பட்னாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Chennai petrol diesel price : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77.62க்கு விற்பனையாகி வருகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.69.47க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

By: Nov 26, 2019, 7:09:00 AM

Tamil Nadu today news updates Maharashtra crisis : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுண கார்கே, அசோக் சவான் மற்றும் சிவசேனா – என்.சி.பி – காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கூடி, kகூட்டணி கட்சியால் அமையும் ஆட்சிக்கு  நேர்மையாக இருப்பேன் என்றும், பாஜகவுக்கு பயனளிக்கும் எதையும் செய்ய மாட்டோம் என்றும் உறுதி மொழி எடுத்தனர்.

இதற்கு விளக்கம் அளித்த ஆளுநர், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பலரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் அஜித் பவார் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்றும் எங்களுக்கு கடிதம் வழங்கப்பட்டது. பாஜகவுக்கு அதிகப்படியான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்த காரணத்தால் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததாகவும் ஆளுநர் கூறியுள்ளார். பெரும்பான்மை இருந்ததால் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க : மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது எப்படி?

 

Live Blog
Tamil Nadu news today updates : இன்று தமிழகம் மற்றும் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
22:14 (IST)25 Nov 2019
சிலைகளை மீட்பதில் தமிழக அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை - பொன் மாணிக்கவேல் அறிக்கை

சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளில் மேற்கொண்ட பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், காணாமல்போன பாரம்பரிய சிலைகளை மீட்பதில் அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்றும் சிலை மீட்பு விசாரணையில் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

21:42 (IST)25 Nov 2019
அரசியலமைப்பு நாளை முன்னிட்டு வண்ண விளக்கு அலங்காரத்தில் ஒளிர்ந்த நாடாளுமன்ற கட்டிடம்

இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு இன்று டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

20:47 (IST)25 Nov 2019
பாஜக பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க இது கோவா அல்ல, மகாராஷ்டிரா - சரத் பவார்

தனியார் ஹோட்டலில் கூடியுள்ள சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசிய சரத்பவார், கர்நாடகா,கோவா,மணிப்பூரில் பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தார்கள். பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க இது கோவா அல்ல. இது மகாராஷ்டிரா. மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாமல் ஒரு அரசு உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்று கூறினார்.

20:25 (IST)25 Nov 2019
பாஜகவுக்கு பயனளிக்கும் எதையும் செய்ய மாட்டேன்: சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உறுதிமொழி

மும்பையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் கூடிய சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் தலைமையில், நான் எனது கட்சிக்கு நேர்மையாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன். நான் எதையும் கவர்ந்திழுக்க மாட்டேன். பாஜகவுக்கு பயனளிக்கும் எதையும் நான் செய்ய மாட்டேன்” என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டேன்.

19:35 (IST)25 Nov 2019
மகாராஷ்டிராவில் நட்சத்திர ஹோட்டலில் கூடிய சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுண கார்கே, அசோக் சவான் மற்றும் சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கூடியுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் அணிவகுப்பு பேரணி நடைபெற உள்ளது.

19:31 (IST)25 Nov 2019
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிஜிபி ஏ.கே.திரிபாதிக்கு வாழ்த்து

தமிழக காவல்துறையில், வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட, குறிப்பாணைகள், கடிதங்கள், காவல் நிலைய பெயர்ப்பலகைகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை முழுமையாகவும் சிறப்பாகவும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

19:18 (IST)25 Nov 2019
மகாராஷ்டிராவில் சிவசெனா - என்.சி.பி - காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பேரணி சற்று நேரத்தில் தொடக்கம்

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 162 பேரின் அணிவகுப்பு பேரணி இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது. அணிவகுப்பு பேரணிக்காக எம்.எல்.ஏ.க்கள் பேருந்து மூலம் தனியார் ஓட்டலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

18:27 (IST)25 Nov 2019
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் நிர்மலா தேவி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டில் கைது செய்ய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை ஆன பேராசிரியர் நிர்மலா தேவியின் ஜாமீன் ரத்தானதால் அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17:12 (IST)25 Nov 2019
இன்றிரவு 7 மணிக்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பேரணி - சிவசேனா அறிவிப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனா இன்று இரவு 7 மணிக்கு தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் அணிவகுப்பு பேரணியை நடத்தும் என்று அறிவித்துள்ளது.

16:51 (IST)25 Nov 2019
மக்களுக்கு இழப்பீடு வழங்க நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது?

தரமான குடிநீர், காற்று வழங்காததற்காக, மக்களுக்கு இழப்பீடு வழங்க நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது?

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

6 வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.

16:50 (IST)25 Nov 2019
டிச.6-க்கு ஒத்திவைப்பு

பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் டிச.6-க்கு ஒத்திவைப்பு

15:55 (IST)25 Nov 2019
வெங்காய விலை கட்டுபடுத்தப் படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் வெங்காய விலையை கட்டுபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சகர் செல்லூர் ராஜூ  தெரிவித்து இருக்கிறார். வெங்காய பதுக்களில் ஈடுபட்டு விலையை உயர்த்தும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் தெரிவித்தார்.   

15:40 (IST)25 Nov 2019
இந்தியா வங்கதேசம் டெஸ்ட் டிக்கெட் ரீபன்ட் செய்ய முடிவு

கொல்கத்தாவில் நடந்த  பகல்-இரவு பிங்பால் டெஸ்ட் போட்டி மூன்று நாட்களுக்குள் முடிந்தது. இதனால் 4 , 5 ம் நாள் டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்களுக்கு பணத்தைத் ரீபன்ட் செய்ய  வங்காள கிரிக்கெட் வாரியம்  முடிவு செய்திருக்கிறது.  

15:35 (IST)25 Nov 2019
அணை பாதுகாப்பு மசோதா - தள்ளிவைப்பு

இந்த குளிர்கால கூட்டத் தொடரில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பல மாநிலங்கள் குறிப்பாக தமிழகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஒரு மாநிலத்தின் அணை மேலாண்மையில்  ஸ்திரதன்மையைப் பரிப்பதாக கூறி வருவதால், தற்போது இந்த குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றும் முடிவை தள்ளி போட்டுள்ளது மத்திய அரசு.           

15:15 (IST)25 Nov 2019
டெல்லி தண்ணீர் மாசு அடைதல் பற்றிய உண்மை நிலை என்ன - உச்ச நீதிமன்றம்

டெல்லியில் பைப் தண்ணீரின் தரம் மிகவும் மோசமாகி வருவதாக Bureau of indian Standards ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை டெல்லி ஜல் வாரியம் (டி.ஜே.பி) சோதனை செய்த 1.5 லட்சம் நீர் மாதிரிகளில் 98.5 சதவீதம் பாதுகாப்பானது என்று கெஜ்ரிவால் அரசு கூறியது . BIS அறிக்கையும் கேள்வி கேட்டது டெல்லி அரசு. இந்நிலையில், உச்சநீதிமன்றம் இந்த விசயத்தை தானாக முன்வந்து உண்மையைக் கண்டறியும் என்று கூறியதோடு, உங்களின் அரசியலை இங்கே கொண்டுவராதீர்கள், டெல்லி நரகமாகி வருகிறது, நரகத்தை விட மோசமாகி வருகிறது என்று கூறினார்.            

14:52 (IST)25 Nov 2019
குற்ற வழக்குகள் கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா? தேர்தல் ஆணையத்திற்கு கெடு

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக ஜனவரி 28ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

14:19 (IST)25 Nov 2019
சர்வதேச கொல்ஃப் டோர்னமெண்ட்

வருகின்ற டிசம்பர் மாதம் சர்வதேச கொல்ஃப் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதையொட்டி முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் கவில் தேவ் தெலுங்கானா அமைச்சர் கே. தாராகா ராம ராவை சந்தித்து அவருடைய ஆதரவை கோரியுள்ளார்.

14:09 (IST)25 Nov 2019
பாரத் பெட்ரோலியம் தொழிற்சங்க போராட்டத்திற்கு தடை

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடட் நிறுவனத்தை தனியாருக்கு அளிக்க இருப்பதாக கடந்த வாரம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருந்தது. இந்த போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 28, 29 தேதிகளில் பாரத் பெட்ரோலிய நிறுவன அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

13:10 (IST)25 Nov 2019
30 பேர் சேர்ந்து தங்கம் கடத்தல்

கொழும்புவில் இருந்து சென்னை வந்த விமான நிலையத்தில் தங்கம் கடத்தல். 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று 7.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளனர். இதில் 10 பேர் பெண்கள். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 3 கோடியாகும்.

12:57 (IST)25 Nov 2019
வானிலை அறிக்கை

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் அறிவித்துள்ளார். சென்னையில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு குமரி கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

12:40 (IST)25 Nov 2019
நித்தியானந்தா மீது மீண்டும் ஒரு புகார்

நித்தியானந்தா நடத்தும் ஆசிரமத்தின் சமூக வலைதள பக்கங்களின் பொறுப்பாளராக செயல்பட்ட பெண் ஒருவரும் நித்தியானந்தா மீது கர்நாடகா ராம்நகர் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே ஜனார்தன ஷர்மா என்பவரின் நான்கு குழந்தைகளையும் கடத்தி வைத்து துன்புறுத்தி வருவதாக அளிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் குஜராத் காவல் துறை நித்தியானந்தாவை தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

12:35 (IST)25 Nov 2019
13 பேருக்கும் நோட்டீஸ் விடுக்க காவல்துறைக்கு உத்தரவு

மேலவளவு கொலைவழக்கில் விடுதலையானவர்கள் குறித்து நிலை அறிக்கை தாக்க செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மதுரை உயர் நீதிமன்ற கிளை. மேலவளவு கொலை வழக்கில் கைதான 13 நபர்கள் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 13 பேருக்கும் காவல்துறை நோட்டீஸ் அனுப்ப வேண்டும்  என்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு.  

12:28 (IST)25 Nov 2019
ராமசாமி படையாட்சி மணிமண்டபம் திறப்பு

கடலூரில் ராமசாமி படையாட்சியின் மணிமண்டபம் மற்றும் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 1.70 ஏக்கர் நிலத்தில் ரூ. 2.15 கோடி செலவில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

12:26 (IST)25 Nov 2019
எம்.எல்.ஏக்களுக்கு கையடக்க கணினி

தமிழக சட்டப்பேரவையை காகிதம் இல்லாத சட்டப்பேரவையாக மாற்ற பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தன்பால் துவங்கி வைத்தார். முதலமைச்சர் அளித்த உத்தரவின் படி எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கையடக்க கணினி வழங்கப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

12:05 (IST)25 Nov 2019
மகாராஷ்ட்ரா வழக்கில் நாளை காலை தீர்ப்பு

மகாராஷ்ட்ரா வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை நாளை காலைக்கு ஒத்திவைத்துள்ளது. மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைத்தது தொடர்பான வழக்கில் நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

11:52 (IST)25 Nov 2019
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கால அவகாசம் தேவை - பாஜக தரப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பினை உடனே நடத்தினால் தேவையற்ற குழப்பங்கள் உருவாகும். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த போதிய கால அவகாசம தேவைப்படுகிறது. இடைக்கால பேரவைத் தலைவரை நியமனம் செய்ய வேண்டும். எம்.எல்.ஏக்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளன என பாஜக தரப்பு அறிவித்துள்ளது.

11:46 (IST)25 Nov 2019
போராட்டத்தில் இறங்கிய எதிர்கட்சியினர்

மகாராஷ்ட்ராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சி அமைத்ததை எதிர்த்து எதிர்கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

11:43 (IST)25 Nov 2019
சிவசேனா Vs பாஜக - நீதிமன்ற விவாதம்

அஜீத் பவார் தலைமையிலான கட்சி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று பாஜக தரப்பு வாதிட்டு வருகிறது.  அஜீத் பவார் ஒருவர் அளித்த ஆதரவின் காரணமாக பாஜக எப்படி ஆட்சி அமைக்கும். அஜீத் பவார் அளித்த கடிதம் அரை குறையாக உள்ளது. இது ஜனநாயக மோசடி என்று சிவசேனா வாதம் செய்து வருகிறது.

11:32 (IST)25 Nov 2019
மகாராஷ்ட்ராவில் ஜனநாயக படுகொலை நடக்கிறது - ராகுல் காந்தி

மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைத்தது தொடர்பாக பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தியும் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். மகாராஷ்ட்ராவில் ஜனநாயக படுகொலை நடக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

11:29 (IST)25 Nov 2019
Tamil Nadu weather today

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் முதலே திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை இன்று காலையில் இருந்து பெய்து வருகிறது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

11:28 (IST)25 Nov 2019
தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி விலக வேண்டும்

எங்களுக்கு 165 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது என்பதால் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்து தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என என்.சி.பி. கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் அறிவித்துள்ளார்.

11:28 (IST)25 Nov 2019
ராபர்ட் பயஸூக்கு இன்று பரோல்

மகனின் திருமண ஏற்பாட்டிற்காக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான ராபர்ட் பயஸ் இன்று பரோலில் வெளி வருகிறார். ராபர்ட் பயஸ்க்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

23ம் தேதி அதிகாலை பாஜக மீண்டும் மகாராஷ்ட்ராவில் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நீடித்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் அஜித் பவார் தன்னுடைய ஆதரவை பாஜகவுக்கு அளிக்க பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

Web Title:Tamil nadu today news live updates maharashtra crisis tamil nadu weather tn politics ncp shiv sena

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X