல்லியில் சட்ட ஒழுங்கு மோசமடைவதை எண்ணி அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

14:49 (IST)16 Dec 2019

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி

கொல்கத்தாவில் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பலரும் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அம்மாநில முதல்வர் தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது.

14:38 (IST)16 Dec 2019

குயின் இணையதள தொடர் தடை - 4 வாரங்களில் முடிவு எட்டப்படும்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தகரிக்கும் இணையதள தொடரான குயின்-க்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 4 வாரங்களில் இந்த தொடர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

14:33 (IST)16 Dec 2019

திமுக தலைவருடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் சந்திப்பு

14:26 (IST)16 Dec 2019

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறை துரதிர்ஷ்டமானது - மோடி

கடந்த சில நாட்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பல பொதுசொத்துகள் பாதிப்படைந்து வருகிறது.

12:03 (IST)16 Dec 2019

லக்னோவில் மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்திரப்பிரதேசம் லக்னோவில் மாணவர்கள் போராட்டம். காவல்துறையினர் மீது மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல்

11:35 (IST)16 Dec 2019

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் 18ம் தேதி விசாரணை

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் 18ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

11:25 (IST)16 Dec 2019

திமுக போராட்டம் - மு.க.ஸ்டாலின் கருத்து

திமுக சார்பில் நாளை நடைபெறும் போராட்டத்தில் மக்கள் மத்தியில் குடியுரிமை திருத்த சட்டத்தை அம்பலபடுத்துவோம் என்று கூறியுள்ளார் முக ஸ்டாலின். இலங்கையில் பவுத்த மதத்தினரால் தமிழ் இந்துக்களும், இஸ்லாமியர்களும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் குடியுரிமை சட்டத்தை திருத்த என்ன அவசியம் இப்போது என்றும் அவர் கேள்வி.

11:21 (IST)16 Dec 2019

ஜாமியா பல்கலைக்கழக போராட்டம் - நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை

பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. இது போன்ற போராட்டங்களை இந்திய அரசியல் சாசன அனுமதிக்கவில்லை. போராட்டங்களில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவு. மேலும் போராட்டங்களை நிறுத்தினால் மட்டுமே விசாரணை நடைபெறும் என்றும் அறிவிப்பு.

10:38 (IST)16 Dec 2019

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் போராட்டம்

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினர் இருவரும் கூட்டாக போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் பினராயி விஜயன், ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் பங்கேற்பு

10:37 (IST)16 Dec 2019

ஆர்.பி.ஐ நடவடிக்கைக்கு ராமதாஸ் கண்டனம்

அஞ்சலக சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று ஆர்.பி.ஐ வலியுறுத்தியிருப்பதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்.

10:33 (IST)16 Dec 2019

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளாது மக்கள் நீதி மய்யம். நாடு முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிராக பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

10:32 (IST)16 Dec 2019

38 பணிக்குழுக்கள் நியமனம்

உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுகவில் மாவட்டம் வாரியாக 38 பணிக்குழுக்கள் நியமனம். இந்த உத்தரவை ஓ.பி.எஸ் மற்ரும் ஈ.பி.எஸ் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

10:02 (IST)16 Dec 2019

சுபநிகழ்ச்சிகளுக்கு மாநகர பேருந்துகள் வாடகை

சென்னையின் எல்லைக்குள் நடைபெறும் வீட்டு விசேசங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கு பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

09:47 (IST)16 Dec 2019

ஜனவரி 5ம் தேதி முதல் ஜாமியா பல்கலைக்கழக மூடல்

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களுக்கும் மேலாக போராட்டம் செய்து வந்த நிலையில் பல்கலைக்கழகம் வருகின்ற ஜனவரி 5ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் வெளியேறி வருகின்றனர்.

09:45 (IST)16 Dec 2019

சென்னையில் மழை

சென்னை போரூர், விருகம்பாக்கம் ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு, ராயப்பேட்டை, ராயபுரம், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் லேசானது முதல் மிதமானது வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

09:30 (IST)16 Dec 2019

ஜார்கண்ட் மாநில தேர்தல் - 4ம் கட்டம்

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. இன்று 15 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 221 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஐந்தாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு வருகின்ற 20ம் தேதி நடத்தப்பட்டு, 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

09:24 (IST)16 Dec 2019

மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர் இருப்பு 93.4 டி.எம்.சியாகவும், நீர் வரத்து 4843 கனஅடியாகவும் உள்ளது. நீர் வெளியேற்றம் 4600 கன அடியாக உள்ளது.

09:24 (IST)16 Dec 2019

வெங்காய விலை உயர்வு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விலை ரூ.20 அதிகரித்து கிலோ ரூ.120க்கு விற்பனையாகிறது.

09:23 (IST)16 Dec 2019

மீண்டும் துவங்கியது மெட்ரோ ரயில் சேவை

டெல்லியில் ஜாமீயா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. திங்கள் கிழமை என்பதால் இன்று காலை மீண்டும் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது.

09:23 (IST)16 Dec 2019

உன்னாவ் வழக்கில் தீர்ப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் கடந்த 2017ம் ஆண்டு 18 வயது நிரம்பாத இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் ஷெனீகர் உள்பட 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் 2 வாரங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tamil Nadu news today updates : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
Jharkhand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment