Advertisment

Tamil Nadu news today updates: குடிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்க சிறப்பு தீர்மானம் தேவை - மு.க.ஸ்டாலின்

Breaking News in Tamil : இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates : தமிழகத்தில் தற்போது மிக முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுவது தண்ணீர் பிரச்சனை மட்டுமே. தமிழகத்தின் பல்வேறு ஏரி குளங்கள் முற்றிலுமாக வற்றிவிட்ட நிலையில் மக்கள்  என்னெ செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறன்றனர். 22ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் கண்டன ஆர்பாட்டம் இன்று முதல் துவங்குவதாக அக்கட்சியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளர்.

Advertisment

சென்னையில் கிட்டத்தட்ட 200 நாட்களை தொட்ட மழையின்மை பிரச்சனை தற்போது ஒருவாராக முடிவிற்கு வர உள்ளதாக சென்னை வானிலை மையம் மற்றும் இதர வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி நாளை முதல் சென்னையில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னைக்கு வடக்கே, விசாகப்பட்டனம் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதால் வெப்பநிலை முற்றிலுமாக குறையும் என்று தெரியவந்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முக்கிய நிகழ்வுகளைப் படிக்க

மாநில நிதிஅமைச்சர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்க இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, political events, petrol diesel price, water scarcity, leaders statements: தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய செயல்களின் தொகுப்பினை இங்கே காண்க














Highlights

    21:02 (IST)20 Jun 2019

    குடிநீர் பிரச்சனை குறித்து சிறப்பு தீர்மானம் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

    சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளன்று மக்களின் குடிநீர் பிரச்னைகள் குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காண சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து அதிமுக அரசு விவாதிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    20:47 (IST)20 Jun 2019

    நடிகர் சங்கத்தில் பூச்சி முருகன் தான் அரசியல் செய்கிறார் - கடம்பூர் ராஜு

    நடிகர் சங்கம் என்பது ஒரு அமைப்பு, அவர்களின் தேர்தலில் அரசு தலையிட வேண்டிய அவசியம் இல்லை, பூச்சி முருகன் தான் இதை வைத்து அரசியல் செய்கிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    20:16 (IST)20 Jun 2019

    ஷிகர் தவானுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

    இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரர் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், தன்னால் விளையாட முடியாததை நினைத்து உருக்கமாக பதிவு ஒன்றையும் பதிவையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவுக்கு ரிப்ளை செய்யும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், "டியர் தவான்..சந்தேகமே வேண்டாம். பிட்ச் உங்களை மிஸ் செகிறது. நீங்கள் விரைவில் குணமடைந்து களத்திற்கு திரும்பி, மீண்டும் நாட்டின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

    19:19 (IST)20 Jun 2019

    382 ரன்கள் இலக்கு!

    உலகக் கோப்பை 2019  கிரிக்கெட் தொடரில், இன்று நாட்டிங்கமில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக, டேவிட் வார்னர் 147 பந்துகளில் 166 ரன்கள் விளாசினார்.

    19:00 (IST)20 Jun 2019

    தண்ணீர் தர முன்வந்த கேரளா - மறுத்த தமிழக அரசு

    சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை எண்ணி, கேரள அரசு சார்பில், தமிழக முதல்வர் அலுவலகத்துக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் அலுவலகம் சார்பில், இப்போது வேண்டாம்' என கேரளாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து ரயில் வழியாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்ப முடிவு செய்து, தமிழக அரசை கேரள அரசு அணுகியது குறிப்பிடத்தக்கது.

    18:28 (IST)20 Jun 2019

    அதிர்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி

    ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து நான்கு எம்.பி.க்கள் பாஜகவுக்கு தாவியுள்ளனர். ஒய்எஸ் சௌத்ரி, சிஎம் ரமேஷ், டிஜி வெங்கடேஷ் மற்றும் ஜிஎம் ராவ் ஆகிய நான்கு மாநிலங்களவை எம்பிக்களும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

    17:48 (IST)20 Jun 2019

    வேதா இல்ல வழக்கு - வேறு அமர்வுக்கு மாற்றம்?

    போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தடை கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு பரிந்துரை செய்துள்ளது.

    16:29 (IST)20 Jun 2019

    ஸ்டெர்லைட் : வேதாந்தா வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணைைய, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரும் ஜூன் 27க்கு ஒத்திவைத்தனர். 

    ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தொழிலாளர்களும், எதிராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இசக்கி துரை ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

    15:48 (IST)20 Jun 2019

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் துவங்கியது

    டில்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த  செவ்வாய்க்கிழமை வரை 1.7 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    15:17 (IST)20 Jun 2019

    197 நாட்களுக்கு பிறகு சென்னையில் மழை...

    197 நாட்களுக்கு பிறகு ( கடந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் பெய்தது) சென்னையின் பலபகுதிகளில் மழை பெய்துள்ளது. இதனால், சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    publive-imageகேளம்பாக்கம், ஓஎம்ஆர், மீனம்பாக்கம், சிறுசேரி, வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது.

    14:59 (IST)20 Jun 2019

    கமல்ஹாசனுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

    சென்னையில் மக்கள் நீதி மய்ய கட்சி அலுவலகத்தில் கட்சி நிறுவனர் கமல்ஹாசனை, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

    14:32 (IST)20 Jun 2019

    திமுக போராட்டம் கபட நாடகம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக, திமுக அறிவித்துள்ள போராட்டம், கபட நாடகம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

    தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி, பள்ளிகளை மூடப்போவதாக தனியார் பள்ளிகள் அரசை மிரட்டக்கூடாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    14:15 (IST)20 Jun 2019

    court news :கஜா புயல்!

    கஜா புயலில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கான இழப்பீடு பற்றி தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்  என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  ஒரு மாதத்தில் கொள்கை முடிவெடுத்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

    13:40 (IST)20 Jun 2019

    Tamilnadu news update : திமுக பொருளாளர் துரைமுருகன்!

    உடல்நலக் குறைவு காரணமாக  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவரை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    12:59 (IST)20 Jun 2019

    Tamil nadu latest news :வைகோ வழக்கு!

    அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்க கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்திய இறையாண்மைக்கு பேசியதாக வைகோ மீது தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜூலை 5 ஆம் தேதி இறுதி தீர்ப்பு   வர இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    12:44 (IST)20 Jun 2019

    Tamil nadu assembly news : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்?

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சட்டப்பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மும்மொழிக் கொள்ளை குறித்து அனைத்து கட்சி விவாதமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 

    12:06 (IST)20 Jun 2019

    Nadigar sangam election : விஷால் மேல்முறையீடு!

    நடிகர் சங்கத்தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.   நடிகர் சங்க தேர்தலை பாதுகாப்புடனும் நேர்மையுடனும் நடத்திட  நீதிமன்றம்  வழிவகை செய்ய வெண்டும் என்றும் விஷால் தரப்பு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

    11:54 (IST)20 Jun 2019

    குடியரசு தலைவர் உரை!

    நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  சிறப்பு உரை ஆற்றினார். அப்போது “ நம் வருங்கால தலைமுறைக்காக நாம் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். நாம் சந்திக்கும் தண்ணீர் பிரச்சனையை நம் வருங்கால சங்கதினர் சந்திக்காமல் காக்க வேண்டியது நம் கடமை” என்று தெரிவித்தார். 

    11:36 (IST)20 Jun 2019

    அப்பலோவில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர்

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வயிற்றுக் கோளாறு காரணமாக மருத்துவமனை சென்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் அறிவிக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. 

    11:13 (IST)20 Jun 2019

    Gold Price Today : இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு

    இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை  சவரனுக்கு  ரூ. 512 அதிகரித்துள்ளது. அதனால் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 25688 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    11:06 (IST)20 Jun 2019

    Engineering Counselling 2019 Rank List - பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

    Engineering Counselling 2019 Rank List  : பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.  1,03,150 மாணவர்களின் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.

    11:04 (IST)20 Jun 2019

    நடிகர் சங்கத்தேர்தல் 2019 : சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

    பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதால் நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் முறையீடு செய்துள்ளார். மேலும் படிக்க : ஆளுநரை சந்திக்கும் சுவாமி சங்கர தாஸ் அணி

    10:57 (IST)20 Jun 2019

    Chennai Live Updates in Indian Express

    இன்று தமிழகத்தில்  நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் ஆங்கிலத்தில் படிக்க, இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கும் லைவ் செய்திகளை பார்க்கவும். அதன்ற்கான இணைப்பு :  Chennai, Tamil Nadu News Live Updates: Binu Pappachan in police custody; College suspends nine students for bus day

    10:47 (IST)20 Jun 2019

    சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை - Chennai Weatherman

    சென்னையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளார் பிரதீப் ஜான் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். சென்னையின் வெப்பம் வருகின்ற நாட்களில் குறையும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    10:19 (IST)20 Jun 2019

    197 நாட்கள் கழித்து மழையை பார்த்தது சென்னை மண்

    சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் முதலே மழை இல்லை. எங்கும் வறண்ட, தண்ணீருக்கு பஞ்சமான சூழல் நிலவி வந்த நிலையில் 197 நாட்கள் கழித்து சென்னை நகருக்குள் மழை பெய்ய துவங்கியுள்ளது. அடையாறு பகுதியில் காலையில் இருந்து சாரல் மழை பெய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

    10:11 (IST)20 Jun 2019

    Cauvery Management : காவிரி ஒழுங்காற்றுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது

    காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இதனை தலைமையேற்று நடத்துகிறார் அக்குழுவின் தலைவர் நவீன் குமார். தமிழகத்திற்கு ஜூன் மாத ஒதுக்கீடாக 9.19 டி.எம்.சி தண்ணீரை மூன்று தவணைகளில் திறந்துவிட வேண்டும் என்று மே மாதம் 28ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் கர்நாடகா தண்ணீர் திறந்துவிடவில்லை. இந்நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    09:47 (IST)20 Jun 2019

    ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மரக்கன்றுகள் தரும் போக்குவரத்து காவல்துறை

    ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வரும் நபர்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கி உற்சாகம் செய்து வருகின்றனர் கோபிச்செட்டிபாளையம் போக்குவரத்து காவல்துறையினர். சமீபமாக ஹெல்மெட் மிகவும் கட்டாயம் என்றும், காவல்துறையினருக்கும் அவ்விதிகள் பொருந்தும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. தற்போது இந்த நடவடிக்கைகளால் பொதுமக்கள் நெகிழ்ச்சி.

    09:42 (IST)20 Jun 2019

    Earth Quake in Maharastra : 4.8 ரிக்டராக பதிவு

    மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்திருக்கும் சதாரா பகுதியில் லேசான நிலநடக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரிக்டர் அளவு கோளில் 4.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

    09:30 (IST)20 Jun 2019

    Amma Scooter Subsidy - எப்போது இருந்து விண்ணப்பிக்கலாம் ?

    இன்று முதல் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ் மானியத்தினை பெற நீங்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 7ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாகும். 

    இது தொடர்பான முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள

    09:12 (IST)20 Jun 2019

    Water Scarcity in Chennai

    தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டினை தடுக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் வருங்காலத்தில் குடிநீர் பிரச்சனையை சரி செய்ய சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து ஏரிகளையும் குடிநீர் ஏரிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

    Tamil Nadu news today updates : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் - பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி 72 ரூபாய் 64 பைசாவிற்கு விற்பனையாகி வருகிறது. டீசல் விலை 6 பைசாக்கள் குறைந்து 67 ரூபாய் 52 பைசாவிற்கு விற்பனையாகி வருகின்றது.

    பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    Tamil Nadu Tamilnadu Weather
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment