Advertisment

தெற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: 9 மாவட்டங்களில் மழை!

"மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், 3 நாட்களுக்கு அந்த பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்”

author-image
WebDesk
New Update
chennai weather today chennai rain today

chennai weather today chennai rain today

Tamil Nadu Weather Forecast :  தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியாக வங்கக் கடலில் இதுவரை ஒரு புயல்கூட உருவாகவில்லை. இருப்பினும், குமரிக்கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. 6 மாவட்டங்களில் இயல்பு நிலையை தாண்டியும் மழை பெய்துள்ளது.

Advertisment

சென்னையில் மாஸ்க் கட்டாயம்; ரூ.100 அபராதம் அமலுக்கு வருகிறது

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தெற்கு அரபிக் கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக் கடலில் வலுவிழக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

”தென் தமிழகத்தின் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக் கூடும்” எனவும் சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, ”வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். தென்கிழக்கு வங்கக் கடல், மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல், தென் மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், 3 நாட்களுக்கு அந்த பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்” எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் பூங்கோதை எம்.எல்.ஏ: திகைக்க வைத்த திமுக பூசல்

தென் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்ஸியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியஸாகவும் இருக்கும்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamilnadu Weather Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment