காவல்துறை வில்சன் கொலை வழக்கு: மேலும், 2 முக்கிய நபர்கள் மீது சந்தேகம்

சையித் அலி (30 வயது இருக்கும்), மெஹபூப் (40 வயது ). சையித் அலி ஒரு  கணினி நிபுணர் என்றும் கண்டறியப்படுகிறது

சையித் அலி (30 வயது இருக்கும்), மெஹபூப் (40 வயது ). சையித் அலி ஒரு  கணினி நிபுணர் என்றும் கண்டறியப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காவல்துறை வில்சன் கொலை வழக்கு: மேலும், 2 முக்கிய நபர்கள் மீது சந்தேகம்

கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடி அருகே வில்சன் என்கிற சிறப்பு துணை ஆய்வாளர் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் இரண்டு தீவிரவாதிகளைத் தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறை பல குழுக்களாக பிரிந்து தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இரண்டு நபர்களின் பெயர்களும்  தாற்போது வெளிவந்துள்ளது.

Advertisment

கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,...

ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், தற்போது முகமது ஹனீப் கான் (29), இம்ரான் கான் (32) முகமது ஜைத் (24)  என மூன்று பெங்களூரு இளைஞர்கள் சென்னையில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.  கடந்த வாரம் தில்லியில் கைது செய்யப்பட்ட       சி.காஜா மொய்தீன் (52)  என்பவரோடு இவர்கள் தொடர்பில் இருந்துள்ளனர்.

பயங்கரவாதிகள் கைதுக்கு பழிவாங்க கொல்லப்பட்டாரா எஸ்.ஐ வில்சன் ?

Advertisment
Advertisements

டெல்லியில் மொய்தீனுடன் கைது செய்யப்பட்ட எஸ் சையத் அலி நவாஸ் (25), வில்சன் சிறப்பு துணை ஆய்வாளரை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் ஷமிம் (25) (குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் - மற்றொருவர் தோஃபிக்) ஆகியோர் பெங்களூரில் இந்த இளைஞர்களை வழிநடத்தியதாக கூறப்படுகிறது.

இவர்கள் நெட்வொர்க்கில் மேலும் இரண்டு முக்கிய நபர்கள் இருப்பதாக ஒரு மூத்த அதிகாரி கூறினார் "சையித் அலி (30 வயது இருக்கும்), மெஹபூப் (40 வயது ). சையித் அலி ஒரு  கணினி நிபுணர் என்று கண்டறியப்படுகிறது.தற்போது நாங்கள் விசாரிக்கும் அந்த மூன்று பெங்களூரு இளைஞர்கள் சமீபத்தில் மெஹபூப்பால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள். அவர் அந்த வேலையை மொய்தீனுக்காக (டெல்லியில் போன வாரம் கைது செய்யப்பட்டவர் ) செய்கிறார்" என்றார்.

மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்ட உடனேயே பெங்களூரிலிருந்து மெஹபூப் தலைமறைவாகி உள்ளார் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

சையித் அலி கணினி மற்றும் மொபைல் தொழில்நுட்பத்தில் நிபுணர் என்பதையும், செல்போன் சர்க்யூட் போர்ட்டில்  இருந்து  வெடிபொருட்களைக் கட்டுப்படுத்தும் சாதனங்களை பயன்படுத்தும் அளவிற்கு நிபுணத்துவம்  பெற்றவர்  என்பதையும் போலீசார் அறிந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை, களியக்காவிளை உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். ஆனால், அவர் வீட்டில் இல்லை, தகவல் அறிந்து தப்பி ஓடிவிட்டார். பல போலிஸ் குழுக்கள் சையித் அலி மற்றும் மெஹபூப்பைத் வருகின்றோம் என்று ஆவல் துறை தெரிவ்வித்துள்ளது.

தமிழக காவல்துறையின் சிறப்பு துணை ஆய்வாளர் வில்சன் (57) கடந்த வாரம் களியக்காவிளை அருகே ஒரு சோதனைச் சாவடியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலிலும் குத்திக் காயங்கள் ஏற்பட்டன. சி.சி.டி.வி காட்சிகளைப் பயன்படுத்தி, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஷமிம் மற்றும் தோஃபிக் (27) தான் குற்றவாளிகள் என போலீசார் அடையாளத்தை கண்ட்டுபுடித்தனர்.

புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, " மொய்தீனின் பெயரில் இந்த மூன்று பெங்களூர் இளைஞர்களின் முகவரியில்  (தற்போது விசாரணையில் இருக்கும்) இரண்டு கொரியர் பேக்கேஜ் மும்பையில் இருந்து பெறப்பட்டுள்ளது. “இரண்டு கொரியர் பேக்கேஜ்களிலும்  கைத்துப்பாக்கிகள் இருந்தன. மேலும், இரண்டாவது கொரியர் மூன்று கைதுப்பாக்கிகள் மற்றும் புல்லட்டுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக போலிஸ் தரப்பு கூறுகிறது.

டி.ஐ.ஜி (திருநெல்வேலி வீச்சு) பிரவீன் குமார் அபினாபு தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் திங்களன்று ஷமிம் மற்றும் தோஃபிக் இருக்கும் இடம் குறித்து சில தடயங்கள் இருப்பதாகக் கூறினார். விரைவில் அவர்களை கைது செய்யப்படுவார்கள்,என்றும் அவர் தெரிவித்தார்.

விசரனையில் இருக்கும் மூன்று பெங்களூரு இளைஞர்களும், டெல்லியில் கைது செய்யப்பட்ட மூவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அனுதாபிகள் என்றும், ஜமாத்-இ-இஸ்லாமி, தமிழ்நாடு தோவ்ஹீத் ஜமாத் மற்றும் ஹிஸ்புத்-தஹ்ரிர் போன்ற குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.

Kanyakumari Police Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: