Advertisment

Tamil Nadu News Today: 'தோழமை சக்திகளுடன் உறுதியாக துணை நின்று வென்று காட்டுவோம்' - மு.க.ஸ்டாலின்

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live

Tamil Nadu News Today Live

Flash News in Tamilnadu Today Updates : தமிழக சட்டசபை, ஜனவரி, 6ல் கூடுகிறது. வரும் புத்தாண்டின் முதல் கூட்டத்தின், முதல் நாளில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். தமிழக சட்டசபையின், பட்ஜெட் கூட்டத்தொடர், ஜூன், 28 முதல், ஜூலை, 20 வரை நடந்தது. அதன்பின், சட்டசபை கூடவில்லை. புத்தாண்டின் முதல் கூட்டத்தில், கவர்னர் உரையாற்றுவதற்காக, சட்டசபை கூட்டம், 2020 ஜனவரி, 6ம் தேதி கூட உள்ளதாக, சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

Advertisment

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா??

தமிழகத்தில் இம்மாதம், 27 மாவட்டங்களில் உள்ள, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, தேர்தல் நடக்கிறது. பதிவாகும் ஓட்டுகள், ஜன., 2ல் எண்ணப்பட உள்ளன. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், சட்டசபையில் எதிரொலிக்கும்

உடல்நலக் குறைவால் அவதி?: ’லஷ்மன் ஸ்ருதி’ உரிமையாளர் தற்கொலை

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான, முதற்கட்ட தேர்தல் பிரசாரம், இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. தமிழகத்தில், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், வரும், 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதற்கான மனு தாக்கல், 9ம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை நடந்தது. போட்டியின்றி, 18 ஆயிரத்து, 570 பேர் தேர்வு பெற்றுள்ளனர். களத்தில், 2.31 லட்சம் வேட்பாளர்கள் உள்ளனர். முதற்கட்ட தேர்தல் பிரசாரம், இன்று மாலையுடன் முடிகிறது. அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமின்றி, சுயேச்சைகளும் வாக்காளர்களை வளைக்கும் முயற்சிகளில், கவனம் செலுத்தி வருகின்றனர்; இதனால், வாக்காளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முதற்கட்ட தேர்தலில், 1.30 கோடி வாக்காளர்கள், ஓட்டளிக்க உள்ளனர். இவர்கள் ஓட்டளிக்க, 24 ஆயிரத்து, 680 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.Highlights

  22:32 (IST)25 Dec 2019

  BJP அரசு கவனம் செலுத்த வேண்டும் - ஸ்டாலின்

  வளர்ச்சி 4.5% ஆகச் சரிந்து #IndianEconomy ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக IMF-ம் , பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர்.

  6 ஆண்டுகால பாஜக ஆட்சி, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாதன் அடையாளம் இது.

  அதிமுக அரசின் நிர்வாக திறமின்மையால் தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளது!

  பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு மக்களைப் போராடத் தூண்டுவது, பின் அதை ஒடுக்குவது போன்ற #AntiPeople நடவடிக்கைகளை கைவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் #BJP அரசு கவனம் செலுத்த வேண்டும்.

  அமைதியை விரும்பும் மக்கள்-

  மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்பார்ப்பது அதனை தான்!

  -மு.க.ஸ்டாலின்

  22:30 (IST)25 Dec 2019

  வெங்காயம் விலை உயர்வு பிப்ரவரி வரை நீடிக்க வாய்ப்பு

  துருக்கி, இலங்கையில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி தடைபட்டுள்ளதால், இந்தியாவில் வெங்காயம் விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. துருக்கி அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

  அதே போன்று இலங்கையிலும் வெங்காயம் ஏற்றுமதியை குறைக்க மறைமுக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வெங்காயம் இறக்குமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் இருந்தும் போதிய அளவு கிடைக்கவில்லை.

  பெரும்பாலான நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் சந்தைக்கு வரும் போது தான் விலை குறையும் என்பதால், பிப்ரவரி இரண்டாவது வாரம் வரை விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

  22:18 (IST)25 Dec 2019

  கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டங்களில் காவலன் செயலி விழிப்புணர்வு

  சென்னையில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டங்களுக்கிடையில் மக்களிடம் காவல் துறையினர் காவலன் செயலி குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  ஆபத்து சமயங்களில் உதவுவதற்காக காவலன் செயலி உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொள்ளவும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காகவும் தேவாலயங்களில் கூடிய மக்கள் முன்னிலையில் காவல் துறை அதிகாரிகள் காவலன் செயலியின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கி பேசினர்.

  அடையாறு, தியாகராயர் நகர் போன்ற பகுதிகளில் தேவாலயங்களுக்கு வந்தவர்களை நிறுத்தி, பெண் காவலர்களும் காவலன் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று விளக்கினர்.

  21:48 (IST)25 Dec 2019

  லியாண்டர் பயஸ் ஓய்வு அறிவிப்பு

  டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இந்தியாவின் லியாண்டர் பயஸ் அறிவிப்பு . 2020ஆம் ஆண்டு வரை மட்டுமே டென்னிஸ் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவித்தார் லியாண்டர் பயஸ்.

  21:18 (IST)25 Dec 2019

  உறுதியாக துணை நின்று வென்று காட்டுவோம்

  "நாளைய நல்லாட்சிக்கு முன்னோட்டம் உள்ளாட்சித் தேர்தல். ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்காக காத்திருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் களத்தில் தோழமை சக்திகளுடன் உறுதியாக துணை நின்று வென்று காட்டுவோம். தேர்தல் பணியிலுள்ள மாவட்ட ஆட்சியர் தொடங்கி அனைத்து அதிகாரிகள் மீதும் நம்பிக்கை உள்ளது. அதிகாரிகள் பயமின்றி, பாரபட்சமின்றி தங்கள் ஜனநாயக பணியை நிறைவேற்றிட வேண்டும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  20:57 (IST)25 Dec 2019

  குடும்பத்தினர் தவிப்பு

  கோவையில் 92 வயதான மூதாட்டி சேமித்து வைத்திருந்த 31,500 மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள்.

  பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் அவரது குடும்பத்தினர் தவிப்பு.

  20:06 (IST)25 Dec 2019

  ரோக்டாங் சுரங்கப்பாதைக்கு அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர்

  மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95வது பிறந்தநாளையொட்டி  டெல்லியில் உள்ள நினைவகத்தில் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் நினைவகத்தில் மரியாதை செலுத்தினர். இந்நிலையில், உலகின் மிக நீளமான சுரங்கபாதைகளில் ஒன்றான இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ரோக்டாங் சுரங்கப்பாதைக்கு அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரை மத்திய அரசு சூட்டியுள்ளது. இந்த சுரங்கபாதை கட்டும் திட்டத்தை வாஜ்பாய் தனது ஆட்சி காலத்தில் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  19:53 (IST)25 Dec 2019

  மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்

  மக்கள் விரோத போக்கை கைவிட்டுவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  19:27 (IST)25 Dec 2019

  முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு

  புதுச்சேரியில் டிசம்பர் 27 குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் நடத்தவிருந்த முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு

  வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு - மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம்.

  19:27 (IST)25 Dec 2019

  நேற்றிரவு முதல் உண்ணாவிரதப் போராட்டம்

  குடியுரிமை சட்டத்திருத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, மதுரை மத்திய சிறையில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செண்பகவள்ளி என்ற பெண் மாவோயிஸ்ட் மற்றும் ஜெயசுதா என்ற பெண் கைதியும் நேற்றிரவு முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

  19:12 (IST)25 Dec 2019

  உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் - ஓபிஎஸ், ஈபிஎஸ்

  உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மக்களுக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  ஊரகப்பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் தொடர அதிமுகவின் வெற்றி இன்றியமையாதது. தமிழகத்தில் வன்முறைக்கு இடம் தராத அன்பின் வழி நின்ற ஆட்சி அமைதியாக நடக்கிறது. தீய சக்திகளை ஒழித்து, நல்லவர்கள் கையில் உள்ளாட்சி பதவிகள் இருப்பது அவசியம் என்பதை மக்கள் அறிவீர்கள்.

  2018ல் ஏற்பட்ட கடும் வறட்சியிலும் அரசு முறையாக குடிநீர் வழங்கியது. நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் இருந்த நீர் நிலைகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கேட்டுக்கொள்கிறோம்.

  19:10 (IST)25 Dec 2019

  முதலமைச்சர் தான் முடிவெடுப்பாா்

  கோபிசெட்டிபாளையத்தை மாவட்டமாக பிாிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பாா் - அமைச்சர் செங்கோட்டையன்

  கோடை விடுமுறையில் பள்ளி மாணவா்களுக்கு ஆடிட்டிங் பயிற்ச்சி அளிக்கப்படும். மாணவர்கள் தண்ணீா் அருந்தும் நேரத்தில் நொறுக்குத்தீனி வழங்க சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன். 

  19:08 (IST)25 Dec 2019

  சோனியா காந்திக்கு அழைப்பு

  டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன்.

  19:08 (IST)25 Dec 2019

  ரூ.21.31 கோடி முறைகேடு புகார்

  இலவச வேட்டி - சேலை திட்டத்தில் ரூ.21.31 கோடி முறைகேடு புகார் - அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

  19:06 (IST)25 Dec 2019

  கன்னியாகுமரியில் ஜனாதிபதி...

  கன்னியாகுமரியில் தனி படகு மூலம் தனது குடும்பத்துடன் சென்று, விவேகானந்தர் மண்டபத்தை குடியரசு தலைவர் பார்வையிட்டுவருகிறார்.

  19:06 (IST)25 Dec 2019

  புகார்களை தெரிவிக்கலாம்

  கடலூர் மாவட்டத்தில் 90873 00100 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தேர்தல் சம்பந்தமான புகார்களை தெரிவிக்கலாம் - காவல் கண்காணிப்பாளார் ஶ்ரீ அபிநவ்.

  18:47 (IST)25 Dec 2019

  பதவியேற்பு விழாவில் பங்கேற்க சோனியாவுக்கு அழைப்பு

  23ம் தேதி ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது. முதல்வராக பொறுப்பேற்கிறார் ஜெ.எம்.எம். கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். இந்நிகழ்வில் பங்கேற்க சோனியாவை நேரில் சென்று அழைத்துள்ள்ளார் ஹேமந்த்.

  17:57 (IST)25 Dec 2019

  இலவச வேட்டி - சேலை திட்டத்தில் முறைகேடு

  பொங்கல் நாளை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

  17:44 (IST)25 Dec 2019

  உரி எல்லை பகுதியில் ராணுவ தாக்குதல்

  இந்திய பாதுகாப்பு எல்லையான ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தகவல் அளித்துள்ளது.

  17:27 (IST)25 Dec 2019

  உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நிறைவு

  27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றோடு நிறைவுற்றது. 

  17:06 (IST)25 Dec 2019

  போராட்டம் என்ற பெயரில் செய்தது சரியா என்று யோசித்து பாருங்கள் - மோடி கேள்வி

  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்தும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் வெடித்தன. இதனால் பல பொது சொத்துகள் சேதாரம் ஆக்கப்பட்டது. போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துகளை விளைவித்தவர்கள் அனைவரும் தாங்கள் செய்தது சரியா என ஆராய்ந்து பாருங்கள் என மோடி கூறியுள்ளார்.

  16:36 (IST)25 Dec 2019

  கிண்டி சிறுவர் பூங்காவில் நுழைவுக் கட்டணம் உயர்வு

  கிண்டி சிறுவர் பூங்காவில் பார்வையாளர்களுக்கான நுழைவுக் கட்டணத்தை உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. சிறுவர்களுக்கு 5 ரூபாயும், பெரியவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறுவர்களுக்கு 20 ரூபாயும் பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  16:20 (IST)25 Dec 2019

  Weather update

  கொடைக்கானல் மற்றும் கோவையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

  16:20 (IST)25 Dec 2019

  தேசிய நீர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

  மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தேசிய நீர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் குறித்தும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  16:18 (IST)25 Dec 2019

  கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிகாந்த் பாராட்டு

  மகாநடி படத்தில் நடத்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ரஜினியின் 168வது படத்தில் நடித்துவரும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி, இயக்குநர் சிறுத்தை சிவா, நடிகர் சூரி உட்பட அக்குழு உறுப்பினர்கள் கேக் வெட்டி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

  15:20 (IST)25 Dec 2019

  வாஜ்பாய் திருவுருவ சிலை திறப்பு

  லக்னோவில் அமைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

  15:05 (IST)25 Dec 2019

  தமிழகத்தின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ

  நாட்டின் பொருளாதாரத்தை விட தமிழகத்தின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

  14:56 (IST)25 Dec 2019

  கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் - நாராயணசாமி

  சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள் கிழமை புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். புதுவையின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்துள்ளார் புதுவை முதல்வர் நாராயணசாமி.

  14:42 (IST)25 Dec 2019

  சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ்!

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பினை வழங்கி வந்தது மகாராஷ்ட்ரா மாநில அரசு. அவருக்கு வழங்கப்பட்டு வந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பினை திரும்ப பெற்றதாக மகாராஷ்ட்ரா மாநில அரசு அறிவித்துள்ளது.

  14:17 (IST)25 Dec 2019

  லஷ்மண் ஸ்ருதி ராமன் மரணம் அதிர்ச்சியளிக்கிறது – எஸ்.பி.பாலசுப்பிரமணியன்

  லஷ்மண் ஸ்ருதி ராமன் மரணம் அதிர்ச்சியளிப்பதாக பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராமன், கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் இப்படியான விபரீத முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு இறந்து போன ராமன் நீண்ட காலமாக சர்க்கரை நோய், இதய அடைப்பு, மூலம் போன்ற பல வியாதிகளால் அவதிப்பட்டு வந்துள்ளார் எனவும் இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்க கூடும் எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  13:34 (IST)25 Dec 2019

  கிண்டி சிறுவர் பூங்காவில் பார்வையாளர் கட்டணம் அதிகரிப்பு

  சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,  சிறுவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.20 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவர்களுக்கு 15 ரூபாயாகவும் பெரியவர்களுக்கு 50 ரூபாயாகவும் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  12:59 (IST)25 Dec 2019

  CAAக்கு எதிராக திமுக ஏன் போராடுகிறது – எம்பி ரவீந்திரநாத் பளீச்…

  குடியுரிமை சட்டத்திற்கான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் காரணத்திற்காக திரித்து கூறுகிறார்கள். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்ற விரக்தியால், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக போராடி வருகிறது என அதிமுகவின் ஒரே ஒரு லோக்சபா எம்பி ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

  12:22 (IST)25 Dec 2019

  4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம்

  தஞ்சை, திருவாரூர், நாகை, விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  11:52 (IST)25 Dec 2019

  பெரியார் சர்ச்சை பதிவு போட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – சி.பி.ராதாகிருஷ்ணன்

  தமிழக பா.ஜ.,வினர் தங்களது கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பெரியார் குறித்த சர்ச்சைப்பதிவு, தமிழக அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பா.ஜ. முன்னாள் மாநில  தலைவர் சி.பி,ராதாகிருஷ்ணன் கூறியதாவது, மறைந்த ஒருவர் குறித்து விமர்சனம் செய்வது சரியல்ல, இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  11:26 (IST)25 Dec 2019

  இறங்குமுகத்தில் வளர்ச்சி – ஸ்டாலின்

  பாரதிய ஜனதா கட்சியால் மத்தியிலும், அதிமுக கட்சியால் மாநிலத்திலும் வளர்ச்சி இறங்குமுகமாக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

  அவர் குறிப்பிட்டுள்ளதாவது, வளர்ச்சி 4.5% ஆகச் சரிந்து இந்திய பொருளாதாரம் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக IMF-ம் , பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். 6 ஆண்டுகால பாஜக ஆட்சி, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாதன் அடையாளம் இது. அதிமுக அரசின் நிர்வாக திறமின்மையால் தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளது! என அதில் தெரிவித்துள்ளார்.

  11:11 (IST)25 Dec 2019

  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 4009 கனஅடியில் இருந்து 3881 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 12,400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 118.79 அடியாகவும், நீர்இருப்பு 91.55 டிஎம்சி.,யாகவும் உள்ளது.

  10:54 (IST)25 Dec 2019

  ஒரு கோடியே 10 லட்சம் FASTAG வழங்கப்பட்டுள்ளது – NHAI

  நாட்டில் உள்ள டோல்கேட்களில் FASTAG அடிப்படையிலான வழிமுறை, 2020 ஜனவரி 15ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் மையங்களின் மூலம் இதுவரை ஒரு கோடியே 10 லட்சம் FASTAG வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது.

  10:47 (IST)25 Dec 2019

  அனுமன் ஜெயந்தி; 1,00,008 வடை மாலை

  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இன்று (டிச.,25) அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.publive-image

  10:45 (IST)25 Dec 2019

  பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

  சென்னையில் பெட்ரோல், 9வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி, லிட்டர் ரூ.70.82 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

  10:23 (IST)25 Dec 2019

  வாஜ்பாய் பிறந்தநாள் – நினைவிடத்தில் மோடி மரியாதை

  முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 95வது பிறந்தநாளையொட்டி, டில்லியில் அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்

  Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Live Updates : கொசுக்களை காட்டி கோடிகோடியாய் கொள்ளை அடித்துள்ளனர்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்துள்ளார். முதல்வர் துணை முதல்வர் அமைச்சர்கள் என பலர் மீதும் ஊழல் புகார்கள். விசாரணைகள் வழக்குகள் என தமிழக அமைச்சரவையே 'கிரிமினல் கேபினட்' ஆக இருக்கிறது.எனவே ஊழலாட்சிக்கு முடிவு கட்ட உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளியுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  உ.பி.,யில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்த 16,000 க்கும் அதிகமான பதிவுகளை போலீசார் நீக்கி உள்ளனர்.

  Tamil Nadu Narendra Modi Atal Bihari Vajpayee Christmas
  Advertisment

  Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

  Follow us:
  Advertisment