Advertisment

அன்புமணி, என்.ஆர்.இளங்கோ- அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்: வைகோ மனு ஏற்கப்படுமா?

முதல்வர் & துணை முதல்வர் முன்னிலையில் தங்களின் வேட்புமனுவை பேரவை செயலாளர் சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Rajya Sabha Elections ADMK candidates

Tamil Nadu Rajya Sabha Elections ADMK candidates

Tamil Nadu Rajya Sabha Elections ADMK candidates : தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 6 மாநிலங்களை உறுப்பினர்களுக்கான பதவிக்கான தேர்தல் வருகின்ற 18ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் தொ.மு.ச தலைவர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டி. மதிமுக சார்பில் போட்டியிட வைகோவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் வைகோவிற்கு தேசத்துரோக வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது.

Advertisment

முதல்வர் & துணை முதல்வர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்

இதனைத் தொடர்ந்து அவருடைய மனு ஏற்கப்படுமா இல்லையா என்ற குழப்பத்தில் திமுக மற்றும் மதிமுகவினர் உள்ளனர். எது எப்படி இருந்தாலும் இவர்கள் மூவரும் நேற்று முன் தினம் (06/07/2019) வேட்பு மனு தாக்கல் செய்தினர்.

மேலும் படிக்க : மாநிலங்களவைத் தேர்தல் : ஸ்டாலினிடம் மாற்று வேட்பாளரை நான் தான் ஏற்பாடு செய்யக் கூறினேன் – வைகோ

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் முகமது ஜானும், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரனும் அதிமுக சார்பில் இன்று வேட்புமனு தாக்கல் செயதனர்.  இவர்கள் இருவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில் தங்களின் வேட்புமனுவை பேரவை செயலாளர் சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர்.

வைகோவிற்கு மாற்றாக திமுகவில் இருந்து என்.ஆர். இளங்கோவும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வைகோவின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால், இவர் தன்னுடைய மனுவை வாபஸ் பெற்றுவிடுவார்.  பாமக சார்பில் (அதிமுக கூட்டணியில்) பாகம இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment