scorecardresearch

புழல் சிறையில் சரவண பவன் ராஜகோபால்: இன்றைய ஹைலைட் செய்திகள்

தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள் அனைத்தையும் ஐ.இ தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

rajagopal saravana bhavan, rajagopal saravana bhavan hotel rajagopal annachi, hotel saravana bhavan, rajagopal saravana bhavan in jail. jeevajothi, prince santhakumar, chennai high court, sentence, சரவண பவன், சரவண பவன் ஹோட்டல், சரவண பவன் ராஜகோபால், ஜீவஜோதி, பிரின்ஸ் சாந்தகுமார், சென்னை உயர்நீதிமன்றம், தண்டனை

Tamil Nadu news today live updates: இன்று இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை அரையிறுதி போட்டி நடக்கவிருக்கிறது. இதில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பைப் பெறும்.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது தோனியின் தலைமையிலான இந்திய அணி, மாபெரும் வெற்றிப் பெற்று கோப்பையைத் தட்டியது. ’கிரிக்கெட் கடவுள்’ என்றழைக்கப்படும், சச்சினுக்கு அந்த கோப்பையை சமர்ப்பிப்பதாக இந்திய அணி தெரிவித்தது. அதன் பிறகு சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் நடந்துக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு தோனி தனது ஓய்வை அறிவிக்க இருக்கிறார் என்று கூறப்படும் நிலையில், இந்த முறை உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்கிறார்கள் ரசிகர்கள்.

India vs New Zealand Match Live Streaming: இந்தியா – நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, Politics, Sports, World Cup 2019, train services and airlines: தமிழகத்தின் முக்கிய செய்திகள் அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.














18:24 (IST)09 Jul 2019





















144 தடை!

அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவையொட்டி தூத்துக்குடியில் நாளை மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு  பிற்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இந்த உத்தரவை பிற்பித்துள்ளார். 

17:28 (IST)09 Jul 2019





















புழல் ஜெயிலில் ராஜகோபால்!

சாந்தகுமார் கொலை வழக்கில் ஸ்ட்ரெச்சரில் வந்து ஆஜரான ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க  சென்னை குற்றவியல் நீதிமன்றம்  உத்தரவு பிற்பித்துள்ளது.   அதே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் ஆம்புலன்சில் வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

16:56 (IST)09 Jul 2019





















முதல்வர் குமாரசாமி முடிவு!

தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் நீர் திறக்க கர்நாடகா முதல்வர் குமாரசாமி முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியாக நீர் திறக்க முதல்வர் குமாரசாமி  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

16:29 (IST)09 Jul 2019





















மாநிலங்களவை தேர்தல்!

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கு 7 பேரின் மனுக்கள் ஏற்க்கப்பட்டன. சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன  வைகோ மனு ஏற்கப்பட்டதால் என்.ஆர்.இளங்கோ 11 ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுகிறார். 

16:15 (IST)09 Jul 2019





















சரணடைந்தார் சரவணபவன் ராஜகோபால்!

சாந்தகுமார் கொலை வழக்கில் சரணடைந்தார் சரவணபவன் ராஜகோபால். சென்னை குற்றவியல் நீதிமன்றம் சரவணபவன் ராஜகோபால் சரணடைந்தார். 

16:05 (IST)09 Jul 2019





















எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சிபிசிஐடி போலீசார். இந்நிலையில் 24மணி நேரத்திற்குள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

15:31 (IST)09 Jul 2019





















வைகோ பேட்டி!

திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வைகோ வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே தேசத் துரோக வழக்கில் அவருக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது மனு ஏற்கப்படுமா என்ற சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது, வைகோவின் மனு ஏற்கப்பட்டது. இதுதொடர்பாக, சுயேட்சைகள் மற்றும் எந்த அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தமது வேட்புமனு ஏற்கப்படும் என்ற நம்பிக்கை இருந்ததாக தெரிவித்தார். 

15:26 (IST)09 Jul 2019





















நந்தினி விடுதலை!

மதுரை சிறையில் இருக்கும் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தனுக்கு ஜாமீன் வழங்கி திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது. நீதிமன்றத்தை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நந்தினி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள தகவல் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

15:24 (IST)09 Jul 2019





















நீதிமன்றம் செல்லும் முகிலன்!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முகிலன் எழும்பூர் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படுகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கரூர் பெண் அளித்த பாலியல் புகாரில் கைதான முகிலனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது சிபிசிஐடி. 

14:54 (IST)09 Jul 2019





















திமுக தேர்தல் பொறுப்பாளர்கள்!

வேலூர் மக்களவை தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.  எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், மாவட்ட செயலாளர்கள் நந்தகுமார், காந்தி, முத்துசெல்வி ஆகியோர் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

14:18 (IST)09 Jul 2019





















வைகோ வழக்கு!

தமிழக அரசு 2006 ஆம் ஆண்டு  மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ மீது தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இன்று நடைப்பெற்றது.சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நடைபெற்று வரும் அந்த வழக்கு விசாரணைக்காக, வைகோ நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, விசாரணையை ஜூலை 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

14:07 (IST)09 Jul 2019





















நுழைவுத் தேர்வு இல்லை

பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இல்லை. மாநில பாடத்திட்டத்தில் சமநிலை கொண்டுவரப்பட்ட பின், மீண்டும் நுழைவுத்தேர்வு முறை நடைமுறை படுத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் ஷாஷா புதே தெரிவித்துள்ளார். 

13:58 (IST)09 Jul 2019





















செங்கோட்டையன் விடுவிப்பு

முதல்-அமைச்சராக இருப்பவர் தனக்கு வரும் பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் பரிசு தொகையை தனது சொந்த வங்கி கணக்கில் ஜெயலலிதா டெபாசிட் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  23 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் வழக்கில் இருந்து செங்கோட்டையனை விடுவித்து உத்தரவிட்டனர்.

13:08 (IST)09 Jul 2019





















சரணடைகிறார் ராஜகோபால்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. 

13:05 (IST)09 Jul 2019





















சட்டமன்ற விவாதங்களை தெரிந்துக் கொள்ள

தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் விவாதங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள Tamil Nadu assembly live today updates : 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் – முதல்வர் பழனிசாமி

13:01 (IST)09 Jul 2019





















வைகோ மனு – தேர்தல் ஆணையம்

தேச துரோக வழக்கில் வைகோவின் மனுவை நிராகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. வைகோ மனுவுக்கு அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

12:52 (IST)09 Jul 2019





















நாடு முழுவதும் 110 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

ஊழல் மற்றும் ஆயுத கடத்தல் தொடர்பாக 19 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனித்தனியாக பதிவு செய்யப்பட்ட 30 வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. 

12:33 (IST)09 Jul 2019





















மனுவை திரும்பப் பெறும் என்.ஆர்.இளங்கோ

வைகோவின் மனு ஏற்பால் 11ம் தேதி தனது வேட்புமனுவை திரும்பப் பெறுகிறார் திமுகவின் என்.ஆர்.இளங்கோ

11:49 (IST)09 Jul 2019





















News in Tamil: வைகோ பேட்டி

மாநிலங்களவை உறுப்பினருக்கு வைகோவின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ. அப்போது பேசிய அவர், “இந்தியா சுதந்திரம் பெற்ற உடன், தேச துரோக வழக்கில் ஒருவர் தண்டனை பெற்றார் என்றால் அது நான் தான்.  மத்திய அமைச்சர் பதவி, 2 முறை தேடி வந்தும் அதை மறுத்தவன் நான். என் தொண்டர்கள் மட்டுமே எனக்கு உயிர், எனக்கு பிடித்த இடம் தாயகம். நான் மாநிலங்களவை உறுப்பினராவதாக இருந்தால் தான் மதிமுக-வுக்கு சீட் ஒதுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்பே கூறியிருந்தார். இது ஒட்டு மொத்த (மதிமுக கட்சி)குடும்பத்தின் முடிவு. எனது குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக கட்சியில் இருக்கிறார்கள். ஆனால் யாரும் பதவிக்கு வர மாட்டார்கள். தேவையில்லாமல் சில பத்திரிக்கைகள் அவதூறு பரப்புகின்றன. வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்துக்காக எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும்” என்றார்.  

11:33 (IST)09 Jul 2019





















Tamil news today: வைகோ மனு ஏற்பு

மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் எனு ஏற்கப்பட்டிருக்கிறது. நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்ட நிலையில், வைகோவின் மனு ஏற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

11:29 (IST)09 Jul 2019





















சோதனை ஓட்டம்

ஜோலார்பேட்டையிலிருந்து  சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான,  அத்தனை வேலைகளையும் முடிவுற்ற நிலையில் இன்று இதற்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. மேலும் படிக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர்… இன்று சோதனை ஓட்டம்…

11:05 (IST)09 Jul 2019





















வேட்பு மனு பரிசீலனை

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை, தற்போது துவங்கியுள்ளது. இதற்காக அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் தலைமை செயலகம் வருகை புரிந்துள்ளனர்..

10:56 (IST)09 Jul 2019





















சரவணபவன் ராஜகோபால் சரணடைய உத்தரவு

கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ராஜகோபால் உடனே சரணடைய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல்நிலையைக் காரணம் காட்டி தன்னால் சிறைக்கு செல்ல முடியாது என்ற ராஜகோபாலின் கருத்து நிராகரிப்பு. 

10:49 (IST)09 Jul 2019





















மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பு மனு பரிசீலனை

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று ( ஜூலை 8ம் தேதி) முடிவடைந்தது. இன்று ( 9ம் தேதி), வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. மேலும் படிக்க மாநிலங்களவை தேர்தல் : இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை – வைகோவின் நிலை என்ன?

10:40 (IST)09 Jul 2019





















வைகோ ஆஜர்

2006ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அப்போது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது வைகோ ஆஜராகியுள்ளார். 

10:18 (IST)09 Jul 2019





















வெளி மாநில மாணவர் சேர்க்கையை தடுக்க

நீட் பதிவு எண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதால், மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் விண்ணப்பித்தால் தகுதி இழந்துவிடுவார்கள் என்கிறார் அமைச்சர் விஜய பாஸ்கர்

10:03 (IST)09 Jul 2019





















விஜய பாஸ்கர் தகவல்

தற்போது தமிழகத்தில் 3,968 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் 852 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன, மத்திய அரசின் ஒதுக்கீடாக 350 இடங்கள் இருக்கும் என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

09:58 (IST)09 Jul 2019





















News today: எம்பிபிஎஸ் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த கலந்தாய்வை தொடங்கிவைத்தார்

09:49 (IST)09 Jul 2019





















News in Tamil: ரயிலில் சென்னைக்கு வரும் தண்ணீர்

ரயில் மூலமாக சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில், இன்று  வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து, அதற்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. 

Tamil Nadu news today live updates:

பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பும,. 5 கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய ஐந்து கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.  திமுக, திக, விசிக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட 16 கட்சிகள் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu news today live updates politics sports icc world cup india