Tamil Nadu breaking news today updates Tamil Nadu weather : தமிழகத்தில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய இதன் வாக்கு எண்ணிக்கை விடிய விடிய தொடர்ந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில், காலம் தாழ்த்துவதாக திமுக தரப்பில் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியத்தில், முக்கிய பதவியாக கருதப்படும், உதவி பொறியாளர் உட்பட,பல ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், மின் உற்பத்தி, மின் வினியோக பணிகள் பாதிக்கின்றன. இதையடுத்து, மின் வாரியத்தில், 2019ல், 400 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, தமிழக அரசு, அதே ஆண்டு, ஜூலையில் அறிவித்தது. இதற்கு, வாரிய இயக்குனர்கள் குழு, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. மேலும், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும், ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில், 27 மாவட்டங்களில், டிசம்பரில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்ததால், உதவி பொறியாளர் பதவி தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதனால் விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை கண்ணனின் கைதை கண்டித்து முதலமைச்சரை இழிவுப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவிட்ட, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த சிராஜ்தீன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 8-ம் தேதி தேசிய அளவிலான வேலைநிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில், அன்று ரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அரையாண்டு தேர்வு முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரையாண்டுத் தேர்வு முடிந்து ஜனவரி 6 -ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சிவராசு. இந்த உள்ளூர் விடுமுறை தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தந்ததால் அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவுதந்ததால்தான் அதிமுகவினால் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை என்று கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் </p
திருமாவளவன் போட்டியிட்ட காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் ஜன.20ம் தேதி நேரில் ஆஜராக தொகுதி தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அதிமுக எம்.எல்.ஏ.முருகுமாறனின் வெற்றியை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு.
எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும், குடியுரிமை சட்டத்தில் பாஜக ஒரு அங்குலம் கூட பின்வாங்காது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
குளிர்சாதன பேருந்துகள்,தொலைதூரம் மற்றும் இடைநில்லா பேருந்துகளுக்கு முன்பதிவு மையங்கள் மற்றும் இணையதள முன்பதிவு மையங்கள் கூடுதலாக 193 வழித்தடங்களில் தொடங்கப்பட்டுள்ளதாக, விழுப்புரம் அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு. தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பத்மாவதி என்ற பெண் உருளைக் கிழங்கு பஜ்ஜி சாப்பிடும் போது மூச்சுக் குழலில் சிக்கி, மூச்சு திணறி இறந்துள்ளார். இந்த சம்பவம் பஜ்ஜி பிரியர்களிடையே ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில்,107வது இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி புதிய ஆண்டின் தொடக்கத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
தண்ணீர், எரிசக்தி, உணவு மற்றும் தாதுக்களை நாம் பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும் எனவும் பல திட்டங்கள் மூலம் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி வணிகத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத ஏற்றத்தை கடந்த 5 ஆண்டுகளில் பெற்றுள்ளதாகவும் மோடி அப்போது தெரிவித்தார். புதிய கண்டுபிடிப்பில், இந்தியாவின் தரவரிசை குறியீடென் முன்னேறியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக உள்ளது எனவும் மோடி கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்ததால்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட தனது மகள் மற்றும் மகன் தோல்வியை சந்தித்தனர் என அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில், கிளரிக்கல் எனப்படும் ஜூனியர் அசோசியேட்ஸ்-2020 என்ற பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதையடுத்து, தமிழகத்தின் ’CM விஜய்’ என்று விஜய் ரசிகர்கள் சிலர் ஒட்டியுள்ள போஸ்டர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. CM of Tamilnadu’ என குறிப்பிட்டுள்ள அவர்கள், CM என்றால் Collection Master என்று விளக்கமும் கொடுத்துள்ளனர்.
ஏப்ரல் மாதம் நடைபெறும் நேரடி 8-ம் வகுப்பு தேர்வுக்கு, வரும் 27 முதல் 31 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரொக்கம் 1,000 ரூபாய் ரேஷன் கடைகளில் 9ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. விடப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 1000 ரொக்க பணம் அதில் அடங்கும்
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பப்படும் குயின் இணையதள தொடருக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
107வது இந்திய அறிவியல் மாநாட்டை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அறிவியல் தொழில்நுட்பம், ஊரக மேம்பாடு என்ற மையக்கருத்தை முன்வைத்து இந்த ஆண்டு அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் சர்வதேச புகழ் பெற்ற விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் வருகைதர உள்ளனர். அறிவியல், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மத்திய மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இதுவரை இல்லாத உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.456 விலை உயர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.30,344க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது பாஜக-வினர் புகார் அளித்தனர். அவர் பெரம்பலூரில் விடுதியில் தங்கியிருப்பது அறிந்து, விடுதியின் பின்பக்க வாசல் வழியாக ஒரு காரில் ஏற்றி நெல்லை கண்ணனை ரகசிய இடத்துக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் போலீசார். இதுகுறித்து தகவலறிந்த பா.ஜ.க-வினர் அந்த காரை விரட்டிச் சென்று தாக்கினர். போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் நபரை அழைத்துச் செல்லும் வாகனத்தை பா.ஜ.க-வினர் தாக்குதல் நடத்துமளவுக்குப் பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்ததாகக் கூறி காவல்துறையிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாக்தாக் விமான நிலையத்தில் நடந்த ஏவுகணை தாக்குதலில் ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவத்தளபதி காசிம் சொலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணைத்தலைவர் அபு மஹாதியும் ஏவுகணை தாக்குதலில் இறந்துள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உத்தரவின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் உத்தரவின்படி ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டது என பென்டகன் தெரிவித்துள்ளது. ஈராக்கில் தாக்குதல் நடத்திய பின் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க கொடியை பதிவிட்டுள்ளார் டிரம்ப்.