Tamil Nadu received 24000 corona rapid testing kits : கொரோனா வைரஸை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை என எதிர்கட்சிகள் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. தமிழகத்திற்கு 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் கொண்டுவரப்பட்டு விரைவில் கொரோனா பரிசோதனை, பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் முதல்வர் கூறியிருந்தார்.
1.5 லட்சம் ரேபிட் கருவிகள் முதலில் ஆர்டர் செய்யப்பட்டது. பிறகு 4 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஆனால் அந்த கருவிகள் அனைத்தும் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 24 ஆயிரம் கருவிகள் வந்துள்ளாதாக முதல்வர் ட்வீட் செய்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
இன்று சென்னை வந்தடைந்துள்ள 24 ஆயிரம் கருவிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் வெறும் 1 மணிநேரத்திலேயே கொரோனா நோய் இருப்பதை கண்டறிந்துவிட முடியும். இதன் மூலம் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டிய நிலையும், இந்த குறிப்பிட்ட கால நேரத்தில் நோயாளிகள் வெளியே சுற்றும் நிலையும் முற்றிலுமாக தவிர்க்கப்படும். ஆனாலும் 4 லட்சம் எங்கே, 24,000 எங்கே என்று பலரும் தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.