/tamil-ie/media/media_files/uploads/2020/02/template-2020-02-20T081719.244.jpg)
Tamil nadu news today updates : அரசு பணிகளுக்கான தேர்வுகள் அனைத்திலும் கேலிக்கூத்து நடப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. போலீஸ் மற்றும் சிறை வார்டன் உள்ளிட்ட, 8,888 பணிகளுக்கான தேர்வில் நடந்ததாக சொல்லப்படும் முறைகேடுகள் குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பான, அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கும்படி, சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.
நடிகர் தனுஷ்க்கு தலை இருக்காது - கொலைமிரட்டலால் பரபரப்பு
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஏப்ரல் மாதம், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் பதவி குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து உலா வரும் நிலையில் அப்பதவிக்கு இருக்கும் ஒரே போட்டியாளராக ராகுல் பார்க்கப்படுகிறார். ஒட்டுமொத்த கட்சியும் அவரே தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என விரும்புவதாக காங். வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்., காரிய கமிட்டி கூட்டத்தை தொடர்ந்து கட்சித் தலைவராக ராகுல் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
"எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பாக சண்டைக் காட்சி நடிகர்களும் நூலிழையில் உயிர் தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளரையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப்படுகிறது.
அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். 'இந்தியன் 2' படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனைக் கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்?. அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்கக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.
இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன்.
- சிம்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வலைச்சேரிப்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளிக் கூடத்தில், வெறும் 23 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், கொட்டாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.
3 ஆண்டுகளாக, இந்த பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் சரவணன், அடிக்கடி பள்ளிக் கூடத்திற்கு மதுபோதையில் வருவதாகக் கூறப்படுகிறது. சம்பவ தினத்தன்று, மிதமிஞ்சிய மதுபோதையில், தள்ளாடியபடியே வகுப்பறைக்கு வந்துள்ளார். இந்த தகவல் கிராமத்திற்குள் பரவியதும், பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த பொறுப்பற்ற ஆசிரியரை கிராமத்தினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக, கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரியிடமும் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போதை தலைமையாசிரியரை மாவட்ட கல்வி அலுவலர் மீனாவதி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அடையாற்றில் வேதியல் கழிவுகளை வெளியேற்றுபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க குழு அமைத்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு பின்புறம் ஓடும் அடையாற்றில் கழிவுநீர் கலப்பதால் ஆற்றில் நுரை பொங்கி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவது குறித்து தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, நீர்நிலை மாசை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளபோதும் இது போன்ற நிலை தொடர்வதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
நடிகர் விஜய்யின் 65வது திரைப்படத்தை பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜீ.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். சுதா கொங்கராவின் கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும், மாஸ்டர் படத்தின் ரீலிஸ்க்கு பிறகு , விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யாத, திருச்சி-கரூர்-அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்காத அரைக்கிணறு தாண்டும் #ProtectedAgriculturalZone மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுத்துவிட்டது இவ்வரசு.
மக்களை ஏமாற்றுவதே இவர்கள் கொள்கை. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?
#TNBudget தொடரில், #CAA வை ஆதரித்ததற்கு பிராயச்சித்தம் தேடிட, தமிழகத்தில் #NPR நடக்காது என அறிவிப்பீர்களா என்ற என் கேள்விக்கு ஆளுவோரிடம் பதில் இல்லை.
ஒட்டுமொத்தப் பாதிப்புகள் குறித்து பட்டியலிட்டும், #NPR நடக்காது என்ற உறுதியை அளிக்க ஆளும் தரப்பு தயாராக இல்லை
-மு.க.ஸ்டாலின்
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக பொருளாளர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: “பேரவையில் வேளாண் மண்டலம் குறித்த தீர்மானம் நிறைவேற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் எங்களுக்கு வழங்கப்பட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யாமல் வேளாண் மண்டலம் அமைக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
நெல்லையில் திமுக பிரமுகரின் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான சொகுசு விடுதி கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் அய்யாதுரை பாண்டியனுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர், சோதனையில் ஈடுபட்டிருப்பது, நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமுக பொருளாளர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!@arivalayam#Duraimurugan#Chennai | https://t.co/jxhyjmvA6fpic.twitter.com/HCIXcA33Fj
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 21, 2020
தாய்மொழி தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மொழிப் பாதுகாப்பே இனப் பாதுகாப்பு, தாய்மொழியை போற்றுவோம்” வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்', 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என சொல்லி வளர்ந்தது தமிழினம்!
தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி!
மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு; தாய்மொழி போற்றுவோம்!
அனைவர்க்கும் தாய்மொழி தின வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.
'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்', 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என சொல்லி வளர்ந்தது தமிழினம்!
தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி!
மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு; தாய்மொழி போற்றுவோம்!
அனைவர்க்கும் #motherlanguageday2020 வாழ்த்துகள்! pic.twitter.com/SU9Ob87wPX
— M.K.Stalin (@mkstalin) February 21, 2020
தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக தமிழக அரசு செயல்படும். தேசிய குடிமக்கள் பதிவேடு சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும் விஷமப் பிரசாரங்களில் இருந்து அமைதி காத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை பறக்கும் படையில் நியமிக்க வேண்டும். மாணவிகளை ஆண் ஆசிரியர்கள் சோதனை செய்யக் கூடாது. பெண் ஆசிரியர்களை கொண்டு தான் சோதனை செய்ய வேண்டும். அடிக்கடி புகார்களுக்கு இடமளிக்கக்கூடிய தேர்வு மையங்களை பறக்கும்படை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்” என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் மனதார ஏற்போம். ஆனால், அழைப்பு ஏதும் விடுக்கவில்லை. நடிகர் விஜயை காங்கிரஸ் அழைக்கவில்லை; ஆனால், விஜய் வந்தால் ஏற்றுக்கொள்வது குறித்து தலைமை முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
தாய்மொழி தினத்தையொட்டி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழ் அறிஞர்களை போற்றி, தமிழை பாதுகாத்து வளர்க்க உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தை புனரமைத்து செயலால் நன்றியை காட்டுவோம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பல கேள்விகள்,சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்த பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை,முழு பலம்,என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான். வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியை சொல்லிலின்றி,தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்.” என்று தெரிவித்துள்ளார்.
பல கேள்விகள்,சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்த பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை,முழு பலம்,என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான். வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியை சொல்லிலின்றி,தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 21, 2020
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் வழக்குகளை சிபிஐ விசாரிக்கக்கோரும் மனு மீது டிஎன்பிஎஸ்சி தலைவர், சிபிஐ, தமிழக தலைமைச் செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை மார்ச் 20க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது
தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிகள் ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும். பாதுகாப்பை உறுதி செய்யும் படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் செய்யப்படும்: இயக்குனரும் ஃபெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
நடிகர் அஜித், பெரும்பாலும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. இதை அவர் கொள்கையாகவே வைத்துள்ளார். இந்நிலையில், தனது உதவியாளரின் இல்ல திருமண விழாவில் அவர் பங்கேற்றுள்ளார். அந்த போட்டோ, சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
கடல் வணிகத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்த பின் பேசிய அவர், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கல்வி, கலாச்சாரம், மருத்துவம் உள்ளிட்டவைகளில் தமிழகம் சிறந்து விலங்குவதால் தான் சிறந்த மாநிலத்திற்கான அங்கீகாரம் கிடைத்தது என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் ஓவைசி கலந்து கொண்டார்.
பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா என்ற இளம்பெண் மேடையில் பேசும் போது, பாகிஸ்தான் வெல்க என்று பொருள் தரும் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பினார். அவரை தடுத்து நிறுத்தி ஓவைசி உள்ளிட்டோர் முயன்றனர். எனினும் அந்தப் பெண் மைக்கை கொடுக்காமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார். இதனையடுத்து காவல்துறையினர் மேடையேறி அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக கீழிறக்கி கைது செய்தனர்.
காரைக்குடி பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். வயது 47. இவர் சிங்கப்பூரில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சமையல்காரராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்துள்ளார். இதனிடையே சந்திரனுக்கு தொடர் இருமல், சளி பாதிப்பு இருந்ததால் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காரைக்குடி அரசு மருத்துவர்கள், மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியதால், சந்திரன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள இவிபி படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights