குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி முக்கிய முடிவு : அதிர்ச்சியில் தேர்வர்கள்...
TNPSC group 4 exam : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், தேர்வு ரத்து போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற தகவல், தேர்வர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், தேர்வு ரத்து போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற தகவல், தேர்வர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Advertisment
விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், அரசு பணிகளுக்காக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், வரி தண்டலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, குரூப் 4 தேர்வு, 2019 செப்டம்பரில் நடந்தது. இதன் முடிவுகள், நவம்பரில் வெளியாகின.
இதில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பட்டியலில், முதல், 100 இடங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றனர். இதுகுறித்து, புகார் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய தேர்வு மையங்களுக்கு சென்று, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குரூப் 4 தேர்வில் முன்னிலை இடம்பெற்ற, 50க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்கு ஆஜரான தேர்வர்களுக்கு, குரூப் 4 பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட, புதிய வினாத்தாளுடன் மாதிரி தேர்வும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வின் விடைத்தாள்களுடன், தேர்வர்கள், ஏற்கனவே எழுதிய, குரூப் 4 தேர்வு விடைகளும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு உள்பட, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளில், சில இடைத்தரகர்கள் செயல்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மீது, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
19 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டது யார் யார் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், யாராவது நீதிமன்றம் சென்றால் தேர்வை ரத்து செய்ய நீதிமன்றம் கட்டாயமாக உத்தரவிடும் நிலை உள்ளது. இதனால், குரூப் 4 தேர்வை ரத்து செய்வது தொடர்பாகவும் டி.என்.பி.எஸ்.சி உயரதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும், சில நாட்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி வட்டாரம் உறுதியாக கூறுகிறது.
முறைகேடு புகாரால் தேர்வு ரத்து செய்யப்பட்டால், வரும் காலங்களிலும் தேர்வாணையத்தின் மீது சந்தேகப் பார்வை எழும் என்பதால், எதிர்காலங்களில் தேர்வு விதிமுறைகளை தேர்வாணையம் கடுமையாக்க வேண்டும் என்று அரசுத்தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வர்கள் கூறுகின்றனர்.