Tamil Nadu news updates : ஐ.என்.எக்ஸ்., மீடியா' முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்ட, 15 பேர் மீது, டில்லி நீதிமன்றத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதியான எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கும்படி, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பரிந்துரை செய்துள்ளார். தலைமை நீதிபதியின் இந்த பரிந்துரையை, சட்ட அமைச்சகம், பிரதமரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும். இதைத்தொடர்ந்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக, பிரதமர், அதை அனுப்பி வைப்பார். ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும், புதிய தலைமை நீதிபதியின் பதவியேற்பு நடக்கும்.
கோவை, சேலம் மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு..
களைகட்டுது மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பிற்கு பின் அங்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வரத் துவங்கினர். இந்நிலையில் தற்போது அங்கு வெளிநாட்டு பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வரத் துவங்கி உள்ளனர். மாமல்லபுரத்தில் கட்டப் பட்டுள்ள, கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு, பல்லவர் கால சிற்பங்களை காண, பயணியர் வருகின்றனர்.இங்குள்ள கடற்கரைக்கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடைவரைகளை, உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர் ரசிக்கின்றனர்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
புரோ கபடி லீக் தொடர் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
39-34 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி புரோ கபடி லீக் தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் வாரியர்ஸ் அணி.
கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் திருப்பூர் அணைப்பாளையத்தில் உள்ள தரைப்பாலம் நேற்றிரவு நீரில் மூழ்கியது. நீர்வரத்து குறைந்து காலை போக்குவரத்து தொடங்கினாலும், மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால் 2-வது முறையாக தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால், வாகன ஓட்டிகள் 14 கிலோமீட்டர் தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 7ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்தது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கள்ளிப்பட்டியில் உள்ள சஞ்சீவிராயன் தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் வளையபாளையம், எரங்காட்டூர், கரும்பாறை உள்பட 5 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் தொடர்பாக ராமதாஸ் கேட்கும் நிலப்பதிவு மற்றும் மூல ஆதாரங்களை அளிக்க தயார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று காலை முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடத்தில் இதற்கு முன்பு ஆதிதிராவிடர் மாணவர்களின் விடுதி இருந்ததாக பாமக தலைவர் ராமதாஸ் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.
விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்தை பார்த்த அவரின் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்தில் கரகோஷங்களை எழுப்பினர்.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைவடையவுள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நாளை அனுப்பிவைக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
Unbreakable
/ʌnˈbreɪkəb(ə)l/The bond between @ImRo45 & 💯s! 🙌
Can the Hitman convert this into an even bigger one?#INDvSA
🏏: 3rd Test
📺: Star Sports & Hotstar pic.twitter.com/dqNxTRbB8D— Star Sports (@StarSportsIndia) October 19, 2019
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 6வது சதத்தை விளாசினார் ரோகித். அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை மிதமாக பெய்துள்ளது என்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், குமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் மூல ஆவணங்கள் எங்கே? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க, 1985ஆம் ஆண்டு வாங்கிய பட்டாவை ஸ்டாலின் ஆதாரமாக காட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2.முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?
— Dr S RAMADOSS (@drramadoss) October 19, 2019
மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று(19ம் தேதி)முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடந்த நிலையில் ரூ.40 கட்டண வரம்பில் வெண்ணெய் உருண்டை பாறையும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ஆளுங்கட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என உறுதியளித்தனர், ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை என்று விக்கிரவாண்டி ஈச்சங்குப்பம் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
இந்தி திணிப்புக்கு அ.தி.மு.க ஒத்துழைப்பதாக தி.மு.க பொய் பிரசாரம் செய்து வீணான குழப்பத்தை ஏற்படுத்துவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் முண்டியம்பாக்கம் பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாசன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, எதிர்க்கட்சியான தி.மு.க தமிழக மக்களுக்கு எதிரியாக இருப்பதாக விமர்சித்தார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளில் களைகட்டிய இடைத்தேர்தல் பிரசாரம், இன்று(அக்.,19) முடிகிறது. யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்க, வரும், 21ல், இரு தொகுதி மக்களும் வாக்கு அளிக்க உள்ளனர்; 24ல் முடிவு தெரியும்.
தமிழகத்தில், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 21ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதியில், தி.மு.க., கூட்டணி கட்சியான, காங்கிரஸ் வேட்பாளர் மனோகரன், அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் உட்பட, 23 பேர் களத்தில் உள்ளனர்.
தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், 5 நாள்கள் ஆன்மிக பயணமாக ரஜினிகாந்த் கடந்த 13 ஆம் தேதி இமயமலை சென்றார். ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அவர் வழிபாடு செய்தார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவு 12 மணி அளவில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இமயமலை பயணம் நன்றாக இருந்ததாக கூறினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபகாலமாக பலரையும் வம்புக்கு இழுத்து வருகிறார். அந்த வகையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகர்கள் அஜித், விஜய் ரசிகர்களையும் சீண்டியுள்ளார். சீமானின் இந்த சர்ச்சை பேச்சு, அஜித், விஜய் ரசிகர்களிடம் சமூக உணர்வு இல்லாதது போலவும், அவர்கள் சமூக பிரச்னைகள் கண்டுக்கொள்ளாமல் இருப்பது போலவும் இவருக்கு மட்டுமே அவை இருப்பது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. இதனால் ரசிகர்களின் 'சிறப்பு அர்ச்சனையில்' சீமான் சிக்கியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights