Tamil Nadu news Highlights : மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீட்டினை வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. 24ம் தேதி அன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தேர்தல் ஆதாயத்திற்காகவே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் இருந்து, இந்த இட ஒதுக்கீட்டினால் பாதிப்பு ஏதும் இல்லை என்றூ கூறப்பட்டது. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பது தொடர்பாக இன்று முடிவெடுக்க உள்ளனர்.
பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி அரசாணை பிறப்பிப்பு
அரசு பணியில் உள்ள மகளிருக்கான பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்த் 12 மாதங்களாக உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு. 2011ம் ஆண் 6 மாதங்களாக இருந்த பேறுகால விடுப்பு பிறகு 9 மாதங்களாக அறிவிக்கப்பட்டது. தற்போது அது 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றி, கடந்த 13ம் தேதி நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின் போது இந்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நேற்றிரவு (24/08/2021) இந்த அரசாணையை வெளியிட்டது மாநில அரசு.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு துவங்கி இன்று காலை வரை கனமழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Ind vs England
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இன்று லீட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு துவங்க உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான வரியை 3% குறைக்க ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.43 குறையும்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியுள்ளது. ரோகித் 19, ரஹானே 18, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகியுள்ளனர்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சந்தித்து பேசியுள்ளார். மேகதாது அணை குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
கேரளாவில் ஒரேநாளில் 31,445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 24,296 ஆக இருந்த நிலையில் இன்று 31,445 ஆக அதிகரித்துள்ளது. ஓணம் பண்டிகைக்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 2 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக செரினா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து உடைத்த வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 9 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உளுந்தூர்பேட்டை மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்
சென்னை வண்ணாரப்பேட்டையில், மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது மண் சரிவில் சிக்கியிருந்த தொழிலாளிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவில் சொத்துக்கள் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த நிர்வாக விளக்கங்கள் வழங்கப்படாததால் விதிகள் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு அமர்வு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், “சட்டத்தில் உள்ள தேவையற்ற விதிகளை நீக்கி, புதிய விதிகளை வகுக்க வேண்டும். கோவில்களின் சொத்துக்கள் முறையாக பராமரிக்க வேண்டும்; கோவில்களின் கட்டிடக்கலை மதிப்புக்களை பாதுகாக்க வேண்டும்” என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நடிகர் ஆர்யா குறித்து சமூக வலைதளங்களில் தவறாக விமர்சனம் செய்தவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய முடிவு செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளில், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 13.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை வைக்க வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான சிடி ரவி கூறியுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 2 ஆண்டுகளுக்கு மேலாக சதத்தை பதிவு செய்ய தவறி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலாவது அதை பதிவு செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தொடங்கிய இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது டெஸ்டில் 7 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
Anderson is taken off the attack after an opening spell that reads: 8-5-6-3👏 👏 #engvind https://t.co/PT4gBEcqiV pic.twitter.com/6erJVQBFhv
— Cricbuzz (@cricbuzz) August 25, 2021
Rahul ☝️Pujara ☝️ Kohli ☝️Anderson is pumped with the wicket of Kohli and India are 21/3 🔥https://t.co/idZEjQv3uS | #engvind pic.twitter.com/xoTCGCm8qm
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 25, 2021
பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பம் பதிவு செய்தவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. “மாணவர்கள் இணையதளத்தை பார்த்து தங்களுக்கான ரேண்டம் எண்களை அறிந்து கொள்ளலாம்” என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிதுள்ளது.
இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல். ராகுல் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய ஆட்டத்தின் முதலாவது ஓவரிலேயே பட்லர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கோரி மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு மற்றும் இடைக்கால தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடையீட்டு மனு ஆகிய இரு மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
கூட்டுறவு சங்கங்களில் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களின் வட்டி 12%-ல் இருந்து 7% ஆக குறைக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும், கடன் வரம்பு 12 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி-க்கு 27% இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது
என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு வங்கி நகை கடனில் ரூ.7 கோடி மோசடி நடந்துள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். நாமக்கல், சேலம் உள்ளிட்ட 5 வங்கிகளில் போலியான முறையில் நகை கடன் மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.
ரூ.50 கோடி மதிப்பீட்டில் 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இரண்டில் இருந்து 5 மடங்கு கொள்முதலை அதிகரித்து முறைகேடு நடந்துள்ளது; இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று
சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலுரையில் தெரிவித்தார்.
பெங்களூரு சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதி பெற்றதாக சசிகலா மீதான வழக்கில், நீதிபதியின் கடும் எச்சரிக்கைக்குப் பிறகு கர்நாடக போலீசார் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்குவிட உத்தரவிட இயலாது. ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகளில், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. மேலும், வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றதுடன் பிரதான வழக்குகளின் இறுதி விசாரணை செப்டம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-க்குள் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூடுதலாக 2 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்டு 28, 29-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இன்று திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலையில் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் செப்டம்பர் 1-ல் பள்ளிகள் திறந்தபின்னரும் கொரோனா தொற்று குறைவாக இருந்தால் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் மருத்துவத்துறை, வருவாய் பேரிடர் நிர்வாகத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உணவுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் இந்தியாவிற்குள் இ-விசா பெறுவதன் மூலமாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்தியாவிற்கு வர விரும்பும் ஆப்கானியர்கள் உடனடியாக இ-விசா பெற விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அளித்த மனுவை விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்.
பென்னி குயிக் , மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட பரிந்துரைக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். இந்த அரசு நிச்சயமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும். எந்த ஆதாரமும் இல்லாமல் செல்லூர் ராஜூ போன்ற மூத்த உறுப்பினர்கள் தவறான தகவல்களை அவையில் கூறக்கூடாது என்று முதல்வர் பதில் கூறியுள்ளார்.
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 133.50 புள்ளிகள் அதிகரித்து 56,092.48 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நிஃப்டி 42.90 புள்ளிகள் அதிகரித்து 16,667.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த தினம். அதனை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.
தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் @iVijayakant அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/lXcTc18bXR— M.K.Stalin (@mkstalin) August 25, 2021சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 128 குறைந்து ரூ. 35, 752க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,469 ஆக உள்ளது.
இந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற பெண் தடகள வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வந்தவர் நாகராஜ். அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீராங்கனைகளிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காரணத்தால் அவர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் , போக்சோ சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் 250 பக்க குற்றப்பத்திரிக்கையை சென்னை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 37,593 ஆகும். இது முந்தைய 24 மணி நேரத்தின் தொற்று எண்ணிக்கையைக் காட்டிலும் 47.6% அதிகமாகும்.
ஏற்கனவே அறிவித்தபடி, ஆப்கானில் இருந்து அமெரிக்க படையினர் 31ம் தேதிக்குள் வெளியேறிவிடுவோம். தாலிபான்களின் ஒத்துழைப்பும் இதற்கு தேவை என்று கூறியுள்ளார்.
சென்னையில் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ. 99.20-க்கும், டீசல் லிட்டர் டீசல் ரூ. 93.52-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று தமிழக சட்டமன்றத்தில் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதில் அளித்து பேசுகின்றனர்.
ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் செங்கோட்டைக்கு இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் வருகின்ற 30ம் தேதி முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பின்பு முன்பதிவில்லாத ரயில் இயக்கப்பட உள்ளது. மதுரையில் இருந்து காலை 7.10 மணி, செங்கோட்டையில் இருந்து மாலை 3.45 மணிக்கும் ரயில் புறப்படும்.
விமல் (17), சபரிநாதன் (17), தர்மராஜன் (17) ஆகிய மூன்று பேர் சென்னை மெரினா கடலில் குளிக்க சென்ற போது அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்காக வழங்கப்படும் நிதி உதவிகள் அனைத்தையும் நிறுத்திவிட்டதாக உலக வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே சர்வதேச நாணய நிதியமும் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் அங்கன்வாடிகள் திறக்கப்பட்டு 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு உணவு அளிக்க உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அங்கன்வாடி பணியாளர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.