Tamil Nadu Today News : தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பலர் அவசியமான தேவைகளுக்கு கூட இ பாஸ் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் லஞ்சம் கொடுத்து இ-பாஸ் வாங்கும் நடைமுறை பல இடங்களில் நிகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிரணாப்புக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் உடல்நிலை மோசமடைந்துள்ளது என்றும் ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்தியாவில் 23லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. கொரோனா தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்தார் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடேன்.
ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவது குறித்து மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதில் தடுப்பூசியின் விதிகள் உள்பட பல்வேறு நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளபடவுள்ளதாகவும் தெரிவித்தார். தேசிய நிபுணர் குழு மாநில அரசுகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் எனவும் சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறினார்.
எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மேலும் ஒரு அமைச்சர் ஆதரவு!
Web Title:Tamil nadu today news live updates corona eia2020 cm edappadi pranab mukherjee
புலனாய்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக வழங்கப்படும் மத்திய உள்துறை அமைச்சரின் விருது நடப்பு ஆண்டில் 121 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டதற்காக இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து ஆய்வாளர்கள் ஜான்சி ராணி, கவிதா, பொன்னம்மாள், சந்திரலேகா, கலா, துணை ஆய்வாளர் வினோத்குமார் ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு, இந்த மாதம் இறுதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமபடுத்தப்படும் என்று அதன் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும், நாளை மறுநாள் முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதிக்கப்படுகிறது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் நடைபெறுவதாக இருந்த இப்போட்டி, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை கட்டண அடிப்படையில் நிறுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்திய பிறகு மெட்ரோ ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். மேலும், இ-பாஸ் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்ரு ஒரே நாளில் புதிதாக 5,871 பேருக்கு கொரோன வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 119 பேர் பலியானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி நாளில் கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவேன் என்று நித்தியானந்தா அறிவித்துள்ளார். மேலும், அவர் 300 பக்க பொருளாதார கொள்கை தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்துக்குள் குட்கா எடுத்துச்சென்ற எம்.எல்.ஏ.க்கள் உரிமை மீறல் வழக்கு விசாரணையில், சட்டமன்றத்துக்குள் குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே சட்டமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்று திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. தமிழக சட்டமன்ற உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் கணக்காளர் ரம்யா ரூ.45 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்து தருமாறு திமுக தலைவர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த முன்னாள் அமைச்சர் ஏழுமலை இன்று உயிரிழந்தார்.பங்கூரில் வசித்து வந்த அவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் உடல் நலம் சீராகாததால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.
தமிழகத்தில் விரைவில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் 400 நடமாடும் ரேஷன் கடைகள் வர வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால் கடன் தள்ளுபடி கிடையாது என்றும், விவசாயிகளுக்கு பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினியும் முருகனும் உறவினர்களிடம் காணொலி மூலம் பேச அனுமதி கோரிய வழக்கு சென்னை உயநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நளினியையும் முருகனையும் பேச அனுமதித்தால், பன்னோக்கு விசாரணை முகமை விசாரணைக்கு இடையூராக அமையும் என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்? குடும்பத்தினரிடம் நளியும் முருகனும் பேசுவதில் என்ன பாதுகாப்பு குறைபாடு ஏற்பட போகிறது? என கிருபாகரன் தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 18,113 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேர் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட .பி.எஸ் அதிகாரி அருண் பாலகோபாலன், சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தான் வரும் தேர்தல் மட்டுமல்லாது என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாவது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது வி.பி துரைசாமி கருத்து மற்றும் அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், “முதல்வர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் கட்சி முடிவெடுக்கும். இந்த நேரத்தில் கருத்து தெரிவிப்பது அது பலவீனமாகிவிடும். எம்.ஜி.ஆர் ஆட்சி, அம்மாவின் ஆட்சி மீண்டும் மலரும், மலர வேண்டும்
ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சுமூகமான முடிவு எடுக்கப்படும். கட்சி, சின்னத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திப்போம் பாஜக தலைமையிலான கூட்டணி என்பது விபி துரைசாமியின் கருத்து . அதை கட்சி தலைமையின் கருத்தாக ஏற்க முடியாது” என்றார்.
மெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ்க்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ”தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். பாஜவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும்.
மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாஜக தலைமையில்தான் கூட்டணிக் கட்சிகள் தேர்தலை சந்திக்கும். தமிழகத்தில் திமுக vs அதிமுக என இருந்த நிலை திமுக vs பாஜக என மாறி உள்ளது” என கூறியுள்ளார். அதிமுக தலைமையில் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்ட நிலையில் வி.பி.துரைசாமி கருத்து சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மேலூர் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் கிரானைட் குவாரி உரிமையாளர் பிஆர் பழனிசாமி விடுதலை ரத்து * செய்யப்பட்டுள்ளது. பிஆர் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்த மேலூர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
நடிகர் சூர்யா, தனது ரசிகர்களுக்கு நேற்று விடுத்த வேண்டுகோளை பாராட்டி கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்று முதல் திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
”அதிமுகவில் ஒரு தொண்டன் முதலமைச்சராக வரமுடியும் என்பது நிரூபணம். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் செயலில் முதல்வரும், துணை முதல்வரும் ஈடுபட்டு வருகின்றனர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 3 தேர்தல்களை சந்தித்துள்ளோம்” என்று கூறியுள்ளார். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்ற குரல்கள் அதிமுக தலைமையில் ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இத்தகைய விளக்கத்தை அளித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக மத்திய தொழிற்பாதுகாப்புப் படை தகவல் . இந்தி தெரியாததால் கனிமொழி எம்.பி.யை இந்தியரா? என கேள்வி எழுப்பிய பெண் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1832 குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.229 குறைந்து, ரூ.5013க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.40,104க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தாங்களே “சுய பாதுகாப்பு” நடவடிக்கைகளில் மக்கள் கவனமாக ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்ததுதான் பலன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாஎ. உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு அணையைத் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளது. 24 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசன வசதி பயன்பெறும்.