நாளுக்கு நாள் சி.ஏ.ஏ, என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி குறித்து பல்வேறு தலைவர்களின் கருத்துகள் வெளி வந்த வண்ணம் உள்ளது. சி.ஏ.ஏவுக்கு ஆதரவு தெரிவித்த பிகாரின் நிதிஷ் குமார் கட்சி அம்மாநிலத்தின் என்.ஆர்.சியை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்பதை திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் என்.பி.ஆரின் புதிய படிவங்கள் மற்றும் கேள்விகள் பல்வேறு குழப்பமான சூழலை தான் உருவாக்கும் என்று அறிவித்துள்ளார் நிதிஷ் குமார்.
மேலும் இங்கு வாழும் பெரும்பாலான மக்களுக்கு அவர்கள் பெற்றோர்களின் பிறந்த தேதி மற்றும் பிறப்பிடங்கள் குறித்த முழுமையான தகவல்களும் ஆதாரங்களும் இல்லை. இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் அறிவித்தார். ஒடிசா மாநிலத்தில் என்.பி.ஆர் படிவத்தில் பெற்றோர்கள் குறித்த தகவல்களை நாங்கள் மக்களிடம் இருந்து பெற மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது பிஜூ ஜனதா தளம் கட்சி.
ஓடே கிராமத்தில் அரங்கேறிய இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளிகள் இடைக்கால ஜாமினில் வெளிவந்துள்ளனர். இந்தூர் ஜெயில் வைக்கப்பட்டுள்ள 6 பேருக்கும், மத்திய பிரதேசத்தின் ஜபால்பூரில் வைக்கப்படுள்ள 8 பேருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மார்ச் மாதம் 1ம் தேதி குஜராத்தின் ஓடே கிராமத்தில் உள்ள இஸ்லாமிய குடியிருப்பு ஒன்றில் உள்ள 23 பேர் தீயிட்டு கொளுத்தப்பட்ட வழக்கில் இந்த 14 நபர்களும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் படபிடிப்பில் பங்கேற்ற ரஜினியின் காலில் முட்களால் சிறிய காயம் ஏற்பட்டதை தொடர்ந்து படபிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. முதற்கட்ட படபிடிப்பினை முடித்துவிட்டு சென்னை வந்த ரஜினி செய்தியாளர்களிடம் கூறியது என்ன? முழுமையான தகவல்களை இங்கே படிக்கவும்.
வுஹான் வைரஸ்
சீனாவில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் வுஹான் பகுதியில் வெகு தீவிரமாக பரவி வருகிறது வுஹான் வைரஸ். அங்கு வாழும் இந்தியர்கள் யாருக்கும் இது வரையில் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று அறிவித்துள்ளது மத்திய சுகாதாரத்துறை. அங்கு வாழும் இந்தியர்களை பத்திரமாக இந்தியா மீட்டு வருவதற்காக மத்திய அரசு திட்டம் ஒன்றை கொண்டுள்ளது. ஏர் இந்தியாவில் உள்ள போயிங் 737 விமானத்தின் மூலமாக சீனா சென்று அங்குள்ள மக்களை அழைத்து வர திட்டம் செய்துள்ளது. 423 இருப்பிடங்களை கொண்ட டபுள் டெக்கர் விமானமாகும் அது. மும்பையில் இருந்து வுஹான் சென்று அங்கு இந்தியர்களை ஏற்றிக் கொண்டு டெல்லியில் தரையிறங்க திட்டம். அங்கு அம்மக்கள் சில நாட்களுக்கு மருத்து கண்காணிப்பில் வைக்கப்பட்ட பிறகு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
Web Title:Tamil nadu news today live updates npr caa nrc wuhan virus man vs wild
விசாரணை கைதியாக சிறையில் இருக்கும் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்ய மணமகள் சம்மதம் தெரிவித்ததால் அவருக்கு உனடியாக ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், திருமணம் வெங்கடேஷின் வாழ்க்கையில் மாற்றத்தை அளிக்கும் என நம்புகிறேன் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணைக்கு தடை கோரி வழக்கறிஞர் லூயிஸ் தாக்கல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவில் 5,8-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வுக்கான அரசாணையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் கோரியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் தொழில் புரிவோர் தொழிலுக்கேற்ப உரிமம் பெற வேண்டியது அவசியம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. உரிமம் இன்றி தொழில் புரிபவர்கள் மீது நடவடிக்கை என தெரிவித்துள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரி தமது தலைமையில் போராட்டம் நடைபெறும். ஒவ்வொரு சாதிக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூகநீதிக்கு வழிவகுக்கும். இதனை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 6-ம் தேதி சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதிமுக தொழிற்சங்கப் பேரவைச் செயலாளராக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் நியமனம் செய்துள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மா கருணை மனு தாக்கல் செய்துள்ளார். நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிடுவதாக உத்தரவிட்ட நிலையில் வினய் சர்மா, குடியரசு தலைவரிடம் மனு அளித்துள்ளதாக- வழக்கறிஞர் ஏ.பி.சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான முகேஷ் அளித்த கருணை மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் வினய் சர்மா கருணை மனு அளித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: குரூப்-4 தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாநிலம் முழுவதும் நடைபெறும் கைதுகளை பார்க்கும்போது, ஒரு மையத்தில் நடைபெற்ற முறைகேடாக தெரியவில்லை. முறைகேடுகளுக்கு டிஎன்பிஎஸ்சி கிளார்க்தான் காரணம் என்பது, திமிங்கலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளைப் பிடிக்கும் முயற்சியாக உள்ளது. கிளார்க் துணையுடன் முறைகேடுகள் செய்துவிட முடியும் என்றால், டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள், செயலாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எதற்கு? என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில், கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறு தேர்தலுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றதால், மறுதேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரில் சித்தாண்டி என்பவரின் உறவினர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் சித்தாண்டியின் தம்பி வேல்முருகனிடமும் விசாரணை நடைபெறுகிறது.
திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு என்பவர் சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மிட்டாய் பாபு மற்றும் சங்கர் ஆகியோரை தனிப்படை போலீசார் திருச்சி அழைத்துச் செல்கின்றனர்.
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி விஜய் சவுக் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்பு
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி விஜய் சவுக் பகுதியில் நடைபெற்று வருகிறது.
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தவேண்டும் என்ற வழக்கில், குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்திற்கு இணையான முக்கியத்தும் தமிழ் மொழிக்கும் கொடுக்கப்படும் என்று அறநிலையத் துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டறிப்பட்ட விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் விசாரணை நடத்துவதாதக டிஎன்பிஎஸ்சி தகவல் தேரிவித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குறிய வகையில் பேசியதன் காரணமாக பாஜகவின் இணை அமைச்சரும், அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான அனுராக் தாக்கூர் பெயரை பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோவில் இது வரை 6.08 கோடி நபர்கள் பயணம். 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி முதல் 31 டிசம்பர் 2018ம் ஆண்டு வரையில் சுமார் 2,80,52,357 நபர்கள் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
முறைகேடு புகார் வந்தவுடன் தாமதமின்றி விசாரணை நடத்தப்பட்டது என குரூப் 4 முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு. குறைகல் ஏதும் இல்லாமல் வருங்காலத்தில் தேர்வுகள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார் அமைச்சர். மேலும் தவறுகள் செய்தவர்கள் மீது முறையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எங்கோ நடக்கும் முறைக்கேட்டால் ஒட்டுமொத்தமாக குறை கூறக்கூடாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
பிரபல பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கணையான சாய்னா நெவால் பாஜகவில் இணைய இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது..
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது. டாஸை வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இது தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற
ஆர்.கே. நகர் பணப்படுவாடா வழக்கு - சிபிஐ விசாரணை கோரும் வகையில், மனுவில் திருத்தம் செய்யலாம் என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருச்செந்தூரில் கட்டப்பட்டு வரும் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை மேற்பார்வையிட்டு வருகிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. பிப்ரவரி 22ம் தேதி மணிமண்டபம் முதல்வரால் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலைய அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசு பணியாளர் நிர்வாகத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 750 கன அடி தண்ணீர் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை இன்று ரூ. 296 குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ. 37 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ. 30,704-ஐ எட்டியுள்ளது. இரண்டாவது நாளாக இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கினை தள்ளுபடி செய்து அறிவித்தது உச்ச நீதிமன்றம்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பதவி வகித்து வந்தவர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்கலா. தற்போது அவர் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி ஏற்க உள்ளார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் தனியார் பள்ளி வாகனம் ஒன்று மோதி 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக, நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது
கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானை திரும்பப் பெற வேண்டும் என்று கேரள பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். சி.ஏ.ஏவுக்கு எதிரான வாசகங்களை தன்னுடைய உரையில் வாசிக்க மாட்டேன் என்று கூறியதால் எதிப்பு தெரிவித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி அமளியில் ஈடுபட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.41அடியாக உள்ளது. நீர் இருப்பு - 30.6டிஎம்சியாகவும், நீர்வரத்து - 2123கனஅடியாகவும் உள்ளது. நீர் வெளியேற்றம் 150கனஅடியாக உள்ளது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் லிட்டர் ரூ.76.44-க்கும், டீசல் லிட்டர் ரூ.70.33-க்கும் விற்பனை.
மதுரை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பயணிகளிடம் சோதனை செய்வதற்காக மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
8ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தினமும் தேர்வுகளும் நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் பல்வேறு குழப்ப நிலைக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளனர் மாணவர்கள்