உள்ளாட்சித் தேர்தல் புதிய அறிவிப்பாணை எப்போது? தலைமைச் செயலாளருடன் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

Petrol Diesel Price : சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.83 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.53 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

Tamil Nadu News today Live updates
Tamil Nadu News today Live updates

Tamil Nadu news today updates : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கவிருந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் முன்னர் அறிவித்திருந்தது. உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

நேற்று இவ்வழக்குகள் தொடர்பான விசாரனையின் போது, புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  இன்று நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

Live Blog

Tamil Nadu news today updates, Chennai rains, TN politics, local body elections : தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


21:30 (IST)06 Dec 2019

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – உள்துறை அமைச்சகம்

உள்துறை அமைச்சகம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், பாலியல் குற்றங்களை கடுமையான முறையில் கையாள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

20:08 (IST)06 Dec 2019

தேர்தலை பொறுத்தவரை சூப்பர் ஃபாஸ்ட் கட்சி என்றால், அது அதிமுகதான் – ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்: தேர்தலை பொறுத்தவரை சூப்பர் ஃபாஸ்ட் கட்சி என்றால், அது அதிமுகதான். எப்பாடுபட்டாவது உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது திமுகவின் கொள்கை என்று கூறினார்.

19:29 (IST)06 Dec 2019

சுற்றுச்சூழல் மாசு பற்றி மக்கள் மத்தியில் அச்ச மனநிலையை உருவாக்கக் கூடாது – பிரகாஷ் ஜவடேகர்

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்: சுற்றுச்சூழல் மாசுப்பாட்டால் யாரும் உயிரிழந்ததாக இதுவரை இந்தியாவில் இருந்து எந்த ஒரு ஆய்வும் வெளியாகவில்லை. மக்கள் மத்தியில் பயமான மனநிலையை உருவாக்கக் கூடாது என்று கூறினார்.

18:27 (IST)06 Dec 2019

சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு; பாதுகாப்புக்காக விரைவில் சிறப்பு எண் – கமிஷனர்

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் குறைவு. பெண்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளும் சென்னையில் வழங்கப்படுகின்றன. பெண்களின் பாதுகாப்புக்காக விரைவில் சிறப்பு தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

18:19 (IST)06 Dec 2019

திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு துணிப்பை, சணல் பை கொண்டுவந்தால் பரிசு

திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு துணிப்பை, சணல் பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

18:18 (IST)06 Dec 2019

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணி கட்சிகள் பாஜக, தேமுதிக, பாமக, தமாகா உடன் ஆலோசனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளான பாஜக, தேமுதிக, பாமக, தாமக ஆகிய கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

18:08 (IST)06 Dec 2019

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தலைமைச் செயலருடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக தலைமைச் செயலருடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

17:55 (IST)06 Dec 2019

நித்தியானந்தா தீவு எதையும் வாங்கவில்லை – ஈகுவடார் அரசு மறுப்பு

குழந்தைகள் கடத்தல் மற்றும் தவறாக அடைத்துவைத்தல் வழக்கில் குஜராத் போலீசாரால் தேடப்பட்டுவரும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா ஈகுவடார் நாட்டில் ஒரு தீவை வாங்கி தனி நாடு நிறுவியுள்ளதாக செய்தி வெளியானது. இந்த நிலையில், நித்தியானந்தா தீவு எதையும் வாங்கவில்லை என்று ஈகுவடார் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

17:29 (IST)06 Dec 2019

நித்யானந்தா வெளிநாட்டுக்கு சென்றுவிட்டாரா என்பதை எங்களால் கூற முடியாது – வெளியுறவுத்துறை

வெளியுறவுத்துறை: நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கோரிய புதிய விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது. நித்யானந்தா வெளிநாட்டுக்கு சென்றுவிட்டாரா என்பதை எங்களால் கூற முடியாது என்று தெரிவித்துள்ளது.

17:24 (IST)06 Dec 2019

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் உள்ளாட்சி தொகுதி பங்கீடு பற்றியும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

16:59 (IST)06 Dec 2019

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாமக, தேமுதிக, தமாகா நிர்வாகிகள் வந்துள்ளனர்.

16:56 (IST)06 Dec 2019

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை பொன் மாணிக்கவேல் தமிழக அரசிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலின் பணிக்காலம் நிறைவடைந்ததால், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு டி.எஸ். அன்பு புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16:02 (IST)06 Dec 2019

போக்சோ குற்றவாளிகள் கருணை மனு தர அனுமதிக்கக் கூடாது –  குடியரசுத் தலைவர்

ராஜஸ்தான் சிரோஹியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்நாத் கோவிந்த்: பெண்கள் பாதுகாப்பு என்பது ஒரு தீவிரமான பிரச்னை. பெண்கள் மீதான தாக்குதல் நாட்டின் மனசாட்சியை உலுக்குகிறது. கருணை மனுக்களை நாடாளுமன்றமே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்க கூடாது என்று கூறினார்.

15:28 (IST)06 Dec 2019

மத்திய தொகுப்பில் இருந்து 500 டன் வெங்காயம் 2 நாளில் வந்துவிடும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ: மத்திய தொகுப்பில் இருந்து 500 டன் வெங்காயம் 2 நாளில் வந்துவிடும். அதனால், வெங்காயம் பற்றாக்குறை ஜனவரி மாதத்துக்குள் முடிந்துவிடும் என்று கூறினார்.

14:48 (IST)06 Dec 2019

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை திரும்பப் பெற்றது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
தேர்தல் மறுவரையறை வழக்கில் புதிய மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால், மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் அட்டவணை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து 9 புதிய மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களுக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்ற புதிய தேர்தல் அட்டவணைக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு.

14:12 (IST)06 Dec 2019

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்

உள்துறை அமைச்சகத்தில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான விஷயங்களுக்கு பாதுகாப்பு ஆலோசகராக முன்னால் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்.

1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் ஓய்வுபெற்ற பிறகு மத்திய அரசின் பல உயரிய பதவிகளில் பணிபுரிந்துள்ளார். ஜம்மு காஷ்மீ ஆளுநரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். ஜம்மு காஷ்மீ இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு இவருடைய பணி நிறைவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், நக்சலைட், மோவோயிஸ்ட் பயங்கரவாத பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்க விஜயகுமார் உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

13:49 (IST)06 Dec 2019

தேர்தலுக்கு திமுக எப்போதும் தயார்; அதிமுகதான் பயப்படுகிறது – மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு மூல்ம் தமிழ்நாட்டின் 9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியுள்ளது. மறுவரையறை செய்வதற்கு 4 மாதங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். திமுக எப்போதும் தேர்தலுக்கு தயாராக இருக்கிறது. அதிமுகதான் தேர்தல்களுக்கு பயப்படுகிறது என்று கூறினார்.

13:40 (IST)06 Dec 2019

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்காக நாங்கள் நீதிமன்றத்தை நாடவில்லை – மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்காக நாங்கள் ஒருபோதும் நீதிமன்றத்தை நாடவில்லை; தொகுதி மறுவரையறை, இடஒதுக்கீடு முறையாக இல்லாததால்தான் திமுக நீதிமன்றம் சென்றது என்று கூறினார்.

12:43 (IST)06 Dec 2019

உ.பி பாலியல் வன்கொடுமை

உன்னோவாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாச கருவிகள் உதவியுடன் மாணவிக்கு சிகிச்சை நடைபெற்றுவருவதாக மருத்துவர்கள் தகவல்.

12:35 (IST)06 Dec 2019

பேருந்து விபத்து

நெல்லையை அடுத்த சேரன்மகாதேவி அருகே சங்கன்திரடு என்ற இடத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு, 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

12:35 (IST)06 Dec 2019

பேருந்து விபத்து

நெல்லையை அடுத்த சேரன்மகாதேவி அருகே சங்கன்திரடு என்ற இடத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு, 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

12:23 (IST)06 Dec 2019

தீர்ப்பை வரவேற்கிறேன் – மு.க.ஸ்டாலின்

ஜனநாயகத்தை காக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது எனவும்,  உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசு முறையாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

12:05 (IST)06 Dec 2019

திமுக கூட்டம்

நாளை மறுநாள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என  தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். வரும் 8ஆம் தேதி மாலை 5 மணிக்கு தியாகராய நகர் தனியார் விடுதியில் நடைபெறும் கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் கலந்துக் கொள்கிறார்கள். 

11:42 (IST)06 Dec 2019

மரங்களை வெட்ட தமிழக அரசு மனு

முல்லை பெரியாறின் பேபி அணை பகுதியில் 23 மரங்களை வெட்ட அனுமதி கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அணையை வலுப்படுத்த அந்த பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் மரங்களை மட்டும் வெட்ட அனுமதிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

11:23 (IST)06 Dec 2019

உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பாணை மாலை வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளி வரும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில், தேர்தல் ஆணையர் பழனிசாமி இவ்வாறு கூறியுள்ளார். 

10:50 (IST)06 Dec 2019

உள்ளாட்சித் தேர்தல் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

10:37 (IST)06 Dec 2019

ஜி.வி.பிரகாஷ் ட்வீட்

பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளுக்கான நியாயமான தண்டனையாகவே நான் பார்க்கிறேன் என ஹைதராபாத் என்கவுண்டரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

10:15 (IST)06 Dec 2019

பாத்திமா தற்கொலையில் 7 மாணவர்களுக்கும் தொடர்பு

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக அவரது தந்தை புகார் கூறியுள்ளார். டெல்லியில் அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், விசாரணை சரியான முறையில் நடக்கவேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார். 

09:55 (IST)06 Dec 2019

நிர்பயாவின் தாயார் கருத்து

பெண் மருத்துவர் கொலையில் 4 பேரையும் போலீசார் சுட்டுக்கொன்றது மகிழ்ச்சியளிக்கிறது என நிர்பயாவின் தாயார் கருத்துத் தெரிவித்துள்ளார். 

09:32 (IST)06 Dec 2019

ஹைதராபாத் பாலியல் வழக்கு

ஹைதராபாத் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் தெலுங்கானா போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். அந்த 4 பேரையும் சுட்டுக் கொன்றதால் என் மகளின் ஆத்மா சாந்தியடையும் என பெண் மருத்துவரின் தந்தை கூறியுள்ளார். மேலும் படிக்க் பெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை

09:15 (IST)06 Dec 2019

உங்களை சந்திக்க வருகிறேன் – ப.சிதம்பரம்

மக்களின் அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் வருவதாக ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

09:12 (IST)06 Dec 2019

தொடர்ந்து உயரும் வெங்காய விலை

சாம்பார் வெங்காயம் என அழைக்கப்படும் சின்ன வெங்காயம்,  கிலோ 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெங்காய விலையை கேட்டாலே கண்களில் கண்ணீர் வருவதாக பெண்கள் கவலைப் படுகின்றனர். உயர்ந்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தீர்மானத்தை அனுமதித்தார், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி. அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு. நீண்ட நாட்களாக எம்பிக்கள் குழுவில் விசாரணை நடைபெற்ற நிலையில் சபாநாயகர் அறிவிப்பு. தன் மீதான தீர்மானத்தை செனட் சபையில் எதிர் கொள்வதாக டிரம்ப் அறிவிப்பு.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news today live updates local body election onion price hyderabad encounter

Next Story
ஆபாச படங்களை டவுன்லோட் செய்தவர்களைப் பிடித்து தண்டனை வாங்கித் தருவோம்; கூடுதல் டிஜிபி உறுதிTamilnadu police warned to porno video viewer, ஆபாச படங்கள் டவுன்லோட் செய்பவர்களுக்கு எச்சரிக்கை, தமிழக காவல்துறை, police warned porno downloader, ban porno, Tamilnadu police
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com