Tamil Nadu News Today: ‘சபானா ஆஷ்மியின் விபத்து வருத்தமளிக்கிறது’ – பிரதமர் மோடி

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Live Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil Nadu News Today Live
Tamil Nadu News Today Live

Flash News in Tamilnadu Today Updates : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வில்சன் எஸ்.ஐ.,யை சுட்டு கொன்ற பயங்கரவாதிகள் மீது ‘உபா’ சட்டம் பாய்ந்தது. இந்த சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களை 30 நாட்கள் வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கலாம். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் 180 நாட்கள் சிறையில் அடைத்து வைக்கலாம். சிறப்பு கோர்ட்டில் மட்டுமே விசாரணை நடைபெறும்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

குரூப் 4 தேர்வு முறைகேடு – அதிர்ச்சியில் தேர்வர்கள்

மருத்துவ மாணவி ‘நிர்பயா’ வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேருக்கு பிப். 1ல் துாக்கு தண்டனையை நிறைவேற்ற டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. தண்டனை நிறைவேற்றப்படுவதை இழுத்தடிக்க கடைசி முயற்சியாக குற்றவாளி அளித்த கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


21:44 (IST)18 Jan 2020

சிஏஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக ஓரணியில் திரளுங்கள்

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. விவகாரத்தில், எதிர்க் கட்சிகள் அனைவரும் நிலமையை புரிந்துகொண்டு ஓரணியில் திரள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

21:22 (IST)18 Jan 2020

25.8 மெட்ரிக் டன் குப்பைகள்‌

காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது சென்னை மெரினா உள்‌ளிட்ட கடற்கரையில்‌ இருந்து 25.8 மெட்ரிக் டன் குப்பைகள்‌ அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி‌ தெரிவித்துள்ளது

21:22 (IST)18 Jan 2020

ரஜினிகாந்த் மீது 6 காவல் நிலையத்தில் புகார்

பெரியார் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது இதுவரை ஆறு மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

20:52 (IST)18 Jan 2020

சபானா ஆஷ்மியின் விபத்து வருத்தமளிக்கிறது – பிரதமர் மோடி

இந்தி நடிகை சபானா ஆஷ்மியின் விபத்து வருத்தமளிக்கிறது; காயம் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் – பிரதமர் மோடி ட்வீட்

20:51 (IST)18 Jan 2020

42 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் 42 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

20:20 (IST)18 Jan 2020

திமுக பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு அறிவிப்பு

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 31ம் தேதி திருச்சியில் நடைபெறும் – திமுக தலைமை அறிவிப்பு

20:19 (IST)18 Jan 2020

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டத்தில் உயர் மட்டக்குழு பரிந்துரையின்படி தண்ணீர் திறந்துவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

19:36 (IST)18 Jan 2020

திமுக காலத்தில் கடனில் மூழ்கியது கூட்டுறவுத்துறை

மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக காலத்தில் கூட்டுறவுத் துறை மிகப்பெரிய கடனில் மூழ்கி இருந்த‌தாக குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சிக்கு வந்த பின், தற்போது, சரியான அதிகாரிகளை கொண்டு சிறப்பாக செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.

19:15 (IST)18 Jan 2020

கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்

ஜல்லிக்கட்டை பாடப்புத்தகத்தில் சேர்ப்பது குறித்து முதலமைச்சர் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் ட்வீட்

19:02 (IST)18 Jan 2020

தலித் மக்களுக்கு எதிராக போராடுகிறார்கள்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் அனைவரும் தலித் மக்களுக்கு எதிராக போராடுகிறார்கள் என்று  உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

18:51 (IST)18 Jan 2020

ஸ்டாலினுக்கு, அழகிரி என்ற பெயர் ஆகவே ஆகாது

ஸ்டாலினுக்கு, அழகிரி என்ற பெயர் ஆகவே ஆகாது, அது மதுரை என்றாலும் சரி, கடலூர் என்றாலும் சரி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.

18:50 (IST)18 Jan 2020

அமெரிக்க ஹூஸ்டன் பல்கலை. முதன்மையர் பேட்டி

தமிழகத்தின் கலை, கலாச்சாரம் உலகளவில் மிகப்பெரும் தொல்லியல் சிறப்புமிக்கது

கீழடி அகழாய்வுப் பொருட்கள் மற்றும் ஜல்லிகட்டைப் பார்வையிட்ட பின் அமெரிக்க ஹூஸ்டன் பல்கலை. முதன்மையர் பேட்டி

18:48 (IST)18 Jan 2020

ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமரக்கூடிய ஸ்டேடியம்

ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகி வரும் கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படத்தை ஐசிசி பகிர்ந்துள்ளது

18:32 (IST)18 Jan 2020

கனமழை

கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

18:27 (IST)18 Jan 2020

அமித்ஷாவை சந்தித்து நன்றி

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதற்காக, டெல்லி வாழ் பாக். அகதிகள், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

18:14 (IST)18 Jan 2020

விபத்து – மூத்த பாலிவுட் நடிகை ஷபனா ஆஸ்மி படுகாயம்

மும்பை அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் மூத்த பாலிவுட் நடிகை ஷபனா ஆஸ்மி பலத்த காயமடைந்தார்.

மும்பை – புனே விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த ஷபனா ஆஸ்மியின் கார், மும்பையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள கலாபூரில் இன்று மாலை விபத்துக்கு ஆளானது. கார், டிரக்கில் மோதியதால் ஷபனாவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, மஹாராஷ்டிராவின் ரைகட் மாவட்டத்தின் பன்வேல் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஷபனா அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடைபெற்ற இடத்தின் அருகே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

17:30 (IST)18 Jan 2020

குடியரசு தின ஒத்திகை- சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

குடியரசு தினத்திற்கான ஒத்திகை நடைபெறுவதையொட்டி சென்னையில் சாந்தோம் சர்ச், போர் நினைவுச்சின்னம் பகுதியில் வருகிற 20, 22, 23, 26 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்தப் பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.

14:51 (IST)18 Jan 2020

ஜிஎஸ்டி வரி குறைப்பு

தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால்தான், பல பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 2017 – 18ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டியில், ரூ.4073 கோடி மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

14:20 (IST)18 Jan 2020

காஷ்மீரில் மொபைல் போன் சேவை துவக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொபைல் போன் சேவை பல மாதங்களுக்கும் மேலாக துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், எஸ்எம்எஸ், குரல் அழைப்புகள் உள்ளிட்ட சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

14:07 (IST)18 Jan 2020

ரஜினி நல்லவர் ; வாய் தவறி பேசியிருப்பார் – அழகிரி

துக்ளக், முரசாெலி தொடர்பான விவகாரங்களில் ரஜினியின் பேச்சு குறித்து பத்திரிகையாளர்கள் கே எஸ் அழகிரியிடம் கேட்டதற்கு, ரஜினி நல்லவர். அவர் முரசொலியையும், துக்ளக்கையும் தொடர்புபடுத்தி பேசியது தவறு. வாய் தவறி பேசியிருப்பார் என்று கூறினார்.

13:17 (IST)18 Jan 2020

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை – அழகிரி

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலை உள்ளது. அதையே சொன்னோம்.  அதனால் பாதிப்பில்லை.  பிரச்னை வந்தால் இரண்டு தலைவர்களும் பேசி தீர்த்துக்கொள்வோம் என்று ஸ்டாலினை சந்தித்தபின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறினார்.

12:39 (IST)18 Jan 2020

ஸ்டாலின் உடன் கே எஸ் அழகிரி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சந்தித்துப் பேசியுள்ளார்.

முன்னதாக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஸ்டாலினை சந்தித்துப்பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

11:54 (IST)18 Jan 2020

இலங்கை அதிபர் ராஜபக்ஷே ரஜினி ரசிகர் : நமல் ராஜபக்ஷே

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்று அவரது மகன் நமல் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். ரஜினி, இலங்கை வர விரும்பினால் தாராளமாக வரலாம். அவருக்கு தங்கள் நாடு விசா தர மறுத்ததாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று நமல் மேலும் தெரிவித்துள்ளார்.

11:03 (IST)18 Jan 2020

திமுக கூட்டணி உடையாது – முத்தரசன்

திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ளது குடும்ப பிரச்னை. இதனால் கூட்டணி உடையும் என எதிர்பார்க்காதீர்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

10:26 (IST)18 Jan 2020

ஸ்டாலினை சந்திக்கிறார் அழகிரி

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சு சற்று ஓய்ந்துள்ள நிலையில், ஸ்டாலின் முதல்வராவதை தடுக்க திமுகவிலேயே ஒரு பெரிய கூட்டம் இயங்குவதாக விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் கொளுத்திப்போட விவகாரம் மேலும் அனல் பறக்க துவங்கியது. இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சந்தித்துப்பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

09:52 (IST)18 Jan 2020

பெட்ரோல், டீசல் விலை குறைவு

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.19 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.72.50 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

09:45 (IST)18 Jan 2020

முரசொலியில் திமுக பதிலடி

முரசொலி வைத்திருந்தால் திமுககாரன், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என துக்ளக் பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார். ரஜினியின் இந்த பேச்சிற்கு பல்வேறு தரப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. இந்நிலையில், ரஜினிக்கு பதிலடி அளி்ககும் வகையில் முரசொலியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முரசொலி நாளிதழை வைத்திருந்தால் திராவிட இயக்கத் தமிழன், மனிதன் எனப் பொருள் என்று முரசொலி நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates : காணும் பொங்கலான நேற்று, சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள் வெள்ளத்தால் சென்னை திணறியது. பொதுமக்களுக்கு உதவ, காவல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.121 குழந்தைகள் மீட்புகாணும் பொங்கலை கொண்டாட, பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நேற்று, மெரினா கடற்கரைக்கு வந்த குழந்தைகள், கூட்ட நெரிசலில் காணாமல் போயினர். கூட்டத்தில் காணாமல் போவதை தடுக்க, குழந்தைகள் கைகளில், அடையாள அட்டைகளை போலீசார் கட்டி விட்டனர். இதனால், 121 குழந்தைகளை மீட்கப்பட்டு, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்கப்பட்டனர்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, பொறுப்பேற்றுள்ள, ஊராட்சி தலைவர்களுக்கு, ‘செக்’ வைக்கும் விதமாக , அதிரடி உத்தரவை, அரசு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் காசோலை முறையை ரத்து செய்து, அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, ஊராட்சி தலைவர்கள் , ஊராட்சி செலவுகளுக்காக இனி காசோலைகளை பயன்படுத்த முடியாது. பொது நிதி மேலாண்மை எனும், ‘ ஆன்லைன்’ வழி பரிவர்த்தனையை மட்டுமே செயல்படுத்தும்நிலை ஏற்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news today live updates tn politics thuglak rajinikanth speech dmk

Next Story
Hai Guys – காணும் பொங்கல கண்டும் காணாம விட்றாதீங்க பாஸ் ; அப்புறம் காணாம போயிரும்..Hai guys, pongal, pongal 2020, pongal celcebration, kaanum pongal, chennai, marina beach, mahendra singh dhoni, bcci, fans, twitter, madurai, jallikattu, alanganallur jallikattu live, alanganallur jallikattu 2020
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express