Tamil nadu news today : பா.ஜ.க. தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு!

Tamil nadu latest news : தமிழக முக்கியச் செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

By: Jun 17, 2019, 9:04:11 PM

Tamil Nadu news today : ஒரே நாடு, ஒரே தேர்தல் வரவேற்கத்தக்கது என்று திருமாவளவன் கூறியுள்ளார். பொறியியல் படிப்பில் சிறப்புப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதிக்கு மாற்றம் என்று அண்ணாப்பல்கலைகழகம் அறிவுறுத்தியுள்ளது.

இன்றைய நாளில் தமிழகத்தில் அதிகம் பேசப்படும் செய்திகள், அரசியல் நிகழ்வுகள், மக்கள் கருத்துக்கள், தண்ணீர் பிரச்சனை போன்ற அனைத்து தொடர்பான செய்திகளையும் இங்கே உடனுக்குடன் படிக்கலாம். அதே போல் லைவ்வாகவும் சுருக்கமாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் உங்களுக்கு வழங்குகிறது.

Read more.. மருத்துவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வழக்கு… நாளை விசாரணை

இது போல் மற்ற அனைத்து தமிழக முக்கியச் செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, politics and water  scarcity ,தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்!

20:02 (IST)17 Jun 2019
பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாஜக தேசிய தலைவராக அமித் ஷா நீடிப்பார் என்றும் தெரிகிறது.

19:46 (IST)17 Jun 2019
எதைப்பற்றியும் கவலை இல்லாத ஆட்சி - மு.க.ஸ்டாலின்

குடிநீர் முதல் கல்வி வரை எதைப்பற்றியும் கவலை இல்லாத ஆட்சி அதிமுக. வரும் காலங்களில் துரிதமாகச் செயல்பட்டு பாடப்புத்தகங்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

19:05 (IST)17 Jun 2019
322 ரன்கள் இலக்கு

உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று நடந்து வரும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், வங்கதேசமும் விளையாடி வருகின்றன. இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. இரு மாபெரும் ஹிட்டர்களான கெயில்,ரசல் ஆகிய இருவரும் 0 ரன்களில் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

18:42 (IST)17 Jun 2019
வெள்ளக்கோயில் சாமிநாதன் ராஜினாமா!

திமுக இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து வெள்ளக்கோயில் சாமிநாதன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, கட்சி தலைமைக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.

17:35 (IST)17 Jun 2019
காய்கறி விலை உயர்வு!

தண்ணீர் பிரச்சனை காரணமாக சென்னையில் காய்கறி விலை தீரென்று உயர்ந்துள்ளது.   காய்கறிகளின் இறக்குமதியும்  வெகுவாக குறைந்துள்ளதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  

16:56 (IST)17 Jun 2019
Nadigar sangam election : விஷால் மனு!

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உரிய பாதுகாப்பு அளிக்க சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட கோரி விஷால் மனு  அளித்துள்ளார். பிரச்னை ஏற்படாமலிருக்க எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என போலீஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

16:34 (IST)17 Jun 2019
tamilnadu weather man: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகை, உள்ளிட்ட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெயில் பதிவாகும் என்றும், அனல் காற்று வீசும்  என்றும் தமிழகத்தில் நிலவும் இந்த அனல் காற்று வருகிற ஜூன் 20ம் தேதிக்கு மேல் குறையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

16:24 (IST)17 Jun 2019
tamilnadu latest news : வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நீக்கப்பட்ட 45 ஆயிரம் வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்  என்று மதுரையை சேர்ந்த இளந்தமிழன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் உரிய ஆவணத்துடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது. 

16:07 (IST)17 Jun 2019
tamil nadu latest news: பஸ் டே!

சென்னையில் காவல்துறையினரின் கண்காணிப்பையும் மீறி ‘பேருந்து தினம்’ கொண்டாடிய மாணவர்கள்.17 மாணவர்களிடம் காவல்துறை விசாரணை.  விடுமுறைக்கு பின்பு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளே மாணவர்கள் பஸ் டே கொண்டாடியுள்ளனர். 

13:01 (IST)17 Jun 2019
tamil nadu weather : வானிலை மையம் எச்சரிக்கை!

அனல்காற்று வீசுவதால் மாலை 4 வரை வெளியே வரவேண்டாம்  என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான வெயில் அடித்து வருவதால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை யாரும் வெளியில்  செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

12:15 (IST)17 Jun 2019
Tamilnadu news : அமைச்சர் வேலுமணி!

ஒவ்வொரு அதிகாரிகளும் தங்களுடைய குடும்பத்திற்கு வரும் பிரச்சனையை போல் இந்த குடிநீர் பிரச்சனையை கையாள வேண்டும்  என்றும் அனைவரும் உடனடியாக களத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். முதல்வர் தலைமையில்   நடைப்பெற்ற குடிநீர் பிரச்சனை ஆலோசனைக் கூட்டத்தில் வேலுமணி இந்த கருத்தை பதிவு செய்துள்ளார். 

11:58 (IST)17 Jun 2019
மோடி பதவியேற்பு

மத்திய அமைச்சர்களான அமித்ஷா, நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதே போல் வாரணாசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் மோடி பதவியேற்றுக்கொண்டார் எம்.பி.யாக பதவியேற்று அவையை வலம் வந்த பிரதமர் மோடி

11:34 (IST)17 Jun 2019
மக்களவை கூட்டத்தொடர்!

ஆவது மக்களவை கூட்டத்தொடர் - புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

11:33 (IST)17 Jun 2019
பொறியியல் கலந்தாய்வு!

பொறியியல் படிப்பில் சிறப்புப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதிக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதிக்குப் பதில் 25ஆம் தேதி சிறப்புப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் அண்ணாப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

11:32 (IST)17 Jun 2019
தீவிரம் அடையும் போராட்டம்!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

11:31 (IST)17 Jun 2019
தமிழகத்தில் போராட்டம்!

கொல்கத்தாவில் மருத்துவர் மீது தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, தமிழகத்தில் போராட்டம் தொடங்கியது சென்னை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் * ஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென மருத்துவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். 

11:30 (IST)17 Jun 2019
கல்லூரிகள் திறப்பு!

கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் இன்று திறக்க உள்ளதையொட்டி சென்னையில்  பலத்த போலீஸ் கண்காணிப்பு. பச்சையப்பன், நந்தனம், மாநிலக் கல்லூரி பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  ரேகிங் போன்ற  எந்தவொரு நிகழ்வும் நடக்ககூடாது என்பதில் கல்லூரிகள் மற்றும் போலீசார் தீவிரம். 

11:27 (IST)17 Jun 2019
முதல்வர் ஆலோசனை!

குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை  நடத்துகிறார்.  சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார் முதல்வர் என தகவல் வெளியாகியுள்ளது. 

11:26 (IST)17 Jun 2019
மக்களவை கூட்டத்தொடர்!

17-வது மக்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் இரண்டு நாட்களில் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் நடைபெறும் இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்  என்றும் புதன்கிழமை புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11:25 (IST)17 Jun 2019
திருமா கருத்து!

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவை குறைக்கும், நேரத்தையும் குறைக்கும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Tamil Nadu news today updates:

17வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார்.பொறியியல் படிப்பில் சிறப்புப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதிக்கு மாற்றம் வரும் 20ஆம் தேதிக்குப் பதில் 25ஆம் தேதி சிறப்புப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் கவனத்துடன் கேட்போம் என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

மேலும் படிக்க.. இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது

இவை தான் இன்றைய நாளின் டாப் செய்திகளாக பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் லைவ்வாக உங்கள் பார்வைக்கு..

Web Title:Tamil nadu news today updates politics weather crime entertainment water scarcity

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X