ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் சிலை அவமதிப்பு: மு.க.ஸ்டாலின்- தலைவர்கள் கண்டனம்

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்

Tamilnadu news updates

Flash News in Tamilnadu Today Updates : நாட்டின் எந்தப் பகுதியிலும், ரேஷன் பொருட்களை வாங்கும்,’ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை, 2020, ஜன., 15ல்அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, ஆந்திரா உட்பட, 12 மாநிலங்களில் இது அறிமுகம் செய்யப்படுகிறது. எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக, மத்திய அரசு புதிய வியூகத்தைவகுத்துள்ளது. .இந்த திட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ளோர், மற்றொரு மாநிலத்திலும் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களின் கைரேகை பதியும் முறை செயல்பாட்டிற்கு வராததால், மத்திய அரசின், ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை, தமிழகத்தில் அமல்படுத்துவதில் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

தர்பார் படத்துல அரசியல் இல்லையாம். டைரக்டர் முருகதாஸே சொல்லியிருக்காரு. படத்துல தர்பார் படத்தில் ரஜினியின் அதிரடி ‘பஞ்ச் டயலாக்’குகள் அதிகம் உள்ளது. ஆனால் அரசியல் எதுவும் இல்லை. மேலும் இந்த படத்துல பல சம்பிரதாயங்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்கனு அவர் சொல்லியிருக்காப்ல, பார்ப்போம்..
தலவரே, படத்துல தான் அரசியல் இல்ல, நீங்களாவது அரசியலுக்கு வர்ற ஐடியாவில இருக்கீங்களா இல்லையா!!!, முடியல..

இதுபோன்ற நடப்பு நிகழ்ச்சிகளை சுவைபட தெரிந்துகொள்ள…

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, தமிழகத்தில், தி.மு.க., நடத்திய பேரணியை போல, தேசியஅளவில், காங்கிரஸ் கட்சி சார்பில்,அனைத்து மாநில கட்சிகளையும் அழைத்து பேரணி நடத்த வேண்டும் என, அக்கட்சி மேலிடத்திடம், தி.மு.க., வலியுறுத்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து,தமிழகத்தில், காங்கிரஸ் சார்பில், பெரிய அளவில் பேரணி நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க., தலைமை, அப்பொறுப்பை ஏற்றுநடத்தியுள்ளது.எனவே, காங்கிரஸ் சார்பில், பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றஅதிருப்தி, மாநில கட்சிகளின் தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியும், சிறுபான்மையினர், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, பெரிய அளவில் பேரணியை, தேசிய அளவில் நடத்த வேண்டும் என, காங்கிரஸ் மேலிடத்திற்கு, தி.மு.க., தரப்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளது.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


21:48 (IST)29 Dec 2019

அதிமுக ஆட்சியில் தலைவர்கள் சிலைக்கும் பாதுகாப்பில்லை – ஸ்டாலின் டுவிட்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகராம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் தலைவர்கள் சிலைக்கும் பாதுகாப்பில்லை என்று டுவிட் செய்துள்லார். மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “அதிமுக ஆட்சியில் பொதுமக்களைப் போலவே தலைவர்கள் சிலைக்கும் பாதுகாப்பில்லை. ஶ்ரீவில்லிப்புத்தூரில் காமராசர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இழிசெயல்கள் தொடர இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற துணிச்சலே காரணம். கையாலாகாத இந்த அரசு சமூக விரோதிகளை அடக்கத் தயங்கக் கூடாது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

20:15 (IST)29 Dec 2019

ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் சிலையை அவமதித்த புகாரில் ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் காமராஜர் சிலையை அவமதித்த புகாரில் ஜெயராம் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

19:40 (IST)29 Dec 2019

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 30 வாக்குச்சாவடிகளில் டிசம்பர் 31-க்குள் மறுவாக்குப்பதிவு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 30 வாக்குச்சாவடிகளில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மறுவாக்குப்பதிவு நடைபெறும். வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல், வாக்குப்பெட்டியை கைப்பற்றுதல் போன்ற காரணங்களால் மறுவாக்குப்பதிவு நடைபெறும்.

19:22 (IST)29 Dec 2019

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்த பிரியங்கா காந்திக்கு அபராதம்

உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்த காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்திக்கு லக்னோ காவல்துறை ரூ.6,100 அபராதம் விதித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய முன்னாள் காவல்துறை அதிகாரி தாராபுரியை சந்திக்க பிரியங்கா காந்தி  நேற்று லக்னோ சென்றபோது போலீசார் அவருடைய வாகனத்துக்கு அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

18:12 (IST)29 Dec 2019

குடியுரிமைத் சட்டத்தைச் ஆதரித்த பகுஜன் சமாஜ் பெண் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து நீக்கம்

குடியுரிமைத் சட்டத்தைச் ஆதரித்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வை அக்கட்சி தலைவர் மாயாவதி அதிரடியாக நீக்கியுள்ளார்.

18:10 (IST)29 Dec 2019

ஸ்ரீவில்லிப்புத்தூரில் காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம்

அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சிலை அவமதிப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

17:26 (IST)29 Dec 2019

நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது

திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனையாளருக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

16:52 (IST)29 Dec 2019

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது –  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது. உலக நாடுகளைப் பார்த்து இந்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

16:35 (IST)29 Dec 2019

ஸ்ரீவில்லிப்புத்தூரில் காமராஜர் சிலையை அவமதித்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் – கே.எஸ்.அழகிரி

ஸ்ரீவில்லிப்புத்தூரில் காமராஜர் சிலையை அவமதித்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

16:17 (IST)29 Dec 2019

தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க சென்னையில் ஆற்றல் சேமிப்பு தீர்வு மையம் – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க சென்னை தரமணியில் ஆற்றல் சேமிப்புத் தீர்வு மையம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

15:56 (IST)29 Dec 2019

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணியில் ஈடுபட்ட 10,000 பேர் மீது வழக்குப்பதிவு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை ஆலந்தூரில் பேரணியில் ஈடுபட்ட 10 ஆயிரம் பேர் மீது காவல்துறையி‌னர் வழக்குப்பதிவு செய்துள்ள‌னர்.

15:54 (IST)29 Dec 2019

மகளிருக்கான உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாம்பியன்

மாஸ்கோவில் நடைபெற்ற மகளிருக்கான உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சீனாவின் லீ டிங்ஜியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

15:29 (IST)29 Dec 2019

கோலத்தின் மூலம் எதிர்ப்புகளை பதிவு செய்ததால்தான் கைது நடந்திருக்கும் – அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை பெசன் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கோலமிட்ட பெண்களை போலீசார் கைது செய்தது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மாஃபா பாட்னியராஜன், கோலம் போட்டதற்காக அல்ல கோலத்தின் மூலம் எதிர்ப்புகளை பதிவு செய்ததால்தான் கைது நடவடிக்கை நடந்திருக்கும் என்று கூறினார்.

14:31 (IST)29 Dec 2019

ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக ஹேமந்த் சோரன், இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் ம‌ம்தா பானர்ஜி, அசோக் கெலாட், பூபேஷ் பாகல், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

13:41 (IST)29 Dec 2019

லேசான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13:30 (IST)29 Dec 2019

மக்கள் எழுச்சியை நசுக்க முடியாது – வைகோ

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலமிட்ட பெண்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் எழுச்சியை நசுக்க முடியாது என்பதை வரலாற்றில் இருந்து ஆட்சியாளர்கள் பாடம் கற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

13:09 (IST)29 Dec 2019

வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதமா?

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலமிட்ட பெண்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

12:40 (IST)29 Dec 2019

வங்கி வாராக்கடன் அதிகரிக்கும் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

பொருளாதார மந்த நிலை காரணமாக 2019ல் 9.3 சதவீதமாக உள்ள வாராக்கடன் 2020ஆம் ஆண்டில் 9.9சதவீதமாக அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

12:24 (IST)29 Dec 2019

சென்னையில் கோலம் போட்டவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது – ஸ்டாலின்

சென்னையில் குடியுரிசை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

11:25 (IST)29 Dec 2019

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு – சென்னையில் பலர் கைதாகி விடுதலை

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெசன்ட் நகர் பகுதியில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோலங்கள் போடப்பட்டன. இந்த கோல நிகழ்ச்சி காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். கோலம் போட முயன்ற பெண்கள், இளம்பெண்கள், 3 வக்கீல்கள் உள்ளிட்ட பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சிறிதுநேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன்காரணமாக அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.

11:05 (IST)29 Dec 2019

” மான் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

2019ம் ஆண்டின் இறுதி ” மான் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இளைஞர்கள் நலன் , நாட்டின் எதிர்காலம், விவேகானந்தரின் நற்சிந்தனைகள் உள்ளிட்டவைகள் அவரது உரையில் முக்கிய இடம்பெற்றுள்ளன.

10:47 (IST)29 Dec 2019

பழநி முருகன் கோயிலில் தனுஷ் குடும்பத்துடன் வழிபாடு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும்,  நடிகர் ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ், பழநி தண்டாயுதபாணி கோயிலில் மனைவி, குழந்தைகள் உள்ளிட்டோருடன் சாமி தரிசனம் செய்தார்.

10:17 (IST)29 Dec 2019

ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.85 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.71.48 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

10:09 (IST)29 Dec 2019

ஜார்க்கண்ட் சென்றார் ஸ்டாலின்

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியை தன்வசம் ஆக்கிக்கொண்டது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன், இன்று ( 29ம் தேதி) பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று, ஸ்டாலின், ஜார்க்கண்ட் சென்றுள்ளார். அவருடன் டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Live Updates : சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, என்.பி.ஆர்., எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவை, மற்றொரு செல்லாத ரூபாய் அறிவிப்பு போன்றதாகும்,” என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தலைமை தளபதி பதவியால், முப்படைகளும் எழுச்சி பெறும், வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எல்லையில் அண்டை நாடுகள் வாலாட்டுவதும் குறைய வாய்ப்புள்ளது என, பாதுகாப்பு துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news today live updates tn politics local body electionnewyear darbar ration card stalin

Next Story
Hai guys : தர்பார் படம்ல அரசியல் இல்லையாம்ல….கேட்டுக்கோங்க மக்காஸ்hai guys, darbar, rajinikanth, a r murugadoss, politics, cabinet ministry, ravindranath, deputy chiefminister panneer selvam, bsnl, mtnl, chennai, metro stations
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com