Flash News in Tamilnadu Today Updates : வாக்குச்சீட்டு முறையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளதால், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களை, இடைவிடாது கூர்ந்து கண்காணிக்க வேண்டும்' என, தி.மு.க., தொண்டர்களுக்கு, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுஉள்ளார்.
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ?
கட்சி தொண்டர்களுக்கு, அவர் எழுதிஉள்ள கடிதம்:ஊரக உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில், 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4,700 ஊராட்சி தலைவர்கள், 37 ஆயிரத்து, 830 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என, மொத்தம், 45 ஆயிரத்து, 336 பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.எட்டு ஆண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியின் அவல நிலையையும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்லை நடத்தாமல், ஒவ்வொரு தெருவையும் சீரழித்த கொடுமையையும், மனதில் கொண்டுள்ள தமிழக மக்கள், நிச்சயமாக நல்ல தீர்ப்பை வழங்குவர் என்ற நம்பிக்கை நிறைந்து உள்ளது. அப்போது, தி.மு.க.,வினரும், கூட்டணி கட்சியினரும் இன்னும் கூடுதலான விழிப்புடன் இருந்து, ஓட்டுகளை சிந்தாமல், சிதறாமல், நம் கூட்டணிக்கு சேர்த்திடும் பணிகளில், முழுமையாக ஈடுபட வேண்டும். ஓட்டுச் சீட்டு முறையில் தேர்தல் நடந்துள்ளதால், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களை இடைவிடாது கூர்ந்து கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
காதலுக்கு வயதில்லை என்பது அரிதாக கேட்கப்படும் மற்றும் காணப்படுர்ற விசயம். அந்த அரிதான சம்பவம் இப்போ நடந்துருக்கு இதுபோன்ற சுவாரஸ்ய செய்திகளை படிக்க
வரும் காலம், இளைஞர்களுக்கானது. இன்றைய இளைஞர்கள் அராஜகம், ஜாதி, பாலின பாகுபாடு, குடும்ப அரசியல் ஆகியவற்றை வெறுக்கின்றனர். ''தற்போதைய அமைப்பு முறையை இளைஞர்கள் விரும்பினாலும், அவை சரியாக செயல்படாவிட்டால், கோபம் அடைந்து, துணிச்சலாக கேள்வி எழுப்புகின்றனர்,'' என, மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
"பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸின் நெல்லை கண்ணன் மீது டிஜிபியிடம் புகார் கொடுத்திருக்கிறேன். அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" என பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
The Congress politician Nellai Kannan has instigated the Muslims to finish off Hon'ble PM and Hon'ble HM in his speech. I have lodged complaint to the DGP, TN through WhatsApp and on online too. I request the TN Gov to take immediate action.@narendramodi @AmitShah @CMOTamilNadu
— H Raja (@HRajaBJP) December 30, 2019
ஏர் இந்தியா நிறுவனத்தை யாரும் வாங்க முன்வராவிட்டால், 6 மாதங்களுக்குள் இழுத்து முட வேண்டியிருக்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செயல்பாட்டு செலவுக்காக 2400 கோடி ரூபாயை கேட்டிருந்த நிலையில், மத்திய அரசு 500 கோடி ரூபாய் மட்டும் வழங்கியதாக அவர் கூறினார்.
என்ஜின் மாற்றத்திற்காக தரையிறக்கப்பட்ட 12 விமானங்களை மீண்டும் இயக்க 1100 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 2011 - 2012 ஆம் நிதி ஆண்டில் இருந்து நடப்பு ஆண்டின் டிசம்பர் மாதம் வரை மத்திய அரசு 30 ஆயிரத்து 520 கோடி ரூபாயை மூலதனமாக அளித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 77 வயதான ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். பலர் சட்டவிரோதமாக உத்தரபிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஆதாரத்துடன் அம்மாநில ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாகவும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டார். போராட்டக்கார ர்களுக்கு உத்தரபிரதேச காவல்துறை கடும் நெருக்கடி கொடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்
காளைகளை ஆன்லைன் பதிவு செய்வதை ரத்து செய்யக் கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காளைகளுடன் வந்த உரிமையாளர்கள் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் மாடுகள் மற்றும் எருமை மாடுகள் இனப்பெருக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு சட்டத்தை தமிழக அரசின் கால்நடைத்துறை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது .
டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியிலுள்ள பிரதமரின் இல்லத்தில் தீ விபத்து என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அது எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் அலுவலகத்தின் வரவேற்பு அறையில் ஏற்பட்ட விபத்து என்பதை பிரதமர் அலுவலகம் தெளிவுப்படுத்தியது.
There was a minor fire at 9, Lok Kalyan Marg caused by a short circuit. This was not in PM’s residential or office area but in the SPG reception area of the LKM complex.
The fire is very much under control now.
— PMO India (@PMOIndia) December 30, 2019
இந்த தீயை அணைக்க 9 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன
புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஏற்படும் விபத்துக்களை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு 50 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 15 இருசக்கர ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன - அமைச்சர் விஜயபாஸ்கர்
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஜனவரி 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வழங்கப்படும் என்றும், விடுபட்டவர்களுக்கு 13-ம் தேதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரியில் இருக்கும் அகதிகள் முகாம்களில் ரிப்போர்ட்டிங்குக்காக சென்ற நிரூபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு எதிராக வைரமுத்து ட்வீட்.
விகடன் நிருபர்கள் மீது
வழக்குத் தொடுத்திருப்பது பத்திரிகைச் சுதந்திரத்திற்கு எதிரானது.
கனத்த மனத்தோடு கண்டிக்கிறேன்.
வழக்கைத் திரும்பப் பெறுங்கள்;
கருத்துரிமையை வாழவிடுங்கள்.@vikatan— வைரமுத்து (@vairamuthu) December 30, 2019
நாளை நள்ளிரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற இருப்பதை தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விபத்தில்லாமல் புத்தாண்டை கொண்டாடுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்றும் குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் பிரேம் ஆனந்த் சின்ஹா அறிவித்துள்ளார். மேலும் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டியில் படித்துக் கொண்டிருந்த மாணவி ஃபாத்திமா நவம்பர் 8ம் தேதி தன்னுடைய விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. முதல் குற்றப்பத்திரிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ர மாநிலத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
Today, at Vidhanbhavan, took oath as the Deputy Chief Minister of Maharashtra. Promised to uphold our Constitution, maintain the sovereignty & unity, diligently fulfill all responsibilities with integrity while maintaining the confidentiality related to work. pic.twitter.com/lKy0v4K40G
— Ajit Pawar (@AjitPawarSpeaks) December 30, 2019
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்த வேண்டாம் என்று ரஜினி காந்தின் அண்ணன் சத்ய் நாராயணாராவ் அறிவித்துள்ளார். வேலூர் ஜலகண்டேஸ்வர் கோயிலில் தரிசனம் செய்த அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
சென்னையில் நாளை நள்ளிரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் படுவிமர்சையாக கொண்டாடப்படும். இதனைத் தொடர்ந்து சுமார் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை இரவு 9 மணி முதல் மயிலாப்பூர், அண்ணாநகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் 368 வாகன தணிக்கை குழுக்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெரினா மற்றும் எலியாட்ஸ்ஸ் கடற்கரை செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு வெளியாக உள்ள தர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் லைகா நிறுவனம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு தடை கோரி மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய் கிரியேசனஸ் நிறுவனம் சார்பில் போடப்பட்ட வழக்கில் உத்தரவு
சி.ஏ.ஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் சேதமடைந்த ரயில்வே சொத்துகளின் மதிப்பினை வெளியிட்டது ரயில்வே வாரியம். ரூ. 80 கோடி மதிப்பில் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் அதில் ரூ.70 கோடி வடகிழக்கு மாநிலங்களில் தான் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 119 ஆண்டுகளாக இல்லாத அளவு தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவி வருகிறது. மதியம் 2:30 மணி வரையில் சஃப்தார்ஜங் பகுதியில் 9.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
India Meteorological Department (IMD): Delhi likely to record the most coldest day today in last 119 years for the month of December as day temperature till 1430 IST today has been unusually following the coldest trend with Safdarjung at 1430 IST has 9.4 degree Celsius pic.twitter.com/ksqTaIHwcM
— ANI (@ANI) December 30, 2019
ஜூனியர் விகடன் நிரூபர்கள் மீது நடவடிக்கை - கண்டனங்களை பதிவு செய்த கனிமொழி
ஊடகங்களை மிரட்டும் நோக்கோடு, கன்னியாக்குமரியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் சென்று பேட்டியெடுத்த ஜூனியர் விகடன் நிருபர்கள் மீது, பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் எடப்பாடி அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 30, 2019
நேற்று சென்னையில் சி.ஏ.ஏவுக்கு எதிராக கோலம் போட்ட நபர்களை கைது செய்தது தொடர்பாக தூத்துக்குடி எம்.பி. ட்வீட்
நேற்று சென்னையில் கோலம் போட்டதற்காக கைது செய்யப்பட்டவர்கள் கழகத் தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களையும்,என்னையும் இன்று சந்தித்தனர். ஜனநாயகம் காக்கும் முனைப்போடு கோலமிட்ட ஐவரைக் கைது செய்து, அனைவரையும் கோலம் போட வைத்துவிட்டது அடிமை அதிமுக அரசு. #DMKkolamProtest pic.twitter.com/zm4kqxkj6c
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 30, 2019
மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர். ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது! எடப்பாடி அரசுக்கு நன்றி! என்று திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவு இட்டுள்ளார்.
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். முன்னதாக, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவியின் தந்தை லத்தீப், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியிருந்த நிலையில், டில்லியில் இருந்து வந்த உத்தரவை தொடர்ந்து சென்னை போலீஸ் டிஜிபி, கமிஷனர், சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றக் கூடியவர்கள் TET தேர்வினை முடித்திருக்க வேண்டும் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட TET தேர்வை பள்ளிக்கல்வித்துறை கடைசி வாய்ப்பாக நிர்ணயித்திருந்தது. இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி வருவதை பள்ளிக்கல்வித்துறை கண்டறிந்தது. இதனையடுத்து கடந்த 18-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களின் விவரங்களை கேட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.இதனால் அந்த ஆசிரியர்களின் நிலை என்ன என்பது குறித்த கேள்வி எழுந்தது இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத 1747 ஆசிரியர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக தனியாக தகுதித் தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
நாட்டின் முக்கிய பிரச்சினையில், போராட்டத்தை தூண்டும் விதமாக அனுமதியின்றி கோலம் போட்டது தவறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். ஆளுங்கட்சிக்கு உள்ள பொறுப்பை போல, எதிர்கட்சி தலைவருக்கும் உள்ளது என்றும், மக்களை தவறாக வழிநடத்த கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெசன்ட் நகர் பகுதியில் கோலம் போட்ட பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், எம்பி கனிமொழி உள்ளிட்டோரின் வீடுகளில் கோலம் போடப்பட்டுள்ளது.
கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடு
ஸ்டாலின் வீடு
கனிமொழியின் வீடு
தகவல் பரிமாற்றம், உளவு இவைகளை தடுக்க, கப்பற்படை வீரர்கள், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களை பயன்படுத்த கப்பற்படை தளபதி உத்தரவிட்டுள்ளார்.
விசாகப்பட்டினம், மும்பை மற்றும் கர்வார் ஆகிய கடற்படை தளங்களைச் சேர்ந்த 7 பேர் கப்பல்களின் தகவல்களை பாகிஸ்தானில் இயங்கும் உளவு அமைப்புகளுக்கு அனுப்பியதாக கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள தர்பார் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. லைகா புரடொக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவை அரசியலமைப்பு முஸ்லீம் நாடுகள். அங்கு, மதத்தின் பெயரில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதில்லை, எனவே அவர்கள் இந்தச் செயலில் சேர்க்கப்படவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு இந்த சட்டம் பயனளித்துள்ளது, யாருக்கும் எதிராக எந்த பாகுபாடும் செய்யப்படவில்லை என பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் தாக்கிய 'உர்சுலா' புயலுக்கு இது வரை 41 பேர் பலியாகியுள்ளனர். டிச.24-ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை ' உர்சுலா' என்ற அசுரப்புயல் மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது. மின் கம்பங்கள் மற்றும் மரங்களை சாய்த்தபடி காற்று சுழன்று அடித்தது. வீடுகளின் கூரைகள் பறந்தன. புயல் காற்றினால் கடலோரப் பகுதிகள் பெரும் பாதிப்படைந்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights