/tamil-ie/media/media_files/uploads/2019/12/a15-4.jpg)
Tamil Nadu News Today Updates
Flash News in Tamilnadu Today Updates : மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பர் 24ம் தேதி தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து, 2010 ம் ஆண்டில் ப. சிதம்பரம் என்.பி.ஆர் அறிமுகப்படுத்தய வீடியோ கிளிப்பையும் பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு, தற்போது பதிலளித்த ப. சிதம்பரம் - இந்த வீடியோ வெளியிட்டதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், வீடியோவை உற்று கேளுங்கள். நாங்கள் நாட்டின் "வழக்கமான குடியிருப்பாளர்களை" கணக்கிட்டுக்கொண்டிருந்தோம். குடியுரிமையை அல்ல. ஒவ்வொரு வழக்கமான குடியிருப்பாளரும் அவரது மதம் அல்லது பிறந்த இடத்தைப் பொருட்படுத்தாமல் கணக்கிடப்பட வேண்டும். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை தயாரிக்க இந்த மக்கள் தொகை பதிவேடு உதவியது. என்.ஆர்.சி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு - NRC vs NPR : தேசிய மக்கள் தொகை பதிவேடு என்றால் என்ன?
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று சுனாமி பேரலையால் உயிர் இழந்த மக்களின் 15வது நினைவு தினம் இன்று உலக மக்களால் அனுசரிக்கப்பட்டது. இந்தியா மட்டுமில்லாமல் இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் மிகப்பெரிய உயிர் சேதாரத்தை உருவாக்கியது இந்த நிகழ்வு.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டியில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கண்டுகழிக்கும் வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குடும்பம் குடும்பமாக யானை முகாமிற்கு வருவோர் அவை செய்யும் சுட்டித்தனத்தை கண்டு மனம் குளிர்கின்றனர். ஷவரில் உற்சாக குளியல், மவுத்தார் கன் இசைப்பு, கால் பந்து விளையாட்டு மற்றும் சத்தான உணவுக்கு பிறகு குட்டி தூக்கம் போடும் யானைகள் காண்போரின் மனதை கவர்ந்து வருகின்றன.
பாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்பட்ட மேக்னடிக் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் அட்டைகள், கிரெடிட் அட்டைகள் ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டுவிட்டரில் அந்த வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், மேக்னடிக் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் அட்டைகளும், கிரெடிட் அட்டைகளும் வரும் 30ம் தேதியுடன் முடக்கப்படும் என்றும், ஜனவரி 1ம் தேதி முதல் அவை செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த அட்டைகளை வைத்திருப்போர், தாங்கள் கணக்கு பராமரிக்கும் வங்கி கிளைக்கு சென்று இவிஎம் சிப் மற்றும் பின் அடிப்படையிலான அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட அட்டைகளை விண்ணப்பித்து பெறும்படியும் கோரப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் தொகைப் பதிவேடும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான்.
குடியுரிமைச் சட்டத் திருத்தம் 2019ன் தாக்கம் காரணமாக, அனைத்து மதங்களுக்கு இடையேயும் வேற்றுமை மற்றும் பாகுபாட்டு உணர்வுக்கான சூழலை தேசிய மக்கள் தொகைப் பதிவேடு உருவாக்கும் என்ற கவலை அனைவருக்கும் எழுந்துள்ளது.
தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காக ரூ.4000 கோடியை செலவிட வேண்டிய அவசியம் என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
அரசு அமைப்புகளுக்கு கடனில் விமான டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது
பல்வேறு அரசு அமைப்புகள் சுமார் ரூ.268 கோடிக்கு டிக்கெட் கட்டணத்தை நிலுவையில் வைத்துள்ளன; ஏற்கனவே கடனில் வழங்கிய டிக்கெட்டுகளுக்கு தொகையை செலுத்தாக வரை கடனில் புதிதாக டிக்கெட் வழங்கப்படாது
- ஏர் இந்தியா
இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது - திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில், ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினாலும், காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் - ஸ்டாலின்
அரசியல் பேசக்கூடாது என்ற விதியை மீறிய பிபின் ராவத் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீத்தாராம் யெச்சூரி தெரிவித்திருந்தார்.
அதேபோல், குடியுரிமை திருத்த சட்டம் குறித்த ராணுவ தளபதி பிபின் ராவத்தின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியிருந்தார்.
இதில் முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.
முதல் கட்ட தேர்தலில் வாக்களிப்பதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 13 ஆயிரத்து 62 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் சுமார் 4 லட்சத்து 2 ஆயிரத்து 195 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மயிலாடுதுறை அருகே பா.ஜ.க. தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குத்தாலம் அருகே உள்ள பெரம்பூர் ஊராட்சியில் அதிமுக கூட்டணி சார்பில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பாஜக வேட்பாளர் சேதுராஜா என்பவர் போட்டியிடுகிறார். அதற்காக பெரம்பூர் கடைத்தெருவில் கூட்டணி கட்சி சார்பில், தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு, தேர்தல் அலுவலகம் மீது, மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி பேனர்களை கிழித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அதிமுக கூட்டணி கட்சியினர் கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்தவர்கள், தேர்தல் பறக்கும் படையினைரை பார்த்தவுடன் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை கீழே போட்டு விட்டு சென்றுள்ளனர். வந்தவாசியை அடுத்த சீமாபுதூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை அடுத்து, மீட்கப்பட்ட பணம் தேர்தல் அலுவலர் காந்திமதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சட்டம் ஒழுங்கிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இனி அது குறித்து ஸ்டாலின் பேசக்கூடாது. விவசாயத்திலும் நாளை முதலிடத்திற்கு வருவோம். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, தொழில்துறையிலும் முதல் இடத்திற்கு வருவோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கரும்பு வெட்டும் பெண்கள் குறித்த மகாராஷ்டிரா மாநில அமைச்சரின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது.
ஈழத்தமிழர்களுக்கு தனித் தமிழீழம் வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஓய்வுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும்
- பாமக நிறுவனர் ராமதாஸ்
இன்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு, கர்நாடகாவின் கலாபுராகி மாவட்டத்தில் மூன்று குழந்தைகள் கழுத்து வரை ஆழமாக மண்ணில் புதைக்கப்பட்டிருக்கின்றனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குழந்தைகளை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தார்கள். குழந்தைகளின் வயது முறையே 3,8 மற்றும் 11.
நோய்கள் மற்றும் வறுமை நீங்குவதற்காக இதை செய்ததாக பெற்றோர்கள் கூறியிருக்கின்றனர்.
RSS का प्रधानमंत्री भारत माता से झूठ बोलता हैं ।#JhootJhootJhoot pic.twitter.com/XLne46INzH
— Rahul Gandhi (@RahulGandhi) December 26, 2019
இந்தியாவில் எந்த தடுப்புக்காவல் நிலையங்களும் (Detention Centre )இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினார். இந்த கருத்துக்கு தற்போது பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரதமர் பாரத மாதாவிடம் பொய் கூறுகிறார்' என்று குற்றம் சாட்டினார்.
மேலும், ராகுல் காந்தி ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார். அந்த வீடியோ, அசாமில் கட்டுமானத்தில் உள்ள தடுப்புக்காவல் நிலையத்தைக் காட்டுகிறது. மேலும், இந்த வீடியோவை ‘ஜூட் ஜூட் ஜூட் (பொய், பொய், பொய்) என்ற ஹேஷ்டேக் செய்திருக்கிறார்.
#WATCH Army Chief Gen Bipin Rawat: Leaders are not those who lead ppl in inappropriate direction. As we are witnessing in large number of universities&colleges,students the way they are leading masses&crowds to carry out arson&violence in cities & towns. This is not leadership. pic.twitter.com/iIM6fwntSC
— ANI (@ANI) December 26, 2019
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட தேசிய பதிவு குடிமக்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இராணுவத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் , “மக்களை பொருத்தமற்ற திசைகளில் வழிநடத்துபவர்கள் தலைவர் பண்பல்ல ” என்றார் .
ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் அரசின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழா வரும் 29ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளை கைப்பற்றி, ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் : மோடி பிம்பத்தை வைத்து நடக்கும் அரசியல் மாநில தேர்தல்களில் தோற்பது ஏன்?
It is these women who are revolutionizing India
After receiving the gold medal at the #JadavpurUniversity Convocation. #DebsSmitaChaudhary tore the Citizenship Law Amendment (CAA) on stage. #NRC_CAA_Protest @ComradeMallu pic.twitter.com/ea8pOs1Ng5— Comrade Rinse Kurian (@rinse_kurian) December 24, 2019
குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராகவும் , தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் , இன்று மம்தா பேனர்ஜி தலைமயில் மீண்டும் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. போராட்டதில் கலந்து கொண்ட பேனர்ஜி , மாணவர்கள் தங்கள் ஜனநாயக போராட்டத்தை அமைதியான முறையில் தொடரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடத்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அம்மாநில ஆளுநர் கலந்து கொள்வதை எதிர்த்து மிகப் பெரிய ஆர்பாட்டம் மாணவர்களால் நடத்தபப்ட்டது. மேலும், பட்டமளிப்பு விழாவின் போதும் மாணவர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவத்து இருந்தனர்.
13 ஆண்டுகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்த நல்லக்கண்ணுவின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பொதுவுடைமைத் தத்துவம் எப்படி இருக்கும்? எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக இதோ நம்முன் வாழும் அய்யா நல்லகண்ணுவைப் போல இருக்கும்! 95லும் தொய்வில்லாப் போராளி- நல்லகண்ணு அய்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! என்று ஸ்டாலின் தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
The BJP-led government has a larger and more sinister agenda and that is why the NPR approved by them yesterday is very dangerous and different in terms of the TEXT as well as the CONTEXT of NPR 2010.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 26, 2019
If the BJP's motives are bonafide, let the Government unconditionally state that they support the NPR form and design of 2010 and have no intention of linking it to the controversial NRC.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 26, 2019
ஆனால், தற்போது பாஜக தலைமையிலான அரசாங்கம் ஒரு மோசமான உள்நோக்கத்துடன் மக்கள் தொகை பதிவேட்டை கொண்டு வந்துள்ளது. அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட என்.பி.ஆர் 2010ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்ட என்.பி.ஆரை விட வேறுபடுகிறது. இது மிகவும் ஆபத்தானது என்றும் கூரியுள்ளார்.
I am happy that the BJP has released a video clip of the launch of NPR in 2010.
Please listen to the video. We were enumerating the "usual residents" of the country. The emphasis is on residency not citizenship.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 26, 2019
Every usual resident was to be enumerated irrespective of his or her religion or place of birth.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 26, 2019
The NPR aided the preparation of the Census of 2011.
There was no mention of NRC.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 26, 2019
காங்கிரஸ் அரசாங்கம் நாட்டின் “வழக்கமான குடியிருப்பாளர்களை” கணக்கிட்டுக்கொண்டிருந்தோம். குடியுரிமையை அல்ல. ஒவ்வொரு வழக்கமான குடியிருப்பாளரும் அவரது மதம் அல்லது பிறந்த இடத்தைப் பொருட்படுத்தாமல் கணக்கிடப்பட வேண்டும். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை தயாரிக்க இந்த மக்கள் தொகை பதிவேடு உதவியது. என்.ஆர்.சி பற்றி நாங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (என்ஆர்சி) தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும் (என்பிஆர்) எந்தவிதமான தொடர்பும் இல்லை. பிரதமர் மோடி கூறியது முற்றிலும் சரியானது. என்ஆர்சியை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்திலோ அல்லது மத்திய அமைச்சரவையிலோ எந்தவிதமான விவாதங்களும் நடத்தப்படவில்லை என்று அமித் ஷா ஏ.என்.ஐ என்ற செய்தி நிறுவன நேர்காணலில் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights