Corona Virus: புதிதாக தேர்வு செய்யப்பட்டு, சென்னை காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி எடுக்க் வந்த 8 பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அபாயகரமான நடவடிக்கை: டாஸ்மாக் திறப்புக்கு ஸ்டாலின், கமல்ஹாசன் கண்டனம்
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. 12,863 பேருக்கு நேற்று செய்த சோதனையில், 527 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் பெரும்பாலானவர்கள், கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள். இந்த எண்ணிக்கையில் காவல்துறை பயிற்சி பள்ளி, பெண் காவலர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது.
தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக 7,538 பேர் தேர்வாகினர். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் புதிதாக தேர்வான காவலர்களுக்கு பயிற்சி அளித்து உடனே பணியில் ஈடுபடுத்த தமிழக காவல்துறை முடிவு செய்தது. அதன்படி, புதிதாக தேர்வான அனைவரும் மாவட்ட கண்காணிப்பு மற்றும் ஆயுதப்படை பயிற்சி மையத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அப்படி பயிற்சி வகுப்புக்கு வரும் காவலர்கள் அனைவரும் சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகுதான் பயிற்சி வகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
வாசற்படியை தாண்ட வேண்டாம்… முக்கால் மணி நேரத்தில் கடன்: எஸ்பிஐ அதிரடி
அதன்பேரில், தமிழகம் முழுவதும் புதிதாக தேர்வான 7,538 பேர் அவர்களுக்கு வந்த குறுஞ்செய்தி அடிப்படையில் பயிற்சி வகுப்புக்கு வந்தனர். குறிப்பாக, சென்னை பரங்கிமலை பயிற்சி பள்ளிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்களில் கடந்த 3-ம் தேதி பயிற்சிக்கு வந்தவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 8 பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”