Tamil Nadu news today live updates: இன்று இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை அரையிறுதி போட்டி நடக்கவிருக்கிறது. இதில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பைப் பெறும்.
2011-ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது தோனியின் தலைமையிலான இந்திய அணி, மாபெரும் வெற்றிப் பெற்று கோப்பையைத் தட்டியது. ’கிரிக்கெட் கடவுள்’ என்றழைக்கப்படும், சச்சினுக்கு அந்த கோப்பையை சமர்ப்பிப்பதாக இந்திய அணி தெரிவித்தது. அதன் பிறகு சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் நடந்துக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு தோனி தனது ஓய்வை அறிவிக்க இருக்கிறார் என்று கூறப்படும் நிலையில், இந்த முறை உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்கிறார்கள் ரசிகர்கள்.
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, Politics, Sports, World Cup 2019, train services and airlines: தமிழகத்தின் முக்கிய செய்திகள் அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சிபிசிஐடி போலீசார். இந்நிலையில் 24மணி நேரத்திற்குள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வைகோ வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே தேசத் துரோக வழக்கில் அவருக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது மனு ஏற்கப்படுமா என்ற சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது, வைகோவின் மனு ஏற்கப்பட்டது. இதுதொடர்பாக, சுயேட்சைகள் மற்றும் எந்த அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தமது வேட்புமனு ஏற்கப்படும் என்ற நம்பிக்கை இருந்ததாக தெரிவித்தார்.
மதுரை சிறையில் இருக்கும் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தனுக்கு ஜாமீன் வழங்கி திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது. நீதிமன்றத்தை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நந்தினி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள தகவல் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முகிலன் எழும்பூர் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படுகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கரூர் பெண் அளித்த பாலியல் புகாரில் கைதான முகிலனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது சிபிசிஐடி.
தமிழக அரசு 2006 ஆம் ஆண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இன்று நடைப்பெற்றது.சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நடைபெற்று வரும் அந்த வழக்கு விசாரணைக்காக, வைகோ நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, விசாரணையை ஜூலை 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
முதல்-அமைச்சராக இருப்பவர் தனக்கு வரும் பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் பரிசு தொகையை தனது சொந்த வங்கி கணக்கில் ஜெயலலிதா டெபாசிட் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 23 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் வழக்கில் இருந்து செங்கோட்டையனை விடுவித்து உத்தரவிட்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் விவாதங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள Tamil Nadu assembly live today updates : 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் – முதல்வர் பழனிசாமி
மாநிலங்களவை உறுப்பினருக்கு வைகோவின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ. அப்போது பேசிய அவர், “இந்தியா சுதந்திரம் பெற்ற உடன், தேச துரோக வழக்கில் ஒருவர் தண்டனை பெற்றார் என்றால் அது நான் தான். மத்திய அமைச்சர் பதவி, 2 முறை தேடி வந்தும் அதை மறுத்தவன் நான். என் தொண்டர்கள் மட்டுமே எனக்கு உயிர், எனக்கு பிடித்த இடம் தாயகம். நான் மாநிலங்களவை உறுப்பினராவதாக இருந்தால் தான் மதிமுக-வுக்கு சீட் ஒதுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்பே கூறியிருந்தார். இது ஒட்டு மொத்த (மதிமுக கட்சி)குடும்பத்தின் முடிவு. எனது குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக கட்சியில் இருக்கிறார்கள். ஆனால் யாரும் பதவிக்கு வர மாட்டார்கள். தேவையில்லாமல் சில பத்திரிக்கைகள் அவதூறு பரப்புகின்றன. வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்துக்காக எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும்” என்றார்.
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான, அத்தனை வேலைகளையும் முடிவுற்ற நிலையில் இன்று இதற்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. மேலும் படிக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர்... இன்று சோதனை ஓட்டம்...
தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று ( ஜூலை 8ம் தேதி) முடிவடைந்தது. இன்று ( 9ம் தேதி), வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. மேலும் படிக்க மாநிலங்களவை தேர்தல் : இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை - வைகோவின் நிலை என்ன?
பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பும,. 5 கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய ஐந்து கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக, திக, விசிக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட 16 கட்சிகள் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights