Tamil Nadu today news updates Maharashtra crisis : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுண கார்கே, அசோக் சவான் மற்றும் சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கூடி, kகூட்டணி கட்சியால் அமையும் ஆட்சிக்கு நேர்மையாக இருப்பேன் என்றும், பாஜகவுக்கு பயனளிக்கும் எதையும் செய்ய மாட்டோம் என்றும் உறுதி மொழி எடுத்தனர்.
இதற்கு விளக்கம் அளித்த ஆளுநர், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பலரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் அஜித் பவார் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்றும் எங்களுக்கு கடிதம் வழங்கப்பட்டது. பாஜகவுக்கு அதிகப்படியான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்த காரணத்தால் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததாகவும் ஆளுநர் கூறியுள்ளார். பெரும்பான்மை இருந்ததால் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க : மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது எப்படி?
Live Blog
Tamil Nadu news today updates : இன்று தமிழகம் மற்றும் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளில் மேற்கொண்ட பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், காணாமல்போன பாரம்பரிய சிலைகளை மீட்பதில் அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்றும் சிலை மீட்பு விசாரணையில் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு இன்று டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Delhi: Parliament illuminated on the eve of #ConstitutionDay. pic.twitter.com/fLEiW33Z5n
— ANI (@ANI) November 25, 2019
தனியார் ஹோட்டலில் கூடியுள்ள சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசிய சரத்பவார், கர்நாடகா,கோவா,மணிப்பூரில் பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தார்கள். பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க இது கோவா அல்ல. இது மகாராஷ்டிரா. மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாமல் ஒரு அரசு உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்று கூறினார்.
மும்பையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் கூடிய சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் தலைமையில், நான் எனது கட்சிக்கு நேர்மையாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன். நான் எதையும் கவர்ந்திழுக்க மாட்டேன். பாஜகவுக்கு பயனளிக்கும் எதையும் நான் செய்ய மாட்டேன்” என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டேன்.
#WATCH Mumbai: Shiv Sena-NCP-Congress MLAs assembled at Hotel Hyatt take a pledge, "I swear that under the leadership of Sharad Pawar, Uddhav Thackeray & Sonia Gandhi, I will be honest to my party. I won't get lured by anything. I will not do anything which will benefit BJP". pic.twitter.com/CV8VhOmKl1
— ANI (@ANI) November 25, 2019
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுண கார்கே, அசோக் சவான் மற்றும் சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கூடியுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் அணிவகுப்பு பேரணி நடைபெற உள்ளது.
தமிழக காவல்துறையில், வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட, குறிப்பாணைகள், கடிதங்கள், காவல் நிலைய பெயர்ப்பலகைகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை முழுமையாகவும் சிறப்பாகவும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 162 பேரின் அணிவகுப்பு பேரணி இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது. அணிவகுப்பு பேரணிக்காக எம்.எல்.ஏ.க்கள் பேருந்து மூலம் தனியார் ஓட்டலுக்கு அழைத்து வரப்பட்டனர்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டில் கைது செய்ய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை ஆன பேராசிரியர் நிர்மலா தேவியின் ஜாமீன் ரத்தானதால் அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தரமான குடிநீர், காற்று வழங்காததற்காக, மக்களுக்கு இழப்பீடு வழங்க நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது?
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
6 வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
தமிழகத்தில் வெங்காய விலையை கட்டுபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சகர் செல்லூர் ராஜூ தெரிவித்து இருக்கிறார். வெங்காய பதுக்களில் ஈடுபட்டு விலையை உயர்த்தும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த குளிர்கால கூட்டத் தொடரில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பல மாநிலங்கள் குறிப்பாக தமிழகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஒரு மாநிலத்தின் அணை மேலாண்மையில் ஸ்திரதன்மையைப் பரிப்பதாக கூறி வருவதால், தற்போது இந்த குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றும் முடிவை தள்ளி போட்டுள்ளது மத்திய அரசு.
டெல்லியில் பைப் தண்ணீரின் தரம் மிகவும் மோசமாகி வருவதாக Bureau of indian Standards ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை டெல்லி ஜல் வாரியம் (டி.ஜே.பி) சோதனை செய்த 1.5 லட்சம் நீர் மாதிரிகளில் 98.5 சதவீதம் பாதுகாப்பானது என்று கெஜ்ரிவால் அரசு கூறியது . BIS அறிக்கையும் கேள்வி கேட்டது டெல்லி அரசு. இந்நிலையில், உச்சநீதிமன்றம் இந்த விசயத்தை தானாக முன்வந்து உண்மையைக் கண்டறியும் என்று கூறியதோடு, உங்களின் அரசியலை இங்கே கொண்டுவராதீர்கள், டெல்லி நரகமாகி வருகிறது, நரகத்தை விட மோசமாகி வருகிறது என்று கூறினார்.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக ஜனவரி 28ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வருகின்ற டிசம்பர் மாதம் சர்வதேச கொல்ஃப் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதையொட்டி முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் கவில் தேவ் தெலுங்கானா அமைச்சர் கே. தாராகா ராம ராவை சந்தித்து அவருடைய ஆதரவை கோரியுள்ளார்.
Hyderabad: Former Indian Captain Kapil Dev met Telangana minister K Taraka Rama Rao seeking his support for an International Golf Tournament which is going to be held in December in Hyderabad. #Telangana pic.twitter.com/gyVK1C0NfC
— ANI (@ANI) November 25, 2019
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடட் நிறுவனத்தை தனியாருக்கு அளிக்க இருப்பதாக கடந்த வாரம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருந்தது. இந்த போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 28, 29 தேதிகளில் பாரத் பெட்ரோலிய நிறுவன அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் அறிவித்துள்ளார். சென்னையில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு குமரி கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நித்தியானந்தா நடத்தும் ஆசிரமத்தின் சமூக வலைதள பக்கங்களின் பொறுப்பாளராக செயல்பட்ட பெண் ஒருவரும் நித்தியானந்தா மீது கர்நாடகா ராம்நகர் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே ஜனார்தன ஷர்மா என்பவரின் நான்கு குழந்தைகளையும் கடத்தி வைத்து துன்புறுத்தி வருவதாக அளிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் குஜராத் காவல் துறை நித்தியானந்தாவை தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலவளவு கொலைவழக்கில் விடுதலையானவர்கள் குறித்து நிலை அறிக்கை தாக்க செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மதுரை உயர் நீதிமன்ற கிளை. மேலவளவு கொலை வழக்கில் கைதான 13 நபர்கள் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 13 பேருக்கும் காவல்துறை நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு.
தமிழக சட்டப்பேரவையை காகிதம் இல்லாத சட்டப்பேரவையாக மாற்ற பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தன்பால் துவங்கி வைத்தார். முதலமைச்சர் அளித்த உத்தரவின் படி எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கையடக்க கணினி வழங்கப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ரா வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை நாளை காலைக்கு ஒத்திவைத்துள்ளது. மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைத்தது தொடர்பான வழக்கில் நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பினை உடனே நடத்தினால் தேவையற்ற குழப்பங்கள் உருவாகும். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த போதிய கால அவகாசம தேவைப்படுகிறது. இடைக்கால பேரவைத் தலைவரை நியமனம் செய்ய வேண்டும். எம்.எல்.ஏக்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளன என பாஜக தரப்பு அறிவித்துள்ளது.
மகாராஷ்ட்ராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சி அமைத்ததை எதிர்த்து எதிர்கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Opposition seeking justice in front of Gandhi statue in PH Sonia Gandhi joins protest @IndianExpress pic.twitter.com/mXz13CZOUI
— Liz Mathew (@MathewLiz) November 25, 2019
அஜீத் பவார் தலைமையிலான கட்சி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று பாஜக தரப்பு வாதிட்டு வருகிறது. அஜீத் பவார் ஒருவர் அளித்த ஆதரவின் காரணமாக பாஜக எப்படி ஆட்சி அமைக்கும். அஜீத் பவார் அளித்த கடிதம் அரை குறையாக உள்ளது. இது ஜனநாயக மோசடி என்று சிவசேனா வாதம் செய்து வருகிறது.
மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைத்தது தொடர்பாக பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தியும் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். மகாராஷ்ட்ராவில் ஜனநாயக படுகொலை நடக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் முதலே திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை இன்று காலையில் இருந்து பெய்து வருகிறது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights