Flash News in Tamilnadu Today Updates : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வில்சன் எஸ்.ஐ.,யை சுட்டு கொன்ற பயங்கரவாதிகள் மீது 'உபா' சட்டம் பாய்ந்தது. இந்த சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களை 30 நாட்கள் வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கலாம். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் 180 நாட்கள் சிறையில் அடைத்து வைக்கலாம். சிறப்பு கோர்ட்டில் மட்டுமே விசாரணை நடைபெறும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
குரூப் 4 தேர்வு முறைகேடு - அதிர்ச்சியில் தேர்வர்கள்
மருத்துவ மாணவி 'நிர்பயா' வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேருக்கு பிப். 1ல் துாக்கு தண்டனையை நிறைவேற்ற டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. தண்டனை நிறைவேற்றப்படுவதை இழுத்தடிக்க கடைசி முயற்சியாக குற்றவாளி அளித்த கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. விவகாரத்தில், எதிர்க் கட்சிகள் அனைவரும் நிலமையை புரிந்துகொண்டு ஓரணியில் திரள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
இந்தி நடிகை சபானா ஆஷ்மியின் விபத்து வருத்தமளிக்கிறது; காயம் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் - பிரதமர் மோடி ட்வீட்
The news of @AzmiShabana Ji’s injury in an accident is distressing. I pray for her quick recovery.
— Narendra Modi (@narendramodi) January 18, 2020
மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக காலத்தில் கூட்டுறவுத் துறை மிகப்பெரிய கடனில் மூழ்கி இருந்ததாக குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சிக்கு வந்த பின், தற்போது, சரியான அதிகாரிகளை கொண்டு சிறப்பாக செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டை பாடப்புத்தகத்தில் சேர்ப்பது குறித்து முதலமைச்சர் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் ட்வீட்
ஜல்லிக்கட்டை பாடப்புத்தகத்தில் சேர்ப்பது குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
— K.A Sengottaiyan (@KASengottaiyan) January 18, 2020
ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகி வரும் கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படத்தை ஐசிசி பகிர்ந்துள்ளது
A glimpse of Motera Cricket Stadium under construction in Ahmedabad 👀
When complete, it will be the largest in the world, holding 110,000 fans 🤯 pic.twitter.com/7iIKcw3XQ1
— ICC (@ICC) January 18, 2020
மும்பை அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் மூத்த பாலிவுட் நடிகை ஷபனா ஆஸ்மி பலத்த காயமடைந்தார்.
மும்பை - புனே விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த ஷபனா ஆஸ்மியின் கார், மும்பையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள கலாபூரில் இன்று மாலை விபத்துக்கு ஆளானது. கார், டிரக்கில் மோதியதால் ஷபனாவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, மஹாராஷ்டிராவின் ரைகட் மாவட்டத்தின் பன்வேல் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஷபனா அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடைபெற்ற இடத்தின் அருகே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
குடியரசு தினத்திற்கான ஒத்திகை நடைபெறுவதையொட்டி சென்னையில் சாந்தோம் சர்ச், போர் நினைவுச்சின்னம் பகுதியில் வருகிற 20, 22, 23, 26 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்தப் பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.
துக்ளக், முரசாெலி தொடர்பான விவகாரங்களில் ரஜினியின் பேச்சு குறித்து பத்திரிகையாளர்கள் கே எஸ் அழகிரியிடம் கேட்டதற்கு, ரஜினி நல்லவர். அவர் முரசொலியையும், துக்ளக்கையும் தொடர்புபடுத்தி பேசியது தவறு. வாய் தவறி பேசியிருப்பார் என்று கூறினார்.
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலை உள்ளது. அதையே சொன்னோம். அதனால் பாதிப்பில்லை. பிரச்னை வந்தால் இரண்டு தலைவர்களும் பேசி தீர்த்துக்கொள்வோம் என்று ஸ்டாலினை சந்தித்தபின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறினார்.
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்று அவரது மகன் நமல் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். ரஜினி, இலங்கை வர விரும்பினால் தாராளமாக வரலாம். அவருக்கு தங்கள் நாடு விசா தர மறுத்ததாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று நமல் மேலும் தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சு சற்று ஓய்ந்துள்ள நிலையில், ஸ்டாலின் முதல்வராவதை தடுக்க திமுகவிலேயே ஒரு பெரிய கூட்டம் இயங்குவதாக விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் கொளுத்திப்போட விவகாரம் மேலும் அனல் பறக்க துவங்கியது. இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சந்தித்துப்பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முரசொலி வைத்திருந்தால் திமுககாரன், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என துக்ளக் பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார். ரஜினியின் இந்த பேச்சிற்கு பல்வேறு தரப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. இந்நிலையில், ரஜினிக்கு பதிலடி அளி்ககும் வகையில் முரசொலியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
முரசொலி நாளிதழை வைத்திருந்தால் திராவிட இயக்கத் தமிழன், மனிதன் எனப் பொருள் என்று முரசொலி நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, பொறுப்பேற்றுள்ள, ஊராட்சி தலைவர்களுக்கு, 'செக்' வைக்கும் விதமாக , அதிரடி உத்தரவை, அரசு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் காசோலை முறையை ரத்து செய்து, அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, ஊராட்சி தலைவர்கள் , ஊராட்சி செலவுகளுக்காக இனி காசோலைகளை பயன்படுத்த முடியாது. பொது நிதி மேலாண்மை எனும், ' ஆன்லைன்' வழி பரிவர்த்தனையை மட்டுமே செயல்படுத்தும்நிலை ஏற்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights