Tamil Nadu news today : ஒரே நாடு, ஒரே தேர்தல் வரவேற்கத்தக்கது என்று திருமாவளவன் கூறியுள்ளார். பொறியியல் படிப்பில் சிறப்புப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதிக்கு மாற்றம் என்று அண்ணாப்பல்கலைகழகம் அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய நாளில் தமிழகத்தில் அதிகம் பேசப்படும் செய்திகள், அரசியல் நிகழ்வுகள், மக்கள் கருத்துக்கள், தண்ணீர் பிரச்சனை போன்ற அனைத்து தொடர்பான செய்திகளையும் இங்கே உடனுக்குடன் படிக்கலாம். அதே போல் லைவ்வாகவும் சுருக்கமாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் உங்களுக்கு வழங்குகிறது.
Read more.. மருத்துவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வழக்கு… நாளை விசாரணை
இது போல் மற்ற அனைத்து தமிழக முக்கியச் செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, politics and water scarcity ,தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்!
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாஜக தேசிய தலைவராக அமித் ஷா நீடிப்பார் என்றும் தெரிகிறது.
உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று நடந்து வரும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், வங்கதேசமும் விளையாடி வருகின்றன. இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. இரு மாபெரும் ஹிட்டர்களான கெயில்,ரசல் ஆகிய இருவரும் 0 ரன்களில் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உரிய பாதுகாப்பு அளிக்க சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட கோரி விஷால் மனு அளித்துள்ளார். பிரச்னை ஏற்படாமலிருக்க எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என போலீஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகை, உள்ளிட்ட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெயில் பதிவாகும் என்றும், அனல் காற்று வீசும் என்றும் தமிழகத்தில் நிலவும் இந்த அனல் காற்று வருகிற ஜூன் 20ம் தேதிக்கு மேல் குறையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நீக்கப்பட்ட 45 ஆயிரம் வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று மதுரையை சேர்ந்த இளந்தமிழன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் உரிய ஆவணத்துடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது.
அனல்காற்று வீசுவதால் மாலை 4 வரை வெளியே வரவேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான வெயில் அடித்து வருவதால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அதிகாரிகளும் தங்களுடைய குடும்பத்திற்கு வரும் பிரச்சனையை போல் இந்த குடிநீர் பிரச்சனையை கையாள வேண்டும் என்றும் அனைவரும் உடனடியாக களத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். முதல்வர் தலைமையில் நடைப்பெற்ற குடிநீர் பிரச்சனை ஆலோசனைக் கூட்டத்தில் வேலுமணி இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.
எம்.பி.யாக பதவியேற்று அவையை வலம் வந்த பிரதமர் மோடி #NarendraModi pic.twitter.com/ko9TqovSTr
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 17 June 2019
மத்திய அமைச்சர்களான அமித்ஷா, நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதே போல் வாரணாசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் மோடி பதவியேற்றுக்கொண்டார் எம்.பி.யாக பதவியேற்று அவையை வலம் வந்த பிரதமர் மோடி
17ஆவது மக்களவை கூட்டத்தொடர் - புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு https://t.co/SnLClOTHn2
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 17 June 2019
ஆவது மக்களவை கூட்டத்தொடர் - புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு
கொல்கத்தாவில் மருத்துவர் மீது தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, தமிழகத்தில் போராட்டம் தொடங்கியது சென்னை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் * ஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென மருத்துவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் இன்று திறக்க உள்ளதையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் கண்காணிப்பு. பச்சையப்பன், நந்தனம், மாநிலக் கல்லூரி பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். ரேகிங் போன்ற எந்தவொரு நிகழ்வும் நடக்ககூடாது என்பதில் கல்லூரிகள் மற்றும் போலீசார் தீவிரம்.
17-வது மக்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் இரண்டு நாட்களில் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் நடைபெறும் இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் புதன்கிழமை புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu news today updates:
17வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார்.பொறியியல் படிப்பில் சிறப்புப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதிக்கு மாற்றம் வரும் 20ஆம் தேதிக்குப் பதில் 25ஆம் தேதி சிறப்புப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் கவனத்துடன் கேட்போம் என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
மேலும் படிக்க.. இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது
இவை தான் இன்றைய நாளின் டாப் செய்திகளாக பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் லைவ்வாக உங்கள் பார்வைக்கு..
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights